#ஐஸ்_ஹவுஸ்
மெட்ராஸ் வணிக மையமாகத் தொடங்கப்பட்டபோது ஆரம்பப் பரிவர்த்தனைகள் ஜவுளியில் மட்டுமே நடந்தன. சில ஆண்டுகளில் வணிகம் வரம்பில்லாமல் விஸ்வரூபம் எடுக்கவே, வர்த்தக மதிப்புள்ள எதுவும் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டது. யானைகள் முதல் வைரங்கள் வரை இங்கும் அங்குமாகக் கடல்களைக் கடந்தன.
ஆர்மேனியர்கள், யூதர்கள் மற்றும் போர்த்துக்கீசிய வர்த்தகர்கள் உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு பொருள்களைக் கொண்டு வந்து குவியல்களாகக் கடற்கரையில் கொட்டி வைத்தனர். அவற்றில் மிக விசித்திரமான இறக்குமதியானது இன்று நாம் அனைவரும் எந்தவொரு சிரமமும் இல்லாமல் பயன்படுத்துவதாகும்.
அந்த நாட்களில் அது ஒரு பிரம்மப்பிரயத்தனத்திற்குப் பிறகுதான் சென்னைக்கு இறக்குமதி செய்தனர். 1800களில் அதை அமெரிக்காவிலிருந்து கடல் வழியாக 10,000 மைல் கொண்டு வர, மிகவும் விரிவான திட்டமிடல் மற்றும் கடினமான பயணம் தேவைப்பட்டது.
அந்த இறக்குமதி – தண்ணீர். ஆனால் திட வடிவத்தில் கட்டியாக
அதுவரை பனிக்கட்டியைப் பார்த்திராத மெட்ராஸ் மக்களுக்கு ஆச்சரியம். 1800களில் மெட்ராஸில் ஒரு சிலரே ஒரு பனிக்கட்டியைப் பார்த்திருக்கிறார்கள். (ஆலங்கட்டி மழையின் போது வெளியில் இருக்கும் அதிர்ஷ்டம் அல்லது இமயமலைக்கு விஜயம் செய்திருந்தால்). தமிழர் சொற்களஞ்சியத்தில் அதற்காக
ஒரு வார்த்தைகூட இல்லை. காற்றில் உலவும் மூடுபனியை யாராவது திடப்படுத்தினால், அது இப்படித்தான் இருக்கும் என யூகித்து, பனிக்கட்டி என அவசரமாக அதை அழைத்தனர்.
இன்று நாம் உணவு, மருத்துவம் மற்றும் நூறுவிதப் பயன்பாடுகளில் ஐஸ்கட்டியை உபயோகிக்கிறோம். இன்றைய வெப்பமான காலநிலையில்கூட மெட்ராஸில்
பனிக்கட்டி என்பது ஒரு பொருட்டல்ல.
அன்று சூடான மெட்ராஸில் இயற்கையான ஐஸ் கிடைக்காது. அதைத் தயாரிக்க எந்த இயந்திரமும் இல்லை. சேமிக்கும் முறைகளும் தெரியாது. அப்படி இடத்தில் ஐஸ் விற்கப்பட்டால் பெரிய லாபம் கிடைக்கும் என்று நினைத்து திட்டமிட்டவர் பள்ளிப்படிப்பைபாதியில் நிறுத்தியவர்.
அதுவரை அறிந்திராத இத்தகைய உறைபனியான இன்பத்தை மெட்ராஸில் அறிமுகப்படுத்தியவர், அமெரிக்கர். ஃபிரடெரிக் டியூடர்.
கியூபா, சுற்றுலாத் தலங்களுக்குப் பெயர் பெற்ற தீவு. அது அமெரிக்கர்களுக்கு விருப்பமான விடுமுறை இடமாகவும் இருந்தது. ஒருமுறை கோடையில் டியூடர் அங்குச் சென்றார்.
ஹோட்டலில் குளிரூட்டப்படாத பானங்களை வாங்கியபோது ஒரு யோசனை. ‘இயற்கையாக குளிர்ந்த இடங்களில் மட்டுமே காணப்பட்ட பனிக்கட்டிகளை எடுத்து வந்து கியூபாவில் ஏன் விற்கக்கூடாது?’
மிகவும் லாபகரமானதாகக் காணப்பட்டது. குளிர்காலத்தில் அமெரிக்க ஏரிகளின் மேற்பரப்பில் பனிக்கட்டி இலவசமாகக் கிடைத்தது.
அதை செலவின்றி வெட்டி எடுக்க அடிமைகள் ஏராளமாக இருந்தனர். பல கப்பல்கள் பாஸ்டனில் இருந்து தங்கள் பொருள்களை இறக்கிவிட்டுக் காலியாகத்தான் திரும்பிக்கொண்டிருந்தன. மிக முக்கியமாக, பனி உருகாமல் இருக்க மரத்தூள் அருகில் உள்ள மரம் வெட்டும் தொழிற்சாலைகளின் கழிவுப் பொருளாக கிடைத்தது.
இருந்தபோதிலும் அந்த வணிகம் மிகவும் கடினமாகத்தான் இருந்தது. டியூடர் பெரும் கடனில் சிக்கினார். பைத்தியக்காரன் என்றே நகரம் கைகொட்டிச் சிரித்தது.
ஆனால் சில நாட்களில் கியூபாவுக்குச் சில கப்பல்களில் ஐஸ்கட்டியை வெற்றிகரமாகச் சென்று விற்றபின் அவருக்கு அசாத்தியத் தைரியம் வந்தது
ட்யூடர் பனிக்கட்டி தேவைப்படக்கூடிய அனைத்து வெப்பமான இடங்களின் பட்டியலை உருவாக்கினார்.
ஆசியாவில் மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா மற்றும் கொழும்பு நகரங்களில் கடல் முகப்பு நிலத்தைக் கையகப்படுத்தி சூரியனின் வெப்பம் உள்ளே நுழைவதை நிறுத்தும் வட்ட வடிவ இரட்டை சுவர் கட்டடங்களைக் கட்டினார்
மெட்ராஸில் ‘ஐஸ் ஹவுஸ்’ என்று, ஒரு கடலோர வட்ட வடிவக் கட்டடம் அரை நூற்றாண்டுக் காலமாக அமெரிக்க கொடியைப் பெருமையுடன் பறக்கவிட்டது.
அமெரிக்க ஏரிகளில் இருந்து 150 டன் பனிக்கட்டி, இரண்டு பெருங்கடல்களையும் பூமத்திய ரேகையையும் கடந்து, மூன்றில் ஒரு பகுதியை இழந்த பிறகு, மெட்ராஸ் வந்தது.
கப்பல் ஐஸ் ஹவுஸ் எதிரே நிற்கும். படகுகள் பனிக்கட்டிகளைக் கரைக்கு மாற்றியபின் ஐஸ் ஹவுஸின் அடித்தளத்திற்கு எடுத்துச் செல்வார்கள்.
மெட்ராஸ்வாசிகள், ராட்சத பனிக்கட்டிகள் கப்பல்களில் இருந்து இறக்கப்பட்டபோது பார்த்து. ‘அமெரிக்காவில் மரங்களில் ஐஸ் வளர்கிறதா?’ என்று வியந்தனர்.
டியூடர் மெட்ராஸில் சுங்கச்சாவடியில் சுலபமாக முன்னுரிமை கேட்டுப் பெற்றார்.
கப்பல் பரிசோதிக்கும் வரிசையில் நிற்கும்போது, ஐஸ் உருகிவிடும் என்பதால் சுங்க வரி இல்லை. சுங்கச்சாவடி சம்பிரதாயங்கள் இல்லை. மற்றும் டியூடரின் கப்பல்கள் மட்டும் இரவில் பனிக்கட்டிகளை இறக்க அனுமதிக்கப்பட்டன.
ஒரு கப்பல் பயணத்தில் டியூடர் $3,300 லாபம் அடைந்தார். அது டியூடரை மிகவும் பணக்காரராக்கியது. ஃபிரடெரிக் டியூடர் ‘ஐஸ் கிங்’ என்று அழைக்கப்பட்டார்.
ஒரு சிறிய தொழில்நுட்ப மாற்றம் – குளிரூட்டல் செயல்முறை கடல் கடந்த வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. பின்னர் ‘ஐஸ் கிங்’ திவாலானார்
பின் ஐஸ் ஹவுஸ் கட்டடம் பலமுறை விற்கப்பட்டது. கடலின் அற்புதமான காட்சிகளைக் கொண்டிருந்தாலும், வட்டமான வீட்டில் வாழ்வதற்கு மக்கள் சிரமப்பட்டனர். சுவாமி விவேகானந்தருக்கு இந்த ஐஸ் ஹவுஸ்தான் தங்கும் இடம். அவர் தினமும் கடற்கரையில் நடந்து சென்று மீனவர்களுடன் உரையாடி மல்யுத்தம் செய்வாராம்
பின் சகோதரி சுப்புலட்சுமி இங்கே பிராமண விதவை விடுதியைத் தொடங்கினார். ஒரு சாதியின் விதவைகள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்று பொதுமக்களின் ஆட்சேபணைகள் இருந்தது
கட்டடம் பல முறை பெயர் மாற்றப்பட்டாலும், இன்னும் ‘ஐஸ் ஹவுஸ்’ என்றுதான் நினைவுகூரப்படுகிறது.
இந்த அசாதாரண வணிகம் இலக்கியத்தில் நினைவில் இருக்கும். அமெரிக்க ஏரிகளில் ஐஸ் அறுவடையை நேரில் பார்த்த கவிஞர் ஹென்றி தோரோ, 1854 ஆம் ஆண்டு ஒரு கவிதையில்,
‘மெட்ராஸ், பம்பாய் மற்றும் கல்கத்தாவில் வசிப்பவர்கள்
என் கிணற்றில் தண்ணீர் குடிக்கிறார்கள்’
என பெருமையாகக் கவிநயத்துடன் கூறினார்
இது என் சொந்த கட்டுரை இல்லை
கீழே உள்ள இணைய தளத்தில் வெளிவந்தது
படங்கள் மட்டும் நான் தேடி போட்டேன்
மதுரையைப் பற்றி நிறைய பேசலாம் என்று இருந்தேன்
ஆதரவு குறைவாக இருந்ததால் மறுபடி சென்னைக்கு வந்தாச்சு
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பக்தி இலக்கியங்களில் மதுரையை "திருஆலவாய்" அல்லது "கூடல் மாநகர்" என்பர்
ஏனெனில், மதுரை என்பது சமணர்கள் வைத்த பெயர் என்றார்
அது சம்பந்தமா
Google செய்த போது இது வந்தது
#வேறுபெயர்கள்
கூடல் நகர்
மதுரையம்பதி
நான் மாடக்கூடல்
மீனாட்சி பட்டணம்
உயர் மாதர்கூடல்
ஆலவாய்
கடம்பவனம்
அங்கண் மூதூர்
சுந்தரேசபுரி
தென் மதுராபுரி
முக்கூடல் நகரம்
இவை காரணப் பெயர்
நம்ம ஆளுங்க
மல்லிகை நகர், வைகைநகர்
சிறப்பு பெயர் வைத்தனர்
#மலைநகர்
பக்கத்தில் ஆனைமலை திருப்பரங்குன்றம் இருப்பதால் மலை நகர்
அப்பவே பல மாநிலங்கள், தமிழ்நாட்டுக்கு வந்து இதன் நடைமுறை செயல்பாடு பற்றி அறிந்து சென்றன
இதனுடைய முக்கியத்துவம் ஒன்றிய அரசுக்கு உரைக்க 15 வருடம் ஆகியிருக்கிறது
கலைஞர் தன் காலத்தையும் தாண்டி சிந்தித்தவர் என பெருமை கொள்ள இன்னொரு வாய்ப்பு
இந்த உறுப்பு தான திட்டம் என்பது முதன்முதலில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆட்சிக்காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது. 2008இல் அவர் இதனைச் செய்தார். முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கூட இந்த அறுவைச் சிகிச்சையை ஒருவர் செய்துகொள்ளலாம் என அவர்தான் அறிவித்தார்.
அன்றைக்கு அவரிடம் இருந்த தொலைநோக்குப் பார்வைதான் இன்றைக்கு லட்சக் கணக்கான பேருக்கு புதிய உயிரையே கொடுத்துள்ளது. இந்திய அளவில் பலரும் பயன்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் என இதை சுருக்கிப் பார்க்க முடியாது. அவர்தான் அதற்கு முழுக் காரணம். அதை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
சென்னைல உள்ள புகழ்பெற்ற சர்ச்சில் உள்ள ஓவியம். புனிதர் ஒருவர் கொல்லப்படுவது சித்தரிக்கிறது. கிறிஸ்தவர்கள் இதனை Martyrdom என்பர்.
கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான செயிண்ட் தாமஸ் தான் அவர். நான் சொல்ல போறது அவரது வரலாறு இல்லை
இவரிடமிருந்து ஆரம்பித்தால் தான் அதன் வீச்சு புரியும்
கிபி 52 இல் புனித தாமஸ், அன்றைய சேர நாட்டின் மலாபார் கடற்கரையில் வந்து இறங்கிய போது, அவருக்குத் தெரியவில்லை தன் வழி தோன்றல்கள், மானிட உயர்வுக்கு பாடுபட்டதுக்கு பின்னாளில் ஒரிசா என்று வழங்கப்போகும் கலிங்கத்தில் குடும்பமே உயிருடன் எரித்துக் கொல்லப்படுவார்கள் என்று
1800 வரை ஐரோப்பிய நாட்டினர் வருவதும் போவதுமாக இருக்க, ஆங்கிலேயர் ஆட்சியில் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு தாங்கள் செய்ய வேண்டிய தலையாய பணி இதுதான் என புரிந்தது. தென் கேரளம் தமிழ்நாடு அடங்கிய திருநெல்வேலிக்கு பல மிஷனரிகள் வந்திருந்தனர் அவர்களில் ஒருவர் லண்டனை சேர்ந்த ஜான் டக்கர்
1877 ல ஏற்பட்ட தாது வருஷத்து பஞ்சம் பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா?
பஞ்சம் என்றால் பஞ்சம் அப்படி ஒரு பஞ்சம். சென்னை மாகாணத்தில் 10 லட்சம் பேர் பசியாலேயே இறந்திருக்கிறார்கள். செத்துக் கொண்டிருந்த மக்களுக்கு உதவ அமெரிக்க கிறிஸ்தவ மிஷனரிகள் சென்னை மாகாணம் முழுவதும் முகாமிட்டது
அப்படி ராணிப்பேட்டைக்கு வந்தவர்தான் டாக்டர் ஜான். இவரது 14 வயது மகள் ஐடா ஸ்கடர்.
ஒரு நாள் இரவு கதவு தட்டப்படுகிறது. ஐடா கதவை திறக்கிறார். ஒரு பிராமணர் நின்று கொண்டிருந்தார். "அம்மா, என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள்... உதவி வேணும் உடனே வாங்க" என்று பதறுகிறார். @aruran_tiru
ஐடாவோ, "நான் டாக்டர் இல்ல என் அப்பாதான் டாக்டர், கொஞ்சம் இருங்க அவரை எழுப்பறேன்" என்கிறார்.
"இல்லம்மா. என் மனைவிக்கு 14 வயசு தான் ஆகுது. நாங்க பிராமணாளுங்க பெண்ணை ஒரு ஆம்பள தொட அனுமதி இல்லை" என சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.
கொஞ்ச நேரத்தில் ஒரு முஸ்லிம் நபர் கதவை தட்டுகிறார்.