ஒரு PhD அண்ணன் தீசிஸ் எழுதும் போது (image Organise பண்ண, data verification/ check up) அவருக்கு ஜூனியர்களான நாங்க 3 பேர் உதவினோம். அதில் ஒரு வட இந்திய மாணவி.
இரவு உணவுக்குப் பின் lab-ல் உட்கார்ந்து அந்த அண்ணனுக்கு உதவினோம். அவர் டேப் ரெகார்டரில் பாட்டு ஓடியது.
அது 80களில் வந்த இசைச்சாமி போட்ட பாட்டு. எனக்கு பிடித்த பாடல் தான்.
அந்த வட இந்திய பெண்ணிற்கு முதன்முறை அந்த பாடலைக் கேட்டதும் பசக் என்று பிடித்து விட்டது. Repeat mode - ல அந்த பாட்டை ஓட விட்டேன். (தமில வளக்கோனும்ல!)
அடுத்தடுத்து முறைகளில் ஆண் பாடும் போது நான் பாட, பெண்
பாடும் போது அந்தம்மா hum பண்ண... ஒரே ரவுசு. கூட இருந்தவங்களுக்கு stomach burning. ஒன்னும் பேசல.
எனக்கு டபுள் சந்தோசம்…
அந்த பொண்ணுக்கு அந்த பாட்டுல ஒரு இடம் ரொம்ம்ம்ப பிடிச்சுது…
தான னன னன
தான னன னன
தந்த னான னான-தன
தந்த னான னான
அவங்க humming
நான் பாட
நான் பாட
அவங்க humming
Fast forward
அப்பப்ப அந்த அந்த சந்தோசமான நிகழ்வு (முதல் அனுபவம் இல்லையா அதனால) நினைவுக்கு வரும்போது அந்த பாட்டு என்னன்னு யோசிச்சு பாப்பேன். மறந்துடுச்சு…இத்தனைக்கும் புகழ்பெற்ற பாடல்…
இப்பத்தான் மாதாந்திர வீட்டுப் பொருட்கள் எல்லாம் முஸ்தபா போயி வாங்கினோம். ஒரு சம்பவம்.
எல்லாம் வாங்கிட்டு கேஷியர் பக்கத்துல போனபோது அப்பளக்கட்டு எடுக்க மறந்துட்டோம். திரும்ப ரொம்ப தூரம் நடக்கனும். நான் என் வீட்டம்மாகிட்ட “நான் போய் எடுத்துட்டு வர்றேன்”-னு
கிளம்பினேன்.
“அம்பிகா அப்பளம். பாஸ்மதி அரிசி இருக்குற வரிசைக்கு பின்னாடி இருக்கும்”-ன்னு சொல்லி அனுப்பினாங்க. கஷ்டப்பட்டு பாஸ்மதி அரிசி இருக்குற இடத்துக்கு கேட்டு கேட்டு போயி அப்பளத்தை எடுத்து வந்து வீட்டம்மா கிட்ட கொடுத்தேன்.
இன்று மாலை BAMK பூங்காவில் Jogging போகும் போது என் பையனுக்கு Bernoulli Principle பத்தி விளக்கினேன்.
(அவன் Fire service-ல் தேசிய சேவை செய்யத் தொடங்கியுள்ளான். அதில் நீரோட்டம் பற்றிய பாடம் வருகிறது)
ஏன் ஒருபுறம் அமைதியான நீரோட்டமும் அதே நீரோட்டம் கற்களைக்
கடந்து கலங்கியும் ஓடுகிறது?
ஒன்று laminar மற்றொன்று turbulence.
அதனை தீர்மானிப்பது ரெனால்ட் எண் (Reynolds number).
அதாவது நிலைம ஆற்றலுக்கும் (Inertial Force) பாகுத்தன்மை ஆற்றலுக்கும் (Viscous Force) இடையே யார் பெரிய ஆள் என்ற சண்டை தான் காரணம்…
இருங்க புரியுர மாதிரி சொல்றேன்…!
தண்ணீரை கீழே ஊற்றினால் தடையின்றி உருண்டு புரண்டு ஓடும் அல்லவா? அது turbulent flow.
அதாவது அதன் இயக்க ஆற்றல் அதிகரிக்கிறது. அதனைத் தடுப்பது கடினம். அதனை Inertial force /நிலைமை ஆற்றல் என்று சொல்லலாம் (நிலைமை ஆற்றல் என்பது இயங்காமல் இருக்கும் போது இயக்க வைப்பதற்கும் நகரும் போது
க: அடே… அந்த SBR-ஐ தயாரிச்சது அமெ.-காவுல இருக்க யூடா (Utah)ங்குற எடத்துல இருக்குற தியோக்கால் -ங்குற கம்பெனி… அது இந்த ராக்கெட்ட செஞ்சு ரயில்ல ஏத்தி அனுப்பனும். அது குகை, மலை பாதை வழியா போகும் இல்லையா? அதனால ரயில் தண்டவாள அகலத்துக்கு அதாவது 4 அடி 8.5 அங்குல அகலத்துக்கு ஏத்தாப்ல
வடிவமைச்சாங்க. அதனால 12.17 அடியை விட அகலமா வடிவமைக்க முடியலடா…
செ: அண்ணே… ஏண்ணே ரயில் தண்டவாளம் 4 அடி 8.5 அங்குல அகலத்துல இருக்கு?
க: அதாவது இங்கிலீஸ்காரேன் தான் அமெரிக்காவுல ரயில் தண்டவாளம் போட்டான். அவன் ஊர்ல போட்ட அதே அளவுக்கு அமெ. வில போட்டுட்டு போயிட்டான்.
இதே நேரத்தில் ‘இங்கேயே இருக்கலாமா இல்லை கூடாரத்தை காலி செய்யலாமா?’ என்ற ஊசலாட்டத்தில் சில பண்ணையார் வாரிசுகள் ஈயம் பூசியது போலவும் ஈயம் பூசாத்து போலவும் கடனுக்குத் தலையைக் காட்டிக் கொண்டுள்ளனர்.
அதே நேரத்தில் நமக்கும் சில ஐயங்கள் ஏற்படுகின்றன. திரு. ராகுலின் இந்த நடைபயணம்….
ஆட்சி மாற்றத்திற்கான இலக்கை நோக்கிய அரசியல் பயணமா அல்லது நாமும் ஒரு பெரிய எதிர்கட்சியாக இயங்குகிறோம் என காட்டிக் கொள்ள ஒரு இயக்க உந்தலா எனத் தெரியவில்லை.
காரணம், பிரச்சனை உள்ள தளம் வேறு. திரு. ராகுல் செயலாற்றும் தளம் முற்றிலும் வேறு. பிரச்சனைக்கான தீர்வின் திசையை நோக்கி செல்லாது