#அம்மா_எனும்_தெய்வம்

*ப்ளீஸ்* என்று ஒத்த வார்த்தை சொன்னாலே உருகி கரைந்து விடுவார் என் அப்பா..

ஆனால் அம்மா அப்படி இல்லை.. இரும்பு மனுஷி.. ஒரு காரியத்தை அவரிடம் சாதித்து கொள்வது லேசுபட்ட விஷயம் இல்லை..
மண்டியிட வேண்டும், கெஞ்ச வேண்டும், மிஞ்ச வேண்டும்,

அப்பா வரும்வரை தூங்காமல் காத்திருந்து புகார் சொல்ல வேண்டும்.. எதுக்குமே மசிய மாட்டார்!!

கோபம் தலைக்கேறி அழுது புலம்புவதை தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்? கடைசியில்தான் தெரியும் நான் விரும்பியது
10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஒன்றாக இருந்திருக்கும்..

இப்படி அம்மாவின் பல கண்டிப்புக்களும், திட்டுக்களும் என்னை மீட்கவே செய்தது பிரமிப்பின் நீளம்!!

வசவுகள் எல்லாமே எனக்கு தடுப்பு வேலிகளாகவே இருந்திருக்கிறது..
இறுதியில் தோற்று போனது ஒன்றுக்கும் உதவாத என் பிடிவாதமாகத்தான் இருந்திருக்கிறது!!

கிச்சனில் அம்மா வியர்க்க விறுவிறுக்க எங்களுக்காக சுயமரியாதையை தொலைத்து நின்றிருந்த தருணங்கள் ஏராளம்..
*துணி காயப்போடு,*
*பீரோவை அடுக்கி வை..*
*மதியானத்தில் தூங்காதே..*
*எப்ப பாரு என்ன டிவி?*
*புக் எடுத்து படி...*
*வீட்டு வேலை செய்*,
கல்யாணம் பண்ணி போற இடத்துல என்ன நினைப்பாங்க,

சரியா வளர்க்கலேன்னு என்னை திட்ட மாட்டாங்களா" என்று நை.. நை.. புகைச்சல் காதில் விழும்போதெல்லாம் உச்சத்தின் எரிச்சலுக்கு என்னை இட்டு சென்றது..
இன்று
*சாம்பார் சூப்பர்,*
*வத்தக்குழம்பு சூப்பர்*
என்று அடுத்தவர் என்னை பாராட்டும்போதுதான் அந்த குடைச்சலின் பெருமை துளிர்த்து எட்டி எட்டி பார்த்தது!

மெல்ல என் மர மண்டைக்கு விஷயம் ஏற ஆரம்பித்தது..
*இதிலும் நான்தான் தோற்று போனேன்*.
இருந்தாலும் இந்த அம்மாவுக்கு இவ்வளவு கல்நெஞ்சம் இருக்கக்கூடாது..

அப்போதுதான்
*நூடுல்ஸ் வந்த புதிது..*
அதன் மீது அப்படி ஒரு பிரியம் வந்துவிட்டது..

ஒருநாள் அதை வாங்கி சாப்பிட 5 ரூபாய் கேட்டால்கூட என் அம்மா கறார்தான்..
தர முடியாது என்ற ஒற்றை வார்த்தையை அழுத்தமாக சொல்லிவிட்டார்..

*உங்க சமையல் வெறுப்பா இருக்கும்மா, நூடுல்ஸ்தான் வேணும்*
என்று அழுதாலும் ஒரு பதிலும் அங்கு வரவே வராது..

5 ரூபாய் தராத அம்மா எல்லாம் ஒரு அம்மாவா? என்று நொந்து போய் அழுதடியே அன்று தூங்கிவிட்டேன்.
மறுநாள் காலை தூங்கி எழுந்தால், வீட்டுக்கு வந்த பாத்திர வியாபாரியுடன் அம்மா பேசி கொண்டிருந்தார்.

அந்த வியாபாரி கையிலும், சுற்றிலும் புதுபுது பாத்திரங்கள் கண்ணை கூசின.

*ஆமா.. எல்லா பாத்திரத்திலயும் என் பொண்ணு பேர் பெரிசா பொறிச்சிடுங்க..*
செலவு பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க என்று சொல்லி கொண்டிருந்தார்..

இன்று வரை ஒரு டம்பளரில் தண்ணீர் எடுத்து குடித்தாலும் அதில் உள்ள என் பெயர் என்னை குத்தி காட்டி கொண்டே இருக்கிறது.
*ஏனோ தெரியவில்லை,
இப்போதுவரை நூடுல்ஸ் சாப்பிடும் எண்ணமும் எனக்கு வரவே இல்லை*.
இந்த விஷயத்திலும் நான்தான் தோற்று போனேன்!!

ஓயாத குடைச்சல், எப்பவுமே திட்டு, எப்பவுமே ஒரு அட்வைஸ், எதுக்கெடுத்தாலும் ஒரு பிளாஷ்பேக், அம்மா எப்பவுமே இப்படித்தானோ என்ற நினைப்பு இளம்வயதில் வந்தபடியே இருந்தது.
நான் பிரசவ வார்டில் இருந்தபோது, *அம்மா* என்று எத்தனை முறை கூப்பிட்டிருப்பேன் என்றே தெரியாது,

குழந்தையை பெற்று கொண்டு வீடு வந்து சேர்ந்ததும் அவர் ஒரு நிமிடம் சும்மா இல்லையே..

இதை சாப்பிடு
அதை சாப்பிடாதே
இதை குடி
இப்படி திரும்பு
அப்படி படு,
குழந்தையை இப்படி
பிடிச்சு தூக்கு
என்று சொல்லி கொண்டே இருந்தார்.

அவ்வளவு காலம் இல்லாமல், அம்மாவின் வயிற்றில் தழும்புகள், வடுக்களை அப்போதுதான் பார்த்தேன்..

பிரசவ போரில் நான் தந்த பரிசு போலும்.. நடுமண்டையில் சுரீரென்று எனக்கு உரைத்தது..
அம்மா எப்பவும் போலவேதான் இருக்கிறார்..

நான்தான் ஒவ்வொன்றிற்கும் எரிச்சல், குடைச்சல், என டிசைன் டிசைனாக பெயர் வைத்து கொண்டு இருந்திருக்கிறேன் என்று!!

*இப்போதும் நான்தான் தோற்றேன்!*

என் மகள் குட்டி தேவதை போலவே இருப்பாள் என்று கற்பனை செய்து கொண்டு,
தையல் மிஷினில் கைத்தறி துணியில் பாவாடை தைத்து உடுத்தி அழகு பார்க்கும் போதுகூட,
எனக்கு கண்ணில் பட்டது என்னவோ அதில் தொங்கி கொண்டும், ஒட்டிக் கொண்டும் இருந்த கலர் கலர் நூல்கள்தான்..

"இந்த டிரஸ் நல்லா இல்லைம்மா, நூல் நூலா தொங்குது..
இதை பார்த்தா என் பிரண்ட்ஸ் கிண்டல் செய்வாங்கன்னு" தைத்த 2 நிமிசத்துலயே கழற்றி முகத்தில் எறிந்த நிகழ்வின் காலம் உருண்டாலும் இன்னமும் வலித்து கொண்டே இருக்கிறது.

"இவ்ளோ பெரிய பெண்ணாகியும் இன்னும் ரிப்பன் வைத்து சடை பின்னிக்க தெரியலயா,
என்ற அம்மா திட்டிய அதே வார்த்தைகளை இன்று என் மகளிடம் என்னையும் அறியாமல் சொல்வது வியப்பாக உள்ளது!

எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என் அம்மா!! இந்த விஷயத்திலும் நான்தான் தோற்று நிற்கிறேன்.

ஏனோ தெரியவில்லை.. என்னை பார்க்கும்போதெல்லாம்
ஓயாமல் சொல்லும் பொய்
*ஏன் இப்படி இளைச்சிட்டே, ஏன் இப்படி கறுத்து போயிட்டே* என்பதுதான்..

*தட்டில் சட்னி மீதமிருக்குது பாரு, அதுக்காக இன்னும் ஒரே ஒரு தோசை*

என்று சாக்கு சொல்லி சுடச்சுட சுட்டுப்போடும் அலாதியே இன்றும் தனி அழகுதான்..
சாப்பிட்டு முடித்த பிறகு தான் தெரியும் சட்னியை முன்கூட்டியே தட்டில் அதிகமாக ஏன் வைத்தார் என்று?

அந்த அன்பின் சூட்சுமம்கூட தெரியாமல்
*அப்போதும் நான்தான் தோற்று நிற்பேன்!!*

எத்தனை விஷயத்தில்தான் நான் இப்படி தோற்று கொண்டே இருப்பேனோ தெரியாது..
இந்த தொடர் தோல்வி எனக்கு பிடித்திருக்கிறது.. காரணம், என் அம்மா சளைக்காமல் வெற்றி பெற்று கொண்டே இருப்பதால்!!!

*உலகின் தலை சிறந்த முதல் தியாகி அம்மா மட்டுமே*

சொக்கி போகும் முதல் உலக அழகிகளும் இவர்களே!!

உலகின் மிக பெரிய பொருளாதார மேதையுமே அம்மா மட்டுமே!!
*எத்தனை இடர்பாடுகள்*,
*எத்தனை துயரங்கள்,*
*எத்தனை வலிகள்*
வந்தால் என்ன?

உலக உருண்டையில் கலந்துவிட்ட இந்த தாய்மையானது அனைத்தையும் புரட்டி போட்டு கொண்டு மேலே சென்று கொண்டே இருக்கும்!!.......

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #பாரதம்_தமிழகம் ( Kaalabala )🇮🇳

#பாரதம்_தமிழகம் ( Kaalabala )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Mar 21
இன்று என் வாராந்திர லைபிரரி நாள் என்பதால் 21G யைப் பிடித்து, காலியாக இருந்த ஒரு இருக்கையில் உட்காரப் போனேன்.

ஏற்கனவே உட்கார்ந்திருந்த ஆசாமி ஒன்றரை சீட்டில் உட்கார்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதம் செய்து கொண்டிருந்தார்.
அவர் பாக்கி விட்டிருந்த இடத்தில் உட்கார தயிர்வடை தேசிகனே சிரமப்படுவார்.

பஸ் இடப்புறம் வளைகிற போதெல்லாம் சறுக்கிக் கீழே விழப் போனதால் கொஞ்சம் வலப்புரம் அழுத்தி உட்கார முயன்றேன்.

‘ஏன் சார் நெருக்கறீங்க? உங்க சீட்ல அட்ஜஸ்ட் பண்ணி உக்கார முடியாதா?’ என்றார் பயங்கரவாதி.

என் சீட்டா? அதுல பாதியை ஏற்கனவே நீங்கதான் ஆக்குப்பை பண்ணியிருக்கீங்க சார்’ என்றேன்.

கொஞ்சம் கில்ட்டியாக உணர்ந்ததாலோ என்னவோ, ‘நான் என்ன பண்றது, கடவுள் என்னை இப்படிப் படைச்சிட்டார்’ என்றார்.
Read 7 tweets
Mar 21
சத்திய சோதனை

மீ பாவம் தானே

Gas Cylinder. !!!

ஏங்க... சிலிண்டர் வந்திருக்கு. இந்த காலிய கொண்டுபோய் குடுங்க.

குடுத்துட்டேன்...

புல் சிலிண்டர யாரு தூக்கிட்டு வருவா ? அதுக்கு ஒருவாட்டி வாய் வலிக்க கத்தணுமா ? உருட்டிட்டு வந்தா தரைல கீறல்விழும். போய் தூக்கிட்டு வாங்க...
தூக்கிட்டு வந்தாச்சும்மா..

அதுக்கென்ன மெடல் குத்தி, கவர்னர கூப்ட்டு பாராட்டு பத்திரம் வாசிக்க வெக்கணுமா ? தூக்கிட்டு வந்தாச்சுனா அனுமாரு மாதிரி போஸ் குடுத்துட்டு நிக்காம, கொண்டுபோய் உள்ள வெய்ங்க. இருங்க, கூட்டி விடணும். இந்த வௌக்குமாறு எங்க தொலைஞ்சதோ...
சீக்கிரமா கூட்டுப்பா. கை வலிக்குது...

இங்கென்ன ஊஞ்சலா ஆடிட்டு உக்காந்திருக்கேன். வௌக்குமாற தூக்கி, ஓடி ஆடி கூட்டுற எனக்கு கை வலிக்காதாம். சிலிண்டர தூக்கிட்டு, ஒரே இடத்துல நிக்குற உங்களுக்கு கை வலிக்குதாக்கும் ?. உங்கம்மா அவ்ளோ சொகுசா வளத்தி வெச்சிருக்காங்க. வெய்ங்க...
Read 5 tweets
Mar 21
*கோவிலில் 27நட்சத்திரங்கள் எவ்வாறு செயல்படுகிறது?*

*1.அஸ்வினி: விக்ரகத்தின் கிரீடம்.*

*2. பரணி: கற்பூரத் தட்டு.*

*3.கிருத்திகை: தூண்டா விளக்கு.*

*4. ரோகிணி: நைவேத்தியப் பொருள்.*

*5. மிருகசீரிஷம்:*
*பீடத்தின் தீர்த்தம்.*

*6. திருவாதிரை: கர்ப்பகிரகம்.*
*7.புனர்பூசம்: அலங்காரப் பொருள்*

*8 பூசம்: அர்த்தமண்டபம்.*

*9.ஆயில்யம்: தேவையற்ற குப்பை போடும் இடம்.*

*10. மகம்: விபூதி, சந்தனம்.*

*11. பூரம்: சபா மண்டபம்.*

*12. உத்திரம்: கிணறு நீர் தொட்டி.*

*13. ஹஸ்தம்: அபயமுத்திரை.*

*14. சித்திரை: அலங்கார வஸ்திரம்.*
*15. சுவாதி: நெய்விளக்கு.*

*16.விசாகம்: பிரகாரங்கள்.*

*17. அனுஷம்*: *காற்றோட்டமான இடம்.*

*18. கேட்டை: பூஜை‌ப்பொருள் இடம்.*

*19.மூலம்: உண்டியல் பகுதி.*

*20* *பூராடம்: கர்ப்பகிரக*
*விமானம்.*

*21.உத்திராடம்: கால் கழுவும் இடம்.*

*22. திருவோணம்*: *நவக்கிரகம் உப தெய்வம்.*
Read 4 tweets
Mar 13
*தெரிந்து கொள்ளுங்கள்*

கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்து இருப்பவர்கள் அந்தக் காரின் காப்பீட்டு பாலிசியைப் படித்துப் பாருங்கள். அதில் விபத்துகள் ஏற்பட்டு கிளைம் எதுவும் வாங்கப்படாமல் இருக்கும் பட்சத்தில்
No claim bonus கூடிக்கொண்டே வந்து 50% வந்தவுடன் நின்று விடும்.
அவ்வாறு விபத்து கிளைம் ஏதும் வாங்காமல் இருக்கும் நிலையில் உங்கள் காரை நீங்கள் விற்று விட்டு வேறு கார் வாங்க முடிவு செய்தால், நீங்கள் விற்கப் போகும் காரின் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அனுகி No Claim Bonus Certificate வேண்டும் என்று எழுத்துப் பூர்வமாகக் கேளுங்கள் .
அவர்கள் தரும் அந்த Certificate ஐ பெற்று புதிய கார் வாங்கும் ஏஜென்சியிடம் கொடுத்துப் புதிதாக எடுக்கும் வாகன பிரிமியத்தில் உங்கள் பழைய காரின் No claim bonus எவ்வளவு இருக்கிறதோ...அதே அளவு Discount பெற்றுக் கொள்ளுங்கள் . அது உங்கள் உரிமை .
Read 6 tweets
Mar 12
#பக்தி_என்றால்

#மணிவாசக_பெருமான்

மாணிக்கவாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்கவாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார்.

அதற்கு மணிவாசக பெருமான் என்ன கேட்கிறார் பாருங்கள்.

பாடல்

வேண்டதக்கது அறியோய் நீ !
வேண்ட முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன்மாற்கு அறியோய் நீ!
வேண்டி என்னைப் பணி கொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்,
அதுவும் உந்தன் விருப்பன்றே...!

பாடல் விளக்கம் =

எனக்கு என்ன தர வேண்டும் என்று உனக்குத் தெரியும். எனக்கு எவ்வளவு தர வேண்டும் என்றும் உனக்குத் தெரியும்.
எனக்கு ஏதாவது வேண்டும் என்று நான் நினைத்தால் , அதுவும் உன் விருப்பமே என்று மணிவாசகர் ஈசனிடம் உருகி பாடுகிறார்.

ஆனாலும் சிவ பெருமான் மணிவாசக பெருமானை விடுவதாக இல்லை மீண்டும் கேட்கிறார் உனக்கு என்ன வேண்டும் கேள் என்று மீண்டும் மணிவாசகர் பாடுகிறார்..

பாடல் =
Read 6 tweets
Mar 12
#முதுமை

இந்த மாசம் தாத்தா பாட்டி நம்ம வீட்டுக்கு வரலையாப்பா? ஆசையோடு கேட்டான் பையன்.

உங்க அப்பா அழைக்கப் போகாட்டாலும் உங்க பெரியப்பா தாத்தா பாட்டிய இங்கே கொண்டு வந்து விட்ருவாருடா. கவலைப் படாதே, குதர்க்கமாய் பதில் சொன்னாள் மனைவி.
அப்போது அலைபேசி மணி ஒலித்தது. எடுங்க. உங்க அண்ணனாய்த்தான் இருக்கும். மனைவியின் யூகம் சரிதான். அண்ணன்தான் அழைத்தார்.

வணக்கம்ண்ணே, நாந்தான் பேசுறேன். சொல்லுங்க’ என்றேன்.

என்னடா, அப்பா அம்மாவை அழைச்சிட்டுப் போகலையா? அண்ணன் கேட்டார்.
அவரைச் சொல்லியும் குற்றமில்லை. அண்ணி தொந்தரவு செய்திருப்பாள்.

கொஞ்சம் வேலையா போய்டுச்சு. இன்னும் ஒரு மணி நேரத்துல வந்திடுறேன். இணைப்பை துண்டித்தேன். புறப்பட
ஆயத்தமானேன்.

அப்பா, எனக்கொரு சந்தேகம் என்றான் மகன்.

என்னடா சந்தேகம்?
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(