அனைவருக்கும் எந்தவித பாகுபாடும் இன்றி திரையரங்குகளில் சென்று படம் பார்க்க அடிப்படை உரிமை உள்ளது.
டிக்கெட் எடுத்த பின்பும் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுப்பது சட்டப்படி குற்றம்.
ரோகிணி திரையரங்கு மேலாளர் & டிக்கெட் சரிபார்த்து உள்ளே அனுப்பும் நபர் மீது சட்டப்படிநடவடிக்கை தேவை.
குழந்தைகளுடன் படம் பார்க்க வந்ததை அனுமதிக்க முதலில் மறுத்து பின்பு அனுமதித்து அதற்குரிய காரணங்களாக கூறும் விஷயங்களும் அவர்கள் படம் பார்க்கும் பொழுது தனிமனித சுதந்திரத்தை மீறி அவர்களை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதும் கண்டனத்திற்குரியது. #BoycottRohiniTheatre
முதலில் டிக்கெட் சரி பார்த்து உள்ளே அனுப்பும் நபர் அனுமதிக்க மறுத்தது கண்டனத்துக்கு உரியது. பின்னர் தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் வகையில் அவர்கள் குழந்தைகளுடன் படம் பார்ப்பதை வீடியோ எடுத்து வெளியிட்டது மிகவும் கண்டனத்துக்குரியது .சட்டப்படி நடவடிக்கை தேவை #BoycottRohini
படம் பார்க்க அனுமதி மறுத்த நபர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் .இது போல் ஒரு அவல நிலை தமிழகத்தில் இனிமேல் நடக்காமல் அனைத்து திரையரங்குக்கும் அரசு சுற்றறிக்கை அனுப்பி எச்சரிக்கை செய்ய வேண்டும். #BoycottRohini
உள்ளே விட அனுமதி மறுத்தது தவறுதான் வேண்டுமென்றே வீடியோ எடுத்து இருந்தாலும் இலவச டிக்கெட் வாங்கி இருந்தாலும் டிக்கெட் உள்ள நபர்கள் யாராக இருந்தாலும் திரையரங்குக்குள் பாரபட்சம் பார்க்காமல் அனுமதிப்பது தான் திரையரங்கத்தினர் கடமை. யாரோட தியேட்டர் ஆக இருந்தாலும் குற்றம் குற்றமே.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தமிழன் மறந்த ஒரு அற்புத உணவு பனங்கிழங்கு. பனைமரத்தின் வேர்ப்பகுதியில் இருந்து கிடைக்கக்கூடியது. நார்ச்சத்தை தரவல்லது. பெண்களின் கர்ப்பப்பைக்கு வலுசேர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது. பனங்கிழங்கை மஞ்சள் தூள் உப்பு சேர்த்து அவித்து சிற்றுண்டியாக சாப்பிடலாம்.
வயிறு, சிறுநீரகப் பிரச்சனை உடையவர்கள் பனங்கிழங்கை மாவாக்கி உணவுடன்சேர்த்து வந்தால் மிகவும் பயனளிக்கும். பனங்கிழங்கை அவித்து வெயிலில்காயவைத்து பொடியாக்கி பூண்டைவறுத்து அதையும் அதிலும்சேர்ந்து பொடியாக்கி கஞ்சிசெய்து சாப்பிட்டால் உடலுக்கு வலு சேர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும்
பனங்கிழங்கு மிகுந்த நார்ச்சத்து உடையது.அதனால் மாலை சிற்றுண்டியாக சாப்பிட்டால் மறுநாள் காலை மலச்சிக்கல் பிரச்சனை நீங்கி வயிறு சுத்தப்படும். பனங்கிழங்கு வாயு பிரச்சனைக்கு சிறிது வழிவகுக்கும் அதனால் அளவோடு பனங்கிழங்கை சாப்பிடும்பொழுது அதனுடன் சேர்த்து 5 மிளகை சாப்பிட வாயு சரியாகும்.
இன்று நாம் பார்க்கக் கூடிய ஒரு அற்புதமான உணவு பொருள் பனங்கற்கண்டு . பனைமரம் தமிழகத்தின் தேசிய மரம் அதிலிருந்து கிடைக்கும் பதநீர் மூலமாக தயாரிக்கப்படுவது தான் பனங்கற்கண்டு. வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக பனங்கற்கண்டு பயன்படுத்துவதன் மூலம் உடல் சூடு
இந்தப் பனங்கற்கண்டு தற்போது எல்லா கடைகளிலும் கிடைக்கும் சர்க்கரை அளவு குறையும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரைக்கு மாற்றாக பனங்கற்கண்டு பயன்படுத்தினால் நல்லது. சிறிது பனங்கற்கண்டு மிளகு நான்கு சிறிது நெய் சேர்த்து சளி தொந்தரவு நீங்கும். உடல் சுறுசுறுப்பிற்கு மிகவும் நல்லது
குழந்தைகளுக்கு பனங்கற்கண்டுடன் நிலக்கடலை சேர்த்து கொடுத்தால் சோர்வாக உணரும் குழந்தைகள் சுறுசுறுப்பாவார்கள். தினமும் பனங்கற்கண்டை சுத்தமான பசும்பால் காய்ச்சி பனங்கற்கண்டு ஒரு ஸ்பூன் கலந்து குடித்து வந்தால் உடம்பிற்கு மிகவும் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது
புனேவில் நடைபெற்ற நெஞ்சை உலுக்கும் ஒரு சம்பவம்!
42 வயது உடைய பபிதா மகேந்திர கல்யாணி என்ற பெண் போக்குவரத்து அலுவலகத்தில் துப்புரவு பணி செய்கிறார்.
3மாதங்களாக ஊதியம் தரவில்லையே என வேண்டுகோள் விடுத்த காரணத்திற்காக அந்தப் பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கிய ஹர்ஷாத் கான் எனும் வாலிபர்.
அதிகாரத்தில் உள்ள நபர்கள் பெண் என்றும் பாராமல் தான் பணி செய்த மூன்று மாதத்திற்கு உரிய ஊதியத்தை கேட்ட ஒரே காரணத்திற்காக இப்படி கொலை வெறி கொண்டு தாக்குதல் நடத்த அந்த நபருக்கு அனுமதி கொடுத்தது யார்? துப்புரவு பணி செய்யும் தொழிலாளி என்றால் கேவலமா? அவர்களும் மனிதர்கள் தானே ?
இதுபோன்ற கொலை பாதக செயலை செய்ய அந்த மனிதருக்கு எப்படி மனது வந்தது? மனித உரிமையை மீறிய இந்த செயலை வன்மையாக கண்டித்து அந்த நபரை காவல்துறை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும் என வேண்டுகின்றோம்.தேசிய மனித உரிமைஆணையம் இதில் தலையிட்டு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும். @India_NHRC .
நேற்று கூறியது போல் நாம் இன்று பார்க்க கூடிய ஒரு அற்புதமான கீரையின் பெயர் லட்சக் கொட்டைகீரை ,நஞ்சுண்டான்கீரை,நஞ்சு கொண்டான் கீரை என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்தக் கீரை மூட்டு வலிக்கு ஒரு அற்புதமான உணவு. தற்போது இளைய சமுதாயத்தினருக்கு 30 வயதுகளிலேயே மூட்டு
முழங்கால் வலி எலும்பு தேய்மானம் நரம்புகளில் வலி உடலில் அசதி ஏற்படுகிறது அவர்கள் இந்த லட்சக் கோட்டைக்கு கீரையை பறித்து அதில் பாசிப்பருப்பு சின்ன வெங்காயம் வெந்தயம் சீரகம் சேர்த்து நெய்யில் தாளித்து கூட்டு சமைத்து சாதத்துடன் சேர்ந்து பிசைந்து மூன்று மாத காலங்களுக்கு வாரம் இருமுறை
சாப்பிட வேண்டும். அதிக மூட்டு வலி உடையோர் வாரம் மூன்று நாள் அதாவது ஒரு நாள் விட்டு ஒரு நாள் இடைவெளியில் இந்தக் கீரையை கூட்டாகவோ அல்லது பொரியல் ஆகவோ செய்து சாப்பிட மூன்று மாதங்களில் அவர்களின் மூட்டு வலி வெகுவாக குறைந்து இருப்பதை அவர்கள் காண முடியும்.
உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
பிப்ரவரி 22,2018 கடவுளின்தேசம் என அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் 'மது' என்ற பழங்குடி இளைஞன் பசிக்காக உணவை திருடிவிட்டான் என உள்ளூர் மக்கள்ஒன்றுகூடி கட்டிவைத்து அடித்தேகொன்றனர்.
நாளை அந்த வழக்கில் தீர்ப்பு வருகிறது!
மதுவுக்கு நியாயம் கிடைக்குமா?
அந்நிய நாட்டினர் இந்தியாவில் நடக்கும் சில சம்பவங்களை பெரிதாக பேசி சர்ச்சையை கிளப்புகின்ற இந்த நேரத்தில் 7 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் ஆட்சியில் பினராய் விஜயன் தலைமையின் கீழ் உள்ள மாநிலத்தில் பசியின் காரணமாக உணவை திருடி விட்டான் என்ற காரணத்திற்காக ஒரு இளைஞன் அடித்துக் கொல்லப்பட்டான்.
குற்றவாளிகள் என கைது செய்து ஜாமினில் உள்ள நபர்கள் நாளைய மதுவின் மரண வழக்கில் தீர்ப்பில் தண்டிக்கப்படுவார்களா?
ஒரு சாமானிய மனிதனின் படுகொலைக்கு நீதித்துறை தகுந்த தீர்ப்பு வழங்கி நியாயத்தை & நீதியை நிலைநாட்டும் என நாமும் நம்புவோம் .
உடலில் கெட்ட கொழுப்புகளை குறைத்து உடல் பருமன் உள்ளவர்கள் இயற்கையான முறையில் கொள்ளு கொள்ளு எனும் தானியத்தை சாப்பிட்டு உடல் எடையை குறைக்கலாம்.
கடைகளில் கிடைக்கும் இந்த கொள்ளு தானியத்தை வாங்கி இரண்டு நாள் நன்றாக ஊற வைத்து பின்பு முளைகட்டி அதை வெறும் வயிற்றில்
தினமும் அரை கைப்பிடி அளவு முளைகட்டிய கொள்ளுவை சாப்பிட்டு வரலாம். கொள்ளு துவையல் கொள்ளு ரசம் ஆகியவை வாரம் இருமுறை மட்டுமே சாப்பிட வேண்டும் ஏனென்றால் கொள்ளுவிற்கு உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை உண்டு. இந்தக் கொள்ளு நவதானியம் இயற்கையாகவே உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க வல்லது
வாரம் இருமுறை இந்த கொள்ளு என்கிற தானியத்தை வாங்கி சாப்பிட்டு வந்தால் ஆறு மாத இடைவெளியில் உங்கள் எடை மெல்ல மெல்ல குறைவதை நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும் தற்போது மாறிவரும் உணவு பழக்க வழக்கங்களினாலும் வேலைப்பளுவினாலும் உடற்பயிற்சி செய்ய முடியாதோர் உடல் பருமன் உள்ளோர்