தலைவர் கலைஞர் முதலமைச்சராய் இருந்த போது 1971ல் அவரைப் பற்றி மோசமான அவதூறை ஒரு வார இதழ்
கட்டுரையாய் வெளியிட்டது. அதை எழுதியவர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாயிருந்து காரோட்டி வேலைத் தவிர அனைத்துப் பதவிகளையும் அனுபவித்த ராஜாஜி என்றழைக்கப்பட்ட ராஜகோபாலச்சாரி என்ற மூன்றாம் தர வக்கீல்!
முதல்வர் கலைஞரைப் பற்றிய இந்தக் கடுமையான அவதூறுக்காக் மான நட்ட வழக்குத் தொடுத்திருக்கலாம். கலைஞர் செய்யவில்லை.
ஆனால் கடற்கரையில் தந்தைபெரியார் கூட்டம் போட்டு ராஜாஜியை மிகக்கடுமையாக கண்டித்தார். ராஜாஜி சொத்து குறித்தெல்லாம் விவராமாய்க் கேள்விகள் கேட்டார் பேச்சின்
உச்ச கட்டத்தில்
இந்தக் கேள்வியைக் கேட்கிற நான் யாரோ எவரோ அல்ல; தெரு பொறுக்கி அல்ல;
பச்சி காணா அல்ல; இந்த ராஜாஜிக்கு மாதம் ரூபாய் 250/- காங்கிரஸ் கமிட்டியிலிருந்து சம்பளம் கொடுத்து வவுச்சரில் கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்த பழைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவன் ராமசாமி நான் கேட்கிறேன்.
நீ “எனக்குப் பதில் சொல்.. பிறகு கருணாநிதியைக் கேள்வி கேட்கும் அருகதை இருக்கா என்று பார்ப்போம்
“ஒரு தமிழன் சூத்திரன் முதலமைச்சராய் இருக்கிறானே.. அவனை அவமானப் படுத்தத்தானே இப்படி செய்கிறாய்? நான் ஒருவன் உயிரோடு இருக்கும் வரை அது நடக்குமா? #ஒடுக்கிப்போடுவேன்! ஜாக்கிரதை! ” என்றார்.
அன்றைய பெரியாரின் பேச்சில் அனல் பறந்தது! புயலடித்தது! பூகம்பம் நிகழ்ந்தது! ஆனால் எதுவும் அவருக்காக அல்ல தலைவர் கலைஞருக்காக வரிந்து கட்டி பேசினார்.
பெரியார் கலைஞர் உறவு
தலைவர் தொண்டர் உறவா?
கொள்கை உறவா?
அன்பினால் வந்த உறவா?
அல்லது திராவிடத்தின் ஆரிய எதிர்ப்பா?
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வரலாற்றில் ஒரு பேரரசு எப்படி எழுந்தது, வளர்ந்தது, பரந்தது என்று படிக்கும் அதேவேளையில் அதெப்படி வீழ்ந்தது என்பதும் முக்கியமான பகுதி.
சோழப்பேரரசு, பாண்டியப் பேரரசு, முகலாயப் பேரரசு வீழ்ச்சியைப் பற்றி வாசித்தவேளையில், வீழ்ச்சிக்கான பொதுவான ஒரு காரணம் தெரியுமா ?
ஆள்பவர்களின் மெத்தனம்.
இராஜராஜ சோழனுக்குப் பின்னும், இராஜேந்திர சோழன் ஆட்சியில், சோழப் பேரரசு வலுவாகவே இருந்தது. எப்படி ?
இராஜராஜனைக் காட்டிலும் அதிகளவு போர்களில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தவன் இராஜேந்திர சோழன். இராஜேந்திர சோழனை ஒரு போர்க்கள அடிக்ட் என்றே சொல்ல முடியும்.
அதேபோல, முகலாய அரசர்களில் பாபர், அக்பர், ஷாஜகானும் ஓயாமல் போர் புரிந்துக் கொண்டே இருந்தனர்.
பாபர், அக்பர், ஷாஜகானை விடவும் அதிக நாட்கள் வாழ்ந்தவர் அவுரங்கசீப். போக, தன்னுடைய 90 + வயதிலும், போர்க்களத்திற்கு யானை மீது வந்தார் என வரலாற்றிஞர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்.