#அப்பா உங்களின் நினைவுகளோடு நீங்கள் வாழ்ந்த, எங்களை வளர்த்த இடம் நோக்கி வந்து கொண்டுள்ளோம். 300 km தான். நீங்கள் இருந்தால் இதற்குள் குறைந்தது இரண்டு தொலைபேசி அழைப்புகளாவது வந்திருக்கும்...எங்கப்பா இருக்க...சாப்பிட்டிங்களா..ட்ராஃபிக்கா இருக்கா...கவனமா வாங்க..
1/n
30 நொடிகளுக்கு மேல் நீங்கள் தொலைபேசியில் பேசியது அபூர்வம். கவனம்...பத்திரம்...சாப்பாடு..இவைகளே மீண்டும் மீண்டும். அப்பல்லாம் கோபம் வரும்.
எங்களின் கார் பயணம் உங்களுக்கு அவ்வளவு பதட்டம். இப்போது சொல்ல நீங்கள் இல்லையே என்று வருத்தம்.
2/n
இன்று இரவும் நாளையும் உங்கள் இறப்பை தொடர்ந்த 16 ஆம் சடங்குகள். இத்துடன் துக்கம் முடிந்து விடுகிறதாம். முடியுமா என்ன ? விண்ணில் இருப்பீர்களா...... தெரியாது. உங்களுக்கே அதில் நம்பிக்கையில்லை. எங்கள் நினைவில் வாழ்ந்து வழி நடத்துங்கள்.
3/n
உங்களின் தைரியத்தில், அசாத்திய தன்னம்பிக்கையில், அயரா உழைப்பில் சற்றேனும் தானம் இடுங்கள்.
எதையும் நீங்கள் கற்றுத் தந்ததில்லை. பார்த்துக் கற்றுக் கொள் என்று வாழ்ந்து சென்ற வாழ்க்கையது. ஏற்றுக் கொள்வதைப் போல் தவிர்க்க வேண்டியதும் உண்டு. அதில் முக்கியமானது அந்தக் கோபம்.
4/n
எதிர்.நிற்பவரின் தவறை எக்காரணம் கொண்டும் ஏற்கவியலா கோபம். சிலருக்கு திருந்த வாய்ப்பு கொடுத்திருக்கலாம். உறவுகள் அற்ற ஒரு வாழ்வை வாழ்ந்து சென்றுள்ளீர்கள். அதற்காக நீங்கள் வருந்தியதில்லை. ஏனெனில் நியாயம் உங்கள் பக்கம். ஆனால் அம்மா பாவமில்லையா...
5/n
எவ்வளவு கூறியும் உங்களால் முற்றிலும் விட முடியாத புகைப் பழக்கம். அதன் வீச்சை உங்களின் இறுதி நாட்களில் நீங்கள் உணர்ந்தீர்களா ? தெரியவில்லை. சிறுகச் சிறுக உங்கள் நுரையீரலில் சளியை அல்ல சாவைப் பதியமிட்டுள்ளீர்கள். ஆனால் ஒரு ஆச்சரியம்...
6/n
நீங்கள் புகை பிடித்து நானோ, தம்பிகளோ ஒரு முறை கூட பார்த்தது இல்லை. உங்களின் அந்த தன்மை மிகப் பிடித்த ஒன்று. பிறர் கூறியும், வீட்டில் அங்கங்கே நீங்கள் ஒளித்து வைத்திருக்கும் சிகரெட்டுகளைப் பார்க்கும் போது சிரித்து கடந்துள்ளேன். சரியாக சொல்ல வேண்டுமெனில்
7/n
பிள்ளைகளுக்கு தெரியாமல் திருட்டு தம் அடித்த அப்பா நீங்கள். எங்களுக்கு எவ்வளவு பெரிய மரியாதை.
எனது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு. நான் நன்கு படிப்பவன். பள்ளியில் நான் முதல் மூன்று இடங்களுக்குள் வருவேன் என்று எண்ணியிருந்தார்கள். ஆனால் நானோ....
8/n
தேர்வு முடிவு வெளியாகி மதிப்பெண் பட்டியல் வாங்க என்னுடன் வந்தீர்கள். நான் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கி குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தேன். இருப்பினும் பள்ளியில் 10 இடங்களுக்குள் இருந்தேன். கையெழுத்திட்டு சான்றிதழ்களை
பெற்றுக் கொண்டோம்.
9/n
எனக்கு பயம்... பள்ளி விட்டு வெளியில் வந்தவுடன் என்ன சொல்வீர்கள் என்று. வெளியில் வந்தோம். என்னை அருகில் இருந்த ஒரு ஹோட்டல் அழைத்து சென்றீர்கள். எலுமிச்சை சாதமும், கேசரியும் வாங்கிக் கொடுத்து சாப்பிடச் செய்து கவலைப் படாதப்பா, பாத்துக்கலாம் என்றீர்கள்.
10/n
இப்பொழுது நினைத்தாலும் அழுகிறேன். சிலிர்க்கிறேன்.
ஒரு வேளை இதுதான் நான் என் பிள்ளைகளின் மதிப்பெண் குறித்து பெரிதாக குறை கொள்ளாததன் காரணமாக இருக்கலாம்.
ஒரு முறை கூட நீங்கள் என்னை வாடா போடா என்று விளித்ததில்லை. தம்பி.....வாப்பா, போப்பா தான்.
11/n
உங்கள் அறியாமையால், உங்கள் நண்பர் ஒருவரின் தவறான வழிகாட்டலால் என்னை ITI படிப்பில் சேர்த்தீர்கள். பின்னாட்களில் அது குறித்து நான் வருத்தம் மற்றும் கோபம் தொனிக்க பேசிய போது...எனக்கு தெரிந்தது அவ்வளவு தான்பா...
எங்கப்பா என்னை எட்டாம் வகுப்பு வரை படிக்க வைத்தார்.
12/n
நான் உங்க அம்மாவை டீச்சர் training, உன்னை ITI படிக்க வச்சிருக்கேன். நீ உன்னோட தம்பியை டிப்ளமா படிக்க வச்சிருக்க. உன்னோட புள்ளைங்கள நல்லா படிக்க வைப்பா...அப்படி தான் ஒரு தலைமுறை வளர்ச்சி வரும் என்று கூறினீர்கள். இப்போது புரிகிறது.
13/n
அப்போது புரியாமல் நீங்கள் எனக்கு சரியான படிப்பு தரவில்லை. எனக்கு என்ன பண்ணியிருக்கீங்க என்று கேட்ட போது...ரொம்ப அமைதியா உங்களை சேரியில் வளர்க்கவில்லை, உங்களுக்கு ரேஷன் அரிசி வாங்கிப் போட்டதில்லை..அதுல எனக்கு சந்தோசம் என்றீர்கள்.
14/n
அதன் முழு விபரம் புரிந்தபோது நான் பொங்கி அழுதிருக்கிறேன். சாதியால் ஊறிய ஒரு ஊரில், ஊரின் நடுவில் வாழ்ந்து, மூன்று பிள்ளைகளை வளர்த்து, ஒரு வீட்டையும் கட்டி, ஊரிலுள்ளோர் மத்தியில் பெரும் மரியாதையோடு வாழ்ந்தது பெரும் சாதனை என்று புரிய வெகு நாளாயிற்று.
15/n
நீங்கள் ஒரு சுயம்பு. உங்கள் ஒட்டு மொத்த வாழ்வும் நீங்கள் ஒருவனே பின்னியது. அந்த கால கட்டத்தில் இருந்த அத்தனை தடைகளையும், சவால்களையும் தாண்டி வெற்றி பெற்ற ஆகச்சிறந்த தனி ஒருவன்.
உங்கள் வாழ்வு ஒரு எளிய (அரிய) மனிதனின் அரிய (எளிய)
வாழ்க்கை.
நினைவுகள் தொடரும்....🙏🏾
16/n
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#Books #படித்தலும்பகிர்தலும்
இந்த வருடத்தின் முதல் வாசிப்பு. மிகுந்த மன நிறைவையும், நெகிழ்வையும் உண்டாக்கிய நூல்.
மிகச் சிறிய நூல். 60 பக்கங்கள் தான். ஒரு புத்தகத்தின் சிறப்பு அதன் பக்க எண்ணிக்கையில் இல்லை. அது நம் மனதில், சிந்தனையில் உண்டாக்கும் விளைவுகளை பொறுத்தது. 1/8
2/8 அவ்வகையில் ஒரு புத்தகம் என்ன செய்ய வேண்டுமோ அதை சிறப்பாக செய்திருக்கிறது.ரோஸா பார்க்ஸ் பற்றி மிக சிறிய அளவில் அறிந்திருந்தாலும் இதனை படிக்கும் போது உண்டான பிரமிப்பு விவரிக்க இயலாதது. அமெரிக்க கறுப்பினத்தவர் நீதியின் முன் பட்ட கொடுமைகள் மிக வலி தரக் கூடியவை.
3/8 இந்தியாவில் சாதிய ஒடுக்கு முறையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இந்நூல் தனிப்பட்ட முறையில் பெரு வலியைத்தரும். ஒரு பேருந்து பயணத்தில் வெள்ளையர் நிற்கும் போது கருப்பர் அமரக்கூடாது என்றொரு காலம் இருந்தது என்பதும், வெள்ளையருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கறுப்பர் அமரக்கூடாது என்பதும்
#நிலம்_பூத்து_மலர்ந்த_நாள் #படித்தலும்பகிர்தலும்
பாணர்களின் புலம் பெயர்தல் வழியே சங்க காலத்திற்கு நம்மை இட்டுச் செல்லும் ஒரு புதினம் நிலம் பூத்து மலர்ந்த நாள். மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட நூல். இதன் மூலம் மலையாளம் என்பது மிக வியப்பு தரும் ஒரு செய்தி.
1/15
2/15
மலையாளத்திலும் இதன் பெயர் நிலம் பூத்து மலர்ந்த நாள் தான் என்பது இன்னமும் வியப்பு. மூல நூலின் ஆசிரியர் மனோஜ் குரூர் அவர்களுக்கு வணக்கங்கள்.
3/15
தமிழை தாய் மொழியாக கொள்ளாத கேரளத்தை சேர்ந்த ஒருவர் சங்கப் பாடல்கள் வழியே பயணித்து இப்படி ஒரு நூலை எழுதியிருப்பது சக தமிழ் எழுத்தாளர்களுக்கு விடப்பட்ட ஒரு சவால் என்றே எண்ணுகிறேன். மிக சிறப்பு.