சகல தோஷம் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ உதவும் கோமுக தீர்த்தம் :
மிக மிக சாதாரணமாக கிடைக்கும் விலை மதிப்பில்லாத சில விஷயங்கள் நம் கண்களுக்கு புலப்படுவதே இல்லை.
அப்படி தெரிந்தாலும் அதன் மதிப்பை நாம் உணருவதில்லை.
இக்கால கட்டத்தில் இதை செய்தால் நல்லது என்று கூறுவதற்கு கூட நேரம் இல்லாமல் போய்விட்டது.
அரிய பல புண்ணிய பொருட்களில் சில சாதாரணமாக கிடைக்க கூடிய ஒன்றாக இருக்கிறது.
அவற்றில் திருத்தலங்களில் தெய்வ கருவறையில் இருந்து வெளியேற கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கும் கோமுகமும் ஒன்றாகும்.
இந்த கோமுகத்திலிருந்து வரும் புனித தீர்த்தம் மிகுந்த சக்தி வாய்ந்தது.
கோவிலுக்கு செல்லும் போது பலர் இந்த கோமுகத்திலிருந்து கிடைக்கும் புனித நீரை தலையில் தெளித்து கொள்வதை நாம் பார்த்திருப்போம்.
சிலர் பிடித்து கொண்டு வீட்டிற்கும் எடுத்து செல்வர்.
இன்னும் சிலர் பார்ப்பதற்கு அசுத்தமாக தெரிவதால் என்னவென்றே தெரியாமல் முழித்து விட்டு சென்று விடுவர்.
கோவில் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் தெய்வ சிலைகளுக்கு செய்யப்படும் அபிஷேக பொருட்கள் இறைவனின் திருமேனி மீது பட்டு வழிந்து கருவறையிலிருந்து இந்த கோமுகம் வழியாக தான் வெளியேறும்.
இங்கு பற்பல கோடி தேவதைகள் குடி கொண்டிருப்பதாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
பூமியில் ஓடும் கங்கை, யமுனை போன்ற புண்ணிய நதிகளின் பலன்களை விட இந்த கோமுக தீர்த்தம் மகிமை வாய்ந்தது.
இந்த புண்ணிய நதிகளே கோமுக தீர்த்தத்தை தெளித்து தூய்மை அடைவதாக சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கோவிலுக்கு செல்லும் போது கோமுக நீரை தெளித்து கொள்வதால் நம்மிடம் இருக்கும் தீவினைகள் ஒழிந்து மனம் சுத்தமாகும் என்பது ஐதீகம்.
விசாக நட்சத்திரத்தன்று இந்த புனித தீர்த்தத்தை ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்து கொண்டு சென்று வீட்டில், உங்கள் வியாபார ஸ்தலங்களில், பணம் வைக்கும் இடத்தில்,
வாகனம் மற்றும் குடும்ப நபர்களின் மீதும் தெளித்து விட வேண்டும்.
இதனால் வளம் பெருகி செல்வ செழிப்பு உண்டாகும்.
பரணி, மகம் நட்சத்திரத்தன்று பிடித்து கொண்டு வரப்படும் கோமுக தீர்த்தத்திற்கு தனி சிறப்பு உண்டு.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படியே இருக்கும்.
இந்த இரண்டு நட்சத்திரங்களன்று தெளித்து கொள்வதால் விபத்துகள் ஏற்படாது.
எம பயம் நீங்கும்.
கோமுக நீரை கொண்டு வந்து பூஜை அறையில் எப்போதும் இந்த நீரை வைத்திருக்கலாம்.
முக்கிய நட்சத்திரத்தன்று இதே போல் செய்வதால் சகல தோஷங்கள் நீங்கும் என்றும் கூறப்படுகிறது.
எந்த விதமான கண் திருஷ்டியும் நீங்கும்.
கெட்ட கனவுகள் வந்து பயமுறுத்தாது.
இந்த தீர்த்தத்தை அருந்துவதால் தீராத பிணிகள் தீரும்.
கார்த்திகை நட்சத்திரத்தன்று கோமுக தீர்த்தத்தை தெளித்து கொள்வதால் பிரிந்த தம்பதியர் விரைவில் ஒன்று சேருவார்கள்.
ரோகிணி நட்சத்திரத்தன்று தெளித்து கொள்வதால் குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பிறக்கும்.
சிவலிங்கத்தின் தலையில் புஷ்பம் இல்லாமலிருக்கக் கூடாது;
புஷ்பங்களில் சாத்வீகம், ரஜசம், தாமசம், மிச்ரம் என்ற நான்கு வகைகள் உண்டு.
வெண்மையான புஷ்பங்கள் சாத்வீகம்,
சிவந்தவை ரஜசம்,
கருநிற புஷ்பங்கள் தாமசம்,
மஞ்சள் வர்ணமுள்ளது மிச்ரம்.
மூன்று தளங்கள் உள்ளதும், சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணமுள்ளதுமான ஒரு வில்வத்தை, சிவனுக்கு, அர்ப்பணம் செய்தால், மூன்று ஜென்மாவின் குலோத்தாரணம் செய்து, சிவலோகத்தில் கொண்டாடப்படுவான்.
வில்வ பத்ரம் புதிதாக இருந்தாலும், காய்ந்திருந்தாலும்,
சிவனுக்கு அர்ச்சிப்பதால்,
சகல பாவங்களும் விலகும்.
வில்வ பத்திரத்தை ஒரு முறை அர்ச்சித்த பின், மறுதினம் அதையே தண்ணீரில் கழுவி, மீண்டும் அர்ச்சிக்கலாம்; தோஷமில்லை.
ஒரு பெரியவர் தினமும் கோவிலில் அமர்ந்து முதலில் விஷ்ணு சகஸ்ரநாமமும் பின்னர் பகவத்கீதையும் பாராயணம் செய்வது வழக்கம்.
எப்போதும் விஷ்ணு சகஸ்ரநாமம் பிழையின்றி பாராயணம் செய்வார்.
அதன் பின் பகவத்கீதை பாராயணம் செய்யும் போது தப்பும் தவறுமாக சொல்லுவார்.
இது தினமும் நடந்தேறும்
பலரும் இவரின் காது
படவே எடுத்துரைப்பார்கள்.
இவரும் அடுத்த நாள் சரி செய்து கொள்கிறேன் என உறுதி கூறுவார்.
ஆனால் மறுநாளும் அதே கதை தொடர்ந்தது.
ஒரு நாள் அத்திருத்தலத்திற்கு சைத்தன்ய மஹாபிரபு வருவதாக அறிவிப்பு செய்தார்கள்.
உடனே வேத பண்டிதர்கள் கவலை அடைந்தார்கள்
மஹாப்பிரபு வரும் போது இந்த பண்டிதர் தப்பும் தவறுமாக பகவத்கீதையை பாராயணம் செய்வதை பார்த்தால் வருந்துவாரே என எண்ணி ஒரு முடிவிற்கு வந்தார்கள்.
ஆயிரம் அத்தி வரதர்க்கு சமமான ஒரு கோவில், 100 திருப்பதிக்கு சமமான ஒரு கோவில் ரெண்டும் எங்க இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா?
100 திருப்பதி தரிசனத்திற்கு சமமான பத்மாவதி,
ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்த இடம் என்ற வரலாற்று பெருமையுடைய நாராயணவனம் தலத்திற்கும் மற்றும்
ஆயிரம் அத்தி வரதருக்கு சமமான தரிசனம் பெறக்கூடிய ஒரு ஆலயம் என்கிற பெருமை உடையதுமான நாகலாபுரம் ஸ்ரீவேதநாரயண பெருமாள்
தலத்திற்கும் தான்
இந்த பதிவின் மூலம் நாம் பயணம் செல்ல போகிறோம்!
சந்திரனை அடிப்படையாக கொண்ட சந்திர மாஸ கணக்குபடி வைகாசி மாத சுக்ல பட்ச தசமி திதியன்று
நாராயணவனம் என்கிற இடத்தில்தான் பத்மாவதி ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்துள்ளது.
அப்படிபட்ட வரலாற்று பெருமையுடைய தலத்தையும் ஆயிரம் அத்தி வரதர்க்கு சமமான வேத நாராயண பெருமாள் கோவில் தலத்தையும் இன்று நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.