#பக்தி_என்றால்

#மணிவாசக_பெருமான்

மாணிக்கவாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்கவாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார்.

அதற்கு மணிவாசக பெருமான் என்ன கேட்கிறார் பாருங்கள்.

பாடல்

வேண்டதக்கது அறியோய் நீ !
வேண்ட முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன்மாற்கு அறியோய் நீ!
வேண்டி என்னைப் பணி கொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்,
அதுவும் உந்தன் விருப்பன்றே...!

பாடல் விளக்கம் =

எனக்கு என்ன தர வேண்டும் என்று உனக்குத் தெரியும். எனக்கு எவ்வளவு தர வேண்டும் என்றும் உனக்குத் தெரியும்.
எனக்கு ஏதாவது வேண்டும் என்று நான் நினைத்தால் , அதுவும் உன் விருப்பமே என்று மணிவாசகர் ஈசனிடம் உருகி பாடுகிறார்.

ஆனாலும் சிவ பெருமான் மணிவாசக பெருமானை விடுவதாக இல்லை மீண்டும் கேட்கிறார் உனக்கு என்ன வேண்டும் கேள் என்று மீண்டும் மணிவாசகர் பாடுகிறார்..

பாடல் =
உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;

கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்;

குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,

கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே...!

பாடல் விளக்கம் =
சொந்தங்கள் எனக்கு வேண்டாம்,
ஊர் வேண்டாம்,
நல்ல பெயர் வேண்டாம்,
நல்ல படிப்பு அறிவு வேண்டாம் உன் அருள் இருந்தால் அது தானாக கிடைக்கும்.

குற்றாலத்தில் அமர்ந்து இருக்கும் ஆனந்த கூத்தனே நான் உன் திருவடிகளை தேடி தாயை கண்ட கன்று போல அன்பில் உருக வேண்டும்.
பக்தனைப் போல, ஒரு கன்றை ஈன்ற பசுவின் மனம் போல உருக வேண்டுவனே என்கிறார்.

என்று பக்தியால் மனம் உருகி வேண்டுகிறார் மாணிக்கவாசகர் பெருமான்...

ஹர ஹர மகாதேவா

அடியார்க்கும் அடியேன்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #பாரதம்_தமிழகம் ( Kaalabala )🇮🇳

#பாரதம்_தமிழகம் ( Kaalabala )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Mar 13
*தெரிந்து கொள்ளுங்கள்*

கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்து இருப்பவர்கள் அந்தக் காரின் காப்பீட்டு பாலிசியைப் படித்துப் பாருங்கள். அதில் விபத்துகள் ஏற்பட்டு கிளைம் எதுவும் வாங்கப்படாமல் இருக்கும் பட்சத்தில்
No claim bonus கூடிக்கொண்டே வந்து 50% வந்தவுடன் நின்று விடும்.
அவ்வாறு விபத்து கிளைம் ஏதும் வாங்காமல் இருக்கும் நிலையில் உங்கள் காரை நீங்கள் விற்று விட்டு வேறு கார் வாங்க முடிவு செய்தால், நீங்கள் விற்கப் போகும் காரின் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அனுகி No Claim Bonus Certificate வேண்டும் என்று எழுத்துப் பூர்வமாகக் கேளுங்கள் .
அவர்கள் தரும் அந்த Certificate ஐ பெற்று புதிய கார் வாங்கும் ஏஜென்சியிடம் கொடுத்துப் புதிதாக எடுக்கும் வாகன பிரிமியத்தில் உங்கள் பழைய காரின் No claim bonus எவ்வளவு இருக்கிறதோ...அதே அளவு Discount பெற்றுக் கொள்ளுங்கள் . அது உங்கள் உரிமை .
Read 6 tweets
Mar 12
#முதுமை

இந்த மாசம் தாத்தா பாட்டி நம்ம வீட்டுக்கு வரலையாப்பா? ஆசையோடு கேட்டான் பையன்.

உங்க அப்பா அழைக்கப் போகாட்டாலும் உங்க பெரியப்பா தாத்தா பாட்டிய இங்கே கொண்டு வந்து விட்ருவாருடா. கவலைப் படாதே, குதர்க்கமாய் பதில் சொன்னாள் மனைவி.
அப்போது அலைபேசி மணி ஒலித்தது. எடுங்க. உங்க அண்ணனாய்த்தான் இருக்கும். மனைவியின் யூகம் சரிதான். அண்ணன்தான் அழைத்தார்.

வணக்கம்ண்ணே, நாந்தான் பேசுறேன். சொல்லுங்க’ என்றேன்.

என்னடா, அப்பா அம்மாவை அழைச்சிட்டுப் போகலையா? அண்ணன் கேட்டார்.
அவரைச் சொல்லியும் குற்றமில்லை. அண்ணி தொந்தரவு செய்திருப்பாள்.

கொஞ்சம் வேலையா போய்டுச்சு. இன்னும் ஒரு மணி நேரத்துல வந்திடுறேன். இணைப்பை துண்டித்தேன். புறப்பட
ஆயத்தமானேன்.

அப்பா, எனக்கொரு சந்தேகம் என்றான் மகன்.

என்னடா சந்தேகம்?
Read 4 tweets
Mar 12
*கோயிலில் தெய்வங்களை தரிசிக்கும் முறைகள்*

*சிவன் கோயிலில் சிவனை வணங்கிவிட்டு தான் உமாதேவியரை வணங்கவேண்டும்*

பெருமாள் கோவிலில் முதலில் தாயாரை வணங்கிவிட்டுதான்,பெருமாளை வணங்கவேண்டும்.
நவக்கிரக வழிபாடு செய்ய சென்றால் அந்த கோயிலின் பிராதான தெய்வங்களை வணங்கிவிட்டு பிரகாரத்தை சுற்றிவிட்டுதான் நவக்கிரகங்களை வணங்க வேண்டும்.

ஆஞ்சநேயரை வணங்கிவிட்டு 5 நிமிடம் கோயிலில் உட்கார்ந்து கண்ணை மூடி அவரை நினைத்து தியானிக்க வேண்டும்.
விநாயகர் கோயில் பிரகாரத்தை ஒரு முறை சுற்ற வேண்டும்.

சிவன்கோயில் பிரகாரத்தை மூன்று முறை சுற்ற வேண்டும்.

பெருமாள் கோயில் பிரகாரத்தை நான்கு முறை சுற்ற வேண்டும்.

நவக்கிரகங்களை ஒன்பது முறை சுற்றி வர வேண்டும்.

அம்மன் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை செல்வது நல்லது.
Read 4 tweets
Mar 10
காங்கிரஸ் கட்சி, வேரோடு மண்ணோட சேர்த்து அழிக்கப்படணும்.

2014-ல்ல காங்கிரஸ் திரும்பவும் வந்திருந்தா கட்டுக்கடங்காத அதிகார பலமும், பணபலமும் கையிலிருந்த அந்த நேரத்துல, அவங்க 60 வருஷமா ஒளிச்சு வெச்சிருந்த பிரிட்டனோட கனவு செயல் திட்டங்களைப் பூராம்,
நேரடியா செயல்படுத்தி பார்த்திருப்பாங்க. இந்தியாவோட நல்லநேரம், அது நடக்காம போச்சு.

ஒருங்கிணைந்த இந்தியா வளர்றத, ரஷ்யா அமெரிக்கா உட்பட எந்த நாடும் விரும்பாது. மிகமுக்கியமா காங்கிரஸ் விரும்பாது.
அவங்க குடும்ப ஆளுகையின் கீழ், அவங்க அதிகாரத்துக்கு கட்டுப்பட்ட இந்தியா மட்டுமே அவங்களோட விருப்பம்.

ரஷ்ய அதிபர் ஸ்டாலின் சாகணும்னு அவரோட மகள் உட்பட ரஷ்யமக்கள் அத்தனை பேரும் ஆசைப்பட்டாங்களாம்.

ஆனா ஸ்டாலின் செத்து, அவர் செத்ததை நூறு டாக்டர்கள் உறுதிப்படுத்தின
Read 14 tweets
Mar 10
நன்றி ஜவகர்

கேட்கவே பயங்கரமான விஷயம், கேளுங்கள்.

நல்ல இரவு நேரம். வானம் பொத்துக் கொண்டு ஊற்றியது என்பார்களே, அப்படி ஒரு மழை!

சுத்தமாக எதையும் பார்க்க முடியவில்லை. மழை மட்டும்தான் தெரிந்தது. மழையின் ஹோ வென்ற இரைச்சலில் வேறு சப்தங்களும் எதுவும் கேட்கவில்லை. ஒதுங்க இடமில்லை.
ஹை வேயின் ஓரம் செய்வதறியாது நிற்கிறேன். பக்கத்தில் எதுவோ வந்து நின்றது. என்னவென்று கூர்ந்து பார்த்தேன், ஒரு கார்!

யாரோ ஏதோ பேசுவது போல் தோன்றினாலும் ஆட்கள் யாரும் இல்லை. ஒரே இருள்.

சட்டென்று காரின் பின் கதவைத் திறந்தேன். வெடுக்கென்று உள்ளே நுழைந்து உட்கார்ந்தேன்.

தெய்வம் மாதிரி நல்ல நேரத்துல வந்தீங்க. எங்கேயாவது ஒதுங்க இடம் கிடைக்கிற இடத்தில் நிறுத்தினா இறங்கிக்கிறேன்’ என்று சொன்னேன்.

பதிலே இல்லை, ஆனால் கார் நகர ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்தில் இருள் பழகி, கூர்ந்து கவனித்தேன்,

டிரைவர் சீட்டில் யாருமே இல்லை! எஞ்சினும் ஓடவில்லை!
Read 10 tweets
Mar 4
இன்று நம்மிடம் இருந்து மறைக்கப்பட்ட ஒருவரின் நினைவு தினம் எந்த இடத்தில் பேனா வைக்க இந்த திராவிடம் துடிக்கிறதோ,
அதே இடத்தில் வயிற்றில் ஈரத்துணியை சுற்றிக்கொண்டு படுத்திருந்தார் அந்த தமிழ் பிராமண இளைஞர் ... சில நேரம் பிச்சையும் எடுத்தார் ...
அப்போதைய புதிய எக்மோர் இரயில் நிலையத்திற்கு நடந்தே வந்து பிச்சை எடுத்து, பின் அங்கேயே உறங்குவார் ...

அப்படி ஒருமுறை பிச்சையெடுத்துச் சென்ற போது,

அந்த வீதியில் தன் நண்பன் இருப்பது தெரியவே -
ஆனால் எந்த வீடு என்பது தெரியாமலேயே நண்பன் வீட்டிலேயே பிச்சை எடுத்தார் ..
நண்பனுக்கோ அவரை அடையாளம் தெரியவில்லை.. நண்பனை கண்டுகொண்ட இவருக்கோ தான் யார் என்பதை கூறமுடியாமல் நிற்க - அந்த நண்பன் மீண்டும் ஒருமுறை பார்த்து பின் அடையாளம் தெரிந்து, வந்து கட்டி அணைத்தான்..
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(