#தீண்டாதிருமேனி_பெருமாள் சென்னையை அடுத்த கொல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள #சிறுவாபுரி_முருகன் கோயில் அருகில் உள்ளது இப்பழங்கால பெருமாள் கோவில். ஆரண்ய நதியும் கொசஸ்தலை நதியும் இருபக்கம் செல்லும் கிராமத்தில் #வால்மீகி முனிவர் தனது ஆசிரமத்தை அமைத்து இருந்தார். வால்மீகி
ஆசிரமத்தில் ராமபிரானின் புதல்வர்களான லவன் - குசன் இருவரும் வந்து தங்கி, வில் - அம்பு எடுத்து குருகுல பயிற்சி செய்ததால், சிறுவர்கள் அம்பு எடுத்து எய்த ஊர் என்ற பெயர் பெற்று நாளடைவில் சிறுவாபுரி என்று அழைக்கப்படுகிறது.
வால்மீகி செய்த பிரம்ம யாகத்தில், வரதராஜ பெருமாள் அம்ச பூதத்தில்
லவன் குசன் இருவருக்கும் காட்சி அளித்தார். அதன்பின் வரதராஜ பெருமாள் விக்ரமாக எழுந்தருளினார். ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் எம்பெருமானோடு எழந்தருளினர். வரதராஜ பெருமாள் சதுர்பூஜமாகி திருவூரக (பாம்பு) அம்சமாக வால்மீகி ஆசிரமத்தில் வில் அம்பு பயிற்சிக்கு வந்த லவன் குசன் காட்சி அளித்ததாக
ஐதிகம். வால்மீகி ஆசிரமத்தில் விக்ரகமாக எழந்தருளிய வரதராஜ பெருமாளை அப்போதைய ஸ்தபதிகள் சுதை (சுண்ணாம்பு) மற்றும் மூலிகை கரைசல்கள் கொண்டு பிரமாண்டமான பெருமாளை உருவாக்கினார்கள். அன்று முதல் இன்று வரை பெருமாளை அர்ச்சகர்கள் கூட கையால் தொட்டதில்லை என்பதால் வரதராஜபெருமாள் ‘தீண்டா
திருமேனி’ பெருமாள் என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார்.
தீண்டா திருமேனி பெருமாள், ஸ்ரீரங்கநாதரும் 12 ஸ்தானம், 1008 சாளக்கிராம முர்த்திகளால் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுதை திருமேனியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். தீண்டா திருமேனி பெருமாளின் கீரிடம் முதல் திருவடி வரை
1008 சாளக்கிராமம், நவரத்தினம், தங்கம் மற்றும் வெள்ளியுடன் பெருமாளின் திருவடியில் செப்பு தகட்டால் செய்த யந்திரம் ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள பெருமாளுக்கு அஷ்டபந்தன திருமேனி இல்லை என்பதாலும் விக்கிரகம் மேலே சுதை உருவம் உள்ளதால் ஸ்ரீஎந்திரம் வைத்து 12 ஸ்தானங்கள்
உருவாக்கப்பட்டுள்ளது. தீண்டா திருமேனி பெருமாளுக்கு அபிஷேகம், திருமஞ்சனம் எப்போதும் கிடையாது. ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் அன்று, தீபம் ஏற்றிய பிறகு, தேவதரு மரப்பட்டையில் இருந்த தயாரிக்கப் பட்ட சந்தனாதி தைலம், சாம்பிராணி தைலம், சந்தன தைலம் ஆகிய முலிகை கலவை தயாரித்து, அதனை தாழம்பு
மடலை பிரஷ் போன்று உருவாக்கி தீண்டா திருமேனி எம்பெருமான் உடல் முழவதும், அர்ச்சகர் கைப்படாமல் பூசிவிடுவார். இந்த 48 நாட்களும், தீண்டா திருமேனி பெருமாள் உடல் அதிக சூட்டில் இருப்பதால் அவருக்கு தத்தியோதனம் (தயிர்சாதம்) தளிகை படைக்கபடும். தீண்டா திருமேனி பெருமாளுக்கு சாத்தப்படும் தைலக்
காப்பு வைகுண்ட ஏகாதசி முன்னால் தசமி வரை திரை போட்டு மறைத்து எம்பெருமான் முகம் மட்டும் பக்தர்கள் சேவிக்க அனுமதிக்க படுகிறார்கள். தசமி அன்று மீண்டும் தாழம்பூ மடலை பிரஷ் முலம் லாவகமாக செய்து அதில் வஸ்திரத்தினை தீண்டா திருமேனி பெருமாளுக்கு சாத்துவார்.
தீண்டா திருமேனி பெருமாள் கோயிலை
கரிகால் மன்னன் கட்டியதாக தகவல் இருந்தாலும், அதற்கு முன்பு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தீண்டா திருமேனி கோயில் இருந்ததாக ஐதிகம். தீண்டா திருமேனி பெருமாளுக்கு மலர் மாலைகள் சாத்தப்படுவதில்லை, எப்போதாவது ஒரு தடவை ஒரு துளசி இலை மட்டும் தாழம்பூ மடலை வைத்து எம்பெருமான்
திருமார்பில் அர்ச்சகர் தூக்கிப் போடுகிறார். துளசி இலை பெருமாளின் மார்ப்பில் சென்று ஒட்டி கொள்கிறது. மறுநாள் காலை, துளசி இலை பெருமாளின் திருவடியில் விழந்து கிடக்கும். தீண்டா திருமேனி பெருமாளின் ஸ்தல விருக்ஷம் ஏழு வகையான தர்ப்பை என்பதால் கோயிலில் இருக்கும் பாம்பு புற்று அருகே
தர்ப்பைகள் முளைத்துள்ளது. சிறுவாபுரி கிராமத்தில் இன்றும் பல விவசாய விளை நிலங்களில் தர்ப்பை புல் ஆங்காங்கே முளைத்துள்ளது. இதனை கொண்டு பெருமாளுக்கு பூஜைகள் நடக்கிறது. மேற்கு பக்கமாக தீண்டா திருமேனி பெருமாள் சேவை சாதித்தாலும் கிழக்கு பக்கமாக ஒரு 12 அடி தூண் உயரத்தில் வைஷ்ணவி தாயார்
விஷ்ணுவின் மாயா சக்தியாக எம்பெருமானை பார்த்துக் கொண்டு இருக்கிறார். இதனால் தீண்டா திருமேனி பெருமாள் எப்போதும் சாந்தமாக காட்சி தருகிறார் என்கிறார்கள். இங்கு கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் செங்கமலவல்லி தாயார், தனிகோயில் கொண்டு இருக்கிறார். தீண்டா திருமேனி பெருமாளுக்கு 4 கைகள்,
செங்கமலவல்லி தாயருக்கும் 4 கைகள் என்பதால் வீரலட்சுமியாக சேவை சாதிக்கிறார்கள்.
தீண்டா திருமேனி பெருமாள் சுதையால் செய்யப்பட்டு உள்ளதால், வாடாமல் வாதங்கமால் இருக்கிறார். தீண்டா திருமேனி பெருமாள் கோவிலில் யோக லட்சுமி, போகலட்சுமி, வீரலட்சுமி என தாயார் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.
இதனை லட்சுமிபிரயம் என்று அழைக்கிறார்கள். இங்கு பிரார்த்தனையுடன் வந்தால் புத்திரபாக்கியம் மற்றும் வெற்றி கிடைக்கும்.
தீண்டா திருமேனி பெருமாளை காலம் காலமாக அரச்சகர்கள் ஆகிய நாங்கள் யாரும் தொட்டதில்லை. தாழும்பூ மடலில் தீண்டா திருமேனி பெருமாளுக்கு தைலக்காப்பு மற்றும் வஸ்திரம் (உடை)
சாத்துதல் நடைபெறுகிறது. நின்ற கோலத்தில் பகதர்களுக்கு சேவை சாதிக்கும் தீண்டா திருமேனி பெருமாள் என்ற வரதராஜ பெருமாள் திருமேனி உலகில் வேறெங்கும் கிடையாது என திருக்கோயில் அர்ச்சகர்கள் வரதராஜன் பட்டாச்சாரியர் மற்றும் சந்தானம் பட்டாட்சாரியர்கள் தெரிவிக்கிறார்கள்.
தவறுதலாக அர்ச்சகர்கள்
விரல் பெருமாளை தீண்டிவிட்டால் திருமேனியுடன் விரல் ஒட்டிக் கொள்வதாக சொல்கிறார்கள். மிகவும் சிரமப்பட்டு விரலை திருமேனியில் இருந்து எடுக்க முடியும் என்கின்றனர். தற்போது தீண்டா திருமேனி கோயிலின் பின்புறம் இருந்த அக்ரஹார தெரு, யாரும் இல்லாமல் வெறிசோடி கிடக்கிறது. கோவிலுக்கும் கூட்டம்
வருவதில்லை. இக்கோயிலின் பெருந்தேவி தாயார் கோயில் மாடவீதியில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். சிறுவாபுரி செல்லும் போது, இவ்வளவு மகிமையும் வரலாறும் கொண்ட தீண்டா திருமேனி பெருமாளை கட்டாயம் தரிசித்து, அவரருளை பெற்று வரவேண்டும்.
காலை 9 மணி - 12 மணி வரையிலும் மாலை 5 மணி - 7 மணி
வரை நடை திறந்திருக்கும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மன நோய் அகற்றும் #திருவிடைமருதூர்
சிவ பெருமான் தன்னை தானே பூஜித்து, வழிபட்ட லிங்கமானதால் இவர் #மகாலிங்கமானார் இவரை தரிசிப்போருக்கு மன நோய் நீங்கும். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப் பட்டோர், இத் தலநாயகனை வழிபட்டால் குணம் அடைவர்.
மன நோய் கொண்டுள்ளோர், இக்கோயிலின் வெளிச் சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர். கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார்10 கி.மீ. தொலைவில் உள்ளது இத்திருத்தலம்.
கற்கடேஸ்வரர் திருக்கோவில். கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் திருந்து தேவன்குடியின் நாயகி, தீராநோய்கள் தீர்க்கும் அருமருந்தம்மை. இங்கு அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய் பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாக வழங்கப் படுகிறது. இது சர்வ வியாதிகளுக்கும் ஆன ஒரு நிவாரணி. அதிலும், மிக குறிப்பாக,
#பரந்தாமன்#கிருஷ்ண_பக்தர்கள்_தவறாமல்_படியுங்கள்
ஒருநாள் யமுனை நதி தீரத்தில் பரமாத்மா குடிசை போட்டுக் கொண்டு ருக்மணியுடன் இருக்கிறான். மழைத் தூறல். குளிர்காற்று அடிக்கிறது. பரமாத்மா தூங்கவேயில்லை. ருக்மிணி பிராட்டி பரமாத்மாவின் பாதத்தைப் பிடித்து தூங்கப் பண்ண வந்தாள். எவ்வளவு
நேரம் ஆகியும் பரமாத்மா தூங்கவேயில்லை. ஏன் நித்திரை கொள்ளவில்லை என்று கேட்டாள் ருக்மிணி. யமுனையின் அக்கரையில் என்னிடத்தில் ஆழ்ந்த பக்தி கொண்ட ராதிகா இருக்கிறாள். அவள் தூங்கவில்லை. அதனால் நான் தூங்கவில்லை என்றான் பரமாத்மா.
அவள் ஏன் தூங்கவில்லை என்று கேட்டாள் பிராட்டி. அதற்கு
கண்ணன், அவள் நித்யம் 2 படி பாலைச் சுண்டக் காய்ச்சி பரிமள திரவியங்கள் எல்லாம் போட்டு அந்தப் பாலைப் பருகுவது வழக்கம். இன்றைக்கு அவள் பால் பருகவில்லை. பால் பருகாததால் அவள் தூங்கவில்லை. அதனால் நான் தூங்கவில்லை என்றான். அவள் தூங்காததால் பரமாத்மாவின் தூக்கத்திற்குத் தடை. அவள்
காஞ்சி மகாபெரியவருக்கு ஒரு சமயம் கடுமையான காய்ச்சல், கபம் இருந்தது. வெங்குடி டாக்டர் என்பவர் தான், பெரியவரைச் சோதித்து மருந்து கொடுப்பார். இந்தத் தடவை அவர் கொடுத்த
மருந்துகளை ஏனோ சாப்பிடவில்லை. காய்ச்சலும் குறையவில்லை.
ஒரு பக்தை தினமும் தரிசனத்திற்கு வருவார். பெரியவருக்கு காய்ச்சல் என்பதை அறிந்து, குங்குமப்பூவை சந்தனத்துடன் சேர்த்து கொஞ்சம் சூடுபண்ணி கொண்டு வந்தார். பெரியவரிடம் கொடுத்து, “சுவாமி! கொஞ்சம் பற்று போட்டுக் கொள்ளுங்கள்” என்றார்.
அதை ஒரு தொன்னையில் வாங்கிக் கொண்ட பெரியவர் ஓர் ஓரமாக வைத்து விட்டார். பற்று போட்டுக் கொள்ளவில்லை. அந்த அம்மையார் பெரியவர் பற்றுப் போடுவார் என காத்து நின்றார். இதனிடையே வெளியே மேளச் சத்தம் கேட்டது. தனக்கு மருந்து தந்த பக்தையை நோக்கி, "வாசல்லே காமாட்சி வந்திருக்கா! போய் தரிசனம்
மாதுர்காரனாகிய சந்திரனும் பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை எனப்படும். #சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய்வழி உறவினர்கள் #சூரியன் என்றால் தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள். இவர்கள் இருவரும் இணையும் அமாவாசை தினத்தில் மறைந்த
முன்னோர்கள், அவர்களது சந்ததியினர் வாழ்வில் முன்னேற தடைகள் அகல, பலவித தோஷசங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள் என்பது ஐதீகம். அதனால் தான் அமாவாசையன்று காகம், ஈ, எறும்பு, நாய், பசு போன்ற ஜீவராசிகளுக்கு உணவிட வேண்டும் என்று நம் முன்னோர்கள்
சம்பிரதாயத்தை வகுத்துள்ளனர். நம் வீட்டில் எந்த நல்லது, கெட்டது நடந்தாலும் முதலில் தெரிவது இவர்களுக்கு தான். நம் வீட்டிற்க்கு உறவினர் வரப் போகிறார்கள் என்றால் நம் வீட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் காகம் கத்தும். மற்றோரு உறவினர் ஒரு கெட்ட செய்தியை சொல்ல வருகிறார் என்றால் வேறு
மகா செல்வக் குடும்பம். ஸ்ரீ மடத்துக்கு நிறையக் கைங்கர்யம் செய்தவர்கள். பெரியவாளைச் சாட்சாத் பரமேசுவரனாகவே கருதி வணங்கினர். ஆனால், அந்த குடும்பத்தில் நிம்மதியில்லை. கஷ்டத்தின் மேல்
கஷ்டம். அடுக்கடுக்காகத் துன்பம், அலை அலையாக இடையூறுகள். பரிகாரங்கள் செய்து பார்த்தாகி விட்டது. பலன் ஏதும் கிடைக்கவில்லை. குடும்பத் தலைவர், பெரியவாளிடம் வந்து ஏறக்குறையஅழுகிற குரலில், தன் கஷ்டங்களைத் தெரிவித்துக்கொண்டார். பெரியவாள் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்.
"நான் ஏதாவது
குற்றம் குறை சொன்னா தப்பா எடுத்துக்கமாட்டியே?"-பெரியவா.
அவர் தவித்தார். "பெரியவா சொல்றதுதான் எங்களுக்கு வேதவாக்கு. பெரியவா அனுக்ரஹத்துக்காக காத்திண்டிருக்கோம்"
"உங்க ஊர்க் கோயிலில் வருஷா வருஷம் தேரோட்டம் நடக்கும். உன் குடும்பத்தவர்கள் தான் .அதை நடத்திண்டிருந்தா. உன் தகப்பனார்