இளம்பிறை | hilaal Profile picture
நமக்குப் புலப்படுவது மட்டும் இயற்கையின் தன்மையல்ல; அது நம் தேடலுக்கேற்ற அதன் வெளிப்பாடு மட்டுமே-ஐசன்பர்க் | குவாண்டம் | Atheism | @HilaalAlam | @SpacesScience |
Sundar Vasudevan Profile picture திருதரன் ‌‌‍‌‌‌‌‌⚛ Profile picture Jessayen Thangaraj Profile picture அ Profile picture 5 subscribed
May 7 4 tweets 2 min read
குஷ்வந்த் சிங் என்ற தீர்க்கதரிசி

2002-ல் வெளிவந்த இந்த புத்தகத்தை எழுதியவர் 2014-ல் மறைந்த திரு குஷ்வந்த் சிங்.

அதில்…

“ஒரு பாசிச சக்தி செழித்து வளர, மக்களிடையே உள்ள பிரிவுகளையும் குழுக்களையும் கொண்டு அவர்களை அச்சமடைய வைத்தல் வேண்டும்.

வெறுப்பின் மீது கட்டமைக்கப்பட்டு வளரும்
Image
Image
அந்த பாசிச சக்தி, தொடர்ந்து அச்சம் & கலவரத்தை தூண்டியே நிலைத்து நிற்க இயலும்.

முஸ்லிமாகவோ கிறித்தவராகவோ அல்லாத நாம், எந்த பிரச்சனையுமின்றி பாதுகாப்பாக உள்ளோம் என நினைத்தால் நாம் முட்டாள்கள் உலகில் வாழ்கிறோம்.

பாசிசம் ஏற்கனவே இடதுசாரி வரலாற்று ஆய்வாளர்களை & மேற்கத்திய பண்பாட்டை Image
Nov 30, 2023 5 tweets 1 min read
முதலாளித்துவ & பெருநிறுவன உலகங்கள் இந்த நவீனக் காட்டுமராண்டியை பற்றி அதிமாக சிலாகிக்கும்.

அதாவது இந்த காட்டுமிராண்டி எப்படி இவ்வளவு திறனாகச் செயல்பட்டார் என்பதற்கு ஒரு சிறு சான்று (15 ஆண்டுகளுக்கு முன் என் investor சொன்ன சம்பவம். துல்லியமாக நினைவில்லை)

அமெ. சீனாவை அடக்குவதற்கான திட்டச்செயல் வரையறையை இவர் தலைமையில் வகுத்தது.

அதற்கான ஓரு திட்டத்தை சீனாவை பற்றி நன்கறிந்த ஒரு திட்டக்குழு உபதலைவர் வகுத்துக் கொடுத்தார்.

கிஸ்ஸிங்கர், “எனக்கு இந்த திட்டத்தில் முழு திருப்தி இல்லை” என்றார்.

அந்த தி கு உபதலைவர் அதனைச் சீர்படுத்தி அடுத்த திட்ட அறிக்கையை
Jul 22, 2023 12 tweets 2 min read
அருமையான ஆனால் மிகவும் சிக்கலான வரலாற்று நிகழ்வுகள். ஆகவே nonlinear editing போல எழுதியுள்ளார். எழுத்து நடையில் திருப்தி இல்லை என்றாலும் அனைத்தும் ஒவ்வொரு இந்தியரும் தமிழரும் கட்டாயமாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வரலாற்றுப் பதிவுகள்…!

ஏன்?

இராபர்ட் கிளைவ் கால கிழக்கிந்திய கம்பெனிகளும் பிரெஞ்சுக்காரர்களும் தமிழகத்தின் வழியாக இந்தியாவில் காலூண்ற முயன்ற நேரம். கடைசியில் வென்றது ஆங்கிலேயர்கள்.

இந்தப் போட்டியில் மருதநாயகம் என்ற கான் சாகிபு என்ற நபரையே வரலாறு சுற்றி சுற்றி வருகிறது.

இன்றைய “நாடுகள்” என்ற பார்வையின் அடிப்படையில் அந்த 18ம் நூற்றாண்டின்
May 6, 2023 8 tweets 2 min read
டைட்டானிக்

ஒரே சமயத்தில் டைட்டானிக், ஒலிம்பிக் & பிரிட்டானிக் ஆகிய 3 பிரம்மாண்டமானக் கப்பலைக் கட்டுகிறார்கள்.

ஒவ்வொன்றிற்கும் 30 லட்சம் ரிவெட்டுகள் (rivet) தேவை. ரிவெட் உற்பத்தியாளர்களால் கொடுக்க இயலவில்லை.

Riveting Titanic: History Unveiled | ALZEBRA | ஆகவே சிறு உற்பத்தியாளர்களிடம் ரிவெட்கள் செய்ய ஆர்டர் கொடுக்கப்படுகிறது.

அவர்களால் Best class தரத்தில் தான் தர முடிகிறது. ஆனால் கப்பல்களுக்குத் தேவைப்படுவதோ best-best என்ற அதைவிட உயர்ந்த தரம். தரம் தடுமாறுகிறது.

கப்பல் சௌத்தாம்டன் துறைமுகத்திலிருந்து கிளம்புவதற்கு 3 ஆண்டுகளுக்கு
Apr 19, 2023 16 tweets 3 min read
ஆண்களின் வற்புறுத்தலின் பெயரில் முஸ்லிம் பெண்கள் புர்கா (அவர்களின் விருப்பத்தின் மாறாக) அணிகிறார்கள் என்று பலதடவை பலர் சந்தில் கூறினர்.

தவறு. முழுமனதாக ஏற்றுக் கொண்டு தான் (பெரும்பான்மையோர்) அணிகிறார்கள்.

“உடை என் விருப்பம்…! அதில் ஏன் தலையிடுகிறீர்?” என்ற கேள்வியும் வரும். மேலோட்டமாகப் பார்த்தால் அது சரி தானே என்றே தோன்றும். ஆனால் அது அவர்கள் விருப்பம் என்று எளிதில் கடந்து செல்ல இயலாது.

ஒருவரின் தன்விருப்பில் அணியும் உடைகள் வேறுவேறாக இருக்கும்.

இன்று சுடிதார், நாளை சேலை, மறுநாள் புர்கா என்று வெளியே செல்லும் ஆடைகள் எனில் அது தன் தேர்வு.
Mar 23, 2023 8 tweets 3 min read
Buy & Hold Theory

1982-2000 வரை secular bull market என்று சொல்வார்கள். அதாவது நீண்டகால ஏற்றம்.

அதுக்கு முன்னாடி 1964 1982 வரை secular “bear” market என சொல்வார்கள். அதாவது நீண்டகால தேக்கம்.

1964-ல் DOW Jones சராசரி 874.

17 வருடங்களுக்கு அப்புறமா, அதாவது 18வது வருடம் DJ சராசரி 875. இன்னொரு விதமா சொன்னால், 1964-ல் வாங்கின பங்கு 1982-ல் தான் break evenயே தொட்டது. அதுவரை லேசான ஏற்ற இறக்கமாகத் தான் இருந்தது.

அப்புறம் (local corrections) தவிர ஏறுமுகம் தான். அதாவது 60களின் மத்தியில் வாங்கியவர்கள், லாபம் பார்த்தது கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு அப்புறம் தான்.
Mar 3, 2023 15 tweets 7 min read
Ok. 6 - 10வது (& +2) வரையிலான புத்தகங்களை சொல்கிறேன்.

ஆசிரியர்களின் தொடர் ஊக்கம் இன்றி மாணவர்களை படிக்க வைக்க இயலாது. ஆசிரியரின் ஈடுபாடு உண்டு என்ற அனுமானத்துடன் கீழ்கண்ட நூல்களைப் பரிந்துரைக்கிறேன். 1. அறிவியல்: ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய இந்தப் புத்கம் கண்டிப்பாக மாணவர்களும் & ஆசிரியர்களும் படிக்கவேண்டிய நூல்.

பள்ளி ஆசிரியர்கள் இதனைப் படித்து உள்வாங்கிக் கொண்டால் மாணவர்கள் இதிலிருந்து எழுப்பும் ஐயங்களை தீர்க்க உதவியாக இருக்கும்.

மாணவர்களின் அறிவார்ந்த எதிர்காலத்திற்கு இது.
Mar 3, 2023 10 tweets 2 min read
கொடூர #மலரும்_நினைவுகள்

இப்பத்தான் மாதாந்திர வீட்டுப் பொருட்கள் எல்லாம் முஸ்தபா போயி வாங்கினோம். ஒரு சம்பவம்.

எல்லாம் வாங்கிட்டு கேஷியர் பக்கத்துல போனபோது அப்பளக்கட்டு எடுக்க மறந்துட்டோம். திரும்ப ரொம்ப தூரம் நடக்கனும். நான் என் வீட்டம்மாகிட்ட “நான் போய் எடுத்துட்டு வர்றேன்”-னு கிளம்பினேன்.

“அம்பிகா அப்பளம். பாஸ்மதி அரிசி இருக்குற வரிசைக்கு பின்னாடி இருக்கும்”-ன்னு சொல்லி அனுப்பினாங்க. கஷ்டப்பட்டு பாஸ்மதி அரிசி இருக்குற இடத்துக்கு கேட்டு கேட்டு போயி அப்பளத்தை எடுத்து வந்து வீட்டம்மா கிட்ட கொடுத்தேன்.

“வெர்ர்ர்ரி குட்”- ன்னு அழுத்தி பாராட்னாங்க?
ஏன்னா
Mar 2, 2023 7 tweets 2 min read
#மலரும்_நினைவுகள்

ஒரு PhD அண்ணன் தீசிஸ் எழுதும் போது (image Organise பண்ண, data verification/ check up) அவருக்கு ஜூனியர்களான நாங்க 3 பேர் உதவினோம். அதில் ஒரு வட இந்திய மாணவி.

இரவு உணவுக்குப் பின் lab-ல் உட்கார்ந்து அந்த அண்ணனுக்கு உதவினோம். அவர் டேப் ரெகார்டரில் பாட்டு ஓடியது. அது 80களில் வந்த இசைச்சாமி போட்ட பாட்டு. எனக்கு பிடித்த பாடல் தான்.

அந்த வட இந்திய பெண்ணிற்கு முதன்முறை அந்த பாடலைக் கேட்டதும் பசக் என்று பிடித்து விட்டது. Repeat mode - ல அந்த பாட்டை ஓட விட்டேன். (தமில வளக்கோனும்ல!)

அடுத்தடுத்து முறைகளில் ஆண் பாடும் போது நான் பாட, பெண்
Feb 22, 2023 5 tweets 5 min read
1. ‘மா’வோ

2. நேரு

3 & 4. சொல்லமாட்டேன் சொல்லமாட்டேன் 🤣🤣🤣 ImageImageImageImage 1.

2. 🤭 தப்பு. Brother in Law இல்ல; elder brother அவரு…!

3. 1 மாரோ 2 துக்டா

4. Jis is wat I sead…

(“என்னடா ஸ்ட்ரைக்கு?”

“1 மாசம் சம்பளம் வல்ல”

“அந்த 1 மாசம் என்ன பண்ண?”

“அந்த 1 மாசம் ஸ்ட்ரைக் பண்ணேன்”

“எதுக்கு?”

“போன மாசம் ஸ்ட்ரைக் பண்ணோம்ல அதுக்கு சம்பளம் வல்ல” ImageImageImageImage
Feb 18, 2023 10 tweets 5 min read
அமைதியான நதியினிலே…!

இன்று மாலை BAMK பூங்காவில் Jogging போகும் போது என் பையனுக்கு Bernoulli Principle பத்தி விளக்கினேன்.

(அவன் Fire service-ல் தேசிய சேவை செய்யத் தொடங்கியுள்ளான். அதில் நீரோட்டம் பற்றிய பாடம் வருகிறது)

ஏன் ஒருபுறம் அமைதியான நீரோட்டமும் அதே நீரோட்டம் கற்களைக் கடந்து கலங்கியும் ஓடுகிறது?
ஒன்று laminar மற்றொன்று turbulence.
அதனை தீர்மானிப்பது ரெனால்ட் எண் (Reynolds number).

அதாவது நிலைம ஆற்றலுக்கும் (Inertial Force) பாகுத்தன்மை ஆற்றலுக்கும் (Viscous Force) இடையே யார் பெரிய ஆள் என்ற சண்டை தான் காரணம்…

இருங்க புரியுர மாதிரி சொல்றேன்…!
Jan 9, 2023 14 tweets 3 min read
நீங்களும் எலிகளா?

இது lab rat பற்றியதல்ல…! நம் சமூகம் பற்றியது.

அறிவியல் உலகில் அதிரவைக்கும் ஒரு பரிசோதனை நடந்தது என்றால் அது - Universe 25 தான்…!

எலிகளை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வு மனிதசமுதாயத்தில் என்ன நடக்கும் என்பதை தெளிவாகக் காட்டிய பரிசோதனை…!

இது நமக்கும் நேரலாம்… அமெரிக்க ஆய்வாளரான ஜான் கால்கோன் என்பவர் ஒரு வசதியான சுற்றுப்பறத்தை (ideal world) எலிகளுக்கு 1968-ல் உருவாக்கினார்.

அவைகட்கு நல்ல உணவு, நீர் & சிறந்த இடவசதி ஆகியவற்றை - அதாவது எலிகளின் சொர்க்கத்தை உருவாக்கினார்.

முதலில் 4 ஜோடி எலிகளை வைத்து ஆரம்பித்தார். அது வெகுவாகப் பெருகியது
Dec 25, 2022 15 tweets 5 min read
அன்று இரவு முழுதும் அழுதேன்…!

அணுவுக்குள் நுழைந்து விண்வெளியில் வலம் வரவேண்டும் என்ற பெருங்கனவோடு சென்னை ஐஐடியில் முதுகலை (இயந்திரவியல்) சேர்ந்த போது என் ஆய்வு வழிகாட்டி என்னையே ஆய்வுத் தலைப்பைத் தீர்மானிக்கச் சொன்னார்.

ஆர்வம் உந்தித் தள்ள பல தலைப்புகளை சொன்னேன். ஒன்று செலவு
Image பிடித்ததாக இருந்தது or அன்றைய காலகட்டத்தில் அதற்குத் தொழில்நுட்ப சாத்தியம் இல்லாதிருந்தது. அவர் ஒவ்வொன்றாக ‘வேண்டாம்’, ‘வேண்டாம்’ என்று மறுப்புக் கூறிக் கொண்டே வந்தார்.

இதற்கிடையில் என்னுடன் சேர்ந்தவர்கள் literature surveyயே தொடங்கியிருந்தனர். நான் தலைப்புக்கே தாளம் போட்டுட்டு
Nov 10, 2022 8 tweets 3 min read
Turing’s Vision: The Birth of Computer Science

Computer Science மாணவர்கள் கண்டப்பாகப் படிக்கவேண்டிய நூல்.

CS என்பது வெறும் program எழுதுவது அல்ல…!

ஆனால் நம் கல்வி முறையில் வந்த மாணவர்கள் programming language தெரிந்தால் போதும் நினைப்பில் தான் இந்த CS படிக்கிறார்கள்.

தவறு. Image சார்ல்ஸ் பாபேஜ் உள்ளிட்டோர் கணினிகளை உருவாக்கியதில் மும்முரமாக இருந்தாலும், டேவிட் ஹில்பர்ட் போட்ட ஒரு புதிர் கணினி இந்த அளவு கணினி இந்த அளவு வளர்ந்து நிற்கிறது.

கணினியின் முக்கிய சாராம்சம் - எத்தகைய கணித்தீர்வுகளைக் காண இயலும் என்பது தான்

அதன் சில விவரம் உங்கள் பார்வைக்கு…!
Oct 5, 2022 9 tweets 4 min read
குதிரையும் ராக்கெட்டும்…

க.மணி: ஏம்பா செந்தில்… ஏன் Challenger space shuttle-லை உத்து பாத்துட்டு இருக்க?

செ: அண்ணே… அந்த Solid Rocket Booster (SBR) இருக்குல? அது எவ்வளவு பெருசுண்ணே?

க: அடே…. அதோட உயரம் 150 அடி, அகலம் 12.17 அடி.

செ: ஏண்ணே? அகலம் ரொம்ப கம்மியா இருக்கு? க: அடே… அந்த SBR-ஐ தயாரிச்சது அமெ.-காவுல இருக்க யூடா (Utah)ங்குற எடத்துல இருக்குற தியோக்கால் -ங்குற கம்பெனி… அது இந்த ராக்கெட்ட செஞ்சு ரயில்ல ஏத்தி அனுப்பனும். அது குகை, மலை பாதை வழியா போகும் இல்லையா? அதனால ரயில் தண்டவாள அகலத்துக்கு அதாவது 4 அடி 8.5 அங்குல அகலத்துக்கு ஏத்தாப்ல
Sep 11, 2022 13 tweets 2 min read
இலக்கா? இயக்கமா?

திரு. ராகுல் காந்தியின் நீண்ட நடைபயணம் மக்களிடையே பரபரப்பையும், காங் கட்சி தொண்டர்களிடையே ஒரு உற்சாகமும் தொற்றிக் கொண்டுள்ளது.

மக்கள் - வலதுசாரிக்கெதிரான மாற்றம் நிகழுமா என்ற எதிர்பார்ப்புடன்.

தொண்டர்கள் - எதிர்கட்சியாக இன்னும் இயங்குகிறோம் என்ற நினைவூட்டலுடன் இதே நேரத்தில் ‘இங்கேயே இருக்கலாமா இல்லை கூடாரத்தை காலி செய்யலாமா?’ என்ற ஊசலாட்டத்தில் சில பண்ணையார் வாரிசுகள் ஈயம் பூசியது போலவும் ஈயம் பூசாத்து போலவும் கடனுக்குத் தலையைக் காட்டிக் கொண்டுள்ளனர்.

அதே நேரத்தில் நமக்கும் சில ஐயங்கள் ஏற்படுகின்றன. திரு. ராகுலின் இந்த நடைபயணம்….
Sep 10, 2022 8 tweets 2 min read
தம்பிகள் மேல் எனக்கு எப்போதும் ஒரு பாசம் உண்டு.

அவர்கள் தமக்கான ஒரு எதிர்காலத்தை உருவாக்க விழையும் துடிப்பான இளைஞர்கள் என

ஆகவே தான் இதுகாரும் என்னை வசைமாறி பொழிந்தாலும் தம்பிகளுக்குத் தன்மையாக பதில் கூறி வருகிறேன் (DM-ல் எல்லை மீறுவோரைத் தவிர).

அவர்கள் மீது கோபம் வந்ததி லை. காவி / பச்சை சங்கிகளின் மீது வரும் கோபம் ஏனோ நம் தம்பிகளின் மீது வர மாட்டேன் என்கிறது.

அவர்கள் தற்போது பாதை மாறிச் சென்றாலும் சமுதாயத்தின் எதிர்காலச் சிற்பிகள் என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

இன்றில்லையேல் என்றாவது உணர்ந்து மீள்வார்கள் என்ற நம்பிக்கை இன்றும் அன்றும் இருந்தது.
Sep 8, 2022 11 tweets 4 min read
அரசியல் சமூகம் பற்றி இந்த இரண்டு...

இது சிங்கப்பூரின் கதை என்றாலும் இது கிட்டத்தட்ட திரு லீ குவான் யூ-வின் வாழ்க்கை வரலாறு தான்...

(My all time favourite) நீங்கள் தொழில்அதிபராக இருந்தால்

திரு. லீ இயகோகா...

Ford company -ஐ எப்படி தூக்கி நிமிர்த்தினார் என்ற சுவாரசியமான வாழ்க்கை வரலாறு...
Aug 12, 2022 23 tweets 7 min read
வரலாறை மாற்றிய வெடி சத்தம்...

சிங்கப்பூரில் பூகிஸ் என்ற இடம் மிகவும் முக்கியமானது. தற்போதுள்ள வணிகரீதியாக மட்டுமல்ல அன்று நிகழ்ந்த ஒரு வரலாறு ரீதியாகவும்.

ஏன்... சிங்கப்பூருக்கு ஆக்சிஜன் கொடுத்து இதயத் துடிப்பை தொடங்கி வைத்ததே இந்த பூகிஸ் என்ற ஏரியா தான்.

அப்படி ஒரு வரலாறு இது 1819, டிசம்பர் 26, இரவு 10 மணி.

தஞ்சோம் பினாங்க் என்ற இந்தோனிசியத் தீவு.

அப்போது டச்சு தளபதி கோனிக்சுடோர்ஃபர் தொடர் வெடி ஒலிகளைக் கேட்க நேர்ந்தது. திகிலுற்றார்.
***
இன்று இந்தப் பகுதியில் சிங்கப்பூர் எப்படி முதன்மையோ அப்படி தஞ்சோம் பனாங்க் செழிப்புடன் முதன்மையாக இருந்த காலம்.
Jul 7, 2022 10 tweets 4 min read
கதிரவன் ஒப்பீட்டளவில்..

கதிரவன் (/குடும்பம்) & அருகிலுள்ள விண்மீன் அளவை நம்மால் நினைத்துப் பார்ப்பது கடினம்.

நமக்குத் தெரிந்த, நம்மால் அளவிட முடிந்தவற்றால் முயற்சி செய்து பார்க்கலாமா?

கதிரவனை தூசி அளவிற்குச் சுருக்கிக் கொள்வோம். ஒரு தூசியின் அளவு கண்களுக்குப் புலப்படாத அளவு. ஒரு வண்டல் மண் துகளின் (silt) சராசரி அளவு 0.5 மைக்ரான் அளவு. அதாவது நம் முடியின் தடிமனை விட 200 மடங்கு சிறியது.

கதிரவனின் விட்டம் 1.4 மில்லியன் (14 லட்சம்) கிமீ ஆகும்.

அந்தக் கதிரவனை ஒரு வண்டல் மண் துகள் அளவிற்குச் சுருக்குவோம்.

இப்போது கதிரவக் குடும்பம் எவ்வளவு பெரியது என்று
Jun 19, 2022 8 tweets 2 min read
Boys day out ends here...
Leaving Chennai. வைகை ஆற்றங்கரை நோக்கி
வைகை விரைவு வண்டியில்...