பங்குனி உத்திரம் திருநாள் முருகப்பெருமானுக்கு சிறப்பு வாய்ந்தது.
தமிழ் மாதங்களில் 12ஆவது மாதம் பங்குனி,
27 நட்சத்திரங்களில் 12ஆவது உத்திரம் நட்சத்திரம் இந்த 12, என்ற எண் முருகனுடைய திருக்கரங்களின் எண்ணிக்கையை குறிக்கும்.
எனவே தான் பன்னிரு கை வேலவனுக்கு உகந்த நாளாக பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சிவ ஆலயங்களிலும் முருகப்பெருமான் ஆலயங்களிலும் பங்குனி உத்திர திருவிழா 12 நாட்கள் பிரம்மோற்சவ விழாவாக கொண்டாடப்படுகிறது.
தெய்வீக திருமணங்கள் நிகழ்ந்த நாள் பங்குனி உத்திர நன்னாள்.
இதனை கல்யாண விரதம் எனவும் சொல்வார்கள். இந்த நன்னாளில் விரதம் இருந்து முருகனை வழிபாடு செய்தால் திருமணம் கைகூடும் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.
ஆனால் பங்குனி உத்திர விரதத்தால் அரசு வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு கிடைக்கும், அரசு சார்ந்த காரியங்கள் நடக்கும்.
சிலருக்கு பணியிடத்தில் இழுபறியாக இருக்கும் பதவி உயர்வு கிடைக்கும்.
பங்குனி உத்திர திருவிழா, இதற்குப் பெயர் கோடை வசந்த விழாவின் நுழைவு விழா என்று தான் அர்த்தம்.
பங்குனி மாதம் பிறந்து விட்டாலே கோடையும் வசந்தமும் வந்து விட்டது என்று தான் அர்த்தம்.
கோடை காலத்தின் ஆரம்பமே பங்குனி மாதம் தான்.
அதனால் தான் அதை வரவேற்கும் விதமாக விதமாக வசந்த விழா கொண்டாடப்படுகிறது.
வட மாநிலங்களில் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் சகோதரத்துவத்தை வலியுறுத்தவும் எப்படி ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதோ
அது போலவே நம் தமிழகத்தில் பங்குனி உத்திரப் பெருவிழாவாகக் கொண்டாடி வருகிறோம்.
பங்குனி உத்திரம் என்பது பவுர்ணமியும் உத்திரம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளாகும்.
மற்ற மாதங்களில் வரும் பவுர்ணமியைக் காட்டிலும் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இணையும் போது தோன்றும் பவுர்ணமி நிலவு மிகப்பெரியதாகவும் மிகப்பிரகாசமாகவும் தோன்றும்.
மற்றொரு சிறப்பு என்னவென்றால், தமிழ் மாதங்களில் பனிரெண்டாவது மாதம் பங்குனி, அதே போல் நட்சத்திர வரிசையில் பனிரெண்டாவது நட்சத்திரம் உத்திரம்.
பங்குனி உத்திரத் திருவிழாவின் நாயகனான முருகப் பெருமான் - தெய்வானையை திருமணம் செய்து கொண்டதும் இந்த நன்னாளில் தான்.
அதோடு வள்ளி அவதரித்த நாளும் இந்த நாள் தான்.
எம்பெருமான் சொக்கநாதர் - அன்னை மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றதும் பங்குனி உத்திர நாளில் தான்.
சமயக்குரவர்களில் ஒருவரான சுந்தரருக்கு மதுரையில், சிவபெருமான் அன்னை பார்வதி தேவியோடு மணக்கோலத்தில் காட்சியருளியதும் இந்த நன்னாளில் தான்.
இதனால் தான் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் உள்ள கோயில்களில் எல்லாம் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் என்ற பேரில் பத்து நாட்கள் திருவிழா, தேரோட்டம், தீர்த்தவாரி, சுவாமி - அம்பாள் திருக்கல்யாண உற்சவம் என சகலமும் நடைபெறும்.
பங்குனி உத்திர நன்னாளில் தான், அகத்தியர் லோபமுத்திரையை திருமணம் செய்து கொண்டதாக கந்தபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவர்களின் தலைவனான இந்திரன் - இந்திராணி திருமணம் நடந்ததும் பங்குனி உத்திர நன்னாளில் தான்.
அது மட்டுமல்ல, நவக்கிரக மண்டலத்தில் உள்ள சந்திரன் அழகும் திறமையும் கொண்ட 27 நட்சத்திரக் கன்னியரை மணம் செய்து கொண்டதும் இந்த பங்குனி உத்திர நாளில் தான் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
இத்தனை சிறப்புகள் வாய்ந்ததால் தான் பங்குனி உத்திர நாளில் ஏராளமான சுப நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
கோயில்களிலும் பங்குனி பிரம்மோற்சவம், உத்திரத் திருவிழா, தேரோட்டம் என்று தமிழ் நாடெங்கும் திருவிழாக்கள் களைகட்டத் தொடங்கி விடும்.
அது மட்டுமல்ல, பங்குனி உத்திரம் நட்சத்திரத்தின் மகிமையை பல்வேறு புராணங்களும் போற்றி புகழ்கின்றன.
செல்வத்தின் அதிபதியான ஸ்ரீமகாலட்சுமி அவதாரம் நிகழ்ந்ததும் பங்குனி உத்திர நன்னாளில் தான்.
காக்கும் கடவுள் ஸ்ரீமகாவிஷ்ணுவை நோக்கி கடுந்தவம் இருந்த ஸ்ரீ மகாலட்சுமிக்கு, ஸ்ரீ மகாவிஷ்ணு தன்னுடைய திருமார்பில் வீற்றிருக்கும் வரத்தை அளித்ததும் பங்குனி உத்திரத் திருநாளில் தான் என்கிறது வரலாற்று ஆதார நூலான விஷ்ணு புராணம்.
நம்முடைய செல்வ வளம் சிறக்க இந்நாளில் ஸ்ரீ மகாலட்சமிமைய வேண்டி விரதம் இருந்தால் சகல செல்வ வளங்களும் நமக்கு கிட்டும்.
ஸ்ரீ ஆண்டாள் - ரங்கமன்னார்,
நந்தி தேவர் - சுயசை திருமணம் நடந்ததும் பங்குனி உத்திர நன்னாளில் தான்.
படைப்புக் கடவுளான பிரம்ம தேவர் தன்னுடைய நாவில் கல்விக் கடவுளான சரஸ்வதியை அமர்த்திக்கொண்டதும் பங்குனி உத்திரத் திருநாளில் தான்.
சாஸ்தாவான ஸ்ரீ ஐயப்பன் அவதரித்ததும், பூரணா - புஷ்கலாவை மணம் செய்து கொண்டதும் இந்நன்னாளில் தான்.
அதேபோல் மன்மதன் - ரதிதேவியை மணம் செய்து கொண்டதும் இந்த நாளில் தான்.
நல்ல வேலை கிடைக்கவும்,
மனம் போல மாங்கல்யம் கிடைக்கவும்,
நல்ல வாழ்க்கை துணை கிடைக்கவும் பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து வணங்கலாம்.
பஞ்ச சம்ஸ்காரம் என்பது வழிப்படுத்தும் ஐந்து வகையான நெறிமுறை ஆகும். சிறப்பு பதிவு.
1) பெருமாளின் சங்கு, சக்கரம் ஆகியவற்றை நிரந்தரமாக உடலில் தரித்துக்கொள்ளும் #தாபசம்ஸ்காரம்.
2) நெற்றியில் மட்டுமின்றி உடலில் பன்னிரு இடங்களில் பன்னிரு மூர்த்திகளை தியானித்து திருமண் காப்பு அணியத் துவங்குதல் #புண்ட்ரசம்ஸ்காரம் ஆகும்.
3) பெற்றோர்கள் வைத்த பெயரைத் தவிர ஆச்சார்யன் (குரு) சூட்டும் நாமமாக ஒன்றை வைத்துக் கொள்ளுதல் #நாமசம்ஸ்காரம் ஆகும்.
4) எட்டெழுத்தான நாராயண மந்திரத்தையும் மறை பொருளோடு த்வயம், சரம ஸ்லோகம் (மோட்சத்துக்கான வழி) ஆகியவற்றையும் ஆச்சாரியன் மூலம், வலது செவியில் உபதேசமாகப் பெறுதல் #மந்திரசம்ஸ்காரம் ஆகும்.