பரம ஏழையிடம் போய் கேட்டுப் பார் ... பணத்தோட அருமை தெரியும்...
பணத்த என்ன பண்றதுன்னே தெரியாத பணக்காரன்கிட்ட கேட்டுப் பார்... ஆரோக்கியத்தோட விலை தெரியும்... னு ஒரு பேச்சு வழக்கு உண்டு... ரொம்பவும் எதார்த்தமான உண்மை ....
ஆரோக்கியத்த கெடுத்துக்காம அதே நேரத்துல தேவையான பணத்தையும் சம்பாதிக்க தெரிந்தவர்களே வாழ்க்கையை வாழத் தெரிந்தவர்கள்... என்பதை வியாதியால் உடல் கெட்டுப் போன பிறகே பெரும்பாலோர் உணர்வு பூர்வமாக புரிந்து கொண்டு , அதற்குப் பிறகு தேட ஆரம்பிப்பது தெரிந்த கதை...
எல்லாஞ் சரி... விஷயத்துக்கு வாங்க... சார்... என்கிற உங்கள் ஆதங்கம் புரிகிறது எனக்கு..
ஆரோக்கியத்துக்கான வழிகள் ..என்று நம்ம பெரியவங்க சொல்லி வச்சுட்டு போயிருக்கறதுல , குறிப்பா இந்த பங்குனி மாதத்து அதிசயத்தை சொல்லத்தான் வந்தேன்...
வேப்பம் பூ... சாலையோரங்களிலும், கிராமப்புறங்களிலும் இந்த பங்குனி மாதத்தில் பூத்துக் குலுங்கும் வேப்ப மரத்துப் பூக்கள்... அவ்வளமாக பார்வையை கவர்வதில்லை...
ஆனால் அந்த வேப்பம்பூவிலிருந்து வெளிக் கிளம்பும் ஒரு வகையான வாசம்... மஞ்சளையும், சாணத்தையும் லேசாக தீயிட்டு கருக்கினால் வருமே.. அது போல ஒரு வாசம்.. அதை நுகராமல் ஒரு வேப்ப மரத்தை தாண்ட முடியாது.. பங்குனி மாதத்தில்...
இந்த வேப்பம் பூ தான் பங்குனி மாத அதிசயம்.. வருடத்தில் இந்த மாதத்தில் மட்டுமே அதிகமதிகமாய் பூக்கும்.. இப்படி பூக்கிற பொழுது முடிந்தவரை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்..
பறித்த வேப்பம் பூக்களை ஓரிரு நாள் நிழலில் காயவைத்து உலர்ந்த பிறகு டப்பாவில் நிரப்பிக் கொள்ளலாம்..
இந்த வேப்பம்பூ , ஒரிஜினல் மலைத்தேன் , முருங்கைக்கீரை , நாட்டு மாட்டுப் பால் போல அற்புதம் செய்யும் ஒரு மருந்து என்பது தான் இதன் விஷேஷமே..
வாதம், பித்தம், கபம் என்ற மூன்று நாடி வகையில் ஏதாவது ஒன்று தான் மனிதன்.. என்று ஆயுர்வேதம் சொல்கிறது. அந்த மூன்று நாடிகளையும் சமன்படுத்துகின்ற பேராற்றல் வேப்பம்பூ ஸ்பெஷல்... நாடிகள் சமன் பட்டாலே வியாதிகள் ஓடிப்போகும்தானே..?
கேன்சர் கிருமிகளை கொல்வது, குளிர்ச்சி தருவது, குடற்புண்ணை சரி செய்வது , மன நிம்மதி தருகிறது , பல் சுத்தம் , இத்யாதி...என்பதெல்லாம் தாண்டி "சுகரு "க்கு விஷமாய், எதிரியாய் இருக்கிறது வேப்பம்பூ என்பது இன்னொரு ஸ்பெஷாலிட்டி... நீரழிவின் பேரழிவு வேப்பம்பூ..
இது சித்திரை மாதத்திலும் வரும் என்றாலும்... பங்குனியில் ரொம்ப அதிகம் ..
எப்படி சாப்பிட ..? ஈ.ஸி.. அப்படியே முழுங்கலாம் ஒரு கரண்டி ... வாரத்துல ஒரு நாள்.. போதும்.. தேவைன்னா ஒரு கரண்டி வெல்லம் அதற்குப் பிறகு... தட்ஸ் ஆல்..
நம்ம பெரியவங்க , இதை நாம சாப்பிட வேண்டும் .. நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்... சித்திரை முதல் நாளன்று வாழைப்பழத்தோடு சாப்பிட வைத்திருக்கிறார்கள்.. மெல்ல மறந்தாயிற்று அதை..
இந்த ஆண்டிலிருந்து பயங்கரமான ஆஸ்பத்திரி செலவை எப்படியாவது மல்லுக்கட்டி குறைக்க ஆசைப்படுகிறவர்கள், விரும்புகிறவர்கள் எல்லாம் பங்குனியில் வேப்பம்பூ பொக்கிஷத்தை சேகரித்து பத்திரப்படுத்துங்க ....
*ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு #மத்திய_அரசின்#ஆயுஷ்மான் பவா பதக்கம் இப்போது ABHA ஹெல்த் கார்டாக மாற்றப்பட்டுள்ளது*
*இணையதளம் திறக்கப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்*
*5 லட்சம் சுகாதார காப்பீடு ரூ. கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண்ணை டைப் செய்தவுடன், ஆதார் கார்டு இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு OTP வரும், OTP-யை மீண்டும் தட்டச்சு செய்த பிறகு, உங்கள் தொலைபேசி எண்ணை தட்டச்சு செய்யுமாறு கேட்கப்படும்.
மேலும் பதிவுசெய்யப்பட்ட AYUSHMAN HEALTH புகைப்படத்துடன் கூடிய அட்டையை நீங்கள் உடனடியாக பதிவிறக்கம் செய்யலாம்.*
மங்கலம் அருளும் 'சோப கிருது' வருடம்- முத்திரை பதிக்க வரும் சித்திரை!*
"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி"யான நம் மக்களின் மொழி, தமிழ் மொழி! அப்படிப்பட்ட நம் பாரம்பரியமிக்க தமிழ் புத்தாண்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது!
எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் நம்முடைய பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கக்கூடியது தமிழ் புத்தாண்டுதான்.
கால நிலை, பருவ நிலை அடிப்படையில் நாம் தமிழ் புத்தாண்டை கொண்டாடுகிறோம்.
இந்த தமிழ் புத்தாண்டு பலநூறு வருடங்கள் சீரோடும், சிறப்போடும் கொண்டாடப்படுகிறது.
ஜோதிடத்தில் பன்னிரெண்டு ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில் சூரியன் புகும் நாளே தமிழ் புத்தாண்டாகும்.
தமிழ் நாள்காட்டி என்பது ராசி கட்டத்தை காலக்கணிப்பில் பயன்படுத்தும் சூரிய நாள்காட்டி என்பதால் தான் மேஷத்தில் சூரியன் நுழையும் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.
"அரசமரத்தை கைவிட்டு கால ஓட்டத்தில் பிள்ளையாரை மட்டும் பிடித்துக்கொண்டோம் காரணம்போய் காரியம்மட்டும் மிஞ்சிநிற்கிறது இப்போது...."
"ஒரு ஊரில் ஏழு அரசமரங்கள் இருந்தால் அங்கே மழைபெய்தேதீரும்" எனப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்....
நமது மண்ணின் மரங்களைப்பற்றி வரிசையாக எழுதினால் முதலில் அரசமரத்திலிருந்தே துவங்கவேண்டும் அதுதான் நல்ல ஆரம்பமாக இருக்கும் எனவே அரசமரத்திலிருந்தே துவங்குவோம்...
மரங்களுக்கெல்லாம் அரசன் அரசமரம். நன்கு வளர்ந்த அரசமரம், அதிகபட்சமாக சுமார் நூறு அடி உயரமும் பத்தடி குறுக்களவும் கொண்டவையாக வளரும் பெரியமரம் இது.
தீப ஸ்தம்பம் மற்றும் வேல் கொடியுடன் ராஜ கோபுரம் தொழுது,தல விநாயகரின் முன் தோப்புக்கரணமிட்டு விட்டுச் செல்ல வேண்டும்.
2
மலைக் கோவில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.ராஜ கோபுரமும்,இரு புறமும் நாயக்கர் மண்டபங்களும்,42 கல் தூண்கள் கொண்ட பாரவேல் மண்டபமும் உள்ளன.கருவறை மீது தங்க விமானம் காட்சியளிக்கிறது.
நாளைய தினம் அதாவது 14/4/2023 வெள்ளிக்கிழமை நவமி திதியில் திருவோண நட்சத்திரத்தில் மதியம் 1.58 நிமிடத்தில் சுக்ரஹோரையில் அமிர்தமான வேளையில் சோபக்ருது வருடம் பிறக்கிறது
சோபக்ருது வருஷம் உண்மையில் மிக சிறந்த வருஷம்
இந்த வருஷத்திற்கு ராஜா புதன் ( கல்வி) மந்திரி சுக்கிரன் ( நல்லதை செய்பவன்)
இந்த வருஷத்துக்கான பாடல்
ஸஹோஜஸம் சோபக்ருதம் ந்ருணாமிஷ்டதமாஸ்ரயே
ஷிபிகா வாஹனாரூடம் சாமரத்வய பாணிகம்
அதாவது சோபக்ருது வருஷ அபிமானி ஸஹௌஜன் என்னும் தேவதையைப் போற்றும் விதமாக இப் பாடல் உள்ளது
கன்னட தெலுங்கு வருட பிறப்பான யுகாதிக்கும் தமிழ் வருடப் பிறப்புக்கும் என்ன வித்தியாசம் என்றால்