ஒருவர் பக்குவமடைந்து விட்டார் என்று அறிந்து கொள்வது எப்படி?
சண்டைக்கோழிகள் வளர்ப்பதில் ஆர்வம் உள்ள பண்ணையார் ஒருவருக்கு புதிதாக ஒரு சேவல் குஞ்சு கிடைத்தது. அதனை வீர,தீர பராக்கிரமம் மிக்க சேவலாக வளர்க்க வேண்டும் என்று ஆசை.
சுற்றிலும் விசாரித்தசமயம் ஊருக்கு வெளியே வஸ்தாது ஒருவர் சேவல்களைப் பயிற்றுவிக்கும் செய்தி கிடைத்தது.அவரிடம் சென்று சேவலை சண்டையிட பயிற்சி செய்து தருமாறு கேட்டார்.வஸ்தாதும் , சரி! என்று ஏற்றுக் கொண்டார்.
பண்ணையார் சுமார் ஒரு மாதம் கழித்து செல்லும் சமயம், அந்த சேவல் அங்கும், இங்குமாக சென்று மற்ற சேவல்கள் இடம் சண்டை இட்டுக் கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் பண்ணையாருக்கு ஆச்சரியம்.
இந்த சேவலைக் கண்டு மற்ற சேவல்கள்பயந்து ஓடுகின்றன என்று சேவலை பெற்றுக் கொள்ளலாமா? என்று கேட்டார். இல்லை. உங்கள் சேவல் இன்னும் தயாராகவில்லை! சிறிது நாட்கள் கழித்தவாருங்கள்!என்று அனுப்பி விட்டார்.
பண்ணையார் அடுத்த மாதம் செல்லும் சமயம் , சேவல் மற்ற சேவல்களை மட்டுமல்ல! அங்கிருந்த ஆடு, நாய் போன்றவற்றைக் கூட விரட்டிக் கொண்டிருந்தது.
மிகுந்த ஆச்சரியப்பட்ட பண்ணையார் இப்போது தயாராகி விட்டது.எடுத்துக் கொள்ளலாமா? என்கிறார் .ஆனால் வஸ்தாது ,இல்லை. இல்லை. இன்னும் சில காலம் கழித்து வாருங்கள் என்று அனுப்பி வைத்தார்.
அடுத்த மாதம் செல்லும் சமயம், அந்த சேவல் கூரையில் ஏறி கொக்கரக்கோ! என்று கூறும் சமயமே அங்கிருந்த ஆடு, நாய் சேவல் போன்ற அனைத்துமே விதிர்விதிர்த்து பயந்து ஓட ஆரம்பித்தன.
ஒரு சேவலின் சத்தத்திற்கு இவ்வளவு சக்தியா? இப்போது என்னுடைய சேவலை பெற்றுக் கொள்ளலாமா?என்று கேட்டார். இல்லை.இன்னும் தயாராகவில்லை! அடுத்த மாதம் வாருங்கள்! என்றார். வெறுத்துப் போனார் பண்ணையார்.
ஆனாலும் வஸ்தாது போல பண்ணையார் அடுத்த மாதம் செல்லும் சமயம் சேவல் சாந்தமாக ,சமர்த்தாக,மகா அமைதியாக அமந்து இருந்தது. அதன் அருகில் மற்ற உயிரினங்கள் மட்டுமல்ல. சிறு,சிறு கோழி குஞ்சுகள் கூட பயம் இல்லாமல் சென்று வந்து கொண்டிருந்தது.
பண்ணையாருக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியும்.என்ன சேவல் இவ்வளவு அமைதியாகிவிட்டது? என்று .
ஆனால் பயில்வான் , உங்களுடைய சேவல் தயாராகிவிட்டது. எடுத்துச் செல்லுங்கள்! என்றதும் பண்ணையாருக்கு கோபம்.
என்னுடைய சேவல் வாட்டசாட்டமாக, ஆர்ப்பாட்டமாக இருக்கும் சமயம் தராமல் இப்போது அமைதியாக இருக்கும் சமயம் எடுத்து போ! என்று கூறுகிறீர்களே? என்று சண்டைக்கு வந்தார்.
அதற்கு வஸ்தாது, இப்போதுதான் அந்த சேவல் தன்னுடைய உண்மையான பலம், மற்றும் சக்தியை உணர்ந்து கொண்டது. தன்னுடைய பலமும் , சக்தியும் உணர்ந்தவன் ஒருபோதும் அடுத்தவரிடம் வம்புக்கு இழுக்க மாட்டான். தன்னுடைய சக்தியையும் விரயம் செய்ய மாட்டான்! என்றவாறு அனுப்பி வைத்தார்.
இது சேவலுக்கு மட்டுமல்ல! மனிதருக்கும் பொருந்தும். அவ்வாறு அமைதியானவர் தான் சுவாமி விவேகானந்தர்! அந்த தியானம், மனதை உணரும் பக்குவம் தான் அவரை உலகம் முழுவதும் அறியச் செய்தது. 🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
*இராவணனின் மனைவி குறித்து பலரும் அறியாத சுவாரசிய விஷயங்கள்!*
பராக்கிரமசாலி ,யாழ் இசைப்பதில் வல்லவர் ,மிகச் சிறந்த சிவபக்தரான ராவணனின் மனைவி மண்டோதரி. இவள் சிறந்த பெண்மணி, ஒழுக்கத்தில் ,கற்பில் சிறந்த மாதரசி ஆவாள்.
மயன் என்னும் தேவதச்சனின் மகளாக பிறந்தார். சிறந்த சிவ பக்தையாக திகழ்ந்த மண்டோதரி, மிகவும் அழகானவர், செல்வவளம் மிக்க மயனால் சீரும் சிறப்புமாக வளர்க்கப்பட்டாள். இந்திரஜித் இவளது மகன்
இலங்கையை ராவணன் அழகியதொரு நகரமாக உருவாக்க எண்ணி மயனை அணுகினான்.
அங்கு அடக்கமும் அழகும் பொருந்திய மண்டோதரியை கண்டு மனதை பறிகொடுத்தான். இராவணன் மயனின் சம்மதத்துடன் மண்டோதரியை மணந்து கொண்டான். அசுர குலத்தில் அவதரித்தவராயினும் சிறந்த சிவ பக்தையாக, தன் கணவனுக்கு சிறந்த துணையாக ,பதிவிரதா தர்மத்தை கடைபிடித்து வாழ்ந்தவர் மண்டோதரி.
3. தன் பிள்ளைகளுக்கு தக்க சமயத்தில் வாழ்க்கைக்கான பயிற்சிகளை அளிக்கின்றன. 🦜
4. மூக்குமுட்ட உண்ணுவதில்லை. எவ்வளவு தானியங்களை இட்டு கொடுத்தாலும் தேவையானவற்றை மட்டும் கொத்திவிட்டு பறந்து செல்கின்றன. போகும் போது எதையும் எடுத்து போவதில்லை. 🦜
5. இருள் சூழும்போதே உறங்க துவங்குகின்றன. அதிகாலை ஆனந்தமாய் பாட்டு பாடி எழுகின்றன.🦜
6. தனது ஆகாரத்தை அவை மாற்றுவதில்லை. 🦜
7. தனது உடலில் வலுவுள்ளவரை உழைக்கின்றன. இரவு அல்லாது மற்ற நேரங்களில் ஓய்வு எடுப்பதில்லை. 🦜
8. நோய் வந்தால் உண்ணுவதில்லை. சுகமான பின் உணவு எடுத்துக்கொள்கிறது. 🦜
இத்தல இறைவன் சதுர வடிவ ஆவுடையார் மீது வீற்றிருப்பது கூடுதல் சிறப்பு. தீராத கடன் தொல்லை தீரவும் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறார்கள்.
1
தஞ்சாவூரின் தென்பகுதியில் கோனூர்நாடு கோட்டை தெருவில் அமைந்துள்ளது, கோனூர்நாடு அகத்தீஸ்வரர் கோவில். அகத்திய மாமுனி வழிபட்ட திருத்தலங்களில் இதுவும் ஒன்று.
2
'அகம்' என்பதற்கு 'மனம்' என்றும் பொருள் உண்டு. மனதை நல்வழிபடுத்தும் இறைவன் என்பதால், இவருக்கு 'அகத்தீஸ்வரர்' என்று பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.
ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான். அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது. பல ஊர்களிலிருந்து மிகப் பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை.
ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சன்யாசி வந்தார். அவர் பணக்காரனை வந்து பார்த்தார். பார்த்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார். அந்தக் கண்ணைக் குணப்படுத்தஒரே ஒரு வழிதான்.
அந்தப் பணக்காரன் பச்சை நிறத்தைத் தவிர வேறெதையும் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.
இனிப்பே சாப்பிடக்கூடாது என்று சொல்லும் ஆங்கில
மருத்துவர்கள் அறிவாளிகள்
இனிப்பு - மண்ணீரல் - உதடு - கவலை - இரைப்பை - மண்.
❝மாவுச்சத்துக்கு யார் சர்க்கரை என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை.செரிமான கோளாறால் ஏற்படும் நீரிழிவு பிரச்சனைக்கு யார் சர்க்கரை நோய் என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை❞
இலை போட்டு முதலில் இனிப்பு வைத்தவன் எல்லாம் முட்டாள் அல்ல.
வீட்டு திண்ணையில் வழிப்போக்கர்களுக்கு ஒரு மூடி தேங்காயும் ஒரு உருண்டை கருப்பட்டி வைத்தவன் எல்லாம் முட்டாள் அல்ல.
தனது தேவி சீதையை ராவணன் சிறையெடுத்துச் சென்றதால் கோபித்த ராமபிரான், வானர சேனைகளுடன் இலங்கை மீது படையெடுத்துச் சென்று ராவணனை வென்றார். அவனையும் அவனது கூட்டத்தாரையும் அழித்தார். ராவணனின் தம்பியான விபீஷணனை இலங்கைக்கு அரசனாக்கினார்.
1
ராவணன் வேதவிற்பன்னன், பிரம்மாவின் வழிவந்த வேதியன். அதனால், அவனைக் கொன்ற பாவம் ராமபிரானை பிரம்மஹத்தியாக வந்து வாட்டியது. அது தீர அவர் கிழக்கு வங்கக் கடற்கரையில் சிவலிங்கம் அமைத்து சிவபூஜை செய்தார். அதனால், அவரது பெரும்பாவம் ஒழிந்தது என்றாலும், சிறுசிறு இடையூறுகள் உண்டாயின.
2
அவற்றை நீக்கும் பொருட்டு, அவர் காவிரிக்கரைக்கு வந்து கும்பகோணத்திற்கு அருகில் குடில் அமைத்துத் தங்கினார். அங்கே அவர் 108 சிவலிங்கங்களை நிறுவி வழிபட்டார்.
சிவ வழிபாட்டின் பயனால் அவரைத் தொடர்ந்து வந்த பாவங்கள் நாசமாயின. அதையொட்டி அந்தத் தலம் பாவநாசம் எனப்பட்டது.