𝓢𝓪𝓷𝓴𝓪𝓻 Profile picture
Freethinker | Ailurophile | Programmer | Petrolhead | Arakkan | Stoic | Perfectionist
Feb 9 6 tweets 9 min read
நீண்ட நாட்களாக தேடிய கட்டுரை!

#ஜூனியர்_விகடன்

ஆலிவர் ரோடு வீட்டின் வாசலில் சந்தடி இல்லாமல் வந்து நின்ற போலீஸ் வண்டிகளில் இருந்து, தபதபவென பூட்ஸ் கால்கள் குதித்து வீட்டைச் சூழ்ந்து நின்றன. போலீஸ் உயர் அதிகாரி ஒருவரின் உத்தரவைத் தொடர்ந்து, ஒரு போலீஸ்காரர் துப்பாக்கியின் பின் கட்டையால் கலைஞர் வீட்டு கேட்டில் போட்டிருந்த பூட்டை ஓங்கி அடித்து உடைக்க, மடை திறந்த காக்கி வெள்ளமாக அத்தனை பேரும் உள்ளே பாய்ந்தார்கள்.
30-6-2001
ராஜாத்தி அம்மாளும் கனிமொழியும் கேட்கக் கேட்கப் பதிலே சொல்லாமல், கலைஞர் உறங்கிக்கொண்டு இருந்த அறைக்குள் புகுந்தார்கள். அந்நேரம் விழித்து இருந்த கலைஞர், கைதுக்கான காரணங்களைக் கேட்டு வாக்குவாதம் தொடங்க, அதற்குள் மாறன் வீட்டுக்கும் ஸ்டாலின் வீட்டுக்கும் தகவல் பறந்தது.

வீட்டில் இருந்து மாறன் ஓடோடி வந்து சேர்ந்தபோது, கலைஞரை... கையையும் காலையும் பிடித்துத் தூக்கிக்கொண்டு இருந்தனர் போலீஸார். ''ஐயோ... ஐயோ...'' என்ற வார்த்தைகளையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கலைஞர் கதறிக்கொண்டு இருந்தார். போலீஸ் இழுபறியில் கலைஞரின் மூக்குக் கண்ணாடி ஒரு பக்கம் எகிறி விழுந்தது. தடுக்க வந்த மாறனை குண்டுகட்டாகச் சுமந்தபடி வெளியே கொண்டுவந்து வீசினார்கள். வாசலில் தரையில் படுத்தபடி தர்ணா செய்ய முயன்ற பரிதி இளம்வழுதிக்கு இடுப்பில் பூட்ஸ் காலால் பலமான ஓர் உதை. துடித்துப் புரண்டு எழுந்து சுதாரிப்பதற்குள், கலைஞரை காரில் ஏற்றிக்கொண்டு போலீஸ் அணிவகுப்பு அரசினர் தோட்டத்தை நோக்கிப் பறந்தது.

அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகம்....

கடந்த ஆட்சியில் பப்ளிக் பிராசிக்யூட்டராக இருந்த சண்முகசுந்தரம் பதறி அடித்துக்கொண்டு வர, அதற்குள் அரசினர் தோட்ட வளாகத்தின் எல்லா வாயில்களிலும் ராணுவ அணிவகுப்புபோல போலீஸ் வண்டிகள் திரண்டு நின்றன. அதையும் மீறி, சண்முகசுந்தரம் எப்படியோ உள்ளே நுழைந்துவிட, பத்திரிகையாளர்களை உள்ளேவிட மறுத்தது போலீஸ்.

மீறி உள்ளே ஓடிச் சென்ற சுமார் 30 பத்திரிகையாளர்கள் தடிகளால் காட்டுத்தனமாகத் தாக்கப்பட்டு, போலீஸ் வேனில் ஏற்றப்பட்டனர். கண நேரத்தில் தாங்கள் கைது செய்யப்பட்டதை நம்பவே முடியாமல், ஆட்சிக்கு எதிரான கோஷங்களை நிருபர்கள் உரக்க எழுப்ப, அவர்களை சுமந்தபடி வேப்பேரி போலீஸ் ஸ்டேஷன் நோக்கி வேன் பறந்தது.

அந்த நேரம் கணவர் அரவிந்தனுடன் வந்து சேர்ந்தார் கனிமொழி. ''எக்காரணம் கொண்டும் உங்களை உள்ளேவிட முடியாது!'' என்று அங்கே இருந்த டெபுடி கமிஷனர் சொல்ல, ''இது பொது வளாகம். இதற்குள் செல்லவிடாமல் என்னைத் தடுக்க, உங்களுக்கு ஏது உரிமை?'' என்று கனிமொழி வாதாடத் துவங்க, ''ஏய்... சொன்னா, மரியாதையாப் போயிடணும்...'' என்று அந்த அதிகாரி மட்டமான வார்த்தைகளில் இறங்க, வந்து சேர்ந்திருந்த நிருபர்களே திகைப்பில் உறைந்து போனார்கள்.

அடுத்த சில நிமிடங்களில் கனிமொழியின் தோளில் கை வைத்து அந்த அதிகாரி தள்ள, நிலைமை படுமோசம் என்று புரிந்துகொண்டவராக அவரது கணவர் அரவிந்தன், கனிமொழியை சமாதானப்படுத்தி ஓரமாக அழைத்துச் சென்றார். வெகு நேரக் கெஞ்சலுக்குப் பிறகு, ஆயிரம் விளக்கு உசேன் மற்றும் கனிமொழியை மட்டும் உள்ளே நுழைய அனுமதித்தது போலீஸ்.

சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் கலைஞருடன் இருந்த சண்முகசுந்தரத்தை நாம் செல்போனில் தொடர்புகொள்ள, ''என்ன வழக்கு... எதற்காக கைது என்று சொல்ல மறுக்கிறார்கள். அடுத்து எங்கே கொண்டு செல்லப் போகிறார்கள் என்றும் தெரியவில்லை...'' என்றார் சண்முகசுந்தரம் குரல் கம்ம!

அதே சமயம், டி.ஆர்.பாலு எம்.பி-யுடன் ஒரு காரில் வந்த மாறனை அரசினர் தோட்டத்தின் பிரதான நுழைவாயிலில் தடுத்து நிறுத்தியது போலீஸ். வாயிலில் மறித்துப் போடப்பட்டிருந்த இரும்புத் தடுப்பை முட்டித் தூக்கி எறிந்தபடி மாறனின் கார் உள்ளே பறந்துவிட்டது. பிற்பாடு அவரை விரட்டிச் சென்ற போலீஸார், கலைஞரின் கண் எதிரேயே தாக்கித் தள்ளி இருக்கிறார்கள். சட்டை காலரைப் பிடித்து சுழற்றி அடித்தனர்.

கலைஞரை போலீஸ் படை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நீதிபதி அசோக்குமார் வீட்டுக்குக் கொண்டுபோகிறார்கள் என்று தகவல் கிடைத்து, நிருபர்கள் அங்கே பறந்தனர். அங்கும் சாலையே தெரியாத அளவுக்குக் குவிந்துகிடந்த போலீஸார், நீதிபதியின் குடியிருப்புக்கு 100 அடி தூரத்திலேயே நிருபர்களைத் தடுத்து நிறுத்தினர். ''செய்தி சேகரிப்பது எங்கள் உரிமை!'' என்றபடி நிருபர்கள் முன்னேற, ''உங்களைத் தடுப்பது எங்கள் கடமை!'' என்று வக்கிரமாகச் சொன்ன ஒரு போலீஸ் அதிகாரி, லத்தி சார்ஜுக்கு உத்தரவு போட்டார்.

அவ்வளவுதான் ரணகளம் தொடங்கியது. சரமாரியாக போலீஸ் லத்திகளால் பின்னியெடுக்க... ரத்தம் பெருக்கெடுக்க... அங்குமிங்கும் அலைபாய்ந்த நிருபர்கள், ''ஆட்சி அராஜகம் ஒழிக!'' என்று கோஷம் போட்டபடி, தொடர்ந்து நீதிபதியின் வீட்டை நோக்கி முன்னேறினார்கள்.

1/Image சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு, கலைஞரை ஏற்றிக்கொண்டு கார் வர, அதைத் தொடர்ந்து மாறன், மு.க.தமிழரசு ஆகியோர் வரிசையாக வந்தனர். காரை சில நிமிடம் வாசலிலேயே நிறுத்தி கலைஞரை ஒரு படமாவது எடுத்துவிடலாம் என்று நிருபர்களும் டி.வி. கேமராக்காரர்களும் நெருக்கியடிக்க... யாருமே எதிர்பாராதது நடந்தது.

லேசாகத் தயங்கி நின்ற வாகன அணிவகுப்பு திடீரெனச் சீறலுடன் வேகம் எடுத்து சாலையில் நேராகப் பாய்ந்தது. கலைஞரை வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோகிறார்கள் என்று எப்படியோ தெரிந்து கொண்ட நிருபர்கள் கார்களிலும் டூவீலர்களிலும் பறந்தனர். அங்கே போய்ச் சேர்ந்தபோது, வேப்பேரி காவல்நிலையத்தின் உயர்ந்த கதவுகள் உள்ளே மூடப்பட்டு இருந்தன. (அதற்கு முந்தைய நாள்தான் 150-க்கும் மேற்பட்ட நிருபர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட கொடுமை நடந்த அதே இடம்!)

போலீஸ் ஸ்டேஷனை நெருங்க முயன்ற நிருபர்களுக்கு, அங்கேயும் காட்டுத்தனமான தாக்குதல் பரிசாகக் கிடைத்தது. விழுந்த அடிகளில் இரண்டு மூன்று கேமராக்கள் நொறுங்க, உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, கிடைத்த இண்டு இடுக்கில் எல்லாம் புகுந்து ஓடினார்கள் நிருபர்கள். அதில் பெண் நிருபர்களைக்கூட விடாமல்... அவர்கள் தரையில் தடுக்கி விழுந்தபோதும் லத்தியால் தாக்கித் தள்ளியது போலீஸ்.

''சிறையில் அடைக்கப்படும்வரை கலைஞரை யாரும் ஒரு புகைப்படம்கூட எடுத்துவிடக் கூடாது. அவருடன் யாரும் ஒரு வார்த்தைகூட பேசிவிடக் கூடாது. அதைக் கவனத்தில் கொள்ளுங்கள்'' என்று சென்னை நகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பனிடம் இருந்து வந்த உத்தரவுதான் இத்தனைக்கும் காரணம் என்று பிற்பாடுதான் புரிந்தது.

ஒரு வழியாக ஸ்டேஷனின் பக்கவாட்டு காம்பவுண்டு சுவரைத் தாண்டிக் குதித்து, இருட்டில் பதுங்கியபடி அந்தக் கட்டடத்தை நெருங்கினர் சில நிருபர்கள். அங்கே கண்ட காட்சியில் அவர்கள் ரத்தம் உறைந்தது. தொடர்ந்து உரத்த குரலில் கேள்விகள் கேட்ட முரசொலி மாறனின் சட்டையைப் பிடித்து கீழே தள்ளினார் ஒரு போலீஸ்காரர்.

இன்னொருவர் ஸ்டேஷனுக்குள் இருந்த நாற்காலியை அவரை நோக்கி எட்டி உதைக்க, மாறனின் காலில் சுளீரெனத் தாக்கியது அந்த நாற்காலி. இதனைத் தொடர்ந்து மாறன் வாய்விட்டு அலறியது ஸ்டேஷனுக்கு வெளியிலும் கேட்டது.

அரை மணி நேரம் உள்ளே கலைஞரை வைத்து இருந்தவர்கள், அப்போதும் கைதுக்கான காரணத்தைச் சொல்லவில்லை. மறுபடி அவரை நீதிபதி விட்டுக்கே கூட்டிக்கொண்டு கிளம்பினார்கள். கலைஞர் காரைத் தொடர்ந்து தன் காரில் கிளம்பப் போனார் மாறன். மின்னலெனப் பாய்ந்து சென்று அவர் காரில் இருந்த சாவியை எடுத்துக்கொண்டு ஓடி மறைந்தார் ஒரு காவலர்.

ரத்தம் வடிந்த கால்களுடன் தள்ளாடியபடி வாசலுக்கு ஓடி வந்து அங்கு நின்று இருந்த ஒரு ஆட்டோவில் ஏறி அதை மாறன் கிளம்பச் சொல்ல, அதற்குள் சன் டி.வி-யின் கவரேஜ் கார் வந்து நிற்க... அதில் ஏறிக்கொண்டார்.

வேப்பேரி ஸ்டேஷனுக்குள் இருந்த கனிமொழியைத் திடீரென வெளியேவிட மறுத்தது போலீஸ். ஓர் அதிகாரியிடம் அவர் வாதாடத் துவங்க, அவரது கையைப் பிடித்து இழுத்தபடி உள்ளே சென்றார் அந்த அதிகாரி. அடுத்த சில நொடிகளில், கனிமொழி வீறிட்டு அலறும் சத்தம். அதைத் தொடர்ந்து விம்மி அழுதபடி அவரும் ஓடி வந்து காரில் ஏறிக் கொண்டார்...

வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியேறிய கலைஞரின் கார் மட்டும் நீதிபதியின் வீடு இருந்த குடியிருப்புக்குள் நுழைந்தது. அவரைப் பின் தொடர்ந்து நிருபர்கள் உள்ளே நுழைய முயல, அந்தக் குடியிருப்பின் கனத்த கேட்டை வேகமாக அடித்து மூடியது போலீஸ்.

அப்போது கேட்டின் இடுக்கில் கால்கள் சிக்கி ஒரு பெண் நிருபர் வாய்விட்டுக் கதற... அது பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் கேட்டை முரட்டுக் கரங்களால் அழுந்த மூடியபடியே இருந்தனர் போலீஸார். ஒட்டுமொத்த நிருபர்களும் ஒரு போலீஸ்காரரை இழுத்துச் சென்று, சரமாரியாகத் திட்டித் தீர்த்தனர். அந்தப் போலீஸ்காரரை மீட்க மறுபடி நிருபர்கள் மீது லத்தி சார்ஜ். ரத்தக் காயம்... சிதறி ஓட்டம்!

அப்போது உள்ளே கலைஞருடன் இருந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திடம் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டோம்.

''சென்னை நகரில் மேம்பாலங்கள் கட்டியதில் 12 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் உண்டாக்கிவிட்டதாக, கலைஞர் மீது மாநகராட்சி கமிஷனர் ஆச்சார்யலு புகார் கொடுத்திருக்கிறார். கலைஞர் தவிர, மேயர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி, பொன்முடி ஆகியோரும் இதில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்...'' என்று படபடப்பான குரலில் பேசிய சண்முகசுந்தரம், அடுத்தடுத்து நீதிபதி வீட்டுக்கு உள்ளே நடந்தவற்றை விவரித்துக்கொண்டே வந்தார்.

2/
Jan 6 10 tweets 2 min read
நான் கல்லூரி படித்த 1996-2000 ஆம் ஆண்டு வரை சென்னையின்
தெற்கு எல்லை - தாம்பரம்
மேற்கு எல்லைகள் - கிண்டி, விருகம்பாக்கம்

வெளிமாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகள் நேரடியாக பிராட்வே சென்றுக்கொண்டிருந்த காலம்.

1/ Image திருபெரும்புதூர் தொழிற்சாலைகள்
டைடல் பார்க் உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள்
ஒரகடம் தொழிற்சாலைகள்
என்று சென்னையின் பக்கத்து மாவட்டங்கள் இந்த காலக்கட்டத்தில் தான் வளர்ந்தன.

CMBT உருவானதும் அனைத்து வெளிமாவட்ட பேருந்துகளும் பிராட்வேயை மறந்தன.

2/
Jan 6 11 tweets 2 min read
சென்னையின் முதல் மேம்பாலம், 'ஜெமினி' ஃபிளைஓவர்'- அண்ணா மேம்பாலத்தில் - 'வழி தொலைந்து திநகருக்குப் பதில் தேனாம்பேட்டைக்கும் இராயப் பேட்டைக்கும் போகப் போகிறவர்கள்' பற்றி, அந்த பிரபல தமிழ் வார இதழில், அந்த ஆண்டு, 1973ல் மட்டும் வந்த அசட்டு ஜோக்குகள் ஐந்து டசன்கள் தேறும்.

1/ Image ஆளப் 'பிறக்காதவர்', ஐம்பது வயதையே தாண்டாதவர் கருணாநிதி ஆட்சியில் இருக்கிறார்; அறிவுரை சொல்வோம் இப்படி வீண் செலவு செய்ய வேண்டாம் என்று, என்று எழுதப்பட்ட தலையங்கங்கள் பல.

வள்ளுவர் என்ன சாமியா? அவருக்கு ஒரு தேராம்; கோயில் மாதிரி ஒரு கட்டடமாம்; அதுக்கு கோட்டம்னு ஒரு பேராம்;

2/
Nov 30, 2023 18 tweets 3 min read
எழுதியவர் பிரபு ராஜதுரை (fb post):

கல்லூரியில் கூடப்படிக்கும் அவர் எனக்கு நண்பனாகி ஒரிரு வருடங்கள்தான் கடந்திருந்தது. அவரது வீட்டுக்குப் போயிருந்த போது அவர் போட்டிருந்த சட்டை நன்றாயிருக்கிறது என்றேன். பின்னர் நான் அவரது வீட்டிலிருந்து படியிறங்குகையில், 'இந்தா' என்றவாரு Image செய்தித்தாளில் சுற்றப்பட்டிருந்த எதையோ என் கைகளில் திணித்தார். திறந்து பார்த்தால் அந்தச் சட்டை!

பிறிதொரு நாள், நண்பரின் சகோதரனை, யானைக்கல்லில் சரியாக அது எந்த இடம் என்று கூட இன்றும் நினைவிலிருக்கிறது, எதிரில் பார்த்தவன், 'செருப்பு அழகாயிருக்கே அமீர், எங்கே வாங்கினாய்' என்றேன்.
Sep 9, 2023 25 tweets 3 min read
"சனாதனம்" என்ற சொல்லாட்சி!
--------------------------------------

சங்க இலக்கியம் முதல் பாரதியார்
கவிதைகள் வரை தமிழ் இலக்கியப் பெருவெளி அறியாத சொற்பதம் ‌. "சனாதனம்"!

"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்பது தொல்காப்பிய இலக்கணம்.
(தொல்.சொல். 157) எல்லாச் சொல்லும் என்று கூறியதில் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்னும் நால்வகைச் சொற்களும் அடங்கும்.

"இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.' ( தொல். எச்ச.‌‌1,) என்று பிறமொழிச் சொற்கள் தமிழில் பயின்று வரும் முறை பற்றியும்
Jun 12, 2023 18 tweets 3 min read
கலைஞர் அவரது காலத்தில் அமைக்கப்பட்ட, திரு. சட்டநாதன் அவர்களது தலைமையிலான தமிழ்நாடு பிற்பட்டோர் நலக்குழுவின் அறிக்கை மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களது காலத்தில் அமைக்கப்பட்ட, திரு. அம்பாசங்கர் அவர்களது தலைமையிலான தமிழ்நாடு இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக்குழுவின் அறிக்கை. பிற்படுத்தப்பட்டவர்கள் (BC, OBC) என்ற, தற்பொழுது பொதுவாக உபயோகப்படுத்தப்படும் பதத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் படிப்படியான சமத்துவமின்மையை (graded inequality) புரிந்துக்கொள்வதற்கும்;

சமூக நீதியினை நிலைநாட்டுவதற்கு ஏன் சமூகத்தினைப் பற்றிய உண்மைக்கு அருகில் செல்வதற்கான
Jun 12, 2023 15 tweets 3 min read
Awareness post:

கார்டு மேல 16 நம்பர் சொல்லுங்கோ போல வித்தியாசமான ப்ராடு-

FedEx parcel service ல இருந்து automated delivery failure call வரும்

அடுத்து நாம தான் international parcel அனுப்பலையேனு நினைச்சு அந்த கால அவங்க கஸ்டமர கேர்க்கு பார்வார்டு பண்ணிடுவோம். Image எண் 1 ஐ அழுத்தவும்

அங்க ஒருத்தன் நல்ல ஆங்கிலத்தில பேசுவான் உங்க நம்பர கன்பார்ம் பண்ணி நீங்க மு்ம்பைலருந்து தைவானுக்கு அனுப்பிய பார்சல் போகல காரணம் அதுல தடை செய்யப்பட்ட போதைப் பொருள் (illegal drugs) இருந்துச்சுனு சொல்லுவான். அந்த நிமிசம் நமக்கு கொஞ்சம் ஆட்டம் காணும்
Jun 9, 2023 6 tweets 1 min read
வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் வந்தாலும் சுயமரியாதையை மட்டும் இழக்க கூடாது

வழக்கமா சங்கீகள் /low IQ /Egoist /paid mercenary தான் இந்த மாதிரி உளறல்களை பெரிய law point மாதிரி பேசிட்டு திரிவாங்க

இதுல LRJ அண்ணன் எதுல வருவார்? Low IQ கண்டிப்பா இல்ல சங்கி இல்ல ன்னு நினைக்கிறேன் Image Egoist / paid mercenary வாய்ப்பு இருக்கு

சரி செய்திக்கு வருவோம்,

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வைக்கப்பட்ட வாக்குறுதிகளில் முக்கியமானகைகள் திமுகவின் கொள்கையிலிருந்தும் 2021ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு கொண்டுவந்த திட்டங்களின்
Jun 9, 2023 18 tweets 4 min read
We are an outcome of a continual movement of people from one place to another, and hence the circulation of ideas, beliefs, fantasies and dreams.

New discoveries of erstwhile trade networks across the globe dismantle our assumptions about the mythical self contained village, where the inhabitants are assumed to be have been able to carry on with life without any dependance on others.

Even though our Sangam poems (Puranaanooru, Agananooru, Pattinappaalai) for example, talk about this immense zest for exploration and long distance trading,
Jun 9, 2023 8 tweets 2 min read
THE WORLD’S FIRST TRADING ZONE
Calicut was at the center of the world’s first trading zone. Even then it was Chinese manufactures like silks and ceramics that found a market in the Middle East. The sailing ships by perforce had to halt at Calicut and its secondary ports in ImageImageImage either direction for the trade winds to change direction. The Zamorin of Calicut* made good collections by way of taxes.

The Zamorins maintained elaborate trade relations with the Muslim Middle-Eastern sailors in the Indian Ocean, the primary spice traders on the Malabar Coast
May 14, 2023 12 tweets 3 min read
NGOக்களும் IAS அதிகாரிகளும் ஒரு 🧵 இரண்டு மாதங்களுக்கு முன்பு The South Speaks என்ற Youtube channel ல் NGOக்களின் பிடியில் கல்வித்துறை என்ற தலைப்பில் ஒரு காணொலி தயாரித்து இருந்தனர்.

அதில் குறிப்பிடப்பட்ட ASER report ஐ வைத்து தான் கலைஞர் கொண்டுவந்த சமச்சீர் திட்டத்தை சாவடித்தனர். twitter.com/i/web/status/1… Image
May 11, 2023 4 tweets 1 min read
2019 Post:

//
"பதவியில்‌ இருப்பதின்மூலம்‌, இன்றைய அரசியல் அமைப்புச்சட்டம்‌ கொல்லைப்புறமாகக்‌ கொண்டுவரப்பட்ட ஒரு இரட்டை ஆட்சிதான் என்பதைச்‌ சிந்திக்ககூடிய பொது மக்களின்‌ கவனத்திற்கு தி. மு. க. கொண்டு வர முடியுமானால்‌, அது உண்மையிலேயே அரசியல்‌ உலகிற்கு‌ செய்யப்படும்‌ Image குறிப்பிடத்தக்க உதவியாகும்‌”

- பேரறிஞர் அண்ணா (1969)

இதுதான் விஷயம், கலைஞர் இருந்தவரை அவர் இதைபற்றி சொல்லாத இடங்களே இல்லை, ஆனால் அப்பொது அவருக்கு எவரும் ஆதரவாக இல்லை, நம் மக்களே அவரை பதவி சுகத்தில் குடும்ப வளர்ச்சிக்கு வளைந்து கொடுத்தார் என்றல்லவா எழுதினார்கள்?
Apr 30, 2023 20 tweets 3 min read
ஷாந்தி ஹோமம், திசை ஹோமம், மூர்த்தி ஹோமம், வாஸ்து ஷாந்தி, ஷப்த ஷாந்தி, சகஸ்ர கலச ஸ்தாபனம் எல்லாம் பண்ணி மஹா ஸம்ப்ரோக்ஷணம் பண்ணனும். அப்போதான் இது கழியும். அப்டித்தான் நம்ம ஸாஸ்த்ரங்கள் சொல்றது. ஜாதின்றது சமூகம் சம்பந்தப்பட்டது இல்லை. அது மதக் கோட்பாடு. Image பகவான் மனுசாளை சரிசமமா பார்க்கவும் இல்லை; அப்படி படைக்கவும் இல்லை. மிருகங்களில் பலவகைன்ற மாதிரி மனுசாளையும் நாலு வர்ணமா, அதுல நாலாயிரம் ஜாதியா பிரிச்சு உருவாக்கியிருக்கார் அவர். நாம அத மீறது மஹா பாவம்!

இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டே போன அந்த மிக பிரபலமான 50வது சாட்சி,
Apr 29, 2023 6 tweets 1 min read
"அண்ணாத்துரை என்ன சாதித்து விட்டார்? அவருக்கு எதற்கு சிலைகள்? அண்ணாத்துரைக்கு சிலை நாட்டுக்கு அவமானம்" என காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசியதை அன்றைய சுதேசமித்திரன் பத்திரிக்கை தன் விருப்பத்திற்கு ஏற்ப வெளியிட்டு இருந்தது.

அதற்கான பதிலடியாக தலைவர் கலைஞர் இவ்வாறு கூறினார் — Image நான் அண்ணா அவர்கள் அதைச்சாதித்தார், இதைச்சாதித்தார் என்றெல்லாம் பட்டியல் போட்டுக் காட்ட வரவில்லை. அவர் இரண்டாடுகளில் ஏறத்தாழ 50 சாதனைகளைச் செய்தார்கள்.

சென்னை மாகாணத்திற்கு "தமிழ்நாடு" என்று பெயர் தந்தார். அதை சாதனையென்று குறிப்பிட வில்லை.

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் கட்டாய
Apr 29, 2023 6 tweets 2 min read
கலைஞரின் திறனை வேகத்தை துல்லியமாக அறிந்து வைத்திருந்தவர் தந்தை பெரியார் மட்டுமே! தந்தை பெரியாருக்குப் பின் அத்தகைய ஆளுமை திராவிட இயக்கத்தில் இல்லாமல் போனது நமக்கெல்லாம் பின்னடைவு, முக்கியமாக கலைஞருக்கு மிகப்பெரிய பின்னடைவு.

பேரறிஞர் அண்ணா அவர்கள் உயிரோடு இருக்கும் போதே Image தலைவர் கலைஞருக்கு சிலை எடுக்க விரும்பினார் தந்தை பெரியார் கலைஞர் அதனை மறுத்தார். இருப்பினும் திட்டக்குடியில் கலைஞர் படத்தினை திறந்து வைத்து பேசினார் தந்தை பெரியார். திமுக தலைவர்களில் தலைவர் கலைஞருக்குத் தான் முதன்முதலில் படத்தை திறந்து வைத்தார் தந்தை பெரியார்.
Mar 14, 2023 12 tweets 2 min read
4 years old fb post #FBMemoriesPost

சாதி அரசியலும் காமராஜரும் கலைஞரும்

நேற்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையாளர் ஒருவர் தேர்தலில் மாறி மாறி ‘Dravidian majors’ சாதிக் கட்சிகளோடு கூட்டணி வைத்து அரசியலை சாதிமயமாக்கி விட்டார்களே, அதுபற்றிய உங்கள் கருத்தென்ன எனக் கேட்டார்.

1/ நான் அவரிடம் தற்போதைய சாதிக் கட்சிகளில் பிரதானமானதும், நீண்ட அரசியல் வரலாறும் கொண்ட கட்சி எது என்றேன். அவர் கொஞ்சம் யோசிக்க, நான் 'பா ம க' தானே என்றேன். அவரும் 'பா ம க' தானென ஒப்புக் கொண்டார்.

இந்த ஒப்புதலோடு அவருக்கு , தமிழக அரசியலில் சாதி குறித்த விரிவான பதிலை சொன்னேன்.

2/
Mar 1, 2023 7 tweets 1 min read
"அடிக்கடி, தமிழ்நாடு அரசு இப்படி SC/ST சிறப்பு நிதியைப் பயன்படுத்தவில்லை என்று செய்திகள் வருகின்றனவே! இதன் உண்மைத்தன்மை என்ன?" என்று அரசு நிருவாகத்தில் அனுபவம் உள்ள ஒரு நண்பரைக் கேட்டேன்.

அவர் சொன்னதாவது:

ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு செலவு செய்வது என்று ஒரு நிதி நிலை அறிக்கையில் தெரிவிப்பார்கள்.

எடுத்துக்காட்டுக்கு, 2021-22 திமுக ஆட்சியில் ஒரு திட்டம் அறிவித்தால்,

அது 2022 மார்ச் கடைசியில் கூட குறிப்பிட்ட திட்டத்திற்கு வழங்கப்படும்.

அந்தத் தொகையின் மூலம் ஒரு கட்டிடம் கட்டினாலோ இயந்திரம் வாங்கினாலோ, உடனே அதைச் செலவுக் கணக்கில் எழுத
Feb 28, 2023 9 tweets 2 min read
சில ஆண்டுகளுக்கு முன்னால், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு முறை, பாடகர் எஸ்பிபி அவர்களைப் பற்றி உயர்வாகப் புகழ்ந்து எழுதினேன். உள் டப்பியில் வந்த இலண்டனில் இருக்கும் சீட்லெஸ் புளித் தமிழர் ஒருவர் நீங்க தெலுங்கு தானே என்று கேட்டார். அவர் குரலில் மிகவும் சிரமமான கொலைக் குற்றத்தை வெற்றிகரமாகத் துப்பறிந்தது போன்றதொரு பெருமிதம். தெலுங்கு பேசுபவராக இருப்பது எந்த வகையிலும் குறைவானது இல்லை; ஆனாலும் நான் தமிழன் தான் என்றேன். அவரும் விடாமல், இல்லை, உங்களைப் பார்த்தால் தமிழர் மாதிரி தெரியவில்லை. உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் வீட்டில் தெலுங்கு தானே பேசுவீர்கள்
Feb 1, 2023 7 tweets 1 min read
எங்கள் ஊரில் பஞ்சாயத்து ஒன்றிய தலைவராக ஒரு தாடிக்காரர் இருந்தார். அவர் இருந்த தைரியத்தில், பின்புலத்தில், அவர் கூட்டாளி ஒருவர், ஒரு புறம்போக்கு இடத்தை வளைத்துப் போட்டு, பிளாட் போட்டு விற்க ஆரம்பித்தார். அவர் அந்த இடத்தில் எய்ம்ஸ் வருது, ஏரோபிளேன் வருது என்று கலர் கலராக ரீல் விட்டு விற்க, விற்பனை வெகு ஜோராக நடந்தது. அதனால் ஏற்பட்டஅதீத கிராக்கியில், அவர் முதலில் சொல்லிக் கொண்டிருந்த விலையை விட பத்து மடங்கு விலையில் விற்பனை போய்க் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று, அது பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் என்கிற உண்மை வெளியில் வர,
Jan 15, 2023 12 tweets 2 min read
ஒரு பேச்சுக்கு, குணசேகரனோ, கார்த்திகை செல்வனோ, அல்லது வேறு ஏதாவது ஒரு தமிழ் ஊடகவியலாளரோ தங்கள் சாதிக்கான மாநாட்டில் கலந்து கொண்டு, சாதி வெறியைத் தூண்டும் படி, படுகொலைகளை, வன்முறையைத் தூண்டும் படி பேசுகிறார்கள் என்று வைத்துக் கோள்வோம்.அதன் பின், அவர்களைப் பொதுச் சமூகம் சாதி வெறியர்களாக ஒதுக்கித் தள்ளுமா தள்ளாதா? அவர்களுக்கு வேலை வாய்ப்புகள், பொது மேடைகள், நிகழ்ச்சிகள் குறையுமா குறையாதா? ஒரு வேளை சாதி வெறியைத் தூண்டியதற்காக வழக்குகள் கூட அவர்கள் மீது பாய வாய்பிருக்கிறதா இல்லையா?

ஆனால் ரங்கராஜ் பாண்டே, பார்ப்பன சாதி மாநாட்டில் கலந்து கொண்டு
Jan 14, 2023 5 tweets 1 min read
Sankar : What's the difference between culture and religion

Chat GPT: Culture and religion are closely related but they are not the same thing.

Culture refers to the shared beliefs, values, customs, behaviors, and artifacts that characterize a group or society. Culture encompasses many aspects of social life, including language, art, music, literature, cuisine, and technology. Culture also includes non-material aspects of life such as social norms, values, and traditions. Culture can be passed down from generation to generation,