#நற்சிந்தனை
விசித்திரபுரம் என்ற ஊரில் ஞானசித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்து வந்தான். அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த ஸ்ரீ கிருஷ்ண பக்திமானாக இருந்தும் அவனுக்கு வாய்த்த மனைவி கொடுமைக்காரியாக இருந்ததால் அவன் வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது. வேலை நேரத்தை தவிர்த்து மற்ற
நேரங்களை இறை தியானத்திலும் பிராத்தனையிலும் செலவிட்டான். ஆனால் கஷ்டங்கள் என்னவோ அதிகமாக சூழ்ந்து கொண்டன. அதே ஊரில் குமணவித்தன் என்ற சூழ்ச்சி குணமுடைய பணக்கார நண்பன் இருந்தான். தன் இன்பத்திற்காக எந்த ஒரு கொடுமையான செயலையும் செய்யும் குணமுடையவன். அவனுக்கு நல்ல குணமுள்ள பக்தியில்
சிறந்த மனைவியும் அமைந்திருந்தாள். அவனுக்கு கடவுள் நம்பிக்கை துளிகூட இல்லை. அவனுக்கு தன் நண்பன் ஞானசித்தனின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்வது வாடிக்கையான வேலை. இதன் காரணமாக ஒரு கட்டத்தில் இருவரிடையே சண்டையே வந்து, கோபத்தில் ஞானசித்தன், ஸ்ரீ கிருஷ்ணன் மீது தனது பக்தி உண்மையாக
இருந்தால் இன்னும் ஒரு வாரத்தில் நீ செய்த
தவறுக்கெல்லாம் தண்டனை அனுபவிப்பாய் என்று சாபமிட தொடங்கினான். சிரித்துக் கொண்ட குமணவித்தன் அப்படி நடக்கவில்லை என்றால் நீ ஆன்மீகத்தை கைவிட வேண்டும் என்ற சவாலுக்கு இழுத்தான். இதற்கு ஒப்புக்கொண்ட ஞானசித்தன் தீவிரமான பிராத்தனையில் ஈடுபட்டான்.
போட்டியின் கடைசி நாளும் வந்தது. அந்த நாளில் குமணவித்தனோ காட்டிற்கு சென்று தேவைக்கு அதிகமான பறவைகளையும்
விலங்குகளையும் வேட்டையாடி கொன்று விருந்திற்காக வீட்டிற்கு எடுத்து வந்து கொண்டிருந்தான். வரும் வழியில் களைப்பு
தாங்காமல் ஒரு மரதினடியில் ஓய்வெடுக்க உட்கார்ந்தான். உட்கார்ந்த
இடத்தில் எதோ உருத்துவது போல் இருந்ததனால் என்ன என்று விலக்கி பார்த்தான். கணக்கிட முடியாத செல்வம் அங்கு புதைக்க பட்டிருந்ததை பார்த்து, அதையும் மூட்டையாக கட்டிக்கொண்டு இரட்டை சந்தேஷத்துடன் வீடு திரும்பினான்.
இதற்கிடையே வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஞானசித்தனை மாடுமுட்டி கடுமையான
காயங்களுடன் படுத்த படுக்கை ஆகி விட்டான். இப்படி ஒரு முட்டாள் கணவனுடன் வாழ்வது அசிங்கம் என்று ஞானசித்தனின் மனைவி அவனை விட்டு நீங்கினாள். தனது நிலையை நினைத்து உள்ளும் வெளியும் ஒவ்வொரு நொடியும் அழுதே தீர்த்தான். தான் பட்ட அவமானத்தால் இனி வாழ்ந்து பயனில்லை என்ற முடிவுக்கு வந்தான்
ஞானசித்தன். உடல் ஊனத்தால் அவனால் தற்கொலை கூட செய்துகொள்ள முடியவில்லை. எப்படியோ எழுந்து தன் விட்டிற்கு பின்னடியுள்ள கிணற்றில் குதித்தான். திடீரென்று தன்னை யாரோ தூக்குவது போல் உணர்ந்தான். ஆம் எந்த ஸ்ரீ கிருஷ்ணனை அவன் பக்தியுடன் அனுதினமும் வணங்கினானோ அதே பரந்தாமன் அவனை காப்பாற்றி
காட்சியும் கொடுத்தார். உடலாலும் மனத்தாலும் அவதிப்பட்ட அவனுக்கு அவரை வணங்க தோனவில்லை, மாறாக பரந்தாமனிடம் சண்டை போட தொடங்கினான். ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் கொட்டி தீர்த்தான். அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த பரந்தாமன் அவனை அனைத்து கொண்டார். பரந்தாமனின் அரவணைப்பால்
சற்று ஆறுதல் பெற்றான் ஞானசித்தன். பரந்தாமன் பேச தொடங்கினார், ஞானசித்தா நீ இப்பிறவியில் நல்லவனாக பிறந்து இந்தாலும் முன்பிறவியில் வித்தனை விட கொடுமைகாரனாக இருந்தாய். நீ உன் மனைவியை மதித்தது கூட கிடையாது. மாறாக உன் நண்பன் குமணவித்தனோ முன்பிறவியில் நல்ல காரியங்களையே செய்து வந்தான்,
அதனால் இப்பிறவியில் அவனுக்கு சகல நன்மைகளும் கிடைத்தன. நீயோ, செய்த பாவங்களை அனுபவிக்க நேரிட்டது. என்னை அனுதினமும் நீ வணங்கியதால் நீ அனுபவிக்க வேண்டிய கர்மத்தின் பெரும்பாலனவையை நானே ஏற்றுக் கொண்டேன், அதில் சிறு பகுதியையே நீ அனுபவித்தாய். #ஆன்மீகத்தை தொடங்கும் ஒருவன் முதலில் அவனது
பாவ பதிவையே அனுபவிக்க தொடங்குகிறான், மாறாக அக்கிரமங்கள் செய்யும் ஒருவனுக்கோ அவன் செய்த புண்ணியங்களை அனுபவித்த பின்பு தான் அவன் பாவ பதிவுகள் செயல்பட தொடங்கும். உன் நண்பனுக்கு கிடைத்த புதையலே அவனுடைய கடைசி புண்ணிய பதிவாகும். அவன் செய்த அனைத்து புண்ணியங்களும் ஒட்டு மொத்தமாக செயல்
பட்டு அவனுக்கு புதையலாக கிடைத்தது. இதுவரை நீ அனுபவித்த கஷ்டங்களில் உனது அனைத்து பாவங்களும் கரைந்து விட்டன. இனி நடக்கவிருப்பதை நீயே உன் கண்ணால் பார்த்து தெரிந்து கொள் என்று சில அறிவுரைகளையும் கூறி மறைந்தார் பரந்தாமன். நாட்கள் செல்ல செல்ல ஞானசித்தனின் உடல்நிலை
நலம் பெற தொடங்கியது.
அவனது நெருங்கிய உறவினருக்கு வாரிசு இல்லாததால் அவரது சொத்துக்கள் அனைத்தும் ஞானசித்தனுக்கு
கிடைத்தது. நல்ல குணமுடைய இரண்டாம் மனைவியும் சித்தனுக்கு அமைந்தாள். அதே சமயத்தில் குமணவித்தனுக்கோ வினோதமான ஒரு நோய் தாக்கி படுத்த படுக்கையாகி விட்டான். அவனது மனைவியும் திடீரென்று இறந்துவிட,
அவன் கூட இருந்தவர்கள் அவனை ஏமாற்றி அவன் சொத்துக்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டு வெளியே துரத்தி விட்டனர். தனது நண்பனின் நிலை அறிந்து வருந்திய ஞானசித்தன், வித்தனையும் தன் இல்லத்திலேயே தங்க செய்து உதவினான்.
ஒருவன் எந்த செயலை செய்தாலும் அல்லது நினைத்தாலும் அதற்குரிய பலனே வினை
எனப்படுவது. அது நல்லதாக இருந்தால் நல்வினை, தீயதாக இருந்தால் தீவினை. ஆனால் இந்த வினைகளிலிருந்து தப்பிக்க விதிவிலக்குகளும் உண்டு. அதுதான் இறைபக்தி. நம் இறைபக்தி நம்மை அனைத்து வினைகளிலிருந்தும் நம்மை விலக்கும், பரந்தாமனை நோக்கிய நமது பிரார்த்தனை நம்மை பகவானை நோக்கி மேம்படுத்தும்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மாதுர்காரனாகிய சந்திரனும் பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை எனப்படும். #சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய்வழி உறவினர்கள் #சூரியன் என்றால் தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள். இவர்கள் இருவரும் இணையும் அமாவாசை தினத்தில் மறைந்த
முன்னோர்கள், அவர்களது சந்ததியினர் வாழ்வில் முன்னேற தடைகள் அகல, பலவித தோஷசங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள் என்பது ஐதீகம். அதனால் தான் அமாவாசையன்று காகம், ஈ, எறும்பு, நாய், பசு போன்ற ஜீவராசிகளுக்கு உணவிட வேண்டும் என்று நம் முன்னோர்கள்
சம்பிரதாயத்தை வகுத்துள்ளனர். நம் வீட்டில் எந்த நல்லது, கெட்டது நடந்தாலும் முதலில் தெரிவது இவர்களுக்கு தான். நம் வீட்டிற்க்கு உறவினர் வரப் போகிறார்கள் என்றால் நம் வீட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் காகம் கத்தும். மற்றோரு உறவினர் ஒரு கெட்ட செய்தியை சொல்ல வருகிறார் என்றால் வேறு
மகா செல்வக் குடும்பம். ஸ்ரீ மடத்துக்கு நிறையக் கைங்கர்யம் செய்தவர்கள். பெரியவாளைச் சாட்சாத் பரமேசுவரனாகவே கருதி வணங்கினர். ஆனால், அந்த குடும்பத்தில் நிம்மதியில்லை. கஷ்டத்தின் மேல்
கஷ்டம். அடுக்கடுக்காகத் துன்பம், அலை அலையாக இடையூறுகள். பரிகாரங்கள் செய்து பார்த்தாகி விட்டது. பலன் ஏதும் கிடைக்கவில்லை. குடும்பத் தலைவர், பெரியவாளிடம் வந்து ஏறக்குறையஅழுகிற குரலில், தன் கஷ்டங்களைத் தெரிவித்துக்கொண்டார். பெரியவாள் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்.
"நான் ஏதாவது
குற்றம் குறை சொன்னா தப்பா எடுத்துக்கமாட்டியே?"-பெரியவா.
அவர் தவித்தார். "பெரியவா சொல்றதுதான் எங்களுக்கு வேதவாக்கு. பெரியவா அனுக்ரஹத்துக்காக காத்திண்டிருக்கோம்"
"உங்க ஊர்க் கோயிலில் வருஷா வருஷம் தேரோட்டம் நடக்கும். உன் குடும்பத்தவர்கள் தான் .அதை நடத்திண்டிருந்தா. உன் தகப்பனார்
#மகாபெரியவா_அருள்வாக்கு
சரீரம் எடுத்தது சாதனைக்கே!
மனதை அடக்குவதற்கு இரண்டு சாதனங்கள் உண்டு. வெளிப்படையாய் செய்வது பகிரங்கம். தனக்கு மட்டும் தெரியச் செய்வது அந்தரங்கம். தானதர்மங்கள் செய்வது, பூஜிப்பது, யாகம் நடத்துவது போன்ற செயல்கள் பகிரங்கமாக பலருக்குத் தெரியும்படி செய்வதாகும்.
அந்தரங்க சாதனம் என்பது தியானம் செய்வதாகும். தியானத்திற்கு துணை செய்வது ஐந்து குணங்கள். அவை அகிம்சை, சத்தியம், தூய்மை, புலனடக்கம், திருடாமை ஆகியவை, இந்த ஐந்து நற்குணங்களால் மனதை அடக்கினால் தியானம் எளிதில் கைகூடும்.
அகிம்சை என்பது எல்லாவுயிர்களையும் அன்புமயமாகப் பாவிப்பதாகும்.
எண்ணம், சொல், செயல் இம்மூன்றாலும் உண்மைவழியில் நடப்பது சத்தியம். தூய்மை என்பது அகத்தூய்மை, புறத்தூய்மை ஆகிய இரண்டுமாகும். புலனடக்கம் என்பது புலன் களை கட்டுப்பாட்டில் வைப்பதாகும். அதாவது கண் முதலிய ஐம்புலன்களையும் ஒழுக்கநெறியில் செலுத்துவதாகும் . திருடாமை என்பது பிறர் பொருள் மீது
#தீண்டாதிருமேனி_பெருமாள் சென்னையை அடுத்த கொல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள #சிறுவாபுரி_முருகன் கோயில் அருகில் உள்ளது இப்பழங்கால பெருமாள் கோவில். ஆரண்ய நதியும் கொசஸ்தலை நதியும் இருபக்கம் செல்லும் கிராமத்தில் #வால்மீகி முனிவர் தனது ஆசிரமத்தை அமைத்து இருந்தார். வால்மீகி
ஆசிரமத்தில் ராமபிரானின் புதல்வர்களான லவன் - குசன் இருவரும் வந்து தங்கி, வில் - அம்பு எடுத்து குருகுல பயிற்சி செய்ததால், சிறுவர்கள் அம்பு எடுத்து எய்த ஊர் என்ற பெயர் பெற்று நாளடைவில் சிறுவாபுரி என்று அழைக்கப்படுகிறது.
வால்மீகி செய்த பிரம்ம யாகத்தில், வரதராஜ பெருமாள் அம்ச பூதத்தில்
லவன் குசன் இருவருக்கும் காட்சி அளித்தார். அதன்பின் வரதராஜ பெருமாள் விக்ரமாக எழுந்தருளினார். ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் எம்பெருமானோடு எழந்தருளினர். வரதராஜ பெருமாள் சதுர்பூஜமாகி திருவூரக (பாம்பு) அம்சமாக வால்மீகி ஆசிரமத்தில் வில் அம்பு பயிற்சிக்கு வந்த லவன் குசன் காட்சி அளித்ததாக
#பிடாரிசெல்லியம்மன்_ஆலயம்
சென்னை வேளச்சேரி பகுதியில் மூன்று கோயில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. 1.தண்டீஸ்வரம் கோயில், இங்கு சிவன் அருள்பாலிக்கிறார்.
2.யோக நரசிம்மர் கோயில்
3.பிடாரி செல்லியம்மன் கோயில். இந்த 3 கோவில்களும் பல்லவ காலத்தில் கட்டப்பட்டவையாகும். இவை அருகருகே இருப்பதும
ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட கோயில்களாகவும் காணப்படுகின்றன. வேளச்சேரி, தண்டீஸ்வரம் சிவன் கோயில் எதிரே அழகிய கட்டிட வேலைப் பாடுகளுடன் அருள்மிகு பிடாரி செல்லியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், சாமுண்டேஸ்வரி, பிரம்மி, வாராஹி, வைஷ்ணவி, மகேஸ்வரி, கௌமாரி, இந்திராணி ஆகிய சப்த
மாதர்கள் அருள் பாலிக்கிறார்கள். உற்சவராக, பிடாரி செல்லியம்மன் அருள்கிறாள். இவர்களுடன், விநாயகரும் இருப்பது கூடுதல் சிறப்பு. மேலும், தட்சிணாமூர்த்தி, காவல் தெய்வங்கள், நவகிரகங்கள் ஆகியவை தனித்தனி சந்நதிகளாக இருந்து அருள்பாலிக்கின்றனர். #கிராமதேவதை
பிடாரி செல்லியம்மன், வேளச்சேரிக்க
படுகிறது. மழுவுடையார் சிவபெருமானின் கைகளில் இருக்கும் மழு ஆயுதமாவார். இவருடைய சிற்பத்தின் நெற்றிப் பகுதியில் மழுவைப் போன்ற புடைப்பு உள்ளது. #சண்டி#முண்டி
சிவபெருமான் முப்புரங்களை தன்னுடைய புன்சிரிப்பால் எரித்தார். அப்போது எழுந்த தீயில் பூவாக லிங்கம் தோன்றியது அதனை இரு அரக்கர்கள்
கட்டிப் பிடித்தனர். அவர்களே சண்டி, முண்டி என்ற இரு துவாரபாலகர்களாக ஆனார்கள். #நந்தி#மகாகாளர்
நந்தி மற்றும் மகாகாளர் ஆகியோர் சிவபெருமானின் துவாரபாலகர்களாக சில கோயில்களில் உள்ளனர்.
கர்நாடக மாநிலம் #தலக்காடு_வைத்தியநாதர் கோயிலில் நந்தி ஆண் கல்லாலும், மகாகாளர் பெண் கல்லாலும்