#மதன்_வெண்பா_லீக்ஸ்
இதில் பதிவான எல்லாம் உண்மை என்றும் சொல்லிவிட முடியாது, எல்லாம் பொய் என்றும் கடந்து செல்லவும் முடியாது. பார்ப்போம் அவர்கள் தரப்பு விளக்கம் வரும்போது உண்மையா பொய்யா என்று எளிதில் தெரிந்து விடும்.
இங்க டிவிட்டர்,முகநூலில் ஒவ்வொரு நாளும், மணிக்கணக்கா உட்கார்ந்து,
ஆயிரத்து எட்டு செய்திகளை சேகரித்து, அது சரிதானான்னு fact செக் பண்ணி, தனக்கும் தன்னுடைய ஐடியாலஜிக்கும் நேர்மையாய் பதிவிடுகிற நூற்றுக்கணக்கானவங்களை எனக்கு தெரியும்.
இவ்வளவும் அவங்க செய்யுற வேலைக்கு அஞ்சு பைசா பிரயோஜனம் இல்லை. இதை படிக்கிற நண்பர்கள் சில நேரம் அதை அப்படியே எடுத்து
அவர்கள் TL லில் போட்டுக்கொள்ளும் போதும் அவர்கள் எந்த கவலையுமில்லாமல் கடந்து செல்லவார்கள், அவர்கள் எண்ணமே நம் கருத்துக்கள் பல பேரை சென்றடைய வேண்டும் என்ற நல்லெண்ணம்தான். Here the message is more important than the messenger.
ஆனால் இந்த Youtube சேனல் நடுத்துபவர்கள் அப்படி அல்ல
எந்த ஒரு சமூக அக்கறையுமில்லாது, பச்சையாக paid promotion செய்து அவர்கள் வெளியிடும் scripted விடியோக்கள், பல லட்சம் வியூஸ் தாண்டி போகும். இவற்றை யார் பார்க்கிறார்கள்? வேறு யார்.நமக்கு like பட்டன் அமுக்கக்கூட அவர்கள் சொத்து அழிஞ்சிடுமோன்னு ஆயிரம் முறை சிந்திச்ச அதே சிகாமணிகள்தான்
அந்த சேனல் நடத்துவோர் வருமானம் youtube income இல்லாமல், இது போல் தரகு வேலை செய்வதால் மாதத்திற்கு பல லட்சம் ருபாய், சொகுசு கார், பங்களா இத்தியாதி...இவர்கள் குள்ளநரி கொள்கை நடுநிலையாளர் என்று தன்னை அழைத்துக்கொண்டு காசு வாங்கிக்கொண்டு எல்லா கட்சியையும் வறுத்து எடுப்பார்கள்.
அதாவது 30% ஆதரிக்கிற கட்சி தலைவரை கலாய்ச்சால் 70% மக்கள் புளகாங்கிதம் அடையும் மாநிலம் தமிழ்நாடு.
மக்களே கொஞ்சம் சிந்தியுங்கள். இனியும் சகட்டு மேனிக்கு இந்த youtube சேனல்களை ஆதரிக்காதீர்கள். நீங்கள் பார்ப்பது பொழுதுபோக்கிற்குதான். ஆனால் அவர்கள் அதை வைத்து முறை தவறி
சம்பாதிப்பதையும் தாண்டி தவறான, உண்மைக்கு முற்றிலும் புறம்பான ஒரு கருத்துருவாக்கத்திற்கு உங்களை பகடை காய்களாக பயன்படுத்திகிறார்கள்.
மறுபடியும் சொல்கிறேன் மதன் சொல்வதில் எது உண்மை என்று பார்த்து, கேட்டு, ஆராய்ந்து சில கருப்பு ஆடுகளை அடையாளம் காணுங்கள். அதே நேரத்தில் அவர்கள்
இடத்தில் மதனையும் வெம்பாவையும் வைத்து அதே தவறை மீண்டும் செய்யாதீர்கள். இவர்களுடைய அஜெண்டா என்ன? ஸ்பான்ஸர் யார் என்ற கேள்விகளுக்கு இன்னும் சில நாட்களில் பதில் தெரியும்.
அதுவரை அஞ்சு பைசா பிரயோஜனம் இல்லாத இந்த பதிவுக்கு லைக் பட்டன் அமுக்கும் அந்த பத்து நல்லுள்ளங்களுக்கு நன்றி!
இப்பதிவு முகநூலில் வசு சுமதி அவர்கள் வெளியிட்டது..
நானும் அஞ்சு பைசா எதிர்பார்க்காமல் கழகம் பற்றிய வதந்திகளை உடைத்து கொண்டு தான் இருக்கிறேன்
இங்கு வந்து கதறும் சங்கீs கொடுத்த ₹200 சேர்த்து இருந்தால் இந்நேரம்.
புதுக்கோட்டைல ஒரு மாளிகை எழுப்பி இருப்பேன்
ஃபேஸ் புக் ல சிறப்பாக செயல்படும் @smvasu போன்றவர்கள் ட்விட்டரிலும் களமாடினால் சிறப்பாக இருக்கும்..
காமராசர் டேம் கட்டினால்,
எம்ஜிஆர் சத்துணவு போட்டால்
ஜெயலலிதா லேப்டாப் கொடுத்தால்
அது மட்டும் அது அவர்களின் சாதனையாகவும் சொந்த காசாகவும் பார்க்கும் நடுநிலை நாதாரிகள்,
கலைஞர் பாலம் கட்டினால், அண்ணா பெயரில் நூலகம் திறந்தால், வள்ளுவருக்கு சிலை அமைத்தால்
ஊருக்கு ஊர் மருத்துவக் கல்லூரி அமைத்தால்
"அது என்ன அவர்கள் அப்பன் வீட்டு சொத்தா? அரசு பணம்தானே" என்று நடுநிலை நக்கிகள் கொக்கரிப்பர்.
ஆனால் ஒரு பகுதியின் தேவை, இன்னும் 50 ஆண்டு கழித்தும் எப்படி இருக்கும், என தொலைநோக்குப் பார்வையுடன்
திட்டங்களை தீட்டியவர் கலைஞர்
தன் மாநில அதிகாரத்திற்கு உட்பட்டும், மத்திய அரசோடு கெஞ்சியும் மிரட்டியும் கொண்டு வந்த திட்டங்கள் பல..
இந்தியாவை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் கடல் பாலத்தை இந்திரா கட்ட தீர்மானித்தபோது முழு ஒத்துழைப்பு கொடுத்தவர் கலைஞர்.
பிஜேபி கங்கை ஆற்றில் ஒரு பாலம் கட்டவே துப்பு இல்லை
ஆங்கில இணையதளம் ஒன்றில் ஓய்வுபெற்ற பத்திரிக்கையாளர் கலைஞர் குறித்து ஒரு கட்டுரை எழுதினார்
அதில் "தமிழக_அரசில் மேலோங்கி இருந்த #பிராமண ஆதிக்கத்தை ஒழித்து எல்லோரும் அதில் இடம்பெறச் செய்தார் கருணாநிதி.
ஆனால் அதைத்தவிர பெரிய சாதனை ஒன்றும் செய்யவில்லை"
இதில் சிறுமைப்படுத்துவதாக எண்ணி கலைஞரை புகழ்ந்திருக்கிறார்.
#நெல்சன்மண்டேலா கறுப்பினத்தவர்களுக்கு விடுதலை வாங்கித் தந்தார் மற்றபடி பெரிதாக ஒன்றும் செய்யவில்லை எனச் சொன்னால் எவ்வளவு அபத்தமோ அப்படித்தான் இதுவும்.
கலைஞர் என்ற அந்த பிரம்மாண்டத்தை சிறுமைப்படுத்த பலர் தங்கள்
வாழ்க்கையையே அர்ப்பணித்து அதேபணியாய் இருந்தும்கூட இறுதியில் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள்
ஐ ரோபோட் என்ற ஆங்கிலப்படத்தில், “நாங்களும் மனிதர்களுக்கு இணையானவர்கள் தான்” எனச் சொல்லும் ரோபோட்டைப் பார்த்து அப்படத்தின் நாயகன் வில் ஸ்மித், " உன்னால் சிம்பொனி எழுத முடியுமா?" என்பார்