#பிடாரிசெல்லியம்மன்_ஆலயம்
சென்னை வேளச்சேரி பகுதியில் மூன்று கோயில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. 1.தண்டீஸ்வரம் கோயில், இங்கு சிவன் அருள்பாலிக்கிறார்.
2.யோக நரசிம்மர் கோயில்
3.பிடாரி செல்லியம்மன் கோயில். இந்த 3 கோவில்களும் பல்லவ காலத்தில் கட்டப்பட்டவையாகும். இவை அருகருகே இருப்பதும
ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட கோயில்களாகவும் காணப்படுகின்றன. வேளச்சேரி, தண்டீஸ்வரம் சிவன் கோயில் எதிரே அழகிய கட்டிட வேலைப் பாடுகளுடன் அருள்மிகு பிடாரி செல்லியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், சாமுண்டேஸ்வரி, பிரம்மி, வாராஹி, வைஷ்ணவி, மகேஸ்வரி, கௌமாரி, இந்திராணி ஆகிய சப்த
மாதர்கள் அருள் பாலிக்கிறார்கள். உற்சவராக, பிடாரி செல்லியம்மன் அருள்கிறாள். இவர்களுடன், விநாயகரும் இருப்பது கூடுதல் சிறப்பு. மேலும், தட்சிணாமூர்த்தி, காவல் தெய்வங்கள், நவகிரகங்கள் ஆகியவை தனித்தனி சந்நதிகளாக இருந்து அருள்பாலிக்கின்றனர். #கிராமதேவதை
பிடாரி செல்லியம்மன், வேளச்சேரிக்க
எல்லை அம்மனாக இருந்தருளுகிறாள். அதனால் அம்மை போன்ற நோய்களுக்கு இந்த அம்மனையே வழிபடுகிறார்கள் இப்பகுதி மக்கள். மேலும், ஊர் மக்களுக்கு காத்து கருப்பு அண்டவிடாமல் காத்தருளுகிறாள். அதுமட்டுமின்றி, செழிப்பான வாழ்வு பெற செல்லியம்மனை வேண்டிக் கொள்கிறார்கள். வேண்டிய சிறிது நாட்களிலேயே
வாழ்வில் மாற்றம் நிகழ்வதாக, அனுபவபூர்வமாக பக்தர்கள் தெரிவிக்கிறார்கள். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில், ராகு காலத்தில் விளக்கு ஏற்றுவது இங்கு விசேஷமாகும். இங்கு, பிரதானமாக செல்லியம்மன் இருந்தாலும், #வாராஹிஅம்மனை வழிபடுவோர் அதிகளவில் காணப் படுகின்றனர். திருமணத் தடை, வீடு,
மனை வாங்க நினைப்போர், வேலைவாய்ப்பு போன்ற காரிய சித்திக்கு வாராஹியை வேண்டிக் கொண்டு, 21 மஞ்சள் அல்லது 21 எலும்பிச்சை ஆகியவற்றை கையினால் கட்டி வாராஹிக்கு மாலையாக சாற்றி வழிபட்டால், காரியங்கள் நிறைவேறுவதாக இங்கு பூஜை செய்யும் பூசாரி தெரிவித்தார். மேலும், வெள்ளிக்கிழமை அன்று நினைத்த
காரியங்கள் ஜெயமாக, எலும்பிச்சை பழத்தை வாராஹி அம்மனின் பாதத்தில் வைத்து வேண்டிக்கொண்டு, அதை பெற்று வீட்டினுள் இருக்கும் பூஜை அறையிலோ அல்லது வீட்டின் வாசல் பகுதியிலோ கட்டியும் வைக்கலாம். திருவிழாவின் போது செல்லியம்மன் (உற்சவர்) வேளச்சேரி முழுவதிலும் திருவீதி உலா நடைபெறுகின்றது.
காந்தி ரோடு, தண்டீஸ்வரம் பகுதி மற்றும் வேளச்சேரியில் இருக்கும் சுமார் 25 தெருக்களுக்கு செல்லியம்மன் திருவீதி உலா வருகிறாள். அவளை வரவேற்று, அனைத்து பக்த அன்பர்களும் ஒன்றுகூடி, வாண வேடிக்கை வெடித்து திருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றனர். திருவிழாவின் போது, வீதி வீதியாக சென்று அருளும்
செல்லியம்மன், திடீர்ரென்று சில வீடுகளின் முன்னாள் நின்றுவிடுகிறாள். அந்த வீட்டின் உரிமையாளர், அம்மனுக்கு அதிரசம், முறுக்கு போன்றவற்றை படையலிட்டு, ஆரத்தி எடுத்த பிறகே, அம்மன் மீண்டும் தன் பயணத்தை தொடர்கிறாள். இது செல்லியம்மனின் ஆசீர்வாதமாக பார்க்கப்படுகிறது.
ஆடிமாதம் ஏழாவது வாரம்
திருவிழா நடைபெறும். அன்று மாலை சுமார் 8.00 மணியளவில், செல்லியம்மன் வேளச்சேரி பகுதி முழுவதும் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்கிறாள். அதன் பிறகு மறுநாள் காலை, 5.00 மணியளவில் திருக்கோயிலுக்கு வந்தடைவாள். ஆங்கில புத்தாண்டு, பொங்கல், தமிழ் புத்தாண்டு ஆகிய நாட்களில், செல்லி
அம்மனுக்கு சந்தன அபிஷேகம், சந்தன அலங்காரம் மற்றும் விஷேச அலங்காரங்கள் செய்யப்பட்டு, கோவிலில் உள்ள ஊஞ்சலில் நமக்கு தரிசனம் தருகிறாள். நவராத்திரி அன்று காலையிலும், மாலையிலும் இரு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பிரசாதங்கள் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப் படுகின்றன. அதேபோல், ஒவ்வொரு
தெய்வத்திற்கும் ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படுகின்றது (சப்தமாதர்கள்). மார்கழி மாதத்தில் காலை 5.00 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
காலை: 6.00 முதல் 10.00 வரை, மாலை 4.00 முதல் 8.00 வரை நடை திறந்திருக்கும்.
சென்னை கோயம்பேட்டிலிருந்து வேளச்சேரிக்கு பேருந்துகள்
உள்ளன. அதில் ஏறி தண்டீஸ்வரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இந்த கோயிலுக்கு செல்லலாம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
காஞ்சி மகாபெரியவருக்கு ஒரு சமயம் கடுமையான காய்ச்சல், கபம் இருந்தது. வெங்குடி டாக்டர் என்பவர் தான், பெரியவரைச் சோதித்து மருந்து கொடுப்பார். இந்தத் தடவை அவர் கொடுத்த
மருந்துகளை ஏனோ சாப்பிடவில்லை. காய்ச்சலும் குறையவில்லை.
ஒரு பக்தை தினமும் தரிசனத்திற்கு வருவார். பெரியவருக்கு காய்ச்சல் என்பதை அறிந்து, குங்குமப்பூவை சந்தனத்துடன் சேர்த்து கொஞ்சம் சூடுபண்ணி கொண்டு வந்தார். பெரியவரிடம் கொடுத்து, “சுவாமி! கொஞ்சம் பற்று போட்டுக் கொள்ளுங்கள்” என்றார்.
அதை ஒரு தொன்னையில் வாங்கிக் கொண்ட பெரியவர் ஓர் ஓரமாக வைத்து விட்டார். பற்று போட்டுக் கொள்ளவில்லை. அந்த அம்மையார் பெரியவர் பற்றுப் போடுவார் என காத்து நின்றார். இதனிடையே வெளியே மேளச் சத்தம் கேட்டது. தனக்கு மருந்து தந்த பக்தையை நோக்கி, "வாசல்லே காமாட்சி வந்திருக்கா! போய் தரிசனம்
மாதுர்காரனாகிய சந்திரனும் பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை எனப்படும். #சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய்வழி உறவினர்கள் #சூரியன் என்றால் தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள். இவர்கள் இருவரும் இணையும் அமாவாசை தினத்தில் மறைந்த
முன்னோர்கள், அவர்களது சந்ததியினர் வாழ்வில் முன்னேற தடைகள் அகல, பலவித தோஷசங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள் என்பது ஐதீகம். அதனால் தான் அமாவாசையன்று காகம், ஈ, எறும்பு, நாய், பசு போன்ற ஜீவராசிகளுக்கு உணவிட வேண்டும் என்று நம் முன்னோர்கள்
சம்பிரதாயத்தை வகுத்துள்ளனர். நம் வீட்டில் எந்த நல்லது, கெட்டது நடந்தாலும் முதலில் தெரிவது இவர்களுக்கு தான். நம் வீட்டிற்க்கு உறவினர் வரப் போகிறார்கள் என்றால் நம் வீட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் காகம் கத்தும். மற்றோரு உறவினர் ஒரு கெட்ட செய்தியை சொல்ல வருகிறார் என்றால் வேறு
மகா செல்வக் குடும்பம். ஸ்ரீ மடத்துக்கு நிறையக் கைங்கர்யம் செய்தவர்கள். பெரியவாளைச் சாட்சாத் பரமேசுவரனாகவே கருதி வணங்கினர். ஆனால், அந்த குடும்பத்தில் நிம்மதியில்லை. கஷ்டத்தின் மேல்
கஷ்டம். அடுக்கடுக்காகத் துன்பம், அலை அலையாக இடையூறுகள். பரிகாரங்கள் செய்து பார்த்தாகி விட்டது. பலன் ஏதும் கிடைக்கவில்லை. குடும்பத் தலைவர், பெரியவாளிடம் வந்து ஏறக்குறையஅழுகிற குரலில், தன் கஷ்டங்களைத் தெரிவித்துக்கொண்டார். பெரியவாள் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்.
"நான் ஏதாவது
குற்றம் குறை சொன்னா தப்பா எடுத்துக்கமாட்டியே?"-பெரியவா.
அவர் தவித்தார். "பெரியவா சொல்றதுதான் எங்களுக்கு வேதவாக்கு. பெரியவா அனுக்ரஹத்துக்காக காத்திண்டிருக்கோம்"
"உங்க ஊர்க் கோயிலில் வருஷா வருஷம் தேரோட்டம் நடக்கும். உன் குடும்பத்தவர்கள் தான் .அதை நடத்திண்டிருந்தா. உன் தகப்பனார்
#மகாபெரியவா_அருள்வாக்கு
சரீரம் எடுத்தது சாதனைக்கே!
மனதை அடக்குவதற்கு இரண்டு சாதனங்கள் உண்டு. வெளிப்படையாய் செய்வது பகிரங்கம். தனக்கு மட்டும் தெரியச் செய்வது அந்தரங்கம். தானதர்மங்கள் செய்வது, பூஜிப்பது, யாகம் நடத்துவது போன்ற செயல்கள் பகிரங்கமாக பலருக்குத் தெரியும்படி செய்வதாகும்.
அந்தரங்க சாதனம் என்பது தியானம் செய்வதாகும். தியானத்திற்கு துணை செய்வது ஐந்து குணங்கள். அவை அகிம்சை, சத்தியம், தூய்மை, புலனடக்கம், திருடாமை ஆகியவை, இந்த ஐந்து நற்குணங்களால் மனதை அடக்கினால் தியானம் எளிதில் கைகூடும்.
அகிம்சை என்பது எல்லாவுயிர்களையும் அன்புமயமாகப் பாவிப்பதாகும்.
எண்ணம், சொல், செயல் இம்மூன்றாலும் உண்மைவழியில் நடப்பது சத்தியம். தூய்மை என்பது அகத்தூய்மை, புறத்தூய்மை ஆகிய இரண்டுமாகும். புலனடக்கம் என்பது புலன் களை கட்டுப்பாட்டில் வைப்பதாகும். அதாவது கண் முதலிய ஐம்புலன்களையும் ஒழுக்கநெறியில் செலுத்துவதாகும் . திருடாமை என்பது பிறர் பொருள் மீது
#தீண்டாதிருமேனி_பெருமாள் சென்னையை அடுத்த கொல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள #சிறுவாபுரி_முருகன் கோயில் அருகில் உள்ளது இப்பழங்கால பெருமாள் கோவில். ஆரண்ய நதியும் கொசஸ்தலை நதியும் இருபக்கம் செல்லும் கிராமத்தில் #வால்மீகி முனிவர் தனது ஆசிரமத்தை அமைத்து இருந்தார். வால்மீகி
ஆசிரமத்தில் ராமபிரானின் புதல்வர்களான லவன் - குசன் இருவரும் வந்து தங்கி, வில் - அம்பு எடுத்து குருகுல பயிற்சி செய்ததால், சிறுவர்கள் அம்பு எடுத்து எய்த ஊர் என்ற பெயர் பெற்று நாளடைவில் சிறுவாபுரி என்று அழைக்கப்படுகிறது.
வால்மீகி செய்த பிரம்ம யாகத்தில், வரதராஜ பெருமாள் அம்ச பூதத்தில்
லவன் குசன் இருவருக்கும் காட்சி அளித்தார். அதன்பின் வரதராஜ பெருமாள் விக்ரமாக எழுந்தருளினார். ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் எம்பெருமானோடு எழந்தருளினர். வரதராஜ பெருமாள் சதுர்பூஜமாகி திருவூரக (பாம்பு) அம்சமாக வால்மீகி ஆசிரமத்தில் வில் அம்பு பயிற்சிக்கு வந்த லவன் குசன் காட்சி அளித்ததாக