குறுகிய கால முதலீடு (short term) பங்கு எப்படி அனலைஸ் செய்து வாங்குவது???.

நான் வாங்கினதில் இருந்து ப்ராபிட் புக் பண்ணின வரைக்கும் தொடர்ச்சியாக இங்கே பதிவிட்ட ட்வீட்டுகளின் தொகுப்பு.

Technical analysis for #Mahindracie
80% நேரம் Fundamental Analysis கண்டிப்பாக பண்ணிருவேன். அது அந்தப் பங்கு வாங்கி ஒருவேளை இறங்கினாலும் (If the overall market trend is down)சில நாட்கள் கழித்து மேலே வருவதற்கு Holding support தரும்.இந்தப்பங்கு 2 மாதங்களா கவனித்து வந்தேன். Market is 80% waiting 20% only Execution.
முதலில் பார்க்கும்போது சார்ட் Descending Triangle 📐 pattern ல் இருந்தது.Long term view: #IHS and #Harami. Short term view : #Descendingtriangle ,#fallingchannel .
Volume was tried up. Volume is the king always.
consolidation phase ல் வால்யூம் கம்மியாகத்தான் இருக்கும்.
15 டிசம்பரில் முதலில் #Descendingtraingle ஆக இருந்தது #Rectangular pattern ஆக மாறிச்சு. #Trendline failure breakout குடுத்து அடுத்த நாளே ஏறிடுச்சு. #RectanglularBO . எதிர்பார்த்தது ஒன்னு ஆனா நடந்தது ஒன்னு.
இதற்கு நடுவில் ஒவ்வொரு நாளும் 290 க்கு மேலே ஓப்பன் ஆகி 285 ல் முடியும்.கிட்டத்தட்ட 1 மாதம் இந்த மாதிரி நடந்துச்சு.
Rectangular BO நடந்த உடன் 290-340 வரை போய் மீண்டும் கீழே வந்துச்சு. Retesting done . எங்கே உடைச்சதோ அங்கேயே திரும்ப வருவது.
Retesting முடிச்சி மீண்டும் பழைய 340 க்கே போச்சு.

2008 க்கு பிறகு weekly close 306 க்கு மேல் ஸ்ட்ராங்காக வைத்து அடுத்த பாலோ அப் நடந்திருந்தது. இது ப்ரேக் அவுட் பங்குகளில் முக்கியம்.
இத்தனை வருடங்களின் அதிக பட்ச விலையே 380 தான். அதன் கிட்ட போகும்பொழுது வால்யூம் நல்லா இருந்துச்சு. இது கட்டாயம் இருக்கணும்.ஒரு ப்ரேக் அவுட் கண்டிப்பாக நடக்கப்போகுதுன்னா அதன் Resistance அருகில் volume Accumulation இருக்கணும்.
ATH 380 ஐ தொட்டே விட்டது. 30% வந்திருச்சு. இவ்வளவு தூரம் வந்துட்டு மேலே போகாமல் எப்படி ? கண்டிப்பாக போகும்.

உடைக்கிறது முக்கியமில்லை. மேலே க்ளோஸ் வைக்கணும்.1 வாரம் இழுத்துகிட்டு கிடந்துச்சு. க்ளோஸ் வைக்கலை.மறுபடியும் கீழே வந்துச்சு.

1 வாரம் கழிச்சி திரும்பவும் மேலே வந்துச்சு. இந்த முறை உடைச்சே ஆகணும். சோ வெயிட்டிங்

380 மேலே வந்துட்டான். கடைசி 30 நிமிடங்கள் செம வால்யூம். ப்ரேக் அவுட் ஆகும் முன்னே 3 மணிக்கு மேலேதான் கோமாவில் இருந்து எழுந்த மாதிரி சில பங்குகள் ஓடும்.
1 February ப்ராபிட் புக் பண்ணிட்டேன். 292-408 40% ப்ராபிட். நவம்பர் கடைசியில் வாங்கியது கிட்டத்தட்ட 2 மாதங்கள். இதற்கிடையில் தான் அதானி ஹிண்டன்பர்க் வந்து மார்க்கெட் பாதாளத்துக்கு போச்சு.
Overall market trend is negative . எனக்கும் 40% ப்ராபிட் போதும்னு புக் பண்ணிட்டேன்.அதன் பிறகும் மாவரைச்சி 460 வரை இன்னும் 14% மேலே போச்சு. தற்சமயம் 360 ல் இருக்குது.
இந்த பெரிய கேண்டில் பார்த்து வாங்கினவங்க மாட்டிருப்பாங்க.இது ட்ராப் கேண்டில்.அதிக விலையில் ரீட்டெயிலர்ஸ் மாட்டி விடுறது.
Reasons to book my profit
1. Stock already ran from 290 -420
2.overall market trend is not supportive
இங்கே எனது வழக்கமான ப்ராபிட் புக்கிங் ஸ்டாட்டர்ஜி பயன்படுத்தவில்லை. மார்க்கெட் இப்படித்தான் ஒவ்வொரு முறையும் நமது அனலைசிங் மாறிக்கிட்டே இருக்கும்.அந்த சூழ்நிலைக்கு ஏற்ற வாறு முடிவெடுத்து வெளியேறணும்.
பெரிய கேண்டில் ஏன் நான் Retailers trap னு சொன்னேன்? யாராச்சும் சரியான பதில் தராங்களான்னு பார்ப்போம். 2-3 மாதங்களில் swing trade 10-30% profit எடுக்க முடியும். தேவை டெக்னிக்கல் ஸ்டடி. மேற்கொண்டு கற்க விருப்பம் எனில் வரும் 25,26 ஆன்லைன் வகுப்பில் இணையலாம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mathar_மதார்

Mathar_மதார் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MalarMathar

Mar 18
மீன் குழம்பு ரெசிபி முன்னர் யாரோ கேட்ருந்தீங்க.
அரைக்கிலோ மீன் அளவுக்கு சொல்றேன்.
புளி பெரிய எலுமிச்சை அளவுக்கு தண்ணீரில் ஊற வைக்கணும்.
அரைக்க :
தேங்காய் 3 சில்
அரை பெரிய வெங்காயம்.
மிக்சியில் 1 ல் வைத்து அரைக்கணும்.ரொம்ப மை போல அரைக்கக்கூடாது.90% அரைக்கணும்.
நறுக்க - தாளிக்க:
1 பெரிய சைஸ் தக்காளி
1/2 பெரிய வெங்காயம்
2 பச்சை மிளகாய்
கைப்பிடி கறிவேப்பிலை.
மண் சட்டியில் தாராளமாக எண்ணைய் விட்டு கடுகு 1 ஸ்பூன் தாளிச்சி நறுக்கி வைத்தவை ,கறிவேப்பிலை சேர்த்து வதக்கணும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த தேங்காய் ,வெங்காய விழுது ,புளிக்கரைசல், குழம்பு மிளகாய் தூள் 3 டே.ஸ்பூன் (மல்லி,சீரகம்,மஞ்சள்,மிளயாய் சேர்த்து அரைச்ச பொடி) அல்லது தனியா 2 டே.ஸ்பூன்,சீரகம் 1 டீ ஸ்பூன்,மஞ்சள் 1 டீ ஸ்பூன்,மிளகாய் தூள் 1 டே.ஸ்,காஷ்மீரி சில்லி பவுடர் 1 டே.ஸ் எடுத்துக்கலாம்.
Read 6 tweets
Mar 14
ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு சாதாரண மக்களிடம் இருப்பது குறைவு. ஆனா மெத்தப்படிச்ச கம்பனி நிர்வாகிக்கும் தெரியலையா அல்லது அதை ஒரு தற்காப்பு ஆயுதமாக சிம்பதிக்கு பயன்படுத்துறாரான்னு தெரியலை.1/
ஆட்டிசம் என்பது நோயல்ல அது ஒரு பிறவிக்குறைபாடு. ஆட்டிசம் குழந்தைகளை ட்ரீட்மெண்ட் குடுத்து சரி பண்ண முடியாது. அவர்களின் நிலைக்கேற்ப தெரபி தான் குடுக்க முடியும். 2/
நூற்றில் ஒருவர் மட்டுமே பிறப்பில் இலேசான ஆட்டிச குறைபாடு இருந்து வளரும்போது சரியாகி மிகப்பெரிய அளவில் சாதிச்சிருக்காங்க. சிலருக்கு அபாற திறமை எதிலாவது இருக்கும். கணிதம்,இசை,வாத்தியங்கள்,பாடல்,ஓவியம்,அதீத நியாபகச்சக்தி.Albert Einstein,Charles Darwin,Sir Isaac Newton..3/
Read 15 tweets
Mar 13
மார்ச் 8 பையன் பள்ளியில் பெண்கள் தின விழாவுக்கு காலையில் தலைக்கு குளிச்சிட்டு நல்லா ட்ரையர் வைத்து காய வச்சிட்டுதான் போனேன்.எனக்கு சைனஸ் தொல்லை இருப்பதால் ஈரத்தலையோட இருக்க மாட்டேன். தலை துவட்டினதும் ட்ரையர் போட்ருவேன்.
பள்ளியில் ஏசி இருந்தது. 60-70 இருந்திருப்போம்.மாலை தலைக்கணம்,வலி ஆரம்பித்தது.இரவில் தூக்கத்தில் தொண்டை இன்பெக்சன் ஆனது. எச்சில் முழுங்கிட்டே இருந்தேன்.மார்ச் 9 தலைக்கணம் அதிகமாச்சு.ஏற்கனவே குழந்தைக்கு சளி இருந்ததால் ஆஸ்பிடல் போனோம்.
10 தலைக்கணம் மூக்கு பாதி முகம் வரை வந்திருச்சு. சைனஸ் தலைவலி. சரியான உடம்பு வலி.மாலையே காய்ச்சல் 101.5. குழந்தைக்கும் இடைவிடாத இருமல். இந்த மாதிரி இருமல் வந்ததேயில்லை.நாங்க அதிகமா வெளியே போகும் ஆட்கள் கிடையாது.
Read 9 tweets
Mar 12
How Pump and Dump working.
நீங்க இதுவரை கேள்வி பட்டு இருக்காத ஒரு penny stock முக்கியமாக 90% BSE stock ஆக இருக்கும். ஏதாவது ஒரு யூ ட்யூப் சேனலிலோ, டெலிகிராம் சேனலிலோ இதை வாங்குங்க,Multi bagger னு சொல்லுவாங்க.எந்த ஒரு பங்கை ஒரு பப்ளிக் மீடியாவில் வாங்கச் சொல்றாங்களோ உசார் ஆகணும்
இங்கேதான் Pump and Dump வரும். தினம் அப்பர் சர்க்யூட்டில் இருக்கும். மேலே மேலே போக வைத்து ஆர்வத்தை தூண்டுவாங்க. நடுவில் சில நாட்கள் சர்க்யூட் உடையும் அது புதியவர்களை உள்ளே வர வைப்பாங்க. சில நாட்களிலேயே 200-300% அசால்டாக வரும்.
ஒரு நாள் இந்த பங்கை வைத்திருந்த பெரிய கைகள் லாபத்தில் வித்துட்டு வெளியேறிடுவாங்க. நடுவில் போய் வாங்கின நம்ம தலையில் துண்டு. அன்னைக்கும் சிலர் சர்க்யூட் ஓபன் ஆகிருக்குன்னு வாங்குவாங்க அதுதான் கொடுமை.
Read 7 tweets
Feb 1
சேமிக்காதீங்க செலவு பண்ணி அமெரிக்கா போல கடனட்டையில் காலம் தள்ளுங்கன்னு சொல்றாங்க.அதுக்காக சேமிக்காமல் மட்டும் இருக்காதீங்க.மியூச்சுவல் பண்ட்,ஈக்விட்டி இருக்கு.
20 வருடத்துக்கு LIC கட்ட தயக்கம் இல்லை. Equity, mutual fund ல் மட்டும் உடனே லாபம் கொட்டணும்னு ஏன் எதிர்பார்க்கிறீங்க.தினம் தினம் எடுத்து பார்க்காமல் ஒரு நீண்ட கால சேமிப்பா மட்டும் பாருங்க.
ஒரு நல்ல Equity portfolio க்கு பங்குகள் பிரிச்சி வாங்குங்க. 20% large cap ( low risk low but steady gain) , Mid cap 20% (high risk high returns) ,small cap 20% (higher risk higher returns) some multi baggers from small and midcap only you can expect. 20% Good dividend yield stock
Read 5 tweets
Jan 29
குழந்தைகள் மேல் மறைமுகமாக செலுத்தப்படும் வன்முறை பற்றி நாம் நிறைய உரையாட வேண்டி இருக்கிறது . என் பையன் வகுப்பில் ஒரு பெண் நன்றாகப் படிப்பாள். நோட்ஸ் நல்லா எழுதுவாள்.யார் வந்து நோட்ஸ் கேட்டாலும் மிஸ் அவ நோட்டுதான் வாங்கித் தருவாங்க .
அவளோடு சேர்த்து இன்னொரு பெண் ,ஒரு பையன் இவங்க 3 பேருக்கும்தான் வகுப்பில் போட்டி நடக்குமாம்.யார் முதலில் எக்சாம் எழுதி முடிப்பதுன்னு.க்ளாஸ் மானிட்டரும் அந்த பெண்தான். இன்னொரு பையன் அசிஸ்டண்ட் மானிட்டர். என் பையனுக்கு மானிட்டர் ஆகனும்னு பெரும் ஆசை.
ஒரு நாள் அந்தப் பெண் குழந்தை அம்மாவிடம் பேசும்போது அவங்க சொன்னது என் பொண்ணு ஒரு முழு பக்கமும் ஆங்கிலத்தில் வாசிச்சிருவா. நடந்த மேத்ஸ் எக்சாமில் அவளுக்கு செவ்வகம்,சதுரம் குழப்பம் வந்திருச்சு அதனாலே 2 மார்க் கம்மி ஆகிருச்சு.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(