#வாஸ்து_கோயில் - #திருப்புகலூர்

கும்பகோணம்-நன்னிலம் - காரைக்கால் பாதையில் நன்னிலத்திலிருந்து கிழக்கே 8.கி.மீ தொலைவில் உள்ளது. இறைவன் அக்னீஸ்வரர். அம்மன் மனோன்மணி.
தீர்த்தம் அக்னி தீர்த்தம்.

அக்னி தேவன், பரத்வாஜர் வழிபட்ட தலம். Image
அறுபத்துமூவரில் முருகநாயனார் அவதரித்தது இறைவனுக்கு பூத்தொண்டு புரிந்த சிறப்புடைய தலம்.

சுந்தர்க்கு இறைவன் செங்கற்களை பொன்னாக்கி அளித்த அற்புத வரலாறு.

இத்தகைய அற்புதம் நிகழ்ந்தால் புது வீடு கட்ட விரும்புவோர் குடும்பத்துடன்
இத்திருத்தலம் சென்று இறைவன் இறைவியை பூஜித்து கோவில் சார்பாக பூஜிக்க பட்ட மூன்று செங்கல்கள் அனுக்ரஹிக்கப்பட்டு பிரசாதமாக கொடுப்பார்கள்.
அந்த செங்கற்களை வீட்டின் மூன்று மூலையில் அமைத்து வீடுகளை கட்டினால் இறைவனையே நம் வீட்டிற்கு அழைத்து வந்தற்க்கு ஒப்பாகும்.

இவ்வாறு பயன் அடைந்தவர்கள் ஏராளம்.

இத்தலம் வேளாகுறிச்சி ஆதினத்தின் கட்டுபாட்டில் உள்ளது.
ஓம் நமசிவாய! Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #பாரதம்_தமிழகம் ( Kaalabala )🇮🇳

#பாரதம்_தமிழகம் ( Kaalabala )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Mar 24
" ஸ்வாமி ''

வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி , கண்களை மூடியவாறு ராம ஜபம் செய்து கொண்டிருந்த தியாகராஜர் , குரல் கேட்டு சட்டென்று கண் விழித்தார் !

எதிரே ஒரு வயதான தம்பதி !
அருகே ,கூப்பிய கரங்களுடன் ஒரு இளைஞன் !, Image
மெல்லிய குரலில் அந்த முதியவர் இப்போது பேச ஆரம்பித்தார் ;..

'' ..ஸ்வாமி ...நாங்கள் வடக்கே ரொம்ப தூரத்திலிருந்து கால்நடையாய் ஷேத்ராடனம் பண்ணிண்டு வரோம் !.நாளை ராமேஸ்வரம் போகணும் !.. Image
இன்று ஒரு ராத்திரி மட்டும் உங்க க்ருஹத்துல தங்கிவிட்டு , காலை பொழுது விடிந்ததும் கிளம்பிடறோம் !.

தயவுசெய்து ஒத்தாசை பண்ணணும் !''
கம்மிய குரலில் ,
பேசினார் அவர்;
வயதான அந்த தம்பதியின் அழுக்கு படிந்த உடைகள் , Image
Read 13 tweets
Mar 24
ராமசாமி வழக்கம் போல் Bar ரில் தனியாக உட்கார்ந்து மூன்று 🍸🍸🍺கிளாஸ்களில் தனித் தனியாக மது ஊற்றி குடித்துக் கொண்டிருந்தார்.

அடித்த சரக்கு பத்தாமல் மீண்டும் பிராந்தி ஒன்று வாங்கி, மூன்று கிளாஸ்களில் ஊற்றி குடித்துக் கொண்டிருந்தார்.🍺
வெயிட்டர் சிறிது நேரம் பார்த்துவிட்டு, "சார், நீங்க தப்பா நினைக்கலன்னா ஒன்னு கேட்கலாமா?"

கேளுப்பா.......

நீங்க மூணு கிளாஸ்ல தனித்தனியா வாங்கி குடிக்கிறீங்களே...
ஏன்னு எனக்கு புரியல!

"இல்லப்பா, நாங்க அண்ணன் தம்பி மூணு பேரு. ஒரு அண்ணன் பரமக்குடியில் இருக்கான்,
மற்றொரு தம்பி காரைக்குடியில் இருக்கான், நான் இங்க தூத்துக்குடியில் இருக்கேன். நாங்க மூணு பேரும் எப்பவுமே ஒன்னாதான் சரக்கடிப்போம்.

நாங்க மூணு பேரும் ஆளுக்கு ஒரு மூலையா பிரிஞ்சு போனதால, சரக்கு சாப்பிடறதா இருந்தா மூணு கிளாஸ்ல வாங்கி,
Read 7 tweets
Mar 24
🙏🙏 #ஹரே_கிருஷ்ணா 🙏🙏

🙏🙏 #ராதே_கிருஷ்ணா 🙏🙏

சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் , தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.

அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். Image
அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்!” என்றான்.

ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான்.

“நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். Image
தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை!” என்று சொன்னான் கர்ணன்.

“ஆஹா ! நீ அல்லவோ சுத்த வீரன்! அர்ஜுனன் காண்டீவத்தை நம்புகிறான்.

நீ உன் திறமையை நம்புகிறாய் !” என்று கர்ணனைத் துரியோதனன் பாராட்டினான். Image
Read 16 tweets
Mar 23
#பிட்ச்சை

ஏதாவது குடுப்பா ....
என முதியவர் ஒருவர் கேட்க
,
,
அவசியம் தரணுமா ?
என கொஞ்சம் நக்கலாக கேட்டேன்
.
.
யார் யாருக்கோ தர்ற ....
எனக்கு தந்தால் என்ன ?....
என அவர் சொன்ன போது சற்று திகைத்து போனேன் .....
.
.
அப்படி நான் யாருக்கு தருகிறேன் நீங்க சொல்லுங்க ?
.
. Image
டாக்டருக்கு தர்ற ....
மருந்து கடைகாரனுக்கு தர்ற ...
ஹோட்டலில் சர்வருக்கு டிப்ஸூ தர்ற
கோவிலுக்கு போனா .....
பார்கிங் .... அர்ச்சனை டிக்கெட் ...
பூ கடைகாரன் .... பழ கடைகாரன் ....
பூசாரி என எல்லோருக்கும் தர்றே ல்ல
,
,
ஆமாம் ......
இப்போது எனது குரலில் பயம் கலந்த பணிவு வந்தது ....
,
,
இல்லாதவனுக்கு தந்தால் புண்ணியம் சேரும் ......
இருப்பவனுக்கு தந்தால் பாபம் சேரும் ....
ஏனெனில் இல்லாதவன் கையேந்தி பெறுவான் .....
இருப்பவன் அலட்சியமாக பெறுவான் ....
என அந்த முதியவர் சொல்ல .....
,
,
Read 4 tweets
Mar 22
#அம்மா_எனும்_தெய்வம்

*ப்ளீஸ்* என்று ஒத்த வார்த்தை சொன்னாலே உருகி கரைந்து விடுவார் என் அப்பா..

ஆனால் அம்மா அப்படி இல்லை.. இரும்பு மனுஷி.. ஒரு காரியத்தை அவரிடம் சாதித்து கொள்வது லேசுபட்ட விஷயம் இல்லை..
மண்டியிட வேண்டும், கெஞ்ச வேண்டும், மிஞ்ச வேண்டும்,

அப்பா வரும்வரை தூங்காமல் காத்திருந்து புகார் சொல்ல வேண்டும்.. எதுக்குமே மசிய மாட்டார்!!

கோபம் தலைக்கேறி அழுது புலம்புவதை தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்? கடைசியில்தான் தெரியும் நான் விரும்பியது
10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஒன்றாக இருந்திருக்கும்..

இப்படி அம்மாவின் பல கண்டிப்புக்களும், திட்டுக்களும் என்னை மீட்கவே செய்தது பிரமிப்பின் நீளம்!!

வசவுகள் எல்லாமே எனக்கு தடுப்பு வேலிகளாகவே இருந்திருக்கிறது..
Read 21 tweets
Mar 21
இன்று என் வாராந்திர லைபிரரி நாள் என்பதால் 21G யைப் பிடித்து, காலியாக இருந்த ஒரு இருக்கையில் உட்காரப் போனேன்.

ஏற்கனவே உட்கார்ந்திருந்த ஆசாமி ஒன்றரை சீட்டில் உட்கார்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதம் செய்து கொண்டிருந்தார்.
அவர் பாக்கி விட்டிருந்த இடத்தில் உட்கார தயிர்வடை தேசிகனே சிரமப்படுவார்.

பஸ் இடப்புறம் வளைகிற போதெல்லாம் சறுக்கிக் கீழே விழப் போனதால் கொஞ்சம் வலப்புரம் அழுத்தி உட்கார முயன்றேன்.

‘ஏன் சார் நெருக்கறீங்க? உங்க சீட்ல அட்ஜஸ்ட் பண்ணி உக்கார முடியாதா?’ என்றார் பயங்கரவாதி.

என் சீட்டா? அதுல பாதியை ஏற்கனவே நீங்கதான் ஆக்குப்பை பண்ணியிருக்கீங்க சார்’ என்றேன்.

கொஞ்சம் கில்ட்டியாக உணர்ந்ததாலோ என்னவோ, ‘நான் என்ன பண்றது, கடவுள் என்னை இப்படிப் படைச்சிட்டார்’ என்றார்.
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(