நான் மேற்கு மாவட்ட பகுதியை சேர்ந்த சாதாரண குடிமகன்.ஒவ்வொரு திருமண நிகழ்வுகளிலும் இலவசங்கள் எதற்கு என்று என்னைவிட இளைய வயது சகோதரர்கள் அதிகம் பேசுகிறார்கள்.உள்ளபடியே அதிர்ச்சியாக இருக்கிறது.பார் போற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணியில் உள்ளவர்,கல்வியில் தேர்ச்சி பெற்று ++
சிந்திக்கும் திறன் உடையவர் - எப்படி பொத்தாம் பொதுவாக பேசுகிறார் என்று சற்று அதிர்ந்தேன்.சரி, பேச்சு கொடுப்போம் என்று அவர் கூற வேண்டியவற்றை முடிக்கும் வரை அமைதியாக இருந்தேன்.எதிர்பார்த்த மாதிரியே, இலவசங்கள் மற்றும் சமூகநீதி இடஒதுக்கீடு தான் வளர்ச்சியின் தடைகள் என்றும், வளைந்து ++
நெளிந்து நாதக வகையில் இனவாதம்,குடி பெருமை என்றும் பேசி, கிட்டத்தட்ட Pseudoscience மாதிரியே அறிவியலை அவ -அறிவியல் சேர்த்து ஒரு கலவையாக பேசிட்டு இருந்தார்.சரி, நம்ம தம்பி தான் பேசட்டும்-பேசி முடிக்கட்டும் ன்னு முடியும் வரை காத்திருந்தேன்.அதிமுக சார்பு மூத்தோர் ஒருவர் வந்து ++
சேர்ந்தார்.பேசி முடித்தனர் இருவரும்.அதாவது இவர்கள் இருவரும் திமுக / அதிமுக ஒன்று என்றும், மாற்றம் தேவை என்றும் வெளியில் கூறுவார்கள்.ஆனால் அதிமுக விற்கு வாக்களித்து நடுநிலை காப்பார்கள்.கலைஞர் என்ற ஒற்றை எதிர்ப்பில் திராவிடம் எதிர்ப்பார்கள் ஆனால் அதிமுக இனிக்கும் 🤭. சரி ++
விசயத்திற்கு வருவோம்.தாலிக்கு தங்கத்தில் ஆரம்பித்தது வாதம்.அன்றைய திருமண நிகழ்விற்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி வந்திருந்தார்.நான் சொன்னேன், வாருங்கள் இருவரும் அவரிடமே பேய் கேட்கலாம், எத்தனை வருடங்கள் இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது என்றேன்.திகைத்து நின்றார்கள் 😁.++
ஆதாரம் இல்லாமல் பேசுவது தான் தினமல துக்ளக் வாசகர்கள் வழக்கம்.பிறகு நான் கேட்டேன்.நமது குழந்தைகள் அரசு பள்ளியில் பயில்கின்றார்களா என்றேன்? இல்லை என்றனர்.சரி, யாருடைய குழந்தைகள் அங்கு பெரும்பான்மையாக படிக்கின்றனர் என்றேன்?நமது ஊரில் உள்ள தொழிலாளர் குழந்தைகள் என்றனர்.சரி, இப்போ ++
அவர்களது பெண் குழந்தைகள் குழந்தை திருமணத்தில் இருந்து காப்பாற்ற, கல்லூரி சென்றால் மாதம் உதவித்தொகை என்பதை எப்படி இருக்கும் என்றேன்? ஆமாம் ஆமாம் நல்ல திட்டம் தான், ஆனால் அதில் தளபதியை branding செய்வது ஏன் என்றனர்.அம்மா உணவகம் ன்னு குறிப்பிட்ட போது அது என்னான்னு உறைத்தது என்று++
கேட்டேன்.திகைத்து நின்றனர்.சரி அடுத்து வருவோம்.பொங்கலுக்கு சீர்வரிசை பணம் அநாவசியம் என்ற நீங்கள், குறைந்தபட்சம் அதை வாங்கி உங்கள் அருகில் உள்ள வறுமைக்கோடு குடும்பத்திற்கு கொடுத்தார்களா என்று வினவினேன்? பதில் இல்லை.நான் பொது விநியோகத்தில் வாங்கும் அரிசி பருப்பு அனைத்தையும்++
எனது இல்லம் அருகில் உள்ளவர்களுக்கு தேவைக்கேற்ப அளித்து வருகிறேன் என்றேன். அதாவது எந்த ஒரு அரசின் திட்டத்தையும் பலன் பெறுபவர் இடத்தில் இருந்து பாருங்களேன்.உங்களுக்கு தேவை இல்லை என்றால், அதை பெற்று தேவையான வர்களுக்கு அளிக்க எது தடுக்கிறது என்றேன்? பதில் வரவில்லை. சரி அடுத்தது ++
தான் முக்கியமான இடம். சமூகநீதி பற்றியது. விரிவாக பேசலாம் என்றதும் தப்பிக்க நினைத்த இரு சகோதரர்களையும் இழுத்து பிடித்தேன்.இரண்டு பேரும் பொறியியல் படித்து முடித்தீர்கள்.அதுவும் பிற்ப்படுத்தப்பட்டோர் பிரிவில் கலந்தாய்வில் இடம்பெற்று பொறியியல் முடித்து, Campus Placement ல் பணி ++
ஆணை பெற்றதை சுட்டிக்காட்டினேன். ஆண்டைகளின் தோற்றத்தில் காடு மேடு ஆடு மாடு மேய்த்த பாட்டன் பூட்டன் பாரம்பரிய வாரிசுகளை சமூகநீதி மூலம் பிற்ப்படுத்தப்பட்டோர் பிரிவில் வைத்து பொறியியல் படித்து பன்னாட்டு நிறுவனங்களில் பணியில் உட்கார உதவியது #கலைஞர் என்றேன். ஆக இவர்களது எதிர்ப்பு ++
என்பதெல்லாம் கலைஞர் எதிர்ப்பு என்ற ஒன்று மட்டுமே. ஆயிஅதிமுக எவ்வளவு கேடுகெட்ட ஆட்சியை தந்தாலும் சந்தனமும் தேனும் பாலும் கலந்தது.திமுக ஆட்சியில் சிறப்பான ஆட்சி திட்டங்கள் வந்தாலும், அதெப்படிங்க #பேரறிஞர்#பெரியார்#கலைஞர் இவர்களுக்கு credit கொடுப்பது என்பது தான். இறுதியாக ++
ஒரு கேள்வி கேட்டேன்.கடந்த பாத்தாண்டு திமுக ஆட்சியில் இல்லை.கட்சியில் சலசலப்போ, வேறுபாடு அல்லது பிரிவினை ஏற்பட்டதா என்றேன்? ஆட்சியில் இருந்து இறங்கி இரண்டே ஆண்டுகளில் ஆயிஅதிமுக நிலை என்ன என்றேன்? கொள்கை என்ன என்று திமுக கடைக்கோடி தொண்டரிடம் கேளுங்கள், திக்காமல் தினறாமல்++
பேசுவார் என்றேன்.அதிமுக முன்னாள் அமைச்சரிடம் ஏதாவது மக்கள் நலக் கொள்கையை கேட்டுப்பாருங்கள் என்றேன். #கலைஞர் எதிர்ப்பை தவிர்த்து ஒரு வார்த்தை அதிகமாக வந்தால் பேசலாம் என்றேன்.திருமண நிகழ்வு முடியும் இரண்டு தினங்களுக்கு இரு சகோதரர்களும் என்னிடம் பேசுவதையே தவிர்த்து சென்றனர்.🖤❤️💙🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
உடன் படித்த கல்லூரி நண்பர் நீண்ட காலமாக அரசியல் பேசி வந்தார்.யாரையாவது பகடி செய்யலாம் என்றால்,ஆர்வத்துடன் வந்து பகடி செய்வார்.நகைச்சுவையாக இருக்கும்.திமுக, அதிமுக,காங்,பாஜக ன்னு அனைவரையும் பகடி செய்வார். எனக்கு ஆச்சரியம்! என்னடா இது. இவர் யாருக்கும் ஆதரவு தராத அளவு நடு நிலையோ ++
ன்னு அதிர்ச்சியில் இருந்தேன்,அதாவது கடந்த ஒரு வருட காலமாகவே. ராகுல் நடைப் பயணத்தையும் விட்டுவைக்கவில்லை.கேலி செய்தார்.சரி, இவரது அரசியல் நிலைப்பாடு பெரியதாக இல்லை என்று கடந்து வந்தேன்.சில வாரங்களாக அவரின் வாட்சாப் ஸ்டேட்டஸ் பார்த்தால், ஜோம்பியாக உருமாறிக் கொண்டிருந்தது ++
அறியவில்லை நான்.
நல்லா இருந்த என் நண்பன் இப்படி ஜோம்பியாக மாறியிருப்பது அதிர்ச்சி.நகைச்சுவை உணர்வு கொண்ட இவர், கதைகளின் நகைச்சுவையின் மீது பற்று கொண்டு மெதுவாக ஜோம்பியாக மாறியிருக்கிறார்.எந்த ஒரே சித்தாந்த புரிதல் இல்லாத நபர்கள் தான் நாம் தற்குறி கூட்டத்தின் இலக்கு?🤦😧😢😔