இன்று நம்மிடம் இருந்து மறைக்கப்பட்ட ஒருவரின் நினைவு தினம் எந்த இடத்தில் பேனா வைக்க இந்த திராவிடம் துடிக்கிறதோ,
அதே இடத்தில் வயிற்றில் ஈரத்துணியை சுற்றிக்கொண்டு படுத்திருந்தார் அந்த தமிழ் பிராமண இளைஞர் ... சில நேரம் பிச்சையும் எடுத்தார் ...
அப்போதைய புதிய எக்மோர் இரயில் நிலையத்திற்கு நடந்தே வந்து பிச்சை எடுத்து, பின் அங்கேயே உறங்குவார் ...
அப்படி ஒருமுறை பிச்சையெடுத்துச் சென்ற போது,
அந்த வீதியில் தன் நண்பன் இருப்பது தெரியவே -
ஆனால் எந்த வீடு என்பது தெரியாமலேயே நண்பன் வீட்டிலேயே பிச்சை எடுத்தார் ..
நண்பனுக்கோ அவரை அடையாளம் தெரியவில்லை.. நண்பனை கண்டுகொண்ட இவருக்கோ தான் யார் என்பதை கூறமுடியாமல் நிற்க - அந்த நண்பன் மீண்டும் ஒருமுறை பார்த்து பின் அடையாளம் தெரிந்து, வந்து கட்டி அணைத்தான்..
ஒரு "பிரிட்டிஷ் இந்திய ஆங்கிலேய அதிகாரியை" கொலைசெய்த வழக்கில் அவருக்கு 7 - 8வருடம் கடுங்காவல் சிறைதண்டனை கிடைத்து, அப்போது தான் சிறையில் இருந்து வெளியில் வந்து இருந்தார் .. முதலில் கோயம்பத்தூர் சிறையில் அடைக்கப்பட்டு,
பின் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டு, அங்கேயும் அடங்காததால் பெல்லாரி (கர்நாடகா) சிறைக்கு மாற்றப்பட்டார் .. இரண்டே வருடத்தில் சிறையில் இருந்து தப்பித்தார் . ஆனால் எங்கே போவது என்று தெரியாமல் மூன்றாவது நாளே பிடிபட்டார் ..
8 வருட சிறைத் தண்டனைக்கு பிறகு பிச்சை எடுத்த போது தான் மேலே கூறிய தன் நண்பனை பார்த்தார் .. பார்த்த சில தினங்களிலேயே அந்த நண்பனும் இறந்து போனான். இறப்பதற்கு முன் அந்த நண்பன் எழுதியது தான்:- “தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” ஆமாம்...
அந்த நண்பன் தான் #பாரதி, கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில் 8வருட சிறைக்கு பின் மெரினா கடற்கரையில் பிச்சை எடுத்தவர் நீலகண்ட_பிரம்மசாரி #மார்ச்_4ஆம் தேதி நினைவு தினம்..
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
*சனிமஹாபிரதோஷம் சேர்ந்து வரும் அற்புதமான நாள் இந்த வருட சனிமஹா சிவராத்திரி நன்நாள்...*
*இந்த 2023ம் வருடம் 18-2-2023 மாசி 6ம் திகதி சனிக்கிழமையும் சிவராத்திரியும், சனி மஹா பிரதோஷமும் இணைந்து வருகிறது.*
*சிவராத்திரியும், சனிக்கிழமையும் இணைந்து வரும் 18-2-2023 (மாசி 6ம் நாள்) பகல், இரவு முழுவதும் சாப்பிடாமலும், தூங்காமலும் விரதம் இருந்து, அந்த இரவில் குலதெய்வம் மற்றும் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.
19-2-2023 மாசி 7 ம் தேதி பகலிலும் தூங்கக்கூடாது.
இப்படி தூங்காமல் பூஜை+விரதம் இருந்தால் வாழ்க்கையில் ஏற்படும் துயரங்கள் முழுமையாக விலகும்.*
*அன்றைய தினம் குலதெய்வம் மற்றும் சிவன் கோவில் ஆகிய இரண்டு கோவில்களுக்கும் செல்ல முடியாமல் ஏதேனும் ஒரு கோவிலுக்கு மட்டுமே செல்லமுடியும் என்ற