தமிழன் மறந்த ஒரு அற்புத உணவு பனங்கிழங்கு. பனைமரத்தின் வேர்ப்பகுதியில் இருந்து கிடைக்கக்கூடியது. நார்ச்சத்தை தரவல்லது. பெண்களின் கர்ப்பப்பைக்கு வலுசேர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது. பனங்கிழங்கை மஞ்சள் தூள் உப்பு சேர்த்து அவித்து சிற்றுண்டியாக சாப்பிடலாம்.
வயிறு, சிறுநீரகப் பிரச்சனை உடையவர்கள் பனங்கிழங்கை மாவாக்கி உணவுடன்சேர்த்து வந்தால் மிகவும் பயனளிக்கும். பனங்கிழங்கை அவித்து வெயிலில்காயவைத்து பொடியாக்கி பூண்டைவறுத்து அதையும் அதிலும்சேர்ந்து பொடியாக்கி கஞ்சிசெய்து சாப்பிட்டால் உடலுக்கு வலு சேர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும்
பனங்கிழங்கு மிகுந்த நார்ச்சத்து உடையது.அதனால் மாலை சிற்றுண்டியாக சாப்பிட்டால் மறுநாள் காலை மலச்சிக்கல் பிரச்சனை நீங்கி வயிறு சுத்தப்படும். பனங்கிழங்கு வாயு பிரச்சனைக்கு சிறிது வழிவகுக்கும் அதனால் அளவோடு பனங்கிழங்கை சாப்பிடும்பொழுது அதனுடன் சேர்த்து 5 மிளகை சாப்பிட வாயு சரியாகும்.
ஓடி ஆடி விளையாடும் சிறு குழந்தைகளுக்கும் ,வயதுக்கு வந்த பெண்களுக்கும் பனங்கிழங்கு உடலுக்குவலு சேர்க்க மிகுந்த சக்தியை கொடுக்க வல்லது. பனங்கிழங்கு கஞ்சி, பனங்கிழங்கை அவித்து /நெருப்பில் சுட்டு மாலை வேளையில்சிற்றுண்டியாக குழந்தைகளுக்குகொடுத்தால் அவர்கள் நோய்எதிர்ப்புசக்தி பெறுவர்.
சர்க்கரை வியாதி உடையவர்களுக்கும் ஒரு நல்ல சிற்றுண்டியாக பயன்படும் பனங்கிழங்கைஅளவோடு சாப்பிடவேண்டும். உடல் வலி ,அசதி ,மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு பனங்கிழங்கு மிகுந்த பயனளிக்கும். வருடத்தில் இரண்டு மூன்று மாதங்கள் மட்டுமே கிடைக்கும் பனங்கிழங்கை வாங்கி சாப்பிட்டு ஆரோக்கியம் பெறுவோம்.
வணக்கம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சின்ன வெங்காயத்தின் பயன்கள் பற்றி இன்று பார்ப்போம்.
'சின்னவெங்காயம்' ஏழைகளின் வயாக்ரா என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
ஆண்மை அதிகரிக்க, விந்தணு விரைவில்வெளிப்படுதலை தவிர்க்க ,தாம்பத்திய வாழ்வில் மகிழ்ச்சி பெற சின்ன வெங்காயத்தை
சிறிதுசிறிதாக வெட்டி ஒரு ஸ்பூன் பசு நெய்யில் வதக்கி சிறிதாக இந்துப்பு இட்டு நன்றாக பொன்னிறமாக வதக்கி நாம் சாப்பிடும் அனைத்து சாப்பாடுகளிலும் சேர்த்து சாப்பிட ஆண்மைபெருகும்.
நரம்புதளர்ச்சியை கட்டுப்படுத்த வல்லது, சளிதொந்தரவு நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க வல்லது சின்ன வெங்காயம்
தற்போதுள்ள உணவு பழக்கங்கள் மற்றும் வேலைப்பளுவின் காரணமாக நிறைய ஆண்கள் உடல் சூடு வியாதியால் அவதியுருவர் அவர்களுக்கு விந்தணு விரைவில் வெளியாகும் ,தாம்பத்திய உறவில் எதிர்பார்த்தமகிழ்ச்சி இராது .அவர்களுக்கு சாப்பிடும் உணவில் தினமும்சிறிதளவு சின்ன வெங்காயம் சேர்த்தால் மிகவும் நல்லது
விடுதலை படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்த விவகாரத்தில்..? பெண்கள் படத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றம் காவல்துறையினரிடம் வாக்குவாதம்?
காஷ்மீர் பண்டிட்களை கொன்று கொடுமைப்படுத்தி மதம் மாறு இல்லையென்றால் காஷ்மீரில் இருந்து வெளியேறு என ஒரு இனப்படுகொலையை நிகழ்த்திய உண்மை சம்பவத்தை
அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'தி காஷ்மீர் பைல்ஸ்' படத்தை நான் முதலில் சென்னை வேளச்சேரி பீனிக்ஸ்மாலில் உள்ள லக்ஸ் சினிமாஸில் கண்டு காஷ்மீர் பண்டிட்டுகள் பட்ட துன்பத்தை பார்த்து மனம் வெதும்பி பின்பு என் மனைவி&மகளுடன் சென்னை எக்ஸ்பிரஸ் மால் பிவிஆர் சினிமாவில் காணச் சென்றபோது
எனது மகளுக்கு 18 வயது பூர்த்தி அடைந்துவிட்டது என எவ்வளவோ எடுத்துக் கூறியும் எனது மகளுக்கு பிவிஆர் சினிமாஸில் ' தி காஷ்மீர் பைல்ஸ்' படத்தை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின்பு இரண்டு மாதங்கள் கழித்து OTT தளத்தில் வெளியான பின்பு குடும்பத்துடன் பார்த்து வேதனை அடைந்தோம்.
உப்புகளிலேயே மிகச் சிறந்தது இந்துப்பு எனும் ராக் சால்ட்.
இது இயற்கையாக இமயமலை அடிவாரத்தில் பாறை படிமங்களிலிருந்து கிடைக்கக்கூடியது.
சாதாரண உப்பு - 2 டீஸ்பூன்க்கு பதில்
இந்துப்பு - 1 டீஸ்பூன் பயன்படுத்தினாலே போதும்.
இந்துப்பு தசை பிடிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்,எலும்புகளை வலுப்படுத்தும். சர்க்கரையை கட்டுப்படுத்தும், ரத்தஅழுத்தத்தை குறைக்கும், கண்ணில் ஏற்படும் நோய்களுக்கு, வாய் துர்நாற்றம் வயிறு சுத்தப்படும்,பல்வலிக்கு இந்துப்பு மிகவும் நல்லது. நாள்பட்ட சளிக்கு , நல்ல உறக்கத்திற்கு உதவும்.
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு நாம் அனைவரும் அதிகபட்சம் 3.5 கிராம் இந்துப்பு தினமும்எடுத்துக் கொள்ளலாம். இந்துப்பு சிறுநீரகப் பிரச்சினையை தரும் என்பது தவறானதகவல். சாதாரண அயோடின் உப்பை காட்டிலும் குறைந்த அளவு சோடியமே இந்துப்பில் உள்ளது. இந்து உப்பு பசியை தூண்டும் ,சிறுநீரை பெருக்கும்.
ரோகினி தியேட்டர் விவகாரத்தில் தியேட்டர் நிர்வாகம் செய்தது தப்பு.
அதற்கு சட்ட நடவடிக்கை தேவை!
அதை விடுத்து சில நபர்கள் ட்விட்டர் வலைத்தளத்தில் உங்கள் வீட்டுக்கு விசேஷத்திற்கு அவர்களை கூப்பிடுவீர்களா? அவர்கள் அருகில் உட்கார்ந்து படம் பார்ப்பீர்களா ? விதண்டாவாத கேள்வி எதற்கு ?
நான் வேண்டுமென்றால் டிக்கெட் எடுத்து தருகிறேன் அவர்கள் அருகில் உட்கார்ந்து படம் பாருங்கள். உங்கள் வீட்டுப் பெண்களுக்கு அவர்களை மணம் முடித்து வைப்பீர்களா?அவர்களுடன் சாப்பிடுவீர்களா?அருகில் அமர்ந்து பேருந்தில் செல்வீர்களா? எதுக்குடா இப்படி கேள்வி கேக்குறீங்க சாதி வெறி நாய்களா?
இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தான்டா சமூகவலைத்தளத்தில் இப்படி சாதி வன்மத்தை கொட்டுவீங்க? அவர்கள் காசு கொடுத்து டிக்கெட் எடுத்தார்களோ? இல்லை மற்றவர்கள் டிக்கெட் எடுத்து கொடுத்தார்களோ? நான் ஏண்டா ரோகிணி தியேட்டர்காரனுக்கு சப்போர்ட் பண்ணனும்?
இன்று நாம் பார்க்கக் கூடிய ஒரு அற்புதமான உணவு பொருள் பனங்கற்கண்டு . பனைமரம் தமிழகத்தின் தேசிய மரம் அதிலிருந்து கிடைக்கும் பதநீர் மூலமாக தயாரிக்கப்படுவது தான் பனங்கற்கண்டு. வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக பனங்கற்கண்டு பயன்படுத்துவதன் மூலம் உடல் சூடு
இந்தப் பனங்கற்கண்டு தற்போது எல்லா கடைகளிலும் கிடைக்கும் சர்க்கரை அளவு குறையும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரைக்கு மாற்றாக பனங்கற்கண்டு பயன்படுத்தினால் நல்லது. சிறிது பனங்கற்கண்டு மிளகு நான்கு சிறிது நெய் சேர்த்து சளி தொந்தரவு நீங்கும். உடல் சுறுசுறுப்பிற்கு மிகவும் நல்லது
குழந்தைகளுக்கு பனங்கற்கண்டுடன் நிலக்கடலை சேர்த்து கொடுத்தால் சோர்வாக உணரும் குழந்தைகள் சுறுசுறுப்பாவார்கள். தினமும் பனங்கற்கண்டை சுத்தமான பசும்பால் காய்ச்சி பனங்கற்கண்டு ஒரு ஸ்பூன் கலந்து குடித்து வந்தால் உடம்பிற்கு மிகவும் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது
புனேவில் நடைபெற்ற நெஞ்சை உலுக்கும் ஒரு சம்பவம்!
42 வயது உடைய பபிதா மகேந்திர கல்யாணி என்ற பெண் போக்குவரத்து அலுவலகத்தில் துப்புரவு பணி செய்கிறார்.
3மாதங்களாக ஊதியம் தரவில்லையே என வேண்டுகோள் விடுத்த காரணத்திற்காக அந்தப் பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கிய ஹர்ஷாத் கான் எனும் வாலிபர்.
அதிகாரத்தில் உள்ள நபர்கள் பெண் என்றும் பாராமல் தான் பணி செய்த மூன்று மாதத்திற்கு உரிய ஊதியத்தை கேட்ட ஒரே காரணத்திற்காக இப்படி கொலை வெறி கொண்டு தாக்குதல் நடத்த அந்த நபருக்கு அனுமதி கொடுத்தது யார்? துப்புரவு பணி செய்யும் தொழிலாளி என்றால் கேவலமா? அவர்களும் மனிதர்கள் தானே ?
இதுபோன்ற கொலை பாதக செயலை செய்ய அந்த மனிதருக்கு எப்படி மனது வந்தது? மனித உரிமையை மீறிய இந்த செயலை வன்மையாக கண்டித்து அந்த நபரை காவல்துறை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும் என வேண்டுகின்றோம்.தேசிய மனித உரிமைஆணையம் இதில் தலையிட்டு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும். @India_NHRC .