(தெய்வீக நோக்கில் இம்மன் திருமண் என கூறப்படுகிறது)
அதனால் தான் இதில் கால்சியம் முக்கியபங்கு வகித்துள்ளது.
திருநாமம் இடும்போது கிடைக்கும் கால்சியம் சக்தி, இரத்த ஓட்ட அமைப்பிலும், மூளை செயல்பாடுகளிலும், நோய் எதிர்ப்பு திறனும், இதய துடிப்பு கட்டுப்பாடு என பல நிகழ்வுகளுக்கு காரணமாக உள்ளது.
120 வயது வரை வாழ்ந்த இராமானுஜர், 101 வயது வரை வாழ்ந்த சுவாமி தேசிகன் ஆகியோர் வாழ்விற்கு சட்விக் உணவு கட்டுப்பாடும் (சட்விக் உணவு - தூய அத்தியாவசிய, இயற்கை, மற்றும் எரிசக்தி கொண்ட, சுத்தமான, உணர்வு, உண்மை, நேர்மையான,
ஞானம் 'என்று பொருள்) “நாம தர்மம்”
(கால்சியம் மொத்த விளைவு) ஆகியவையே முக்கிய காரணமாக இருந்தது எனலாம்...
இன்று கால்சியம் இன்றி இருபது வயதிலே எலும்பு வலுவின்றி வாழ்கிறோம்..
தயாரிப்பு முறை..
நாமக்கட்டி தயாரிக்கத் தேவைப் படும் மண்னை ( இதுவே திருமண் எனப்படும் ) வெட்டி எடுத்து கட்டிகளை உடைத்து, செக்கு இழுப்பதைப் போன்று மாடு கட்டி இழுத்து பவுடராக மாற்றப்படும்.
இம்மண் பெரும்பாலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் கிடைக்கிறது.
அதை நீரில் கரைத்து வைத்தால் ஓரிரு நாட்களில் கழிவுகள், கீழே படிந்துவிடும்.
மேலே இருக்கும் ‘பாலை’ மட்டும் பிரித்து தொட்டியில் ஊற்றி வைத்தால் நாமக்கட்டி தயாரிப்புக்கு உகந்த மண் கிடைத்து விடும்.
அதனை வெயிலில் பதப்படுத்தி காய வைத்து, நாமக்கட்டி தயாரிப்பதற்கான பக்குவத்துக்கு கொண்டு வந்து பின்பு நாமக்கட்டி சிறு சிறு வில்லைகளாக செய்யப்படுகிறது.🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
*ஏழு அடுக்குகுகள் 400 டன் எடை நடமாடும் கோவில் திருவாரூர் ஆழி தேர்...!* 🙏
ஆரூரா தியாகேசா.....!
இந்திரனுக்குப் போரில் உதவச் சென்ற முசுகுந்தருக்கு சன்மானமாகக் கிடைத்தன ஏழு விடங்க மூர்த்தங்கள். அந்த மூர்த்தங்களைக் கொண்டு வர தேவலோக ஸ்தபதி மயனால் செய்யப்பட்டதே ஆழித்தேர்.
பாற்கடல் தந்த தேவதாருக்களைக் கொண்டு தேர் உருவானது இந்தத் தேர். அதனாலேயே இது ஆழித்தேர் அதாவது கடல் போன்ற தேர் என்று பேரானது.
* 10 தேர்க்கால்கள், 9 லட்சம் கிலோ எடைகொண்ட அந்த பிரமாண்டத் தேர் பிரம்மனால் ஸ்தாபிக்கப்பட்டது. திருமாலால் வணங்கப்பட்டது. அஷ்ட திக் பாலகர்களும் அந்த தேரின் குதிரைகளாக மாறினர். தேர்க்கால் அச்சாக தேவர்களும், தேரின் அடித்தட்டாக காலதேவனும் அமர்ந்தார்கள்.
சனீஸ்வர பகவான் மிகவும் கருணையானவர்.வாழ்வில் நமக்கு வேண்டும் என்று சொல்லக் கூடிய செல்வங்களை எல்லாம் வாரி வாரி வழங்கக் கூடியவர்.
இவர் வெறும் கெடுதல்களை மட்டுமே ஒரு மனிதருக்கு தருபவர் அல்ல.
1
அதனால் தான் நம்முடைய முன்னோர்கள் ஒரு வார்த்தையிலே அழகாகக் கூறுவார்,சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று.
மிக உயர்ந்த சோழவள நாட்டிலே மயிலாடுதுறை அற்புதமான திருத்தலம்.
2
இந்த மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் பேரளத்தின் மேற்கே 3 கி.மீ.தொலைவில் அமையப் பெற்றிருக்கிறது திருமீயச்சூர் என்கின்ற அற்புதமான திருத்தலம்.
இந்த தேகத்தை (சரீரத்தை) அடையாளம் காட்டினாளே, அவளுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்!’’ -பெரியவா
(பெரியவா பிறந்த சமயத்தில் தன் தாயாருக்கு பிரசவம் பார்த்த மூதாட்டிக்கு பெரியவா கொடுத்த ருத்திராட்ச மாலை- சம்பவம்)
சொன்னவர்-திரு முருக கிருபானந்த வாரியார்.
திரு முருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் 1965-ஆம் ஆண்டு சென்னை நகரில் ஒரு பள்ளி ஆண்டு விழாவின்போது முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிகளில் வென்ற மாணவ- மாணவியருக்குப் பரிசுகள் வழங்கினார்.
பின்னர், ஆசி வழங்கிச் சிறப்புரை ஆற்றியபோது, மனிதன் மனிதனாக வாழ வேண்டிய முறைகளையும் குருவின் மேன்மையைப் பற்றியும் விளக்கினார். அதற்கு உதாரணமாக அவர் சொன்ன சம்பவம் இதுதான்:
*கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்க அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு..!!*
சிவபெருமானின் எத்தனையோ வடிவங்கள்... அவை அனைத்துமே எல்லா ரூபங்களுமே மக்களுக்கு பயன் தரும் வாழ்வியல் தத்துவங்களைப் போதிக்கின்றன. அப்படி நம் வாழ்க்கையில் சிவனார் போதித்ததுதான் ஆணும் பெண்ணும் சமம் எனும் தத்துவம்.
1
சிவம் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவமில்லை எனும் போதனையை நமக்கு வழங்கியதை இன்னும் உணர்த்துவதற்காகத்தான் தன் இடபாகத்தை உமையவளுக்குத் தந்தார் சிவனார்.
2
சிவபெருமானுக்கு சக்தியாகவும் உலகுக்கே சக்தியாகவும் திகழ்ந்தார். அதை உணர்த்துகிற வடிவம்தான் அர்த்தநாரீஸ்வர திருவடிவம்.
அர்த்தநாரீஸ்வரர் எனும் திருநாமத்துடன் கோயில் கொண்டிருக்கும் ஆலயங்கள் மிகக்குறைவுதான். அவற்றில் மிக முக்கியமான திருத்தலம் திருச்செங்கோடு கோயில்.
சென்னைக்கு அருகில் உள்ள திருநின்றவூர் ஒரு திவ்ய தேசம். மஹாலக்ஷ்மி இருப்பிடமாகக் கொண்டதலம் இது. நாளடைவில் மருவி தின்னனூர் என்றழைக்கப்படுகிறது.
இங்குள்ள புகழ்பெற்ற கோவில் பக்தவத்ஸலப் பெருமாளுடையது. இதே தலத்தில் தான் ராமபிரான் பக்தவத்ஸலர் ஆலயத்திற்கு அருகிலேயே ஏரிக்கரையில் கோவில் கொண்டுள்ளார். இதுவும் பக்தவத்ஸலர் கோவிலைச் சேர்ந்த தனிக் கோவிலாகும்.
திருநின்றவூர் ஏரி ப்ரம்மாண்டமானதாக அக்கரையே தெரியாத அளவுக்குக் காட்சி அளிக்கிறது. அந்த ஏரிக்கு முன்புறமே அஞ்சன வண்ணனின் ஆலயம் உள்ளது.