#காந்தியார் படுகொலையும் பார்ப்பனர்களுக்கு எதிரான மக்கள் கோபமும்..!
காந்தியார் படுகொலையை தொடர்ந்து மக்களின் கோபம் இந்துத்துவ அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபை இயக்கங்களின் மீது திரும்பியது. அதிலும் மகாராஷ்டிராவில் இருந்த "பார்ப்பனர்கள்" மீது மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.
காந்தியை கொன்றது சித்பவன் பார்ப்பனரான "கோட்சே" என்பதால் மகாராஷ்டிராவில் பார்ப்பனர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. பூனா, சத்தாரா, சாங்கிலி போன்ற பகுதிகளில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர் அவர்களில் சிலரது சொத்துக்கள் அழிக்கப்பட்டன. காந்தியை கோட்சே கொலை செய்து விட்டான் என்கிற செய்தி
மின்னல் வேகத்தில் நகரம் எங்கும் பரவியது. கொலைகாரனின் பெயர் பூனாவில் பரவத் துவங்கியதும் மக்கள் கொதிப்படைந்த நிலையில் இருந்தனர் கோட்சேவின் வீட்டையும் பத்திரிகை அலுவலகத்தை சுற்றி ஜனவரி 31ஆம் தேதி மக்கள் கூடினார். வீடு பத்திரிகை அலுவலகம் மீது கற்கள் வீசப்பட்டன காவல்துறையால் இரண்டும்
காப்பாற்றப்பட்டது. கோட்சேவின் சகோதரர் தத்தாத்ரேயாவுக்கு சொந்தமான "உதயம் இன்ஜினியரிங் ஒர்க்ஸ்" என்கிற பட்டறை மக்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. "கோட்சே" என்கிற குடும்ப பெயரை கொண்டவர்களின் நிலையும் மோசமாக மாறியது. அவர்களில் பலருக்கும் நாதுராம் கோட்சேவுக்கும் எவ்வித தொடர்பும்
இல்லாவிட்டாலும் அவர்களும் பாதிக்கப்பட்டனர். சித்பவன் பார்ப்பனர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன. அதிலும் கோட்சே என்கிற குடும்பப் பெயரைக் கொண்டவர்களை தேடி கண்டுபிடித்து மக்கள் தாக்கினார்கள். அப்போது அதிலிருந்து தப்பிப்பதற்காக பூனாவில் கோட்சே என்ற குடும்பப் பெயருடன் வாழ்ந்து வந்த
ஒருவர் புத்திசாலித்தனமாக ஒரு வழியை கண்டுபிடித்தார். அவருடைய வீட்டின் முன்னால் ஒரு அறிவிப்பு பலகையினை வைத்தார். அதில், என்னுடைய குடும்ப பெயர் கோட்சேதான் ஆனால் நான் "பார்ப்பனன் அல்ல" நான் "பார்ப்பனரல்லாத மராட்டியன்" என்று எழுதியிருந்தார். அந்த யோசனை நன்றாக வேலை செய்தது. அவருடைய
வீட்டில் யாரும் தாக்குதல் நடத்தவே இல்லை. மற்ற கோட்சே பெயரை கொண்டவர்கள் எல்லாம் அதே மாதிரி அறிவிப்பு பலகை எழுதி மாட்டி வைத்தனர். தங்கள் உடமைகளை சொத்துக்களை பாதுகாத்து கொள்வதற்கு அந்த ஒரு வழி தான் அவர்களுக்கு இருந்தது. மக்களின் இந்த கோபத்தையும் மதவெறியோடு முடிச்சு போட்டு
செய்தி பரப்ப தொடங்கியது பத்திரிகைகள். காந்தியார் கொல்லப்படுவதற்கு முன்னர் பஞ்சாப், டெல்லி ராஜ்புத்னா போன்ற இந்தியாவின் பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூரமான வன்முறைகள் எதையும் வெளியிடாமல் அமைதி காத்த இந்தியாவின் இந்தி மற்றும் பல்வேறு மொழி பத்திரிகைகளும்,
காந்தியார் கொல்லப்பட்ட பிறகு நடந்த வன்முறைகளை மட்டும் மிக விரிவாக எல்லா பக்கங்களிலும் எழுதி தங்களின் பார்ப்பன சார்பை அப்பட்டமாக காட்டிக் கொண்டன. இந்நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி அன்று ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பம்பாய் மாகாண பிரிவு ஒரு அறிக்கையை வெளியிட்டு அதில் ஆர்.எஸ்.எஸ்
இயக்கத்திற்கும் கோட்சேவுக்கும் எவ்வித தொடர்பும் இருந்ததே இல்லை என்று கோட்சேவை கைகழுவி விட்டு தங்களை காப்பாற்றிக் கொண்டனர்.
பார்ப்பனர்களின் வழக்கமான இந்த நரித்தந்திர அணுகு முறையினால் தான் அவர்களையும், அவர்களது இனத்தையும் காப்பாற்றி இன்றும் அதிகாரத்தில் கோலோச்சி வருகிறார்கள்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
'வைக்கம் போராட்டம்' என்பது ஆலய நுழைவுப் போராட்டமல்ல. மாறாக கோயிலைச் சுற்றியிருக்கிற தெருக்களிலேயே தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள், புலையர்கள் நடக்கக்கூடாது என்று இருந்த கொடுமையை எதிர்த்து நடைபெற்ற போராட்டமேயாகும். கேரள மாநிலம் வைக்கத்தில் அரசனின் அரண்மனை
உள்ளது. அரண்மனை வளாகத்திற்குள் ஒரு நீதிமன்றம் அமைந்திருக்கிறது. அன்று அரசனின் பிறந்தநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மக்கள் நெரிசல் மிகுந்திருந்த காரணத்தால் நீதிமன்றத்திற்குச் செல்லும் வழக்கமான பாதை அன்று அடைக்கப்பட்டிருந்தது.
மாதவன் என்ற வழக்கறிஞர் அவசரமாக நீதிமன்றத்திற்குச்
சென்றவர், நீதிமன்றத்திற்கான பாதை அடைக்கப்பட்டிருப்பதை அறிகிறார். வழக்கின் முக்கியத்துவமும், அவசரமும் கருதி அரசனின் பிறந்தநாள் வழிபாடு அவ்விடத்தில் தொடங்கிவிட்ட நிலையிலும் அவ்வழியாக நீதிமன்றத்திற்குச் செல்கிறார். வழக்கறிஞர் மாதவன் ஈழவ சமுதாயத்தைச் சார்ந்தவர். ஈழவர்கள் அவ்வழியாக
ரங்கராஜன் நரசிம்மன் @OurTemples என்ற இந்த நபர் இட ஒதுக்கீடு பெருவது பிச்சை என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இட ஒதுக்கீடு உரிமையை பெரும், இந்த மண்ணில் வாழும் ஒட்டுமொத்த பார்ப்பனரல்லாத மக்களையும் இழிவுபடுத்தும் வகையிலேயே இந்த நபரின் பதிவு உள்ளது.
இந்தியாவிலேயே
சமூகநீதிப் பார்வையோடு இட ஒதுக்கீடானது கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலான கடுமையான போராட்டங்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக தந்தை பெரியாரின்
இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம், அனைத்து துறைகளிலும் வளர்ந்து, இன்று இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
வரலாறு இப்படி
இருக்க, 'சாதிய ஒழிச்சு கட்டிய டிராவிட மாடலைத்தான் பார்க்கிறோமே! இட ஒதுக்கீடு எதன் அடிப்படையில் இருக்கிறது! கேவலமான பிச்சை எடுக்கும் பிழைப்புதான் இட ஒதுக்கீடு. திறமை இல்லைன்னா ஒதுக்கீடு கேட்டு வாழ வேண்டியதுதான் என டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரங்கராஜன் நரசிம்மன்,
#இந்து_ராஷ்டிரம் அமைப்பதற்கான முதல் படியாக, அதற்கான அரசியலமைப்பைத் தயாரிக்கும் திட்டத்தைக் கடந்த பிப்ரவரி 2022, பிரயாக்ராஜில் நடைபெற்ற தர்ம சம்சாதில் (தர்ம சபை) ஆர்.எஸ்.எஸ் அறிவித்திருந்தது. அதன்படி 30 ஆர்.எஸ். எஸ் வெறியர்கள் (அறிவுஜீவிகள்) அந்த அரசியலமைப்பைத் தயாரித்து
முடித்துள்ளனர். அகண்ட பாரதம் என்னும் பெயரில் இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கான கொள்கை விளக்கங்களாக, 750 பக்கங்களில் இதைத் தயாரித்திருப்பவர்கள் எல்லாம் சாம்பவி மடம், இந்து ராஷ்டிரிய நிர்மான் சமிதி போன்ற முக்கிய அமைப்புகளின் நிர்வாகிகள். இதில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களும், பாதுகாப்புத்
துறை நிபுணர்களும் அடக்கம். இந்த வரைவு அரசியலமைப்பு, 2023 ஆம் ஆண்டு, அலகாபாத்தில் நடைபெற உள்ள அடுத்த மகாமேளா தர்ம சம்சாதில் முன்வைக்கப்பட்டு இறுதி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன்படி 'வாரணாசி' இந்தியாவின் தலைநகரம் ஆக்கப்படும். புதிய பாராளுமன்றம் ஒன்று காசி
உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்ற "நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன்" அவர்கள் (பெரியாரின் பரிந்துரையால் - கலைஞர் அவர்களால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்) சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் சாமானிய மக்களிடம் எப்படி கரிசனையுடன்
நடந்து கொண்டார் என்பது குறித்த மூத்த வழக்கறிஞர் அருள்மொழி அவர்களின் பதிவு...
கிரிமினல் வழக்குகளில் ஆட்கொணர்வு (Habeus Corpus ) மனுக்களை விசாரணை செய்யும் பொறுப்பில் நீதியரசர் ரத்தின வேல் பாண்டியன் அவர்கள் இருந்த பொழுது நடந்த ஒரு வழக்கு பற்றி மூத்த வழக்கறிஞர் ஒருவர் சொன்ன நேரடி
அனுபவச் செய்தி இது.
ஒரு பெண் கணவனை விட்டுப் பிரிந்து குழந்தைகளுடன் திருநெல்வேலியில் வாழ்ந்து கொண்டு இருந்தார். தன் மனைவி குழந்தைகளை கடத்திச் சென்று விட்டார் என்று கூறி ஆட்கொணர்வு வழக்கு தாக்கல் செய்தார் கணவர்.
குழந்தைகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வர அப்பெண்ணுக்கு நீதிமன்றம்
லால்குடி தாலுகா, களத்தில் வென்றான் பேட்டை கிராமத்தில் நடந்த "ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள்" மாநாட்டில் #பெரியார் பேசிய பேச்சு...
'கீழ்ஜாதி' என்பதாக ஒரு பிரிவு எதற்காக? யாரால் ஏற்படுத்தப்பட்டது? என்பதன் ரகசியத்தை உணர்ந்தால் பிறகு அதை அழிக்கும் விஷயம் வெகு சுலபமாக முடிந்துவிடும்.
கீழ்ஜாதி, மேல்ஜாதி என்று சொல்லுவதன் தத்துவம் என்ன என்பதை பாருங்கள். ஒரு பார்ப்பானையும், பறையனையும் கூட்டிவந்து நிறுத்தி கீழ் ஜாதி மேல் ஜாதி என்பதும் அவர்களிடத்தில் எப்படி விளங்குகிறது என்று பார்த்தால் மேல் ஜாதி என்பவன் பாடுபடாமல் சேம்பேறியாய் இருந்து ஊரார் உழைப்பில் வாழ்கிறவன்
என்பதும் கீழ் ஜாதி என்பவன் பாடுபட்டு உழைத்து உழைப்பின் பயனை எல்லாம் அன்னியருக்கே அளித்துவிட்டு வீடில்லாமல் துணியில்லாமல் கஞ்சியில்லாமல் கல்வியில்லாமல் மிருகத்தினும் கேடாய் வாழ்கிறான் என்பதும் நன்றாய் விளங்கும். ஆகவே சோம்பேறிக் கூட்டத்திற்கு எதிராக எவன் போர் தொடுக்க முனைந்து