#இந்து_ராஷ்டிரம் அமைப்பதற்கான முதல் படியாக, அதற்கான அரசியலமைப்பைத் தயாரிக்கும் திட்டத்தைக் கடந்த பிப்ரவரி 2022, பிரயாக்ராஜில் நடைபெற்ற தர்ம சம்சாதில் (தர்ம சபை) ஆர்.எஸ்.எஸ் அறிவித்திருந்தது. அதன்படி 30 ஆர்.எஸ். எஸ் வெறியர்கள் (அறிவுஜீவிகள்) அந்த அரசியலமைப்பைத் தயாரித்து
முடித்துள்ளனர். அகண்ட பாரதம் என்னும் பெயரில் இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கான கொள்கை விளக்கங்களாக, 750 பக்கங்களில் இதைத் தயாரித்திருப்பவர்கள் எல்லாம் சாம்பவி மடம், இந்து ராஷ்டிரிய நிர்மான் சமிதி போன்ற முக்கிய அமைப்புகளின் நிர்வாகிகள். இதில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களும், பாதுகாப்புத்
துறை நிபுணர்களும் அடக்கம். இந்த வரைவு அரசியலமைப்பு, 2023 ஆம் ஆண்டு, அலகாபாத்தில் நடைபெற உள்ள அடுத்த மகாமேளா தர்ம சம்சாதில் முன்வைக்கப்பட்டு இறுதி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன்படி 'வாரணாசி' இந்தியாவின் தலைநகரம் ஆக்கப்படும். புதிய பாராளுமன்றம் ஒன்று காசி
வாரணாசியில் கட்டப்படும். அது 'தர்மசபை' என்று அழைக்கப்படும். தற்போதைய கல்வி முறை ஒழிக்கப்பட்டு குருகுலக் கல்விமுறை நடைமுறைப்படுத்தப்படும். நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் இருக்கமாட்டார்கள். மத பிரதிநிதிகள் தான் இருப்பார்கள். சாமியார்கள் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆவர்.
இந்தியாவில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் வாழலாம். ஆனால் அவர்கள் தேர்தல்களில் பங்கு கொள்ள முடியாது. ஏன், வாக்களிக்கக் கூட முடியாது. இந்துக்களில் பதினாறு வயது முடிந்தோர்க்கு வாக்குரிமை அளிக்கப்படும். ஒவ்வொரு குடிமகனுக்கும் கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கப்படும்.
இந்த அரசியலமைப்பு
வரைவின் முகப்பு, அகண்ட பாரதத்தின் வரைபடத்தைக் கொண்டிருக்கிறது. அகண்ட பாரதம் என்பது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மியான்மர் ஆகியவை இணைந்த பகுதியாகும் (டைம்ஸ் ஆப் இந்தியா, 13/08/2022). மொத்தத்தில் திரேதா யுகம், துவாபர யுகங்களில் இருந்த சட்டங்களின் அடிப்படையிலேயே
நீதிப் பரிபாலனங்கள் நடைபெறும். நான்கு வர்ணங்களின் அடிப்படையிலான "மனுதர்மம்" முதலாக அனைத்தும் சட்டத்தின் தகுதியைப் பெறும். முட்டாள்களிலும் கேடுகெட்ட முட்டாள்கள் கூடச் சதுர்யுகம், சாஸ்திரங்களைப் பற்றிப் பேச மாட்டார்கள் என்று புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோர் எத்தனையோ
எத்தனையோ சொல்லி விட்டுச் சென்றார்கள். அவர்கள் இல்லாத இந்தியாவுக்கு இவை எல்லாம் உரைகல்.
முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்ற "நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன்" அவர்கள் (பெரியாரின் பரிந்துரையால் - கலைஞர் அவர்களால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்) சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் சாமானிய மக்களிடம் எப்படி கரிசனையுடன்
நடந்து கொண்டார் என்பது குறித்த மூத்த வழக்கறிஞர் அருள்மொழி அவர்களின் பதிவு...
கிரிமினல் வழக்குகளில் ஆட்கொணர்வு (Habeus Corpus ) மனுக்களை விசாரணை செய்யும் பொறுப்பில் நீதியரசர் ரத்தின வேல் பாண்டியன் அவர்கள் இருந்த பொழுது நடந்த ஒரு வழக்கு பற்றி மூத்த வழக்கறிஞர் ஒருவர் சொன்ன நேரடி
அனுபவச் செய்தி இது.
ஒரு பெண் கணவனை விட்டுப் பிரிந்து குழந்தைகளுடன் திருநெல்வேலியில் வாழ்ந்து கொண்டு இருந்தார். தன் மனைவி குழந்தைகளை கடத்திச் சென்று விட்டார் என்று கூறி ஆட்கொணர்வு வழக்கு தாக்கல் செய்தார் கணவர்.
குழந்தைகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வர அப்பெண்ணுக்கு நீதிமன்றம்
லால்குடி தாலுகா, களத்தில் வென்றான் பேட்டை கிராமத்தில் நடந்த "ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள்" மாநாட்டில் #பெரியார் பேசிய பேச்சு...
'கீழ்ஜாதி' என்பதாக ஒரு பிரிவு எதற்காக? யாரால் ஏற்படுத்தப்பட்டது? என்பதன் ரகசியத்தை உணர்ந்தால் பிறகு அதை அழிக்கும் விஷயம் வெகு சுலபமாக முடிந்துவிடும்.
கீழ்ஜாதி, மேல்ஜாதி என்று சொல்லுவதன் தத்துவம் என்ன என்பதை பாருங்கள். ஒரு பார்ப்பானையும், பறையனையும் கூட்டிவந்து நிறுத்தி கீழ் ஜாதி மேல் ஜாதி என்பதும் அவர்களிடத்தில் எப்படி விளங்குகிறது என்று பார்த்தால் மேல் ஜாதி என்பவன் பாடுபடாமல் சேம்பேறியாய் இருந்து ஊரார் உழைப்பில் வாழ்கிறவன்
என்பதும் கீழ் ஜாதி என்பவன் பாடுபட்டு உழைத்து உழைப்பின் பயனை எல்லாம் அன்னியருக்கே அளித்துவிட்டு வீடில்லாமல் துணியில்லாமல் கஞ்சியில்லாமல் கல்வியில்லாமல் மிருகத்தினும் கேடாய் வாழ்கிறான் என்பதும் நன்றாய் விளங்கும். ஆகவே சோம்பேறிக் கூட்டத்திற்கு எதிராக எவன் போர் தொடுக்க முனைந்து
சிந்து நதிக்கரையில் ஜலந்தர் என்று ஒரு முனிவர் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அவரது மனைவி பெயர் பிருந்தா. "மகா விஷ்ணு" எப்படியாவது ஒருநாள் பிருந்தாவை அனுபவித்து விடவேண்டும் என்ற தீய எண்ணத்தோடு அவளை அனுகினானாம். அவள் ஒத்துக் கொள்ளாததினால், விஷ்ணு
பகவான், ஜலந்த முனிவரைப் போல வேடம் கொண்டு, பிருந்தாவை ஏமாற்றி புணர்ந்து கொண்டிருந்த வேலையில், எதிர் பாராத விதமாக உண்மையான ஜலந்தமுனிவன் வந்துவிடவே, கதை கந்தலாகி விஷ்ணு பகவான் மாயமாய் மறைந்து விட்டானாம். ஆத்திரம் கொண்ட ஜலந்த முனிவன், பிருந்தாவை அடித்துக் கொன்று, கொளுத்திவிட்டானாம்.
இதை அறிந்த விஷ்ணு அலறியடித்துக் கொண்டு ஓடிவந்து, பிருந்தாவின் சாம்பல் மீது புரண்டு, அய்யய்யோ உன்னை முழுவதுமாக அனுபவிப்பதற்குள் உன்னை கொன்றுவிட்டானே உனது சாம்பலாவது எனது காமத்தை தீர்க்கட்டும் என்று புலம்பினானாம். நான்கு நாட்கள் கழித்து, அந்த சாம்பலில் ஒரு செடி முளைத்ததாம். அதன்
லண்டனில் இரண்டாம் வட்ட மேசை மாநாடு, அண்ணல் அம்பேத்கார் காந்தி உள்ளிட்ட இந்தியாவிலிருந்த முக்கியஸ்தர்களுடன் ஆங்கிலேயர்களும் கலந்து கொண்டனர். அதில் அம்பேத்கார் பேசும்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் இந்துக்கள் அல்ல முஸ்லீம், கிறித்தவர்களை போல ஒரு
தனி மாகாணம் ஒதுக்கீடு செய்து பிரித்து கொடுத்துவிட கோரினார்..
மாநாட்டில் பங்குபெற்ற பிற மதவாத அமைப்பினரும், காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களும், ஆங்கிலேயர்களும் அம்பேத்கரை எதிர்த்து கூச்சலிடுகின்றனர். காந்தி ஒரு படி மேலே போய் அம்பேத்காரை தேசத்துரோகி, பிரிவினை வாதி என்று சாடுகிறார்.
அமைதியாக இருக்கிறார் அம்பேத்கார்.
காந்தி தொடர்ந்து "தாழ்த்தப்பட்ட மக்கள்தான் உண்மையான இந்துக்கள், அவர்கள் கடவுளின் குழந்தைகள்" என்றார்.. ,
உடனே அம்பேத்கார் அப்ப நீங்க எல்லாம் குரங்குகளின் குழந்தைகளா? என்று கேட்க கூட்டம் காச் மூச் என்று கத்துகிறது.
மனித உரிமை போராளி "நீதிநாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர்" அவர்களுக்கு வீரவணக்கம்..!
தந்தை பெரியார் அவர்கள் இராமாயணம் பற்றி எழுதிய ஆங்கில நூல் Ramayan a True Reading 1957-ல் சென்னையில் வெளியிடப்பட்டது. இதன் இந்தி மொழிபெயர்ப்பான "சச்சி இராமாயண்" இராமாயணப் பாத்திரங்கள் நூல் 1968-ல்
கான்பூரில் வெளியிடப்பட்டது. இந்நூலின் விற்பனையையும், அதன் பிரச்சார வேகத்தையும் கண்டு ஆட்டம் கண்ட பார்ப்பனக் கும்பல், இந்துக்களின் மத உணர்ச்சியைப் புண்படுத்துவதாக கூறி உத்தரபிரதேச அரசு 1970 ஜனவரியில் நூல்களைப் பறிமுதல் செய்து, நூலையும் தடை செய்தது. இவ்வாறு விதிக்கப்பட்ட தடையை
எதிர்த்து தோழர் லாலாபாய்சிங் யாதவ் என்பவர் அப்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை உயர்நீதிமன்ற "புல் பெஞ்ச்" விசாரணை செய்து, உத்தரபிரதேச அரசு விதித்த தடை உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு கூறியது. தீர்ப்பில், இ.பி.கோ.124 ஏ. 153 ஏ, 295 ஏ ஆகிய பிரிவுகளைச்