ilango manivannan Profile picture
Mar 30 15 tweets 3 min read Twitter logo Read on Twitter
"வைக்கம் போராட்டம்"

'வைக்கம் போராட்டம்' என்பது ஆலய நுழைவுப் போராட்டமல்ல. மாறாக கோயிலைச் சுற்றியிருக்கிற தெருக்களிலேயே தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள், புலையர்கள் நடக்கக்கூடாது என்று இருந்த கொடுமையை எதிர்த்து நடைபெற்ற போராட்டமேயாகும். கேரள மாநிலம் வைக்கத்தில் அரசனின் அரண்மனை
உள்ளது. அரண்மனை வளாகத்திற்குள் ஒரு நீதிமன்றம் அமைந்திருக்கிறது. அன்று அரசனின் பிறந்தநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மக்கள் நெரிசல் மிகுந்திருந்த காரணத்தால் நீதிமன்றத்திற்குச் செல்லும் வழக்கமான பாதை அன்று அடைக்கப்பட்டிருந்தது.

மாதவன் என்ற வழக்கறிஞர் அவசரமாக நீதிமன்றத்திற்குச்
சென்றவர், நீதிமன்றத்திற்கான பாதை அடைக்கப்பட்டிருப்பதை அறிகிறார். வழக்கின் முக்கியத்துவமும், அவசரமும் கருதி அரசனின் பிறந்தநாள் வழிபாடு அவ்விடத்தில் தொடங்கிவிட்ட நிலையிலும் அவ்வழியாக நீதிமன்றத்திற்குச் செல்கிறார். வழக்கறிஞர் மாதவன் ஈழவ சமுதாயத்தைச் சார்ந்தவர். ஈழவர்கள் அவ்வழியாக
நடந்துகூடச் செல்லக் கூடாது என்பது எழுதப்படாத விதி. மற்றவர்கள் மாதவனைத் தடுக்கிறார்கள். வழக்கறிஞர் மாதவன் கோயில் பாதையில் நடப்பதைத் தடுத்த சம்பவம் பலருக்குக் கோபத்தை உருவாக்கியது. சத்தியாகிரகம் நடத்த டி.கே.மாதவன், கேரளக் காங்கிரஸ் தலைவர் கே.பி. கேசவமேனன் மற்றும் பலர் சேர்ந்து
முடிவெடுத்தனர்.
வைக்கம் ஊரின் நடுவில் கோயில் இருக்கிறது. அதன் நான்கு வாசலுக்கு எதிரிலும் நான்கு நேர் வீதிகளும் கோயில் மதிற் சுவரைச் சுற்றி பிரகாரத் தெருக்களும் இருந்தன. இந்த வீதிகள் எவற்றிலுமே கீழ்ச் சாதிக்காரர்களும், தீண்டத்தகாதாரும் நடக்கக் கூடாது. ஒரு மைல் தூரம் வேறு பாதையில்
சுற்றிக் கொண்டுதான் எதிர் ரோட்டிற்குப் போக வேண்டும். இதை எதிர்த்து சக்தியாக்கிரகப் போராட்டம் தொடங்கியவுடன் வழக்கறிஞர் மாதவன், பாரிஸ்டர் கேசவமேனன், டி.கே மாதவன், ஜார்ஜ் ஜோசப் உட்பட பலர் அரசின் ஆணைப்படி கைது செய்யப்பட்டனர். படிப்படியாகத் தலைவரக்ள் கைது செய்யப்பட்டவுடன் போராட்டம்
தொய்வடையும் நிலையில், பெரியாருக்கு ஜார்ஜ் ஜோசப், கேசவமேனன் ஆகிய இருவரும் இணைந்து ஒரு கடிதம் எழுதினர். "நீங்கள் இங்கு வந்துதான் இந்தப் போராட்டத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் மன்னிப்புக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. அவ்வாறு செய்தால் ஒரு பெரிய காரியம் கெட்டு
விடுமே என்று கவலைப்படுகிறோம்" என்று அதில் குறிப்பிட்டிருந்தனர். இந்தக் கடிதத்தின் அடிப்படையில் பெரியார் வைக்கம் விரைந்தார். மன்னனுக்கு ஏற்கெனவே பெரியார் பழக்கமானவர். மன்னன் ஒவ்வொரு முறை சென்னை சென்ற போதும் ஈரோட்டிற்கு வந்து ரயில் மாறவேண்டும். சில சமயங்களில் இதற்கு அக்காலத்தில்
ஓரிரு நாட்கள் ஆகும். அந்தச் சமயத்தில் மன்னர் பெரியாரின் விருந்தினராக பெரியார் வீட்டிலேயே தங்குவார். இந்தப் பழக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு, வெள்ளைக்கார போலீஸ் கமிஷனர் மற்றும் தாசில்தாரை அனுப்பி பெரியாரை வரவேற்றான் மன்னன். பெரியாருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கச் சொல்லி
மன்னர் ஏற்பாடு செய்திருந்தாலும், பெரியார் அவற்றையெல்லாம் மறுத்துவிட்டு களத்தில் இறங்கி சத்தியாக்கிரகம் செய்யத் தொடங்கினார். பெரியார் சூறாவளி போல் சுற்றி வந்து சூடு பறக்கும் சொற்களால் மக்களைத் தீண்டாமைக் கொடுமைக்கெதிராகத் தட்டியெழுப்பினார். பத்து நாட்கள் பொறுத்துப் பார்த்த மன்னன்
ஆத்திரமடைந்தான். போராட்டத்திற்கு தடையுத்தரவு பிறப்பித்தான். காவல்துறை உயர் அதிகாரிகளை அனுப்பி பெரியாரைக் கைது செய்தான். போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு மேலும் பெருகியது. பெரியார் சிறையிலடைக்கப்பட்ட பின்னர் பெரியாரின் மனைவி நாகம்மாள், சகோதரி கண்ணம்மாள் ஆகியோர் வைக்கம் விரைந்து சென்று
சத்தியாக்கிரகத்தில் குதித்தனர். சத்தியாக்கிரகத்தை நிறுத்துவதற்கும், பெரியார் உள்ளிட்ட போராளிகளை அழிப்பதற்கும் அங்குள்ள நம்பூதிரிகளும், வைதீகர்களும் சேர்ந்து ‘சத்ரு சம்கார யாகம்’ என்ற ஒரு யாகத்தை தடபுடலாக பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவுசெய்து நடத்தினர். பெரியார் சிறைச்சாலைக்குள்
அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது இந்த யாகம் நடத்தப்பட்டது. "சிறையில் இருக்கும் ராமசாமி நாயக்கரையும் மற்றவர்களையும், யாகம் நடத்தும்போது புறப்படுகிற பூதம் சிறைக்குச் சென்று அவர்களின் கழுத்தைப் பிடித்து விடும். உடனே அவர்கள் இறந்து விடுவார்கள்” என்று யாகம் நடத்திய நம்பூதிரிகள் கூறினர்.
ஆனால் எதிர்பாராதவிதமாக மன்னர் இறந்து விட்டார். பெரியாருக்கு நடத்திய யாகம் மன்னரைக் கொன்று விட்டதாக சிறையில் உடனிருந்த போராளிகள் கூறினர். அப்போது பெரியார், நம்மைக் கொல்வதற்கு மன்னர் யாகத்தை நம்பியது எவ்வளவு பெரிய மூடநம்பிக்கையோ, அதைவிட பலமடங்கு முட்டாள்தனம் அந்த யாகத்தினால் தான்
மன்னர் இறந்து விட்டார் என்று சொல்வது என்று கூறினார். இவ்வாறு பல கோணங்களிலும், பலவடிவங்களிலும் வைக்கத்தில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் பல எதிர்ப்புகளையும் தாண்டி வெற்றி பெற்றது.

#vaikom100
#வைக்கம்வீரர்பெரியார்
#Vaikkomstruggle
#பெரியார்
#periyar

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with ilango manivannan

ilango manivannan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ma_ilango

Mar 28
ரங்கராஜன் நரசிம்மன் @OurTemples என்ற இந்த நபர் இட ஒதுக்கீடு பெருவது பிச்சை என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இட ஒதுக்கீடு உரிமையை பெரும், இந்த மண்ணில் வாழும் ஒட்டுமொத்த பார்ப்பனரல்லாத மக்களையும் இழிவுபடுத்தும் வகையிலேயே இந்த நபரின் பதிவு உள்ளது.

இந்தியாவிலேயே ImageImageImageImage
சமூகநீதிப் பார்வையோடு இட ஒதுக்கீடானது கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலான கடுமையான போராட்டங்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக தந்தை பெரியாரின்
இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம், அனைத்து துறைகளிலும் வளர்ந்து, இன்று இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

வரலாறு இப்படி
இருக்க, 'சாதிய ஒழிச்சு கட்டிய டிராவிட மாடலைத்தான் பார்க்கிறோமே! இட ஒதுக்கீடு எதன் அடிப்படையில் இருக்கிறது! கேவலமான பிச்சை எடுக்கும் பிழைப்புதான் இட ஒதுக்கீடு. திறமை இல்லைன்னா ஒதுக்கீடு கேட்டு வாழ வேண்டியதுதான் என டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரங்கராஜன் நரசிம்மன்,
Read 5 tweets
Mar 1
#இந்து_ராஷ்டிரம் அமைப்பதற்கான முதல் படியாக, அதற்கான அரசியலமைப்பைத் தயாரிக்கும் திட்டத்தைக் கடந்த பிப்ரவரி 2022, பிரயாக்ராஜில் நடைபெற்ற தர்ம சம்சாதில் (தர்ம சபை) ஆர்.எஸ்.எஸ் அறிவித்திருந்தது. அதன்படி 30 ஆர்.எஸ். எஸ் வெறியர்கள் (அறிவுஜீவிகள்) அந்த அரசியலமைப்பைத் தயாரித்து
முடித்துள்ளனர். அகண்ட பாரதம் என்னும் பெயரில் இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கான கொள்கை விளக்கங்களாக, 750 பக்கங்களில் இதைத் தயாரித்திருப்பவர்கள் எல்லாம் சாம்பவி மடம், இந்து ராஷ்டிரிய நிர்மான் சமிதி போன்ற முக்கிய அமைப்புகளின் நிர்வாகிகள். இதில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களும், பாதுகாப்புத்
துறை நிபுணர்களும் அடக்கம். இந்த வரைவு அரசியலமைப்பு, 2023 ஆம் ஆண்டு, அலகாபாத்தில் நடைபெற உள்ள அடுத்த மகாமேளா தர்ம சம்சாதில் முன்வைக்கப்பட்டு இறுதி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன்படி 'வாரணாசி' இந்தியாவின் தலைநகரம் ஆக்கப்படும். புதிய பாராளுமன்றம் ஒன்று காசி
Read 8 tweets
Feb 28
உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்ற "நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன்" அவர்கள் (பெரியாரின் பரிந்துரையால் - கலைஞர் அவர்களால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்) சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் சாமானிய மக்களிடம் எப்படி கரிசனையுடன்
நடந்து கொண்டார் என்பது குறித்த மூத்த வழக்கறிஞர் அருள்மொழி அவர்களின் பதிவு...

கிரிமினல் வழக்குகளில் ஆட்கொணர்வு (Habeus Corpus ) மனுக்களை விசாரணை செய்யும் பொறுப்பில் நீதியரசர் ரத்தின வேல் பாண்டியன் அவர்கள் இருந்த பொழுது நடந்த ஒரு வழக்கு பற்றி மூத்த வழக்கறிஞர் ஒருவர் சொன்ன நேரடி
அனுபவச் செய்தி இது.

ஒரு பெண் கணவனை விட்டுப் பிரிந்து குழந்தைகளுடன் திருநெல்வேலியில் வாழ்ந்து கொண்டு இருந்தார். தன் மனைவி குழந்தைகளை கடத்திச் சென்று விட்டார் என்று கூறி ஆட்கொணர்வு வழக்கு தாக்கல் செய்தார் கணவர்.

குழந்தைகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வர அப்பெண்ணுக்கு நீதிமன்றம்
Read 12 tweets
Feb 28
லால்குடி தாலுகா, களத்தில் வென்றான் பேட்டை கிராமத்தில் நடந்த "ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள்" மாநாட்டில் #பெரியார் பேசிய பேச்சு...

'கீழ்ஜாதி' என்பதாக ஒரு பிரிவு எதற்காக? யாரால் ஏற்படுத்தப்பட்டது? என்பதன் ரகசியத்தை உணர்ந்தால் பிறகு அதை அழிக்கும் விஷயம் வெகு சுலபமாக முடிந்துவிடும்.
கீழ்ஜாதி, மேல்ஜாதி என்று சொல்லுவதன் தத்துவம் என்ன என்பதை பாருங்கள். ஒரு பார்ப்பானையும், பறையனையும் கூட்டிவந்து நிறுத்தி கீழ் ஜாதி மேல் ஜாதி என்பதும் அவர்களிடத்தில் எப்படி விளங்குகிறது என்று பார்த்தால் மேல் ஜாதி என்பவன் பாடுபடாமல் சேம்பேறியாய் இருந்து ஊரார் உழைப்பில் வாழ்கிறவன்
என்பதும் கீழ் ஜாதி என்பவன் பாடுபட்டு உழைத்து உழைப்பின் பயனை எல்லாம் அன்னியருக்கே அளித்துவிட்டு வீடில்லாமல் துணியில்லாமல் கஞ்சியில்லாமல் கல்வியில்லாமல் மிருகத்தினும் கேடாய் வாழ்கிறான் என்பதும் நன்றாய் விளங்கும். ஆகவே சோம்பேறிக் கூட்டத்திற்கு எதிராக எவன் போர் தொடுக்க முனைந்து
Read 4 tweets
Dec 13, 2022
திராவிடம் Vs இந்துத்துவா

அம்மன் - திராவிடம்
அம்பாள் - இந்துத்துவா

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சுப்ரபாதம் இந்துத்வா. எல்.ஆர்.ஈஸ்வரியின் செல்லாத்தா திராவிடம்.

பஞ்சகச்சம், பஞ்ச கவ்யம் இந்துத்வா. லுங்கி, மாட்டுக்கறி பிரியாணி திராவிடம்.

மதுரை வீரனை வாசல் படிக்கு வெளியே நிறுத்தி
வைத்தது இந்துத்துவா. அவன் பேரன், பேத்திகளுக்கு இடஒதுக்கீடு அளித்து இணைத்துக் கொண்டது திராவிடம்.

நாராயணனை மோகித்த நாரதனை அலியாக்கி அவமதித்தது இந்துத்துவா. அலியை அரவாணியாக்கி, பின் திருநங்கையாக கொஞ்சி மகிழ்ந்தது திராவிடம்.

பிரம்மனின் உடலுக்கு வெளியே பிறந்தவர்கள் பஞ்சமர் என்றும்,
அவர்களைப் பார்த்தாலே தீட்டென்று தள்ளி வைத்தது இந்துத்துவா. திராவிடருக்கு எல்லாம் ஆதிதிராவிடர் அவர்கள் தான் என உரிமை கொண்டாடியது திராவிடம்.

பெண்களுக்குப் பொட்டு கட்டி பொது மகளிர் ஆக்கியது இந்துத்துவா. தேவதாசிகளை ஒழித்து, பெண்களுக்குச் சொத்தில் சரிபாதி அளித்தது திராவிடம்.

தமிழ்
Read 5 tweets
Dec 9, 2022
"துளசி தீர்த்தத்தின் மகிமை"...

சிந்து நதிக்கரையில் ஜலந்தர் என்று ஒரு முனிவர் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அவரது மனைவி பெயர் பிருந்தா. "மகா விஷ்ணு" எப்படியாவது ஒருநாள் பிருந்தாவை அனுபவித்து விடவேண்டும் என்ற தீய எண்ணத்தோடு அவளை அனுகினானாம். அவள் ஒத்துக் கொள்ளாததினால், விஷ்ணு
பகவான், ஜலந்த முனிவரைப் போல வேடம் கொண்டு, பிருந்தாவை ஏமாற்றி புணர்ந்து கொண்டிருந்த வேலையில், எதிர் பாராத விதமாக உண்மையான ஜலந்தமுனிவன் வந்துவிடவே, கதை கந்தலாகி விஷ்ணு பகவான் மாயமாய் மறைந்து விட்டானாம். ஆத்திரம் கொண்ட ஜலந்த முனிவன், பிருந்தாவை அடித்துக் கொன்று, கொளுத்திவிட்டானாம்.
இதை அறிந்த விஷ்ணு அலறியடித்துக் கொண்டு ஓடிவந்து, பிருந்தாவின் சாம்பல் மீது புரண்டு, அய்யய்யோ உன்னை முழுவதுமாக அனுபவிப்பதற்குள் உன்னை கொன்றுவிட்டானே உனது சாம்பலாவது எனது காமத்தை தீர்க்கட்டும் என்று புலம்பினானாம். நான்கு நாட்கள் கழித்து, அந்த சாம்பலில் ஒரு செடி முளைத்ததாம். அதன்
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(