4 years old fb post #FBMemoriesPost

சாதி அரசியலும் காமராஜரும் கலைஞரும்

நேற்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையாளர் ஒருவர் தேர்தலில் மாறி மாறி ‘Dravidian majors’ சாதிக் கட்சிகளோடு கூட்டணி வைத்து அரசியலை சாதிமயமாக்கி விட்டார்களே, அதுபற்றிய உங்கள் கருத்தென்ன எனக் கேட்டார்.

1/
நான் அவரிடம் தற்போதைய சாதிக் கட்சிகளில் பிரதானமானதும், நீண்ட அரசியல் வரலாறும் கொண்ட கட்சி எது என்றேன். அவர் கொஞ்சம் யோசிக்க, நான் 'பா ம க' தானே என்றேன். அவரும் 'பா ம க' தானென ஒப்புக் கொண்டார்.

இந்த ஒப்புதலோடு அவருக்கு , தமிழக அரசியலில் சாதி குறித்த விரிவான பதிலை சொன்னேன்.

2/
1. முதன் முதலாக 1952 ஆம் ஆண்டு அமைந்த ராஜாஜி தலைமையில் அமைந்த காங்கிரஸ் அமைச்சரவை ஒரு மைனாரிட்டி அரசு. மெட்ராஸ் பிரசிடென்சியின் முதல் தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெற்றதனால், காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை பெறவில்லை.

3/
2. காங்கிரஸ் தலைவர் காமராஜர் களமிறங்கி , திமுக வுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ( திராவிட நாடு பிரிவினை கோரிக்கையை ஆதரிப்பதாக ஒப்பந்தம் ), அதன் ஆதரவோடு வென்ற மாணிக்கவேலர் தலைமையிலான காமன்வீல் பார்ட்டியை ( வன்னியர் கட்சிதான்) மடக்கி , அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து ஆட்சி

4/
அமைக்க உதவினார் .

3. ராஜாஜி ,குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு திக , திமுக போராட்டத்தின் விளைவாக பதவி விலக நேர்ந்த போது , 1954ல் காமராஜர் முதல்வர் ஆனார். ஆனால் இப்போதும் சிக்கல். மீண்டும் 1953 ல் ஆந்திர மாநில பிரிவினையால் பெரும்பான்மை பறி போனது. இப்போது காமராஜர் வன்னியர்களின்

5/
இன்னொரு கட்சியான ராமசாமி படையாச்சி அவர்களின் உழவர் உழைப்பாளர் கட்சியை வளைத்து , படையாச்சியாருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுத்தார். வேடிக்கை இந்த அணியும் திமுக வோடு ஒப்பந்தம் போட்டு அவர்கள் ஆதரவோடு வென்றவர்கள்தான். ஆக முதன் முதலாக சாதிக்கட்சியோடு ஆட்சியையே அமைத்தது காமராஜர்

6/
தலைமையிலான காங்கிரஸ்தான் என்றேன்.

ஆக அமைச்சர் பதவி ஆசை காட்டி அணி தாவச் செய்து சாதிக்கட்சியை ஆதரித்தவர் கர்மவீர ரே. அறமான அரசியலின் அரிச்சுவடி.

4. அடுத்து தமிழ்நாட்டில் சாதி பெரும்பான்மை பார்த்து நாகர்கோவிலில் களம் கண்டதும் காமராஜர்தான். ஆம், விருதுநகர் தேர்தலில் தோற்ற

7/
காமராஜர் மீண்டும் டில்லி அரசியல் செய்ய தேர்வு செய்தது நாடார்கள் பெரும்பான்மை கொண்ட நாகர்கோவில் தொகுதியை.

5. தெற்கே முத்துராமலிங்கத்தேவர் சாதி அரசியல் அவரது மரணத்தால் முடிவுக்கு வந்தபோது அந்த வெற்றிடத்தை தனதாக்கி முக்குலத்தோர் சாதி அரசியல் செய்தது இன்னொரு புனித ஆத்மா எம்ஜிஆர்

8/
இதில் ஒரு ஆச்சர்யம் திமுக வில் இருந்த போதே தேவரோடு நெருக்கமாக இருந்தவர் எம்ஜிஆர் என்பது. 1962 ஆம் ஆண்டு தேனி தொகுதிக்கான போட்டியில் எஸ்எஸ்ஆருக்காக அவரை விட்டுக் கொடுக்க மத்தியஸ்தம் செய்தார் முத்துராமலிங்கத்தேவர் என்ற தகவலும் உள்ளது.

9/
6. எனவே சாதி அரசியலை ஒருபோதும் ஆதரிக்காத தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக , எம்ஜிஆர் , அவரைத் தொடர்ந்த ஜெ / சசி சாதிய அரசியலால் சாதியத்தை சகிக்க வேண்டிய நிர்பந்தந்திற்கு ஆளாக்கப்பட்டது என்பதே உண்மை.

7. காமராஜ் , எம்ஜிஆர் எனும் ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பங்களின் பொய்மையும்,

10/
பார்ப்பனிய ஊடக வியாதிகளின் இடைவிடாத நச்சு பரப்புரைகளுமே பொத்தாம் பொதுவாக ‘Dravidian major ‘ களை சாதிய அரசியல் ஆதரவு சக்திகளாக ஆக்கி விட்டிருக்கிறது.

8. திமுக அன்றும் இன்றும் மத, மொழி , சாதி சிறுபான்மையினருக்கான கட்சி என்பதே உண்மை.

11/
உண்மையை உரத்துச் சொல்வதில் தயக்கமில்லை.

~VMS Subagunarajan

12/12

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with 𝓢𝓪𝓷𝓴𝓪𝓻

𝓢𝓪𝓷𝓴𝓪𝓻 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @CodeNDrive

Mar 1
"அடிக்கடி, தமிழ்நாடு அரசு இப்படி SC/ST சிறப்பு நிதியைப் பயன்படுத்தவில்லை என்று செய்திகள் வருகின்றனவே! இதன் உண்மைத்தன்மை என்ன?" என்று அரசு நிருவாகத்தில் அனுபவம் உள்ள ஒரு நண்பரைக் கேட்டேன்.

அவர் சொன்னதாவது:

ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு செலவு செய்வது என்று ஒரு நிதி நிலை
அறிக்கையில் தெரிவிப்பார்கள்.

எடுத்துக்காட்டுக்கு, 2021-22 திமுக ஆட்சியில் ஒரு திட்டம் அறிவித்தால்,

அது 2022 மார்ச் கடைசியில் கூட குறிப்பிட்ட திட்டத்திற்கு வழங்கப்படும்.

அந்தத் தொகையின் மூலம் ஒரு கட்டிடம் கட்டினாலோ இயந்திரம் வாங்கினாலோ, உடனே அதைச் செலவுக் கணக்கில் எழுத
மாட்டார்கள்.

தொகை செலவிடப்பட்டு ஓராண்டு அல்லது சில ஆண்டுகள் கழித்தே, அத்தொகை செலவிடப்பட்டது என்று Utility Certificate என்ற ஒன்றைத் தணிக்கைத் துறைக்கு அனுப்பி வைப்பார்கள்.

கட்டிடம் என்றால் அது குறிப்பிட்ட துறைக்கு ஒதுக்கி அவர்கள் பொறுப்பேற்றுக் கொள்வதற்கோ, இயந்திரம் என்றால்
Read 7 tweets
Feb 28
சில ஆண்டுகளுக்கு முன்னால், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு முறை, பாடகர் எஸ்பிபி அவர்களைப் பற்றி உயர்வாகப் புகழ்ந்து எழுதினேன். உள் டப்பியில் வந்த இலண்டனில் இருக்கும் சீட்லெஸ் புளித் தமிழர் ஒருவர் நீங்க தெலுங்கு தானே என்று கேட்டார். அவர் குரலில் மிகவும் சிரமமான கொலைக் குற்றத்தை
வெற்றிகரமாகத் துப்பறிந்தது போன்றதொரு பெருமிதம். தெலுங்கு பேசுபவராக இருப்பது எந்த வகையிலும் குறைவானது இல்லை; ஆனாலும் நான் தமிழன் தான் என்றேன். அவரும் விடாமல், இல்லை, உங்களைப் பார்த்தால் தமிழர் மாதிரி தெரியவில்லை. உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் வீட்டில் தெலுங்கு தானே பேசுவீர்கள்
என்று தீர்க்கமாகக் கேட்டார்.

அதற்கு மேல் பொய் சொல்லி உண்மையை மறைக்க முடியாது என்று உணர்ந்த நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உண்மையைச் சொல்ல தயாரானேன்.

ஆமாங்க. நீங்க எப்படி கண்டுபிடிச்சீங்கன்னு தெரியல. நாங்க வீட்ல தமிழ் பேச மாட்டோம் தான். தயவு செஞ்சு இதை வெளியே சொல்லாதீங்க.
Read 9 tweets
Feb 1
எங்கள் ஊரில் பஞ்சாயத்து ஒன்றிய தலைவராக ஒரு தாடிக்காரர் இருந்தார். அவர் இருந்த தைரியத்தில், பின்புலத்தில், அவர் கூட்டாளி ஒருவர், ஒரு புறம்போக்கு இடத்தை வளைத்துப் போட்டு, பிளாட் போட்டு விற்க ஆரம்பித்தார். அவர் அந்த இடத்தில் எய்ம்ஸ் வருது, ஏரோபிளேன் வருது என்று கலர் கலராக
ரீல் விட்டு விற்க, விற்பனை வெகு ஜோராக நடந்தது. அதனால் ஏற்பட்டஅதீத கிராக்கியில், அவர் முதலில் சொல்லிக் கொண்டிருந்த விலையை விட பத்து மடங்கு விலையில் விற்பனை போய்க் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று, அது பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் என்கிற உண்மை வெளியில் வர,
ஒரே குழப்பமும் பதட்டமும் கிளம்பி, விற்பனை ஸ்தம்பித்து நின்றது. வெறும் கால்வாசி விலை சொல்லி விற்க பார்த்தும் வாங்க ஆளில்லை.

உடனே நண்பரின் உதவிக்கு வந்த தாடிக்காரர், தனக்கு வேண்டிய உள்ளூர் பணக்காரர்களைத் தன் சாம பேத தான தண்டங்களைப் பயன்படுத்தி, செட்டப் செய்து,
Read 7 tweets
Jan 15
ஒரு பேச்சுக்கு, குணசேகரனோ, கார்த்திகை செல்வனோ, அல்லது வேறு ஏதாவது ஒரு தமிழ் ஊடகவியலாளரோ தங்கள் சாதிக்கான மாநாட்டில் கலந்து கொண்டு, சாதி வெறியைத் தூண்டும் படி, படுகொலைகளை, வன்முறையைத் தூண்டும் படி பேசுகிறார்கள் என்று வைத்துக் கோள்வோம்.அதன் பின், அவர்களைப் பொதுச் சமூகம்
சாதி வெறியர்களாக ஒதுக்கித் தள்ளுமா தள்ளாதா? அவர்களுக்கு வேலை வாய்ப்புகள், பொது மேடைகள், நிகழ்ச்சிகள் குறையுமா குறையாதா? ஒரு வேளை சாதி வெறியைத் தூண்டியதற்காக வழக்குகள் கூட அவர்கள் மீது பாய வாய்பிருக்கிறதா இல்லையா?

ஆனால் ரங்கராஜ் பாண்டே, பார்ப்பன சாதி மாநாட்டில் கலந்து கொண்டு
பார்ப்பனர்கள் தன்னைப் போல் சாதிப் பெயரைத் சாதித் திமிருடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்; அதே பழைய சாதிவெறி தீண்டாமை தீவிர மத சம்பிரதாய பழக்க வழக்கங்களுடன் வாழவேண்டும்; வாஞ்சி நாதனைப் போல் சனாதன சாதிவெறிக்காகக் கொலை செய்ய வேண்டும் என்றெல்லாம் உச்சக்கட்ட சாதி வெறித் திமிருடன்
Read 12 tweets
Jan 14
Sankar : What's the difference between culture and religion

Chat GPT: Culture and religion are closely related but they are not the same thing.

Culture refers to the shared beliefs, values, customs, behaviors, and artifacts that characterize a group or society.
Culture encompasses many aspects of social life, including language, art, music, literature, cuisine, and technology. Culture also includes non-material aspects of life such as social norms, values, and traditions. Culture can be passed down from generation to generation,
and it can vary greatly between different societies and groups.

Religion, on the other hand, refers to a set of beliefs and practices concerning the nature of the ultimate reality and the meaning of life. Religion often involves the worship of one or more deities,
Read 5 tweets
Dec 26, 2022
தமிழ் நாட்டில் உள்ள அரசு துறைகள் மொத்தம் 83.

அவற்றில் 48 துறைகள் கலைஞர் உருவாக்கியது.

அதாவது, ஏறத்தாழ 60 சதவீத அரசு துறைகளை உருவாக்கியது கலைஞர்.

அதே சமயம், அதிமுக உருவாக்கிய ஒரே துறை டாஸ்மாக்.
கலைஞர் உருவாக்கிய துறைகள் -

1) Tamil Nadu Tourism Development Corporation
2) TNACTCL
3) Tamil Nadu Textbook Corporation Limited
4) Tamil Nadu Dairy Development Corporation Limited
5) Tamil Nadu Ceramics Limited
6) Tamil Nadu State Farms Corporation Limited
7) Tamil Nadu Sugarcane Farm Corporation Limited
8) Tamil Nadu Goods Transport Corporation Limited
9) Dharmapuri District Development Corporation Limited
10) Tamil Nadu Civil Supplies Corporation
11) Tamil Nadu Spirit Corporation Limited
12) Tamil Nadu Graphite Limited
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(