ஒரு பெரியவர் தினமும் கோவிலில் அமர்ந்து முதலில் விஷ்ணு சகஸ்ரநாமமும் பின்னர் பகவத்கீதையும் பாராயணம் செய்வது வழக்கம்.
எப்போதும் விஷ்ணு சகஸ்ரநாமம் பிழையின்றி பாராயணம் செய்வார்.
அதன் பின் பகவத்கீதை பாராயணம் செய்யும் போது தப்பும் தவறுமாக சொல்லுவார்.
இது தினமும் நடந்தேறும்
பலரும் இவரின் காது
படவே எடுத்துரைப்பார்கள்.
இவரும் அடுத்த நாள் சரி செய்து கொள்கிறேன் என உறுதி கூறுவார்.
ஆனால் மறுநாளும் அதே கதை தொடர்ந்தது.
ஒரு நாள் அத்திருத்தலத்திற்கு சைத்தன்ய மஹாபிரபு வருவதாக அறிவிப்பு செய்தார்கள்.
உடனே வேத பண்டிதர்கள் கவலை அடைந்தார்கள்
மஹாப்பிரபு வரும் போது இந்த பண்டிதர் தப்பும் தவறுமாக பகவத்கீதையை பாராயணம் செய்வதை பார்த்தால் வருந்துவாரே என எண்ணி ஒரு முடிவிற்கு வந்தார்கள்.
ஊர் பெரியவர்கள் அனைவரும் அவரிடம் சென்று ஐயா சைத்தன்ய மஹாபிரபு வரும் நாள் அன்று மட்டும் இங்கு அமர்ந்து நீங்க பாராயணம் செய்ய வேண்டாம்.
குளக்கரையில் அமர்ந்து வழக்கம் போல் தாங்கள் பாராயணம் செய்யுங்கள் என வேண்டிக் கொண்டார்கள்.
அவரும் அதை ஏற்றுக் கொண்டு மஹாபிரபு வரும் நாள் அன்று குளக்கரையில் அமர்ந்து பாராயணம் செய்ய முடிவு செய்தார்.
அன்றைய நாளும் வந்தது சைத்தன்ய மஹாபிரபுவும் வருகை தந்தார்கள் ஊர் மக்கள் வேத கோஷம் முழங்க மங்கல வாத்தியம் முழங்க வரவேற்பு அளித்தார்கள்.
அதை மகிழ்ச்சியுடன் ஏற்ற மஹாபிரபு சில நொடிகளில் தம் காதுகளில் பாய்ந்த விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் ஒலிப்பது கேட்டு கூர்ந்து கவனித்து அந்த திசை நோக்கி சென்றார்.
உடனே ஊர் பெரியவர்கள் கவலை கொண்டார்கள்
எது நடக்கக் கூடாது என எண்ணினார்களோ அது நடந்தேறியது கண்டு வருத்தம் அடைந்தார்கள்.
மஹாபிரபு பாராயணம் ஒலிவரும் திசை நோக்கி சென்று அப்பெரிவரை கண்டார்.
அப்போது அப் பெரியவர் வழக்கம் போல் விஷ்ணு சகஸ்ரநாமம் முடித்து வழக்கம் போல் பகவத் கீதை பாராயணம் தப்பும் தவறுமாக சொல்ல ஆரம்பித்து இருந்தார்.
அப்பெரியவர் சைத்தன்யர் வந்ததை அறியவில்லை.
உடனே சைத்தன்ய மஹாப்பிரபு சாஷ்டாங்கமாக அப்பெரியவர் காலில் விழுந்து வணங்கினார்.
அப்போதும் அப்பெரியவர் கவனிக்கவில்லை
உடனே சைத்தன்யர் அப்பெரியவரின் தோள்களை பிடித்து உளுக்கினார்.
உடனே அப்பெரியவர் நிமிர்ந்து பார்த்தார்.
தன்னைச்சுற்றி ஊர் மக்கள் அனைவரும் கூடி இருப்பது அறிந்து கொண்டு சைத்தன்ய மஹாபிரபு இவராகத்தான் இருக்க வேண்டும் என எண்ணி பிரபுவின் கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்ய முற்ப்பட்டார்.
உடனே மஹாப்பிரபு அப்பெரியவரை தடுத்து அப்பெரியவரிடம் தங்கள் பாராயணத்தை இடையூறு செய்தமைக்கு முதலில் மன்னிக்க வேண்டிக் கொண்டு அப்பெரியவரிடம் பேசத் தொடங்கினார்.
மஹாப்பிரபு அப்பெரியவரிடம் தங்கள் பாராயணம் செய்யும் ஒலி எம்மை இங்கு ஈர்த்து வந்தது ஊரார் அனைவருக்கும் மிகுந்த சந்தேகம்
தாங்கள் தினமும் பகவத் கீதை பாராயணம் செய்யும் போது மட்டும் ஏன் தப்பும் தவறுமாக பாராயணம் செய்கிறீர்கள் என வினவுகிறார்கள் எனக் கேட்டார்.
உடனே அப்பெரியவர் கூறினார் தான் தினமும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து விட்டு பகவத் கீதை பாராயணம் செய்ய ஆரம்பித்து முதல் ஸ்லோகம் ஆரம்பித்து உடனே கண்முன் குருக்ஷேத்திர பாரத போர் கண் முன் தெரிகிறது,
இரண்டாவது ஸ்லோகம் ஆரம்பித்த உடன் கௌரவா சேனையும் பாண்டவ சேனையும் கண்முன் வருகிறது,
இப்படியே ஒவ்வொரு ஸ்லோகம் ஆரம்பித்து உடனே அந்த ஸ்லோகத்திற்கான காட்சிகள் கண்முன் தோன்றுகிறது
கடைசியாக அந்த புருஷோத்தமன் பாகவத ஸ்ரீகிருஷ்ணர் கண்களில் தெரிய ஆரம்பித்தவுடன் என் கண்களில் என்னையும் அறியாமல் கண்ணீர் வழிந்தோடுகிறது.
அதனால் எழுத்துகள் சரியாக தெரிவதில்லை ஆகவே தப்பும் தவறுமாக பாராயணம் செய்கிறேன் எனக்கூறி சரி நாளை இத்தவறை திருத்தி கொள்ள வேண்டும் என நினைப்பேன்,
ஆனால் வழக்கம் போல் வாசுதேவ ஸ்ரீகிருஷ்ணரை கண்களில் கண்டவுடன் என் கண்களில் வரும் கண்ணீரை கட்டுப்படுத்த இயலவில்லை
அதனால் தினம் தோறும் தப்பும் தவறுமாக பாராயணம் செய்ய நேறுகிறது என வருத்தத்துடன் கூறினார்.
உடனே சைத்தன்ய மஹாபிரபு அப்பெரியவரை சாஸ்டாங்கமாக வணங்கி ஊர் மக்கள் அனைவரையும் அர்த்த புன்னகையுடன் பார்த்தார்கள்.
அவர்கள் அனைவரும் வெட்கி தலை குனிந்து அப்பெரியவரின் காலில் விழுந்து மன்னிப்பு கோரினார்கள்.
சிவலிங்கத்தின் தலையில் புஷ்பம் இல்லாமலிருக்கக் கூடாது;
புஷ்பங்களில் சாத்வீகம், ரஜசம், தாமசம், மிச்ரம் என்ற நான்கு வகைகள் உண்டு.
வெண்மையான புஷ்பங்கள் சாத்வீகம்,
சிவந்தவை ரஜசம்,
கருநிற புஷ்பங்கள் தாமசம்,
மஞ்சள் வர்ணமுள்ளது மிச்ரம்.
மூன்று தளங்கள் உள்ளதும், சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணமுள்ளதுமான ஒரு வில்வத்தை, சிவனுக்கு, அர்ப்பணம் செய்தால், மூன்று ஜென்மாவின் குலோத்தாரணம் செய்து, சிவலோகத்தில் கொண்டாடப்படுவான்.
வில்வ பத்ரம் புதிதாக இருந்தாலும், காய்ந்திருந்தாலும்,
சிவனுக்கு அர்ச்சிப்பதால்,
சகல பாவங்களும் விலகும்.
வில்வ பத்திரத்தை ஒரு முறை அர்ச்சித்த பின், மறுதினம் அதையே தண்ணீரில் கழுவி, மீண்டும் அர்ச்சிக்கலாம்; தோஷமில்லை.
ஆயிரம் அத்தி வரதர்க்கு சமமான ஒரு கோவில், 100 திருப்பதிக்கு சமமான ஒரு கோவில் ரெண்டும் எங்க இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா?
100 திருப்பதி தரிசனத்திற்கு சமமான பத்மாவதி,
ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்த இடம் என்ற வரலாற்று பெருமையுடைய நாராயணவனம் தலத்திற்கும் மற்றும்
ஆயிரம் அத்தி வரதருக்கு சமமான தரிசனம் பெறக்கூடிய ஒரு ஆலயம் என்கிற பெருமை உடையதுமான நாகலாபுரம் ஸ்ரீவேதநாரயண பெருமாள்
தலத்திற்கும் தான்
இந்த பதிவின் மூலம் நாம் பயணம் செல்ல போகிறோம்!
சந்திரனை அடிப்படையாக கொண்ட சந்திர மாஸ கணக்குபடி வைகாசி மாத சுக்ல பட்ச தசமி திதியன்று
நாராயணவனம் என்கிற இடத்தில்தான் பத்மாவதி ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்துள்ளது.
அப்படிபட்ட வரலாற்று பெருமையுடைய தலத்தையும் ஆயிரம் அத்தி வரதர்க்கு சமமான வேத நாராயண பெருமாள் கோவில் தலத்தையும் இன்று நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.