#ராமநவமி_ஸ்பெஷல்#கம்பராமாயண_அரங்கேற்றம்
கவிச் சக்கரவர்த்தி கம்பருக்கு அருளிய நரசிம்மர் பற்றி அருமையாக விவரிக்கிறது வரலாறு. கம்பர் பிறந்தது தேரழுந்தூரில். இவ்வூர் மயிலாடுதுறையிலிருந்து சுமார்
30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கம்பர் நரசிம்ம உபாசகர் நாள் தோறும் அருகிலுள்ள
நரசிம்மர் கோயிலுக்குச் சென்று, யோக நரசிம்மரை வழிபட்டு, அங்கேயே சிறிது நேரம் தியானம் மேற் கொள்வர். இந்நிலையில் வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு தான் இயற்றிய ராம காவியத்தை அரங்கேற்ற ஸ்ரீரங்கம் திருத்தலத்திற்கு வந்தார். அங்குள்ள பண்டிதர்களும் அறிஞர் பெருமக்களும் தில்லைவாழ்
தீட்சிதர்கள் இதற்கு ஒப்புக் கொண்டால் தான் இங்கு அரங்கேற்றம் செய்யலாம் என்று கூறினார்கள். ஸ்ரீரங்கம் கோயிலில் அருள் புரியும். நரசிம்மரை வழிபட்ட பின் தில்லைக்குச் சென்றார் கம்பர். அங்கு தீட்சிதர்களைச் சந்தித்து தான் வந்தது குறித்து சொன்னார். அதற்கு அவர்கள் நீங்கள் இயற்றிய ராம
காவியத்தை இங்குள்ள மூவாயிரம் தீட்சிதர்களும் கேட்க வேண்டும். அவர்கள் ஒவ்வொரு வரும் கேட்கும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் கூற வேண்டும். ஆனால் மூவாயிரம் தீட்சிதர்களும் ஒரே இடத்தில் ஒன்று கூடுவது இயலாத காரியம் எனவே வேறு வழியினைத் தேடுங்கள் என்றனர். மீண்டும் ஸ்ரீ ரங்கம்
வந்த கம்பர் அங்குள்ள அறிஞர்களிடம் தன் நிலையைக் கூறினார். அவர்களோ தில்லையில் ஸ்ரீ ரங்கத்தில் ராம காவியம் அரங்கேற்றலாம் என்றனர். கம்பர் மனம் தளரவில்லை ஸ்ரீ ரங்கம்
கோயிலிலுள்ள நரசிம்மப் பெருமாள் சன்னிதிக்குச் சென்று நரசிம்மரை வணங்கி விட்டு தேரழுந்தூர் திரும்பினார். காலம் கடந்தது
ஒரு நாள் மாலை வேளையில் தேரழுந்தூர் நரசிம்மர் கோயில் மண்டபத்தில் அமர்ந்து நரசிம்மரை உபாசித்த வண்ணம் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அப்போது உடனே தில்லைக்குச் செல் என்று அசரீரி ஒலித்தது. அதைத் தொடர்ந்து ராமகாவிய ஓலைச் சுவடிகள் கொண்ட கட்டுகளுடன் தில்லை நோக்கிப் பயணமானார் கம்பர் காலை
ஆறு மணியளவில் தில்லையை அடைந்தார். அங்கே தில்லை தீட்சிதர்கள் மூவாயிரம் பேரும் ஓரிடத்தில் கூடியிருந்தார்கள். ஆனால் யாருடைய முகத்திலும் மகிழ்ச்சி இல்லை சோகமே உருவாகத் திகழ்ந்தார்கள் ஏன் எல்லோரும் சோகமாக இருக்கிறார்கள்?
என்று ஒரு தீட்சிதரிடம் கேட்டார். அதற்கு அவர், இங்கு தில்லை
நடராஜருக்கு வழிபாடுகள் செய்யும்
பிரதம தீட்சிதரின் மகன் பாம்பு தீண்டி மாண்டு போனான். இறுதிச் சடங்கு நடக்கப் போகிறது. அதற்காகத் தான் நாங்கள் மூவாயிரம் பேரும் இங்கு கூடியுள்ளோம் என்றார். அதற்கு கம்பரை கவனித்து விட்ட மற்ற தீட்சிதர்கள் ஒன்று சேர்ந்து, நாங்களோ கவலையில் இருக்கிறோம்.
நீர் என்னவென்றால் ராம காவியத்தை மூட்டை கட்டிக் கொண்டு வந்திருக்கிறீர். போங்கள் பிறிதொரு சமயம் வாருங்கள் பார்க்கலாம் என்று விரட்டினார்கள். உடனே கம்பர், கவலை வேண்டாம் பாம்பு தீண்டிய சிறுவனை நான் உயிர்ப்பிக்கிறேன் என்று கூறி, அந்த சிறுவனின் உடலை வீட்டிலிருந்து வெளியே கொண்டு வரச்
சொன்னார். தான் வழிபடும் காளி தேவியை மனதில் வழிபட்டார். கம்பத்திலிருந்து தோன்றிய நரசிங்கப் பெருமாளையும் மனதிற்குள் தியானித்து, தனது ராமகாவிய ஓலைச் சுவடிகளிலிருந்து, நாகபாசப் படலம் என்ற பகுதியில் எழுதிய பாடல்கள் சிலவற்றைப் பாடினார். அப்போது யாரும் எதிர்பாராத வண்ணம் ஆகாயத்தில் பெரிய
கருடன் ஒன்று வட்டமிட்டது. கம்பர் நாகபாசப் படலம் பாடல்களைப் பாடப்பாட, அந்தக் கருடன் இறந்து கிடந்த சிறுவன் சடலத்தின் மேல் தன் நிழல் படும் படி மூன்று முறை வட்டமிட்டு, குரலெழுப்பி தாழப்பறந்து, பிறகு மேலே வட்டமிட்டபடி வானில் உச்சிக்குச் சென்று மறைந்தது. இந்த அதிசயத்தை அங்கிருந்த
மூவாயிரம் தீட்சிதர்களும் ஆச்சரியத்துடன் தரிசித்தார்கள் கம்பர் அந்த கருடனை கைகூப்பி வணங்கினார். அப்போது யாரும் எதிர்பாராத வண்ணம் பிணமாகக் கிடந்த சிறுவன் உயிர் பெற்று எழுந்தான். அதைக் கண்டு பரவசமடைந்த தீட்சிதர்கள் அனைவரும் கம்பரை கைகூப்பி வணங்கினார்கள். இறந்தவனையே பிழைக்க வைக்கும்
சக்தி கொண்ட கம்பரின் பாடல்கள் எந்தவித பரிசோதனைகளுக்கும் கட்டுப்பட்டவையல்ல அவரது
ராம காவியம் அரங்கேற்ற முழுத்தகுதியும் பெற்றுள்ளது. என்று அனைவரும் சான்றோலை அளித்தார்கள். கம்பர் மகிழ்வுடன் அங்கிருந்து ஸ்ரீரங்கம் புறப்பட்டார். கம்பர் எந்த தைரியத்தில் சிறுவனை உயிப்பிப்பதாகக் கூறி
நாகபாசப் படலம் பாடல்களைப் பாடினார் என்பது கம்பரின் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும்தான் தெரியும். ஒரு சமயம், சடையப்ப வள்ளலின் மகன் சேதிராயன் பாம்பு தீண்டி மாண்டு போனான். இதையறிந்து கம்பர், உடனே தான் இயற்றிய நாக பாசப் படலம் பகுதிகளில் இரண்டு வெண்பாகளைப் பாடி, அவனை உயிர்ப்பித்தார்.
அப்பொழுது ராமகாவியம் முழுமை பெறாத நிலையிலிருந்து குறிப்பிடத் தக்கது. தில்லை தீட்சிதர்கள் மூவாயிரம் பேரும் சான்றளித்ததால் கம்பர் இயற்றிய ராமாயணத்தை அரங்கேற்ற ஸ்ரீரங்கம் வாழ் பண்டிதர்களும் அறிஞர்களும் அனுமதியளித்தனர். ஒரு சுபநாளில் கம்பர் ஸ்ரீரங்கம் திருக்கோயிலின்
ஐந்தாவது
பிராகாரத்திலுள்ள சிங்கப்பெருமாள் சன்னிதி முன் உள்ள மண்டபத்திற்கு வந்தார். அவரது ராமாயணத்தைக் கேட்க ஊர் மக்களும் பெரியவர்களும் சான்றோர்களும் ஓன்று கூடினார்கள்.
கம்பர், அவர் அமர்ந்திருந்த மண்டபத்தின் எதிரிலுள்ள அழகிய சிங்கப் பெருமாள் சன்னிதியைப் பார்த்து கைகூப்பி வணங்கிய பின், ராம
காவியத்தை ஒவ்வொரு படலமாகப் பாடி விளக்கம் கொடுத்தார். ராம காவியத்தில் இரண்ய சம்ஹாரத்தை மிக அருமையாகக் காட்டியிருந்தார்.
ராமகாவியத்தில் இரண்ய சம்ஹாரமா? என்று அந்தப் படலத்தை சில அறிஞர்களும் பண்டிதர்களும்
ஏற்றுக் கொள்ளாமல் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இவர்களுக்கு என்ன பதில் சொல்வது
என்று எதிரே காட்சி தந்த அழகிய சிங்கப்பெருமாள் சன்னிதியைப் பார்த்தார் கம்பர்.
திசை திறந்து அண்டங்கீறிச் சிரித்தது செங்கட்சீயம்
என்ற அடிகளை கம்பர் வாசித்த போது எதிரிலிருந்த நரசிம்மர் சன்னிதி விமானத்திலிருந்த நரசிம்ம உருவம் அம்மண்டபம் முழுவதும்
எதிரொலிக்க சிரித்ததோடு கம்பரின்
பேரறிவாற்றலைப் போற்றுவது போல பலமாகக் கைதட்டி தலையாட்டியது.
(சிரக்கம்பம், கரக்கம்பம்) இதனால் திகைப்பும், அதிர்ச்சியுமடைந்த அங்குள்ள அறிஞர்களும் பண்டிதர்களும் ராமகாவியத்தை அங்கீகரித்தனர். ஆகவே, கம்பர் அரங்கேற்றிய ராமாயணக்காவிய மண்டபத்திற்கு கம்பர் மண்டபம் என்ற பெயரும் உண்டு.
கம்பராமாயணம் ஸ்ரீ ரங்கத்தில் அரங்கேற்றிய காலம் சாலிவாஹனசகம் 807 என்பதாகும். அதாவது பொ.யு. 885 என்று வரலாறு கூறுகிறது. கம்பர், நரசிம்ம சுவாமி உபாசகர் கம்பத்தில் இருந்து தோன்றியதால் நரசிம்ம சுவாமிக்கு கம்பர் என்ற பெயரும் பொருந்தும் என்று ஆன்றோர் கூறுவர்.
இவ்வாறு கவிச்சக்கரவர்த்தி
கம்பருக்கு அருளிய நரசிம்மர் நம் எல்லாருக்கும் அருளக்கூடியவர்.
இந்த சுலோகத்தைப் பாராயணம் செய்ய, நினைத்த காரியம் பலிதமாகும்.
கம்பர் மண்டபம், ரங்கநாதசுவாமி திருக்கோவில்,
ஸ்ரீரங்கம் தாயார் சன்னதி எதிரிலிருக்கும் நான்கு கால் மண்டபமே கம்பர் மண்டபம் என்று அழைக்கப் படுகிறது. இந்த மண்டபத்திலிருந்துதான் கம்பர் தனது ராமாயணத்தை அரங்கேற்றினார் என்பது அந்த மண்டத்திலேயே போர்டில் எழுதி வைக்கப் பட்டுள்ளது.
ஜய ஶ்ரீராம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
#பக்தி#பாவம்_bhavam
ஒரு பாகவதர் தினமும் கிருஷ்ண பஜனை பாடியபடியே வீடு வீடாக சென்று அன்னம் யாசிப்பது அவரது வழக்கம். ஒரு நாள் அவருக்கு யாரும் அன்னமிடவில்லை. பசியோடு நடந்து கொண்டே கிருஷ்ண பஜனை பாடி கொண்டிருந்தார். அப்பொழுது அவரின் கையை ஓர் 8 வயது சிறுமி பிடித்து, ஸ்வாமி என்று
அழைத்தாள். அவர் நின்று அந்த சிறுமியை பார்த்தார். அவள் கிழிந்த உடையை அழகாக தைத்து உடுத்தி இருந்தாள். மலர்ந்த முகத்தோடு ஸ்வாமி என்று அழைத்தாள். அவர் அந்த சிறுமியிடம், யாரம்மா நீ என்ன வேண்டும் உனக்கு என்று கேட்டார். அதற்கு அந்த சிறுமி, ஸ்வாமி நான் அருகே உள்ள குடிசையில் இருந்து
தினமும் உங்கள் கண்ணன் பாடல்களை ரசித்து கேட்பேன். அதை கேட்டு கேட்டு பாடல்கள் முழுக்க எனக்கு மனப்பாடம் ஆயிற்று. அதனால் உங்களை என் குருநாதராக நினைத்து அழைக்கிறேன், என் வீட்டிற்கு உணவருந்த வருகிறீர்களா என்று அன்போடு அழைத்தாள். பசியோடு இருந்த பாகவதரும் அவளது அன்பான வார்த்தையில் மயங்கி
#கோட்டயம்_மள்ளியூர்_ஸ்ரீமகாகணபதி_ஆலயம்
மூலவர்: விநாயகர்
பழமை: 500 வருடங்களுக்குள்
ஊர்: மள்ளியூர்
மாவட்டம்: கோட்டயம்
மாநிலம்: கேரளா
திருவிழா: விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி
இக்கோவிலில் கர்ப்பக்கிரகத்தில் கணபதியின் மடியில், கிருஷ்ண பகவான் அமர்ந்திருப்பது சிறப்பு.
கோயில் சுற்றுப்
பகுதியில் சாஸ்தா, மகாவிஷ்ணு, துர்க்கை, அந்தி மகா காவலன், யக்ஷி, நாகர் சன்னதிகள் உள்ளன. தோஷத்திலிருந்து விடுபடவும், நோயிலிருந்து விடுபடவும் மக்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். திருமணத் தடை நீங்குவதற்காக செவ்வாய், வெள்ளி கிழமைகளில் செய்யப்படும் #பழமாலை மிகவும் சக்தி
வாய்ந்தது. குழந்தை பாக்கியத்திற்காக பால் பாயாசம் படைக்கப்படுகிறது. பித்ரு கடன் செய்பவர்கள் இங்கு #சதுர்த்தியூட்டு எனப்படும் வழிபாடு செய்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள், தாங்கள் விரும்பிய பொருட்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள். இசை நாயகன் கிருஷ்ணனை மகிழ்விக்கும் நிகழ்ச்சி
இராவணன் மகன் இந்திரஜித்கும் இலட்சுமணனுக்கும் இடையே நடந்த போரில், இந்திரஜித் ஏவிய அஸ்திரத்தால், இலட்சுமணன் மூர்ச்சையாகி வீழ்ந்தார். இலங்கை அரச மருத்துவர் சுசேனர், இலட்சுமணனை குணப்படுத்த இமயமலையில் வளரும் #சஞ்சீவினி
மூலிகை மருந்துச் செடிகளை பறித்து வர அறிவுறுத்தினார். சஞ்சீவினி மூலிகை மருந்தினை இமயமலையில் இருந்து கொண்டு வருவதற்காக பெரும் பலவானாகிய அனுமன் விரைந்து சென்றார். இதை அறிந்த இராவணன் அனுமனுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்த, அவற்றை எல்லாம் கடந்து அனுமன் சஞ்சீவினி மலையை அடைந்தார். அங்கு
அனுமனைக் கொல்ல காலநேமியை இந்திரஜித் அனுப்பி வைத்தான். காலநேமி என்னும் அசுரன் மாரீசனின் மகன். அனுமன் இமயமலையின் சஞ்சீவினி மூலிகை உள்ள பகுதியை அடைந்து, சஞ்சீவினிச் செடிகளை பறிக்க முற்படுகையில், அவ்விடத்தில் போலித் துறவி வேடத்தில் வந்த காலநேமி, அனுமனை வரவேற்று, அருகில் உள்ள ஏரியில்
அளவிலா தவமலையாகிய ஸ்ரீ மஹா பெரியவாள் நினைத்தால் நடக்காத காரியம் பதினான்கு உலகிலும் இல்லை. இப்படிப்பட்ட அநுக்ரஹம் யாருக்கு கிடைக்கும் என்றால் காதலாகி கசிந்து கண்ணீர்
மல்க பெரியவாளிடம் பக்தி செய்தால் கிடைக்கும். அப்படிப்பட்ட பக்தர்களில் ஒருவர் பெங்களூரில் வசிக்கும் பாலகிருஷ்ணன். அவரது தந்தை காலம் சென்ற கந்தஸ்வாமி அய்யர், பெரியவாளுக்கு ஆத்மார்த்தமாகபல கைங்கர்யங்கள் செய்தவர். மல்லேஸ்வரம் சங்கரமடம் கட்டியது. பொதுக்கிணறு எடுத்தது முதலிய பணிகளில்
ஈடுபட்டவர். கங்கா ஸ்நானம், துங்கா பானம் என்று சொல்லியிருக்கிறது. அதாவது கங்கா ஜலத்தில் குளிப்பதும், துங்கா ஜலத்தை குடிப்பதும் விசேஷம். பெரியவாளுக்கு தவறாமல் துங்கா ஜலம் சமர்ப்பித்த பக்தர் அவர். AG's Office ல் பாலகிருஷ்ணனுக்கு உத்தியோகம் கிடைத்தது. பதவி உயர்வு பெற்று மேலே முன்னேற
#ராமநவமி_ஸ்பெஷல்
24,000 ஸ்லோகங்களை கொண்டது வால்மீகி ராமாயணம். 10569 பாடல்கள் கொண்டது கம்பராமாயணம். யாரால் படிக்க முடியும் என்று நினைப்பவர்களுக்கு 16 வார்த்தை ராமாயணம் இதோ.
"பிறந்தார் வளர்ந்தார் கற்றார் பெற்றார்
மணந்தார் சிறந்தார் துறந்தார் நெகிழ்ந்தார் இழந்தார் அலைந்தார்
ஆசை என்று உள்ளே ஒன்று மோசம் செய்யுதே
அது பூசை என்று வெளியே உன் மேல் பாசம் செய்யுதே
நாளும் உன்னை நேசிப்பதாய் போடும் வேஷமே
அது நாளுக்கு நாள் நானே எனக்கு தேடும் நாசமே
எல்லோருக்கும் நன்மை செய்தோம் என்று தோணுதே
செய்த ஒவ்வொன்றிலும் சுயநலமே என்ன,
நாணுதே
போதும் போதும் போதும் இந்த போலி நாடகம்
உந்தன் பாதம் ஒன்றே ஆக வேண்டும் எந்தன் தாரகம்
பேரும் புகழும் வேண்டாம் என்று உள்ளம் சொல்லுதே
பலர் புகழ இன்னும் புகழு என்னும் கள்ளம் வெல்லுதே
காமகோபம் வென்றோம் என்று வாயும் சொல்லுதே
உள்ளே விருப்பும் வெறுப்பும் தலைவிரித்தே ஆடிச்செல்லுதே
பசி ருசியை கடந்தோம் என்று மார் தட்டுதே
இந்தா புசி-என்றே-திநம் நாக்கும் வயிறும் காலைக் கட்டுதே
போதும் போதும் போதும் இந்த போலி நாடகம்
எந்தன் மாமுநிவன் பாதம் அல்லால் யாதும் பாதகம
சுகத்தை விட மனசு இல்லை உள்ள நிலை இது
ஆனால் ஜகத்தினையே ஜயித்ததாக சொல்லி அலையுது
நன்று செய்த நல்லவரை அன்ற