#ராமநவமி_ஸ்பெஷல்

24,000 ஸ்லோகங்களை கொண்டது வால்மீகி ராமாயணம்.
10569 பாடல்கள் கொண்டது கம்பராமாயணம்.
யாரால் படிக்க முடியும் என்று நினைப்பவர்களுக்கு 16 வார்த்தை ராமாயணம் இதோ.
"பிறந்தார் வளர்ந்தார்"
"கற்றார் பெற்றார்"
"மணந்தார் சிறந்தார்"
"துறந்தார் நெகிழ்ந்தார்" "இழந்தார் அலைந்தார்" "அழித்தார் செழித்தார்"
"துறந்தார் துவண்டார்"
"ஆண்டார் மீண்டார்"
விளக்கம்:
1. பிறந்தார்: ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.

2.வளர்ந்தார்: தசரதர் கௌசல்யை சுமித்திரை கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது

3.கற்றார்: வஷிஷ்டரிடம் சகல வேதங்கள் ஞானங்கள் கலைகள் முறைகள் யாவும் கற்றது.
4.பெற்றார்: வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு விஸ்வாமித்ரர் யாகம் காத்து விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.

5.மணந்தார்: ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது
6.சிறந்தார்: அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும் தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கியது.

7.துறந்தார்: கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை துறந்து வனவாழ்வை ஏற்றது.
8. நெகிழ்ந்தார்:
அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது.
குகனார் அன்பில் நெகிழ்ந்தது.

பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது.

பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும் தன் மீது கொண்டிருந்த பாலனைய அன்பினையும் தன்னலமற்ற குணத்தையும் தியாகத்தையும் விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது.
அத்ரி-அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது.

சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது.
விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் சேவையைக் கண்டு, 'கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை. என்னால் முடிந்தது என்னையே தருவது' எனக் கூறி ஆஞ்சநேயரை அணைத்துக் கொண்டது.

9.இழந்தார்: மாய மானின் பின் சென்று அன்னை சீதையை தொலைத்தது.
10.அலைந்தார்: அன்னை சீதையை தேடி அலைந்தது.

11.அழித்தார்: இலங்கையை அழித்தது.

12.செழித்தார்:
சீதையை மீண்டும் பெற்று அகமும் முகமும் செழித்தது.
ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று செல்வச் செழிப்பான வாழ்க்கைக்கு திரும்பியது.
13.துறந்தார்:
அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலையில் மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக அன்னை சீதையை துறந்தது.

14.துவண்டார்:
அன்னை சீதையை பிரிய நேர்ந்தது சீராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில் துவள செய்தது.
15.ஆண்டார்:
என்ன தான் மனதினுள் காயம் இருந்தாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவற செய்து மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமானவர்களாகவும் செல்வச் செழிப்புடன் வாழும்படியும் பார்த்துக் கொண்டது.
16.மீண்டார்:
பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது.

எப்பொழுதும் இராம ஸ்மரணையில் இருப்போம். எங்கும் எதிலும் ராமனை காண்போம்.

#ஜெய்ஸ்ரீராம்சீதாராம்
🙏🏼🙏🙏🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #பாரதம்_தமிழகம் ( Kaalabala )🇮🇳

#பாரதம்_தமிழகம் ( Kaalabala )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Mar 31
ராம நவமி தெரியும் !!!!
பரத தசமி தெரியுமோ ?!?

ராமன் பிறந்தது நவமியில் !
அவன் தம்பி பரதன் பிறந்தது தசமியில் !

கௌசல்யா ராமனைத் தந்தது நவமியில் !
கைகேயி பரதனைத் தந்தது தசமியில் !

புனர்பூசம் ராமனின் நட்சத்திரம் !
பூசம் பரதனின் நட்சத்திரம் ! Image
பரத தசமி தெரிந்தது ?!?
லக்ஷ்மண தசமி தெரியுமோ ?!?

லக்ஷ்மணனும் , அவன் தம்பி சத்துருக்கனனும் பிறந்ததும் தசமியில்தான் !!!

சுமித்திரை பகவானுக்காக லக்ஷ்மணனைப் பெற்றதும்,
பாகவதனுக்காக சத்துருக்கனனைப் பெற்றதும் தசமியிலே !

ஆயில்யம் அடைந்தது லக்ஷ்மணனையும், சத்துருக்கனனையும் தந்தது. Image
புனர்பூசம் ராமனின் நட்சத்திரம் !
பூசம் பரதனின் நட்சத்திரம் !

நவமியில் வந்தவன் ஒருவன் !
அவனே ஆதிமூலன் !

தசமியில் முதலில் வந்தவன் ஒருவன் !
அவனே பரதன் !

இருவரில் முதலில் வந்தவன் ஒருவன் !
அவனே லக்ஷ்மணன் !

நால்வரில் கடையனாய்
வந்தவன் ஒருவன் !
அவனே சத்துருக்கனன் ! Image
Read 7 tweets
Mar 29
ராவணனை அழித்த பிறகு, போர்க்களத்தில் ராமபிரான் ஓய்வாக தரையை நோக்கியபடி அமர்ந்திருந்தார்....!!

அப்போது ஒரு பெண்ணின் நிழல் தெரிந்தது.....!!

அந்த நிழலுக்குச் சொந்தக்காரியான பெண்,

அவரது திருப்பாதங்களைத் தொட முயற்சிப்பதை,
ராமபிரான்.... நிழலின் அசைவின் மூலம் புரிந்து கொண்டார்...!!

உடனே தனது காலை உள்ளிழுத்துக் கொண்டார்....!!

“நீ யாரம்மா?” என்றார்....!!

“நான் ராவணனின் மனைவி மண்டோதரி....!!

என் கணவரை யாராலும் வெல்ல முடியாது என இருமாந்திருந்தேன்....!!
ஆனால்,
அவரையே ஒருவன் கொன்று விட்டான் என்றால்,

அவனிடம் ஏதோ உயர்ந்த குணம் இருக்க வேண்டும் என நினைத்தேன்.....!!

மேலும்.
சத்திரிய குல தர்மப்படி,

கணவனை இழந்த பெண்ணை வெற்றி பெற்றவன் ,
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.....!!
Read 11 tweets
Mar 29
காசியில் நடந்த உண்மை சம்பவம்
*************************************

காசி விஸ்வநாதர் ஆலயம் ----சிவபெருமான் ஒரு வறியவர் வேடம் பூண்டு
காசியில் நகர் வலம் வந்தார்.

செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியில் பசிக்கு உணவு கேட்டார்.
யாரும் உணவிடவில்லை எல்லா கதவுகளும் மூடப்பட்டன.

பின் நடுத்தர மக்கள் வசிக்கும் இடங்களில் வீடு வீடாக ஏறி இறங்கினார். யாரும் உணவிடவில்லை .

மாலை 6 மணி ஆகிவிட்டது.சூரியனும்
மெல்ல மெல்ல மறைந்துகொண்டிருந்தான் -- உணவு கிடைக்கவில்லை---
பசியோடு காசியின் கழிவு நீர்கள் கலக்கும் இடத்திற்கு வந்தார்.சிவனார் ---

அங்கே தனியாக ஒரு தொழுநோயாளி அமர்ந்திருப்பதை கண்டார்.

அவரைச் சுற்றி நான்கு நாய்கள். காலை முதல் மாலை வரை எடுக்கும் பிச்சையை இங்கே கொண்டு வந்து
5 பங்காக போடுவார்.
Read 11 tweets
Mar 28
ஒரு தடவை பார்வதி W/o சிவபெருமான் இருவரும் அழகா ஒரு மாளிகை கட்டினாங்க....

அதோட கிரஹபிரவேசத்துக்கு ஒரு ஜோசியர்கிட்ட நாள் குறிக்க சொன்னாங்க...

அந்த மாளிகை கட்ட கடக்கால் போட்ட நாளை ஆராய்ஞ்ச அந்த ஜோசியர் சொன்னார்.. Image
." நீங்க இந்த மாளிகைய கட்ட கடைக்கால் போட்ட நேரம் சனி உச்சத்துல இருந்த நேரம்..

அதனால நீங்க என்னதான் அக்னி கம்பியும், அல்ட்ராடெக் சிமெண்டும் போட்டு கட்டி இருந்தாலும் இந்த மாளிகை நிலைக்காது...

அதனால நீங்களே இடிச்சுடுங்க" Image
இத கேட்ட பார்வதி செம்ம கடுப்ப்பாயிட்டாங்க....

லோகத்துக்கே பெரிய சாமியோட பொண்டாட்டி நான்....

பிசாத்து சனி என்னோட மாளிகைய இடிக்கிறதா.... நெவெர்... அப்படின்னு பொங்கல் வச்சாங்க....

புருஷன கூப்பிட்டு.... "யோவ்..... நீ இப்போவே அந்த சனிய பார்த்து..... Image
Read 11 tweets
Mar 26
திரிபுரா மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்ற வரலாறே இல்லை.
டெபாசிட் இழப்பு சர்வசாதாரண நிகழ்வு.

2013 சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியிட்டு 49 இடங்களில் டெபாசிட்டும் இழந்தது... கிடைத்த வாக்கு 1.54%.
மகாராஷ்டிரா மாநில சங்கி (RSS Pracharak), சுனீல் தியோதர் (48 வயது) 2014 ஆம் ஆண்டு திரிபுரா மாநில பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அயராத உழைப்பால் 3.5 ஆண்டுகளில் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினார்.
25 ஆண்டு கம்யூனிச கோட்டையை தகர்த்து 60 இல் 36 இடங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது..

இப்போதுமீண்டும் 2023 ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளோம்.
Read 11 tweets
Mar 24
" ஸ்வாமி ''

வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி , கண்களை மூடியவாறு ராம ஜபம் செய்து கொண்டிருந்த தியாகராஜர் , குரல் கேட்டு சட்டென்று கண் விழித்தார் !

எதிரே ஒரு வயதான தம்பதி !
அருகே ,கூப்பிய கரங்களுடன் ஒரு இளைஞன் !, Image
மெல்லிய குரலில் அந்த முதியவர் இப்போது பேச ஆரம்பித்தார் ;..

'' ..ஸ்வாமி ...நாங்கள் வடக்கே ரொம்ப தூரத்திலிருந்து கால்நடையாய் ஷேத்ராடனம் பண்ணிண்டு வரோம் !.நாளை ராமேஸ்வரம் போகணும் !.. Image
இன்று ஒரு ராத்திரி மட்டும் உங்க க்ருஹத்துல தங்கிவிட்டு , காலை பொழுது விடிந்ததும் கிளம்பிடறோம் !.

தயவுசெய்து ஒத்தாசை பண்ணணும் !''
கம்மிய குரலில் ,
பேசினார் அவர்;
வயதான அந்த தம்பதியின் அழுக்கு படிந்த உடைகள் , Image
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(