விவசாயி ஒருவர் புதிதாக ஒரு ஆலமரக்கன்றை தனது தோட்டத்தில் நட்டு வைத்தார். அது காற்றில் அசைந்து ஒடிந்து விடாமல் இருக்க அருகில் ஒரு குச்சியை நட்டு வைத்து செடியை அதில் கட்டி வைத்தார்.
பிறகு அதை சுற்றி வலையால் வேலி அமைத்தார். நேரத்துக்கு நேரம் தண்ணீரும் உரமும் போடப்பட்டது.
இதைப் பார்த்த எதிரே இருந்த காட்டுச்செடி ஒன்று, " இப்படி ஒரு வாழ்க்கை தேவையா..? எங்களை பார் நாங்கள் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம். ஆனால் நீயோ, குச்சியால் கட்டப்பட்டு கூண்டுக்குள் அடைப்பட்டு கிடக்கிறாய்"
என ஏளனம் செய்தது.
ஆலமரச்செடி யோசிக்க ஆரம்பித்தது. நானும் பிற செடிகளை போல சுதந்திரமாக வாழ்ந்தால் என்ன ? எப்படியாவது இந்த வாழ்க்கையில் இருந்து வெளி வர வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கும் போதே,மறுநாள் அந்த காட்டுச்செடி இருந்த இடம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.
அந்த காட்டுச்செடியும் வெட்டி தூக்கியெறியப்பட்டது.
அந்த வழியாக வந்த விவசாயியின் மகன் , " இது என்ன செடி அப்பா..? ஏன் வலையெல்லாம் போட்டு அடைச்சி வச்சிருக்கீங்க " என்று கேட்க,
இதுவா.. இது ஆலமரச்செடி, இது மற்ற செடி மாதிரி சீக்கிரமா வளர்ந்து சீக்கிரமா அழிஞ்சு போறது இல்ல. பல நூறு வருஷம் வாழ்ந்து பயன்படக்கூடியது. அதான் இதுக்கு இவ்வளவு பாதுகாப்பு என்றார் விவசாயி.
தன்னை கட்டி வைத்திருக்கும் குச்சியும், சுற்றியிருக்கும் வேலியும், நான் இன்னும் நன்றாக வளர்வதற்கு தானே தவிர, சுதந்திரத்தை பறிப்பதற்கு அல்ல என்பதை புரிந்து கொண்டது.
நீங்கள் ஆலமரமாய் வளர வேண்டுமென்றால் சில கட்டுப்பாடுகள் இருக்க தான் செய்யும்..
🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
* யுகங்களாக புராணப் பெருமை கொண்டது கும்பகோணம். அதில் ரத்னமாக ஒளிர்கிறது ராமஸ்வாமி திருக்கோயில்.
1
* புராணத்திற்கு இணையாக நானூறு ஆண்டுகட்கு முன்பு சரித்திரப் பின்னணியில் பெரும் போர்ச் சூழலின் இறுதியில் எழுப்பப்பட்டது. ராஜபக்தியில் விளைந்த ஞானப்பிரானின் கருணை கருவூலமே இந்த ராமஸ்வாமி திருக்கோயில்.
2
* கும்பகோண நகரத்தின் மையமாக அமைந்துள்ளது ஸ்ரீராமஸ்வாமி கோயில். ராஜகோபுரம் நெடிதுயர்ந்து ராமநாம முத்திரையுடன் வரவேற்கிறது.
* மகாமண்டபத்திற்குள் நுழைந்தவுடன் மாபெரும் சிற்பக்காடுகளுக்குள், எழில் சூழ் சிற்பச் சோலைகளுக்குள் நுழைகிறோம்.
ஓர் விசித்திர அனுபவம் பற்றி திருமலை திருப்பதியின் பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர் சொல்வதை பார்ப்போம்
“சுவாமியை தரிசனம் செய்ய கருவறைக்குள் சென்றதும் நம் வேண்டுதல்கள் மறந்து போய்விடும், அடுத்து, சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்ததும்,
சுவாமியை நாம் தரிசனம் செய்தபோது இருந்து அலங்காரம், சுவாமியின் கோலம் எல்லாம் மறந்துபோகும் இது ஏன்..எல்லோருக்கும் இப்படி ஓர் விசித்திர அனுபவம் ஏற்படுவதுண்டு.
அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. இதற்கு காரணத்தை இன்று நாம் ஆராய்வோம்.
சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மி. தொலை விலுள்ள தேவாரத்தலம், கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேசுரர் கோவில். இறைவன் திருநாமம் ஆரண்யேசுரர். வனத்தின் மத்தியில் இருந்தவர் என்பதால் இவர் 'ஆரண்யேசுரர்' என்று அழைக்கப் படுகிறார்.
1
விருத்தாசுரன் என்ற அசுரன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களை காக்கும்படி தேவர்கள் இந்திரனிடம் முறை யிட்டனர். எனவே, விருத்தாசுரனுடன் போரிட்ட இந்திரன், அவனை சம்காரம் செய்தான். இதனால் அவனுக்கு தோஷம் உண்டானது.
2
தேவலோகத் தலைவன் பதவியும் பறிபோனது. தனக்கு மீண்டும் தேவ தலைவன் பதவி கிடைக்க தேவகுருவிடம் ஆலோசனை செய்தான். அவர், பூலோகத்தில் சிவனை வணங்கிட விமோசனம் கிடைக்கப் பெறும் என்றார். அதன்படி பூலோகத்தில் பல தலங் களுக்குச் சென்ற இந்திரன், இத்தலம் வந்தான்.
'சுயநலம்' ஒரு தொற்று வியாதி என்றும் கூறலாம். சுயநலவாதிகளோடு உறவு கொள்பவர்கள் தம்மை அறியாமலே அக்குணம் தம்மை பிடிக்க விட்டு விடுவார்கள்.
சுயநலம் மனதை இருட்டாக்கி விடும். சுற்றி இருப்பவர்களை வெறுக்க வைத்து விடும். சுயநலம் நல்ல குணம் அல்ல.
சுயநலம் கொண்டவர்களிடம் தன்னை விட மற்றவர்கள் முன்னுக்கு வந்து விடுவார்களோ என்ற பரபரப்பு இருந்து கொண்டே இருக்கும். அதனால் அவர்கள் நிம்மதியை இழந்துத் தவிப்பார்கள்.
இன்று பெரும்பாலானவர்கள் அதிகப்படியான
மனஅழுத்தத்தால் அவதிப்படுகிறார்கள். அதற்கு சுயநலமும் ஒரு காரணம்.
சுயநலம் அதிகம் கொண்டவர்கள் தன் வளர்ச்சியைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். தன்னைச் சுற்றி இருப்பவர்களின் வளர்ச்சியைப் பற்றி பொறாமைபட்டுக் கொண்டு அவர்களுக்கு எப்படி எல்லாம் நெருக்கடி கொடுக்க முடியும் என்று தான் சிந்தித்துக் கொண்டு இருப்பார்கள்.