"அதிகமாய் சித்தர்களை நீ தெரிசிக்க தானே
தியானம் ஒன்று சொல்வேன் கேளு கேளு
சிவாய நம ஓம் கிலீம் என்று செபி
வரிசிக்கும் சித்ததெல்லாம் வெளியில் காணும்
மகத்தான சித்தரப்பா வணங்கி நில்லு
பரிசிக்கும் படி அவரைக் காண்பாயப்பா
பணிந்திடுவாய் பாதத்தில் சிரசு தட்ட
கிரிசிக்கும் யார் நூலில் சார்ந்தே என்று
கேட்கில் அகத்தீசுரர் கிருபை என்னு"
- அகத்தியர் -
விளக்கம்
சித்தர்களை தரிசிப்பதற்கு தியானம் ஒன்று சொல்கிறேன் கேள் எனத் துவங்குகிறார் அகத்தியர்....
"#ஓம்_கிலீம்_சிவாய_நம" என்று நிதமும் செபித்து தியானம் செய்து வந்தால் சித்தர்களைக் காணலாம் என்றும் அப்படி அவர்கள் தோன்றும் பொது பரிகசிக்கத்தக்க உருவத்தில் தோன்றுவார்கள் என்றும்
அப்படி அவர்களை கண்டதும் தலையை அவர்கள் பாதத்தில் படும்படி வைத்து வணங்க வேண்டும் என்று கூறுகிறார்.
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும்.
முதன் முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 27 முறை பாராயணம் செய்யவும்.
*அர்ச்சனையில் வெற்றிலை, தேங்காய், வாழைப்பழம் கண்டிப்பாக பயன்படுத்துவது ஏன்?*
கோவிலுக்கு கொண்டு செல்லும் பூஜை பொருட்களில் நமது வசதிக்கு ஏற்றபடி எத்தனையோ பொருட்களை எடுத்துச் செல்கிறோம்.
இவற்றில் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை - பாக்கிற்கு முக்கியமாக இடம் பெற்றிருக்கும்.
சுவாமிக்கு நைவேத்தியம் செய்வதற்கு எதுமே இல்லை என்றாலும் ஒரே ஒரு வாழைப்பழத்தை வைத்து பூஜையை நிறைவு செய்து விடலாம்.
அப்படி இந்த 3 பொருட்களுக்கு என்ன சிறப்பு உள்ளது, எதற்காக இந்த 3 பொருட்கள் கண்டிப்பாக அர்ச்சனைக்கு கொண்டு செல்கிறோம், இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.