பௌர்ணமி, பூரம் நட்சத்திர நாள், வெள்ளிக் கிழமை ஆகிய நாட்களில் இந்த வழிபாட்டைச் செய்யலாம்.
பூஜையறையை சுத்தம் செய்து கோலமிட்டு அலங்கரித்து, ஸ்ரீ அதிர்ஷ்ட தேவி திருவுருவப் படத்தை நடுநாயகமாக இருத்தி, சந்தன-குங்குமம் இட்டு, பூமாலைகள் சார்த்த வேண்டும்.
அதிர்ஷ்ட தேவி புகைப்படம் இல்லை என்றால் காமாட்சி அம்மன் அல்லது மஹாலக்ஷ்மி புகைப்படம் வைத்து பூஜை செய்யலாம்.
தவறு ஏதும் இல்லை.
நிவேதனத்துக்கு இனிப்பு, பழங்கள், தாம்பூலம் ஆகியவற்றையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முதலில், விநாயகர் துதி!
அடுத்து, அதிர்ஷ்ட தேவியின் தியான ஸ்லோகம் கூற வேண்டும்.
அன்றைய திதி, நாள்- நட்சத்திரத்தைச் சொல்லியபடி, கூப்பிய கரங்களில் மலர்களை வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட தியான ஸ்லோகத்தைப் படிக்க வேண்டும்.
தலையில் மாணிக்கக் கிரீடம் அணிந்து, செந்தாமரை மீது அமர்ந்தவளாக, வலக்கையில் தாமரையும் இடக்கையில் பொற்கிழியும் ஏந்தியவாறு, தன்னை வழிபடுபவர்களுக்கு மனமுவந்து கொடுப்பதற்காக நெற்கதிரும் வைத்திருக்கிறாள் அதிர்ஷ்ட தேவி.
தாமரைக் குளத்தில் செந்தாமரையில் அமர்ந்திருக்கும் இந்தத் தேவியைக் கண்ட குபேரன் வலம்புரிச் சங்கின் வடிவிலும், திருமகள் சிந்தாமணி மற்றும் சாளக்கிராம வடிவிலும் அருகில் திகழ, மங்கலப் பொருட்களும் நிறைவாகச் சிதறிக் கிடக்கின்றன.
இந்த தேவிக்கு ஆந்தையே சகுனப் பட்சியாக அமர்ந்துள்ளது.
அதிர்ஷ்ட தேவியின் திருவுருவைச் சிறப்பிக்கும் இந்த தியான ஸ்லோகத்தைச் சொல்லி, தேவியை வணங்க வேண்டும்.
அடுத்து, காமாட்சி விளக்கு ஒன்றை ஏற்றி வைத்து,
யோக சக்தியான அதிர்ஷ்டதேவியை வர்ணித்து,
26 நாமாவளிகளைக் கூறி பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
பஞ்ச சம்ஸ்காரம் என்பது வழிப்படுத்தும் ஐந்து வகையான நெறிமுறை ஆகும். சிறப்பு பதிவு.
1) பெருமாளின் சங்கு, சக்கரம் ஆகியவற்றை நிரந்தரமாக உடலில் தரித்துக்கொள்ளும் #தாபசம்ஸ்காரம்.
2) நெற்றியில் மட்டுமின்றி உடலில் பன்னிரு இடங்களில் பன்னிரு மூர்த்திகளை தியானித்து திருமண் காப்பு அணியத் துவங்குதல் #புண்ட்ரசம்ஸ்காரம் ஆகும்.
3) பெற்றோர்கள் வைத்த பெயரைத் தவிர ஆச்சார்யன் (குரு) சூட்டும் நாமமாக ஒன்றை வைத்துக் கொள்ளுதல் #நாமசம்ஸ்காரம் ஆகும்.
4) எட்டெழுத்தான நாராயண மந்திரத்தையும் மறை பொருளோடு த்வயம், சரம ஸ்லோகம் (மோட்சத்துக்கான வழி) ஆகியவற்றையும் ஆச்சாரியன் மூலம், வலது செவியில் உபதேசமாகப் பெறுதல் #மந்திரசம்ஸ்காரம் ஆகும்.
சிவலிங்கத்தின் தலையில் புஷ்பம் இல்லாமலிருக்கக் கூடாது;
புஷ்பங்களில் சாத்வீகம், ரஜசம், தாமசம், மிச்ரம் என்ற நான்கு வகைகள் உண்டு.
வெண்மையான புஷ்பங்கள் சாத்வீகம்,
சிவந்தவை ரஜசம்,
கருநிற புஷ்பங்கள் தாமசம்,
மஞ்சள் வர்ணமுள்ளது மிச்ரம்.
மூன்று தளங்கள் உள்ளதும், சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணமுள்ளதுமான ஒரு வில்வத்தை, சிவனுக்கு, அர்ப்பணம் செய்தால், மூன்று ஜென்மாவின் குலோத்தாரணம் செய்து, சிவலோகத்தில் கொண்டாடப்படுவான்.
வில்வ பத்ரம் புதிதாக இருந்தாலும், காய்ந்திருந்தாலும்,
சிவனுக்கு அர்ச்சிப்பதால்,
சகல பாவங்களும் விலகும்.
வில்வ பத்திரத்தை ஒரு முறை அர்ச்சித்த பின், மறுதினம் அதையே தண்ணீரில் கழுவி, மீண்டும் அர்ச்சிக்கலாம்; தோஷமில்லை.