செவ்வாய்க்கிழமைகளில் நல்ல காரியங்களை
செய்யலாமா? செய்யக் கூடாதா?
என்கின்ற கேள்விக்கு நம்மில் பலருக்கும் நீண்ட நாட்களாகவே பதில் தெரியாமல்,
சந்தேகத்துடனேயே செவ்வாய் கிழமைகளை தவிர்த்து விடுகிறோம்.
இந்த சந்தேகம் இன்று நேற்று அல்ல, பல ஆண்டுகளாகவே தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
நாள், கிழமை பார்த்து செய்கின்ற காரியம் பாதி வெற்றியை தரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
செவ்வாய்க்கிழமை அதுவுமா புது புடவை கட்டலாமா? நாளைக்கு கட்டலாமே..
செவ்வாய்க்கிழமையில் போய் புதுசா வேலை செய்யலாமா?
வேற நல்ல நாளில் தொடங்க கூடாதா?
என்று புது ஆடை உடுத்துவதில் இருந்து, புதிய பொருட்கள் வாங்குவது வரை நாள், கிழமை என்று பார்ப்பவர்களும் உண்டு.
எல்லா விஷயங்களுக்கும் இப்படி நாளும், கிழமையும் பார்க்கலாமா?
என்று நினைத் ததை, நினைத்தபடி நடத்துப வர்களும் உண்டு.
*செவ்வாய்க்கிழமை நல்ல தினம் தானா?*
செவ்வாய்க்கிழமையும் உகந்த நாள் தான்.
நவகிரகங்களுள் மிகச் சிறந்தது செவ்வாய் கிரகம் ஆகும்.
கிரகங்களில் செவ்வாய் என்பது மங்களகாரகன் என்று அழைக்கப்படுகிறது.
செவ்வாய் என்றாலே மங்களகரமான வார்த்தை என்று முன்னோர்கள் சொல்வார்கள்.
செவ்வாய்க்கிழமை அன்று எதையும் செய்ய விரும்பாத வர்கள் வாழ்க்கையில் முழு பலனை அனுபவிக்கவே முடி யாது என்றும்சொல்வதுண்டு.
முருகப்பெருமானுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை தான்.
இவரை வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றி யடையும் என்பது நம்பிக்கை.
செவ்வாயையும், முருகப் பெருமானையும், பூமாதேவி யையும் வழிபட்டு செவ்வாய் கிழமையில் மங்கலப் பொருட்கள் வாங்கினால் செல்வம் பன்மடங்கு
பெருகுவதோடு,
எல்லா சிறப்புகளும் தேடி வரும். சீக்கிரம் கடன் அடையும் :
இயற்கையிலேயே செவ்வாய் பகவான் விசுவாசம் நிறைந்த பணியாளாக இருந்தாலும் மூர்க்க குணம் நிறைந்தவர்.
எதை பற்றியும் கவலைப்
படாமல், எதையும் யோசிக்காமல் வேகமாக செயல்படக் கூடியவர்.
செவ்வாய்க்கிழமை அன்று நாம் செய்யும் செயல்கள் தொடரும் என்பதால் தான் கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பி தரும் போது செவ்வாய்க்கிழமை தந்தால் வெகு சீக்கிரமே கடன்
அடையும்.
மீண்டும் கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படாது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
*மௌன விரதம் :*
செவ்வாய்க்கிழமை அன்று மௌன விரதம் அனுஷ்டித் தால் யாகம் செய்த பலனை ஒருவர் அடையலாம்.
அதாவது செவ்வாய்க்கிழமை அன்று எந்தவொரு
விவாதத்திலும் ஈடுபடக் கூடாது.
அப்படி விவாதம் செய்தால் அது நிச்சயம் தீமையில் சென்று முடியும்.
அதனால் தான் செவ்வாயோ, வெறும் வாயோ என்று அன்றைய தினம் விவாதம் செய்யாமல் மௌன விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று
சொல்கிறார்கள்.
*பரிகாரம் :*
செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் தோஷத்திற்கான பரிகாரசாந்தி, துர்காஹோமம் ஜென்ம நட்சத்திரத்தின் அடிப் படையில் செய்யும் ஆயுஷ்ய ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி போன்றவற்றை செய்யலாம்.
செவ்வாய்க்கிழமை அன்று பூமி பூஜை செய்வது நல்லது என்று மனையடி சாஸ்திரம் கூறுகிறது.
பயணங்களில் கிழக்கு திசை நோக்கிய பயணம் செவ்வாய் கிழமை அன்று இருந்தால் உறுதியான வெற்றியை தரும்.
அதனால் இனி செவ்வாய்க் கிழமைகளை தவிர்த்து
விடாமல்,
எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன் படுத்தி கொள்ளுங்கள்...
சிவலிங்கத்தின் தலையில் புஷ்பம் இல்லாமலிருக்கக் கூடாது;
புஷ்பங்களில் சாத்வீகம், ரஜசம், தாமசம், மிச்ரம் என்ற நான்கு வகைகள் உண்டு.
வெண்மையான புஷ்பங்கள் சாத்வீகம்,
சிவந்தவை ரஜசம்,
கருநிற புஷ்பங்கள் தாமசம்,
மஞ்சள் வர்ணமுள்ளது மிச்ரம்.
மூன்று தளங்கள் உள்ளதும், சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணமுள்ளதுமான ஒரு வில்வத்தை, சிவனுக்கு, அர்ப்பணம் செய்தால், மூன்று ஜென்மாவின் குலோத்தாரணம் செய்து, சிவலோகத்தில் கொண்டாடப்படுவான்.
வில்வ பத்ரம் புதிதாக இருந்தாலும், காய்ந்திருந்தாலும்,
சிவனுக்கு அர்ச்சிப்பதால்,
சகல பாவங்களும் விலகும்.
வில்வ பத்திரத்தை ஒரு முறை அர்ச்சித்த பின், மறுதினம் அதையே தண்ணீரில் கழுவி, மீண்டும் அர்ச்சிக்கலாம்; தோஷமில்லை.
ஒரு பெரியவர் தினமும் கோவிலில் அமர்ந்து முதலில் விஷ்ணு சகஸ்ரநாமமும் பின்னர் பகவத்கீதையும் பாராயணம் செய்வது வழக்கம்.
எப்போதும் விஷ்ணு சகஸ்ரநாமம் பிழையின்றி பாராயணம் செய்வார்.
அதன் பின் பகவத்கீதை பாராயணம் செய்யும் போது தப்பும் தவறுமாக சொல்லுவார்.
இது தினமும் நடந்தேறும்
பலரும் இவரின் காது
படவே எடுத்துரைப்பார்கள்.
இவரும் அடுத்த நாள் சரி செய்து கொள்கிறேன் என உறுதி கூறுவார்.
ஆனால் மறுநாளும் அதே கதை தொடர்ந்தது.
ஒரு நாள் அத்திருத்தலத்திற்கு சைத்தன்ய மஹாபிரபு வருவதாக அறிவிப்பு செய்தார்கள்.
உடனே வேத பண்டிதர்கள் கவலை அடைந்தார்கள்
மஹாப்பிரபு வரும் போது இந்த பண்டிதர் தப்பும் தவறுமாக பகவத்கீதையை பாராயணம் செய்வதை பார்த்தால் வருந்துவாரே என எண்ணி ஒரு முடிவிற்கு வந்தார்கள்.
ஆயிரம் அத்தி வரதர்க்கு சமமான ஒரு கோவில், 100 திருப்பதிக்கு சமமான ஒரு கோவில் ரெண்டும் எங்க இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா?
100 திருப்பதி தரிசனத்திற்கு சமமான பத்மாவதி,
ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்த இடம் என்ற வரலாற்று பெருமையுடைய நாராயணவனம் தலத்திற்கும் மற்றும்
ஆயிரம் அத்தி வரதருக்கு சமமான தரிசனம் பெறக்கூடிய ஒரு ஆலயம் என்கிற பெருமை உடையதுமான நாகலாபுரம் ஸ்ரீவேதநாரயண பெருமாள்
தலத்திற்கும் தான்
இந்த பதிவின் மூலம் நாம் பயணம் செல்ல போகிறோம்!
சந்திரனை அடிப்படையாக கொண்ட சந்திர மாஸ கணக்குபடி வைகாசி மாத சுக்ல பட்ச தசமி திதியன்று
நாராயணவனம் என்கிற இடத்தில்தான் பத்மாவதி ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்துள்ளது.
அப்படிபட்ட வரலாற்று பெருமையுடைய தலத்தையும் ஆயிரம் அத்தி வரதர்க்கு சமமான வேத நாராயண பெருமாள் கோவில் தலத்தையும் இன்று நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.