*விறகு வெட்டுவார் .அதை கொண்டு போய் விற்பனை செய்வார்.*
*ஓரளவுக்கு வருமானம் வந்தது.*
*அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார்.*
*ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார்.*
*அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை.*
*எதோ விபத்துல இழந்துட்டது போல இருக்கு.. !*
*அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு .. அதை இவர் பார்த்தார் ..*
*அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம்.*
*"இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ..?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சார்.*
*இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது ..*
*அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டார், ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சார்.*
*அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ...*
*அதை சாப்பிட்டது ...*
*சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது ...*
*புலி போனப்பின் கால் இல்லாத அந்த நரி மெதுவா நகர்ந்து கிட்ட வந்தது ...*
*மிச்சமிருந்ததை சாப்பிட்டது ...*
*திருப்தியா போய்ட்டது !*
*இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு நம்ம ஆள் கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கார்.*
*இப்ப அவர் யோசிக்க ஆரம்பிச்சார்*
*"ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான். அப்படி இருக்கறப்போ ...*
*தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா ? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம் ...*
*ஒரு நாள் ராத்திரி நேரம். கோயில்ல யாருமே இல்லை. இவர் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தார் ...*
*"ஆண்டவா ... என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா .....?" நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா ? காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே..!
அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன் ... என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே ... இது நியாயமா ?"..- ன்னாரு*
*இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம் .....*
*"முட்டாளே ! நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே .. !*
*புலி கிட்ட இருந்து ..! அப்படின்னாராம் ..... புலி போல் உழைத்து சாப்பிட்டு மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுன்னாராம் ....* 🙏
ராமாயணத்தில், எந்தக் காண்டத்துக்கும், ராமனின் பெயரோ, சீதையின் பெயரோ வைக்கவில்லை! ஆனால் அனுமன் பெயர் கொண்டு ஒரு காண்டமே உள்ளது!
அது, சுந்தர காண்டம்! இது தான் தொண்டருக்குக் கிட்டிய பெருமை! அனுமனுக்குச் சுந்தரன் என்ற பெயர் உண்டு! அவன் பெயர் தான் இங்கு வைக்கப்பட்டுள்ளது!
அனுமனை விரும்பாதார் தான் யார்? வடை மாலை, வெற்றிலை மாலை, ராமஜெயம் எழுதப்பட்ட மாலை – இப்படி மாலை மரியாதைகள் தான் என்ன?
சிறிய திருவடி, மாருதி, ஆஞ்சனேயன், ராம தூதன், சொல்லின் செல்வன், சமய சஞ்சீவி என்ற எத்தனை பட்டப் பெயர்கள் இவனுக்கு? மனத்துக்கினியான் ராமனுக்குக் கூட இவ்வளவு சிறப்புகள் கொடுத்திருக்கிறார்களா?
அருள்மிகு வைகுண்டப் பெருமாள் திருக்கோவில்
திருப்பரமேச்சுர விண்ணகரம்.
1
மூலவர்: வைகுந்தநாதன், பரமபதநாதன்
தாயார்: வைகுந்தவல்லி
உற்சவர்: வைகுந்தநாதன்
கோலம்: இருந்த, கிடந்த நின்ற திருக்கோலம்
விமானம்: முகுந்த விமானம்
தீர்த்தம்: ஐரம்மத தீர்த்தம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
2
திருப்பரமேச்சுர விண்ணகரம்:-
வைகுந்த வாசனான இறைவன் நாராயணா வைகுண்டத்தில் உள்ளவாறே நின்ற, இருந்த, கிடந்த திருக்கோலத்தில் மூன்று நிலைகளையும், மூன்று அடுக்குகளாக அமைந்த இத்திருக்கோவிலில் சேவை சாதிக்கிறார்.
பெருமாள் கோயில் என்றால், துளசியும் தீர்த்தமும்தானே பிரசாதமாகப் பெறுவோம். கூடவே, விபூதியும் தருகிறார்கள் என்றால்... பெறுகின்ற நமக்கு வியப்பாகத்தானே இருக்கும். அது எந்தக் கோயில்? விபூதி தருவதற்கு என்ன காரணம்?
1
அதற்கு நாம் சிந்துப்பட்டி செல்ல வேண்டும். மதுரை மாவட்டம்- திருமங்கலம்- உசிலம்பட்டி சாலையில், சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது சிந்துப்பட்டி. இங்குள்ள பழைமையான வேங்கடேச பெருமாள் கோயிலில்தான் இந்த விசித்திரம். கோயிலின் வரலாற்றைத் தெரிந்துகொண்டால், இதற்கான விளக்கம் கிடைக்கும்.
2
கி.பி. 12, 13-ஆம் நூற்றாண்டுகளில், தக்காண பீடபூமி மற்றும் தென்பகுதியில் சுல்தான்களின் ஆதிக்கம் இருந்தது. அவர்கள் ஆளுகைக்கு எதிராகத்தான், விஜயநகர சாம்ராஜ்ஜியம் தோன்றியது. நலிவுற்றிருந்த ஆலயங்கள் பல அதன் பிறகு புத்துயிர் பெற்றன.
மனிதனின் பருவக்கால மாற்றத்தை விழாக்கள் எடுத்து கொண்டாடுவது இயல்பு. ஆனால், இயற்கையோட பருவக்கால மாற்றத்தை வரவேற்கும் விதமான ஒரு கொண்டாட்டம்தான் ஹோலி பண்டிகை என்கிற அரங்கபஞ்சமி.
இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளில் குறிப்பிட்ட இனத்தவரால் இப்பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுது.குஜராத் போன்ற சில மாநிலங்களில் இப்பண்டிகையை 5 நாட்கள் கொண்டாடுகின்றனர்.
மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே ஹோலி பண்டிகையின் முக்கிய குறிக்கோளாகும்.
அகிலத்தையே சுருட்டி ஆதி சக்திக்குள் லயமடையச் செய்யும் மகாப் பிரளயம் பெருக்கெடுத்து வரும் காலம் அருகே வந்தது. ஆழிப் பேரலைகள் அண்ட சராசரத்தையும் முறுக்கி அணைத்து ஆரத் தழுவி தமக்குள் கரைத்துக் கொள்ளும் ஊழிக்காலம் உந்தி வருவதை அறிந்தார், பிரம்மா.
1
மும்மூர்த்திகளுமே யோக நித்திரையில் ஆழ மகாகாளி மட்டும் தாண்டவமாடிக் களிக்கும் பிரளயம் நெருங்கியது பார்த்து அதிர்ந்தார் நான்முகனான பிரம்மா. பீஜங்கள் எனப்படும் பிரபஞ்ச படைப்பாற்றலின் விதைகளாக திகழும் பிரபஞ்ச மூல அணுக்கள் அழிந்துவிடுமோ என அஞ்சினார்.
2
படைப்பின் ஆதாரமாக விளங்கும் வேதங்கள் கூட பிரளயப் பேரழிவில் ஆதி சக்தியில் சென்று ஒடுங்கி விடுமோ என கவலை அவரை வாட்டியது. அகிலத்தை படைத்து எண் திக்கும் பரவச் செய்து சகல ஜீவராசிகளையும் செழிக்க வைக்க வேண்டுமென்ற பேரவா அவரை நிலைகொள்ளாமல் தவிக்கச் செய்தது.
மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் தெரிந்தும் தெரியாமலும் பாவம் செய்வது இயல்பு. பாவம் செய்துவிட்டு பாவத்துக்குப் பரிகாரமாக புண்ணியம் தேடி ஒவ்வொருவரும் பல்வேறு ஆலயங்களுக்குச் செல்கிறோம்.
இதனால் ஏற்படும் தோஷத்தை போக்கிக்கொள்வதற்காக ஜபம் – தபம் போன்ற பல்வேறு பரிகாரங்களைச் செய்கிறோம். மாதங்களில் மகத்தான மாதம் என்று அழைக்கப்படுவது மாசி.
தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுவது மாசி மாதம்.
இந்த மாதம் முழுவதும் கடலாடும் மாதம்’ என்றும், தீர்த்தமாடும் மாதம்’ என்றும் சொல்வார்கள்.