தினமும் குளிக்கும் போது, நீரில் சில பொருட்களை கலந்து குளிப்பதன் மூலமாக அந்த கிரகத்தின் தோஷங்களை நீக்கிக் கொள்ள முடியும்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து வயதினரும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
சூரிய தோஷம் :
குளிக்கும் தண்ணீரில் சிவப்பு வண்ண மலர்களையோ அல்லது குங்குமப்பூவையோ சிறிதளவு போட வேண்டும்.
நான்கு அல்லது ஐந்து குவளை நீரை மொண்டு குளிக்க வேண்டும்.
அதன் பிறகு சாதாரண தண்ணீரில் குளிக்கலாம்.
இவ்வாறு செய்வதால் சூரிய பகவானால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
சந்திர தோஷம் :
குளிப்பதற்கு முன்பாக கொஞ்சம் தயிர் எடுத்து, அதனை உடல் முழுவதும் தடவிக் கொண்டு, பிறகு குளிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால் சந்திரனால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்.
செவ்வாய் தோஷம் :
திருமணத் தடை ஏற்படுவதற்கு செவ்வாய் முக்கிய காரணமாக இருக்கிறது.
செவ்வாய் தோஷத்தால் திருமணத்திற்கு பிறகும் கூட ஒரு சிலருக்கு நிறைய பிரச்சினைகள் வந்து சேரலாம்.
இதற்கு சிறந்த குளியல் பரிகாரம் ஒன்று இருக்கிறது.
வில்வம் பழக் கொட்டையை நன்கு பொடி செய்து, குளிக்கும் நீரில் கலந்து குளிக்க வேண்டும்.
நான்கைந்து குவளை நீரை இதுபோல் குளித்துவிட்டு, பிறகு சாதாரண தண்ணீரில் நீராடலாம்.
இதனால் செவ்வாய் தோஷம் அகலும்.
புதன் தோஷம் :
இந்த தோஷம் நீங்குவதற்கு கடல் நீரோ அல்லது கங்கை நீரோ தேவைப்படும்.
மஞ்சள் மற்றும் கடுகு ஆகிய இரண்டையும் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு, அதில் தேனை கலக்க வேண்டும்.
தொடர்ந்து இந்தக் கலவையை சிறிதளவு கடல் நீர் அல்லது கங்கை நீரில் கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு நாம் குளிக்கும் நீரில் இதனை கலந்துவிட்டு நீராட வேண்டும்.
குரு தோஷம் :
கருப்பு ஏலக்காயை நீரில் நன்கு கொதிக்க வைத்து, அதனை குளிக்கும் நீரில் கலந்து குளித்து வருவதன் மூலமாக வியாழ பகவான் என்று அழைக்கப்படும் குருவால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.
சுக்ர தோஷம் :
பச்சை ஏலக்காயை நீரில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் அந்த நீரை, நாம் அன்றாடம் குளிக்கும் நீரில் கலந்து நீராட வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலமாக சுக்ர தோஷம் விலகும்.
சனி தோஷம் :
கருப்பு எள் வாங்கி அதனை நீரில் நன்கு கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்து வந்தால் சனி தோஷம் நீங்கப் பெறலாம்.
ராகு - கேது தோஷம் :
அருகம்புல்லை, நீரில் நன்றாக கொதிக்கவைத்து, பின்னர் அதை குளிக்கும் தண்ணீரில் கலந்து நீராட வேண்டும். இவ்வாறு செய்வதால் இராகு-கேது தோஷம் அகலும்.
பஞ்ச சம்ஸ்காரம் என்பது வழிப்படுத்தும் ஐந்து வகையான நெறிமுறை ஆகும். சிறப்பு பதிவு.
1) பெருமாளின் சங்கு, சக்கரம் ஆகியவற்றை நிரந்தரமாக உடலில் தரித்துக்கொள்ளும் #தாபசம்ஸ்காரம்.
2) நெற்றியில் மட்டுமின்றி உடலில் பன்னிரு இடங்களில் பன்னிரு மூர்த்திகளை தியானித்து திருமண் காப்பு அணியத் துவங்குதல் #புண்ட்ரசம்ஸ்காரம் ஆகும்.
3) பெற்றோர்கள் வைத்த பெயரைத் தவிர ஆச்சார்யன் (குரு) சூட்டும் நாமமாக ஒன்றை வைத்துக் கொள்ளுதல் #நாமசம்ஸ்காரம் ஆகும்.
4) எட்டெழுத்தான நாராயண மந்திரத்தையும் மறை பொருளோடு த்வயம், சரம ஸ்லோகம் (மோட்சத்துக்கான வழி) ஆகியவற்றையும் ஆச்சாரியன் மூலம், வலது செவியில் உபதேசமாகப் பெறுதல் #மந்திரசம்ஸ்காரம் ஆகும்.
பௌர்ணமி, பூரம் நட்சத்திர நாள், வெள்ளிக் கிழமை ஆகிய நாட்களில் இந்த வழிபாட்டைச் செய்யலாம்.
பூஜையறையை சுத்தம் செய்து கோலமிட்டு அலங்கரித்து, ஸ்ரீ அதிர்ஷ்ட தேவி திருவுருவப் படத்தை நடுநாயகமாக இருத்தி, சந்தன-குங்குமம் இட்டு, பூமாலைகள் சார்த்த வேண்டும்.
அதிர்ஷ்ட தேவி புகைப்படம் இல்லை என்றால் காமாட்சி அம்மன் அல்லது மஹாலக்ஷ்மி புகைப்படம் வைத்து பூஜை செய்யலாம்.
தவறு ஏதும் இல்லை.
நிவேதனத்துக்கு இனிப்பு, பழங்கள், தாம்பூலம் ஆகியவற்றையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முதலில், விநாயகர் துதி!
அடுத்து, அதிர்ஷ்ட தேவியின் தியான ஸ்லோகம் கூற வேண்டும்.
அன்றைய திதி, நாள்- நட்சத்திரத்தைச் சொல்லியபடி, கூப்பிய கரங்களில் மலர்களை வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட தியான ஸ்லோகத்தைப் படிக்க வேண்டும்.
சிவலிங்கத்தின் தலையில் புஷ்பம் இல்லாமலிருக்கக் கூடாது;
புஷ்பங்களில் சாத்வீகம், ரஜசம், தாமசம், மிச்ரம் என்ற நான்கு வகைகள் உண்டு.
வெண்மையான புஷ்பங்கள் சாத்வீகம்,
சிவந்தவை ரஜசம்,
கருநிற புஷ்பங்கள் தாமசம்,
மஞ்சள் வர்ணமுள்ளது மிச்ரம்.
மூன்று தளங்கள் உள்ளதும், சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணமுள்ளதுமான ஒரு வில்வத்தை, சிவனுக்கு, அர்ப்பணம் செய்தால், மூன்று ஜென்மாவின் குலோத்தாரணம் செய்து, சிவலோகத்தில் கொண்டாடப்படுவான்.
வில்வ பத்ரம் புதிதாக இருந்தாலும், காய்ந்திருந்தாலும்,
சிவனுக்கு அர்ச்சிப்பதால்,
சகல பாவங்களும் விலகும்.
வில்வ பத்திரத்தை ஒரு முறை அர்ச்சித்த பின், மறுதினம் அதையே தண்ணீரில் கழுவி, மீண்டும் அர்ச்சிக்கலாம்; தோஷமில்லை.