👁️ 🌹👁️ Profile picture
Teach & Transform | Social Activist | Travel Fanatic | Teaching for livelihood
Jun 23, 2023 8 tweets 3 min read
#தமிழ்நாட்டில்_பேருந்து

இந்தியாவிலேயே முதன் முதலாக, பயணிகள் மற்றும் தபால் வாகனங்களை நிர்மாணித்து ஓட்டியது சிம்ப்சன் & கோ.

எஞ்சினையும் அவர்களே உருவாக்கி இருக்கிறார்கள்

1904 இல் தொடங்கிய இப்பயணம் இன்று இந்தியாவின் மோட்டார் தலைலநகரமாக சென்னையை வார்த்து எடுத்திருக்கு சமவெளியில் மட்டும் இல்லை, மலைப் பிரதேச சாலைப் போக்குவரத்திலும் முன்னோடி தமிழ்நாடு தான்.

பாலக்காடு - கோவை - ஊட்டி வழித்தடம் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப் பட்டு,

1920லேயே பொதுப் போக்குவரத்து நடந்திருக்கு

இரண்டு இடங்களில் இந்த பேருந்துகள் நின்று ரேடியேட்டர் cool செய்தன
Jun 21, 2023 10 tweets 3 min read
#I_Couldnot_Breathe

பதிவிட்டவர் #VijayBhaskarVijay

1964 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் பல பல இடங்களில் Whites only போர்டுகள் இருந்திருக்கின்றன.

இங்கே வெள்ளையர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற மிக மோசமான நிறவெறி கொள்கையை ஹோட்டல்கள், தியேட்டர்கள், ஸ்விமிங் பூல்கள் என்று பல Image இடங்களில் பின்பற்றி இருக்கின்றனர்.

கறுப்பினத்தவர் இதை எதிர்த்து கடுமையாக போராட அதிபர் கென்னடி இந்த நிறவெறியை தடை செய்யும் சட்டம் கொண்டு வர அதற்கான முன் ஏற்பாடுகள் செய்து அதை அறிமுகப்படுத்தும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதன் பிறகு லிண்டன் பி ஜான்சன் அதிபராக பொறுப்பேற்றார் Image
Jun 20, 2023 6 tweets 3 min read
#முதல்_இருப்புபாதை_வழித்தடம்

இது என்ன கேள்வி?

பத்தாம் வகுப்பு புவியலில் படித்தோமே..

மும்பை - தாணே இடையிலான 34 கிமீ பாதை என்போர், அடுத்த பதிவிற்கு நகரவும்.

விமான போக்குவரத்தை போலவே, ரயில் போக்குவரத்துக்கான முதல் திட்டமும் சென்னையிலேயே தொடங்கப்பட்டது

irfca.org/docs/history/i… #RedHills_Railway

வில்லியம் ஆவரி உருவாக்கிய நீராவி இன்ஜினை கொண்டு ஆர்தர் காட்டன் முதல் இருப்புப் பாதையை செங்குன்றம் - சிந்தாதிரிப்பேட்டைக்கு அமைத்தார்.

சென்னையின் சாலை பணிகளுக்காக கிரானைட் கொண்டுவர ரெட் ஹில்ஸ் ரயில்வே 1836 ல் ஏற்படுத்தப்பட்டது

fb.watch/lhr6Nob2WT/?mi…
Jun 19, 2023 20 tweets 5 min read
#கட்டிடங்களின்_கதை 17

#மெட்ராஸ்விமானநிலையம்

By

#வெங்கடேஷ்_ராமகிருஷ்ணன்

மனிதனின் பழங்கால ஆசைகளில் ஒன்று பறவைகள் போல வானில் பறக்க வேண்டும் என்பது.

பறக்கும் தொழில்நுட்பம் அமெரிக்காவில் தேர்ச்சி பெற்றபோது மெட்ராஸ் பின்தங்கியிருக்கவில்லை.

ரைட் சகோதரர்கள் தங்கள் விமானத்தைப் Image பறக்கவிட்டு 6 ஆண்டுகளுக்குப் பிறகு, மெட்ராஸ் அதன் வானத்தில் ஒரு விமானத்தைக் கண்டது.

நகரத்தின் விமானப் போக்குவரத்து வரலாறு 1910இல் தொடங்கியது.

கோர்சிகா தீவைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஜியாகோமோ டி ஏஞ்சலிஸ் ஒரு விமானத்தை உருவாக்கினார்.

ஜூலை 1909இல் ஆங்கிலக் கால்வாயை முதன்முதலில் Image
Jun 17, 2023 5 tweets 2 min read
#கல்கத்தா__லண்டன்_பேருந்து

படத்தை பார்த்து ஆச்சரியப்பட வேண்டாம்.

ஒரு காலத்தில் இந்த பேருந்து சேவை இருந்தது என்பது உண்மைதான்

அப்போது உலகின் மிக நீளமான சாலை கல்கத்தாவிலிருந்து லண்டன் வரை இருந்தது

எனவே கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு பஸ்ஸில் செல்ல சாத்தியமானது Image இந்தியன் அல்லது ஆங்கில கம்பெனி அல்ல, ஆஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த ஆல்பர்ட் டூர் மற்றும் டிராவல்ஸ் நிறுவனம் தொடங்கிய சேவை.

1950களின் முற்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் நீடித்தது, சில காரணங்களால் அதை மூட வேண்டியிருந்தது. பேருந்து கட்டணம் 85 - 145 பவுண்டுகள் Image
Jun 16, 2023 4 tweets 2 min read
#கல்வித்தந்தை_கருமுத்து_தியாகராஜன்

கருமுத்து தியாகராஜன் செட்டியார் 1893ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தார்.

இலங்கையில் கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார்.

இலங்கையின் மலையக தோட்டத் தொழிலாளர் நலன்களுக்காக பத்திரிக்கை ஒன்றையும் நடத்தினார். Image இலங்கையில் மலையகத் தமிழர்களுக்கு உடலில் அடையாளச் சூடு போடும் பழக்கத்தினை தடுத்து நிறுத்தினார்

இந்தியா திரும்பிய தியாகராஜன் மதுரையில் மீனாட்சி மில் என்ற தொழில் நிறுவனத்தை நிறுவினார்.

நூல் ஆலையும், நெசவு ஆலையும் அமைத்தார்.

தொடர்ந்து பல ஊர்களில் நூற்பு ஆலைகளை நிறுவினார்.

. Image
Jun 15, 2023 4 tweets 1 min read
#தமிழிசை_சங்கம்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தோற்றுவித்த திரு ராஜா அண்ணாமலை செட்டியார் நினைவு நாள் இன்று ஜூன் 15, 1948

இன்றைய அரசியல் தலைவர்கள் பெரும்பாலோனோர் அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களே! அவர்கள் மட்டுமா? ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், சட்ட வல்லுநர்கள், மாவட்ட ஆட்சித் Image தலைவர்கள் என பலரும் அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களே!

பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டிருந்த திரு அண்ணாமலை செட்டியார் அவர்கள் இசை மீது பேரார்வம் கொண்டிருந்தார்.

இசைக்கென தனி கல்லூரி ஒன்றையும் நிறுவினார்.

1928ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் தொடங்க அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார்.
May 31, 2023 24 tweets 5 min read
#கட்டிடங்களின்_கதை 16

#கீழ்ப்பாக்கம்_மருத்துவகல்லூரி
1967 ல் ஒரு மகளிர் கல்லூரி மாணவிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு செயின்ட் ஜார்ஜ் கோட்டையை நோக்கிச் சுட்டெரித்த சாலைகளில் பேரணியாகச் சென்றனர்.

அதன் பின் பரபரப்பான பூந்தமல்லி நெடுஞ்சாலையில் Image போக்குவரத்தை மறித்து தர்ணா செய்தனர்.

அவர்களது கோரிக்கையைக் கேட்டு சென்னை நகரமே திரும்பி அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்தது.

ஏன் என்றால், ஆண் மாணவர்களையும் அவர்கள் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை.

உலகில் எங்கும் கேள்விப்படாத நிகழ்வு இது. Image
May 28, 2023 5 tweets 2 min read
#கட்டிடங்களின்_கதை 15

P.Orr & Sons -

1846 இல் நிறுவப்பட்டது,
இது இந்தியாவின் சென்னை நகரத்தை மையமாகக் கொண்ட கடிகாரங்கள் மற்றும் கடிகாரங்களை விற்கும் கடைகளின் சங்கிலி தொடராகும்.

இது முதன்மையாக கடிகாரங்களை உருவாக்கியது. Image 1846 ஆம் ஆண்டில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பீட்டர் ஓர் என்பவரால் புதிய ஜார்ஜ் கார்டன் & கோவின் அடித்தளத்தில் தொடங்கப்பட்டது.

P.Orr & Sons இன் முதல் ஷோரூம் 1879 ஆம் ஆண்டு இன்றைய அண்ணாசாலையில் திறக்கப்பட்டது,

இது இன்றும் பாரம்பரிய கட்டிடமாக உள்ளது. Image
Apr 23, 2023 7 tweets 3 min read
#கட்டிடங்களின்_கதை

புனித ஜார்ஜ் கோட்டை கட்டி முடிக்கப்பட்ட நாள் இன்று.

புனித ஜார்ஜ் கோட்டை இந்தியாவில் பிரித்தானியரின் முதலாவது கோட்டையாகும்.

இது 1639 ஆம் ஆண்டில் கரையோர நகரான மதராசில் (இன்றைய சென்னை நகரம்) கட்டப்பட்டது. Image வெறுமனே கிடந்த இப் பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால்,

புதிய குடியேற்றங்களும், வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.

இன்றைய சென்னை நகரம் இக் கோட்டையைச் சுற்றியே உருவானது Image
Apr 1, 2023 20 tweets 5 min read
#ஐஸ்_ஹவுஸ்
மெட்ராஸ் வணிக மையமாகத் தொடங்கப்பட்டபோது ஆரம்பப் பரிவர்த்தனைகள் ஜவுளியில் மட்டுமே நடந்தன. சில ஆண்டுகளில் வணிகம் வரம்பில்லாமல் விஸ்வரூபம் எடுக்கவே, வர்த்தக மதிப்புள்ள எதுவும் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டது. யானைகள் முதல் வைரங்கள் வரை இங்கும் அங்குமாகக் கடல்களைக் கடந்தன. ஆர்மேனியர்கள், யூதர்கள் மற்றும் போர்த்துக்கீசிய வர்த்தகர்கள் உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு பொருள்களைக் கொண்டு வந்து குவியல்களாகக் கடற்கரையில் கொட்டி வைத்தனர். அவற்றில் மிக விசித்திரமான இறக்குமதியானது இன்று நாம் அனைவரும் எந்தவொரு சிரமமும் இல்லாமல் பயன்படுத்துவதாகும்.
Mar 30, 2023 10 tweets 5 min read
#கிழக்கின்_ஏதன்ஸ்
நம்ம மதுரை தான் 😂

நேற்று போட்ட thread ல

@arakkarperiyar ஒரு கருத்து சொல்லி இருந்தார்

பக்தி இலக்கியங்களில் மதுரையை "திருஆலவாய்" அல்லது "கூடல் மாநகர்" என்பர்

ஏனெனில், மதுரை என்பது சமணர்கள் வைத்த பெயர் என்றார்

அது சம்பந்தமா
Google செய்த போது இது வந்தது #வேறுபெயர்கள்
கூடல் நகர்
மதுரையம்பதி
நான் மாடக்கூடல்
மீனாட்சி பட்டணம்
உயர் மாதர்கூடல்
ஆலவாய்
கடம்பவனம்
அங்கண் மூதூர்
சுந்தரேசபுரி
தென் மதுராபுரி
முக்கூடல் நகரம்
இவை காரணப் பெயர்
நம்ம ஆளுங்க
மல்லிகை நகர், வைகைநகர்
சிறப்பு பெயர் வைத்தனர்
Mar 29, 2023 8 tweets 3 min read
#இந்தியாவின்_புராதானநகரம்

எப்ப பார்த்தாலும் சென்னையை பற்றி பேசி பேசி போரடிக்குது

ஒரு சேஞ்சுக்கு இந்தியாவின் பழமையான நகரைப் பற்றி பேசலாம்

உடனே காசி தானே என வராதீங்க

அது பிணங்களின் நகரம்
இது தூங்கா நகரம்

உலகின் மிகப் பழமையான ராஜ பரம்பரை ஆண்டது

🔥மதுரை🔥 Image பொதுவா எல்லா இந்திய நகரங்களின் கட்டுமான அமைப்பு படி

கோயிலை சுற்றித்தான் நகரம் வளர்ந்து இருக்கு

2000-3000 ஆண்டுகள் என அதன் பழைமையை மதிப்பிட்டிருக்கு விக்கிபீடியா

15 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோயிலை சத்தியமா ஒரே ஒரு அரசர் தன் ஆயுள் காலத்தில் நிர்மாணித்து இருக்க முடியாது Image
Mar 28, 2023 8 tweets 2 min read
2008 ல் கலைஞர் தொடங்கிய முன்னோடி திட்டம்

அப்பவே பல மாநிலங்கள், தமிழ்நாட்டுக்கு வந்து இதன் நடைமுறை செயல்பாடு பற்றி அறிந்து சென்றன

இதனுடைய முக்கியத்துவம் ஒன்றிய அரசுக்கு உரைக்க 15 வருடம் ஆகியிருக்கிறது

கலைஞர் தன் காலத்தையும் தாண்டி சிந்தித்தவர் என பெருமை கொள்ள இன்னொரு வாய்ப்பு இந்த உறுப்பு தான திட்டம் என்பது முதன்முதலில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆட்சிக்காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது. 2008இல் அவர் இதனைச் செய்தார். முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கூட இந்த அறுவைச் சிகிச்சையை ஒருவர் செய்துகொள்ளலாம் என அவர்தான் அறிவித்தார்.
Mar 27, 2023 9 tweets 4 min read
#செங்களம் = செம்மை +களம்

கீழேயே புரிகிற மாதிரி ரெட் Battle field என சப்டைட்டிலும் இருந்தது

ஃபர்ஸ்ட் எபிசோடு பார்க்கும்போது

அந்த நிலவியலை காணும் போது கோவில்பட்டி பக்கம் நிகழ்ந்த எதோ சிவப்பு போராட்டம் பற்றியது என நினைச்சா.. Image அடுத்தடுத்த எபிசோடில் தான் புரிந்தது இது வழக்கமான கதை தான் என

இருப்பினும்,
Rana Naidu போன்ற இந்தியன் வேர்சன் porn தொடருக்கு இடையில்

தனித்து நிற்கும் தமிழ் தொடர் என்பதால் நாம கண்டிப்பா இத பற்றி பேசணும் Image
Mar 14, 2023 15 tweets 5 min read
சென்னைல உள்ள புகழ்பெற்ற சர்ச்சில் உள்ள ஓவியம். புனிதர் ஒருவர் கொல்லப்படுவது சித்தரிக்கிறது. கிறிஸ்தவர்கள் இதனை Martyrdom என்பர்.
கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான செயிண்ட் தாமஸ் தான் அவர். நான் சொல்ல போறது அவரது வரலாறு இல்லை
இவரிடமிருந்து ஆரம்பித்தால் தான் அதன் வீச்சு புரியும் கிபி 52 இல் புனித தாமஸ், அன்றைய சேர நாட்டின் மலாபார் கடற்கரையில் வந்து இறங்கிய போது, அவருக்குத் தெரியவில்லை தன் வழி தோன்றல்கள், மானிட உயர்வுக்கு பாடுபட்டதுக்கு பின்னாளில் ஒரிசா என்று வழங்கப்போகும் கலிங்கத்தில் குடும்பமே உயிருடன் எரித்துக் கொல்லப்படுவார்கள் என்று
Mar 13, 2023 16 tweets 6 min read
1877 ல ஏற்பட்ட தாது வருஷத்து பஞ்சம் பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா?
பஞ்சம் என்றால் பஞ்சம் அப்படி ஒரு பஞ்சம். சென்னை மாகாணத்தில் 10 லட்சம் பேர் பசியாலேயே இறந்திருக்கிறார்கள். செத்துக் கொண்டிருந்த மக்களுக்கு உதவ அமெரிக்க கிறிஸ்தவ மிஷனரிகள் சென்னை மாகாணம் முழுவதும் முகாமிட்டது Image அப்படி ராணிப்பேட்டைக்கு வந்தவர்தான் டாக்டர் ஜான். இவரது 14 வயது மகள் ஐடா ஸ்கடர்.
ஒரு நாள் இரவு கதவு தட்டப்படுகிறது. ஐடா கதவை திறக்கிறார். ஒரு பிராமணர் நின்று கொண்டிருந்தார். "அம்மா, என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள்... உதவி வேணும் உடனே வாங்க" என்று பதறுகிறார்.
@aruran_tiru Image
Mar 12, 2023 11 tweets 4 min read
இங்கிலாந்தில் ரயில் அறிமுகமான சில ஆண்டுகளில் ஆங்கிலேயர் இந்தியாவில் அறிமுகம் செய்தார்கள்..
தெற்கு ஆசியாவிலேயே இரண்டாவது இருப்பு பாதையாக ராயபுரம் ஆற்காடு வழித்தடம் 1853ல் அமைக்கப்பட்டது.
1873 இல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அமைக்கத் தொடங்கி 1878 இல் முடித்தனர் illustrated என்ற லண்டன் பத்திரிக்கையில் அதே ஆண்டு வெளிவந்தது அப்போதைய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்.
வடக்கு மற்றும் மேற்கில் செல்லும் ரயில்கள் 1900 முதல் சென்ட்ரலில் இருந்து கிளம்பின தென்னிந்தியாவிற்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு இங்கிலாந்தில் இதை காட்டி விளம்பரம் செய்யப்பட்டன
Mar 11, 2023 9 tweets 3 min read
2022,மே 15
ரோம் நகரில்
திருத்தந்தை தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் சூட்டும் விழா
அப்போது, நாட்டின் தேசிய கீதமோ, கிறிஸ்தவ பாடலோ இல்லாத
அந்தப் பாடல் கம்பீரமாக இசைக்கப்பட்டது

"நீராரும் கடலுடுத்த.

இன்றைக்கு 53 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டின் மாநில பாடலாக ஏற்ற நாள் இன்று Image தமிழகத்தின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணீயம் சுந்தனாரின் நீராரும் கடலுடுத்த பாடலைப் பாட வேண்டும் என்ற கோரிக்கை 1913-ஆம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டறிக்கையில் இடம்பெற்றது. அதன் தொடர்ச்சியாக 1914 முதல் கரந்தைத் தமிழ் சங்கத்தின் ஆண்டு விழாக்களில் பாடிவந்தனர். அதேபோலப் Image
Mar 2, 2023 18 tweets 4 min read
#எழுத்தாளர்_ராஜராஜேந்திரன்

வரலாற்று பாடத்தில், ஒரு பேரரசு எப்படி எழுந்தது, வளர்ந்தது, பரந்தது என்று படிக்கும் அதேவேளையில் அதெப்படி வீழ்ந்தது என்பதும் முக்கியமான பகுதி.

அதன்படி, சோழப்பேரரசு, பாண்டியப் பேரரசு, முகலாயப் பேரரசு வீழ்ச்சியைப் பற்றி வாசித்தவேளையில், வீழ்ச்சிக்கான பொதுவான ஒரு காரணம் என்னவாக இருக்கும் தெரியுமா ?

ஆள்பவர்களின் மெத்தனம்.

இராஜராஜ சோழனுக்குப் பின்னும், இராஜேந்திர சோழன் ஆட்சியில், சோழப் பேரரசு வலுவாகவே இருந்தது. எப்படி ?

இராஜராஜனைக் காட்டிலும் அதிகளவு போர்களில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தவன் இராஜேந்திர சோழன். இராஜேந்திர சோழனை
Feb 27, 2023 4 tweets 1 min read
வாழ்த்துக்கள் மேம் 🙏🏻👌💐 Image பிஜேபி தொண்டர்களுக்கு பெருத்த நிம்மதி Image