பிஜேபி ஆட்சியில் வழக்கு தொடர்பான பைல்கள், காவலர்கள், சாட்சிகள், நீதிபதிகள் காணாமல் போவதும் மௌனம் ஆக்கப்படுவதும் சகஜம்
ஒத்துழைப்பவர்கள் ராஜ்யசபாவில் இருந்து
மாநில ஆளுநர் வரை
பதவி பெறுவதும் நியமம் ஆகிவிட்டது
ஆனால் 41 பேர் மர்மமாக இறந்த ஊழல் பற்றி தெரியுமா?
உலக வரலாற்றிலேயே
நீண்ட காலம் 1990 முதல் 2013 வரை நிகழ்ந்த ஊழல்
Madhya Pradesh Professional Examination Board
என்பதன் இந்தி சுருக்கமான #Vyapam
Vyavsayik Pariksha Mandal
நம்ம tnpsc மாதிரி, ஆனால் அரசு பணி ஆள் சேர்ப்புடன், கல்லூரிகள் நுழைவு தேர்வையும் நடத்தியது. வியாபம் நடத்திய 13 வெவ்வேறு
தேர்வுகளில் இறுதி முடிவுகள் மோசடி செய்யப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 32 லட்சம் மாணவர்கள் பல்வேறு தேர்வுகள் எழுத அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் பலர் உண்மையில் மற்ற தகுதியற்ற மாணவர்களுக்குப் பினாமிகளாகப் பணம் பெற்றனர். இது ஒரு "இன்ஜின்-போகி" அமைப்புடன் மாணவர்கள் இருக்கை (seat)
ஏற்பாடுகள் கையாளப்பட்டன.
பணம் பெற்ற ஒரு புத்திசாலி மாணவர் மற்ற இருவருக்கு இடையில் அமர்ந்து, பிந்தையவர் முந்தையவற்றின் பதில்களை நகலெடுக்க அனுமதிக்கப் படுவார். இந்த நுழைவுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற, அரசியல்வாதிகள், MPPEB அதிகாரிகளுக்கு
இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் கொடுத்து
தகுதியற்ற தேர்வர்கள் மோசடியில் ஈடுபட்டனர்.
2000 மேற்பட்டவர்கள், சிபிஐ யால் கைது செய்யப்பட்டனர். அதிகாரப்பூர்வமற்ற தகவல் படி வழக்குடன் தொடர்புடைய நூற்றுக்கு மேற்பட்டோர் மர்மமான முறையில் இறந்தனர்.
ஊழலுடன் தொடர்புடைய அப்போதைய மத்திய பிரதேச ஆளுநர் மகனே எல்லோரையும் போல சாலை
விபத்தில் இறந்தார்
அரசு தகவல் படி மரணம் 40 மட்டுமே. உத்திரப்பிரதேச சேர்ந்த இருபது பேர் மத்திய பிரதேஷ் இந்தூரில்
மருத்துவ நுழைவுத் தேர்வு எழுத வந்த போது 2009ல் கைது செய்யப்பட்டனர்
2013ல் தான் இந்த ஊழலின் பிரம்மாண்டம் உலகிற்கு தெரிந்தது
விக்கிபீடியாவில் மிக அதிக அளவில்
தேடப்பட்ட தகவல் இதுதான். ஆள் மாறாட்டம்
காப்பி அடிக்கும் வகையில் இயற்கை அமைப்பு
விடைத்தாள்களில் அதிக மதிப்பெண் வழங்க திருத்துபவர்களுக்கு லஞ்சம்
தேர்வுக்கு முன்பே கி ஆன்சர் கசிய விடுதல்
போன்ற முறைகளில் மோசடி நடைபெற்றது. உத்திரப்பிரதேச சேர்ந்த இருபது பேர் மத்திய பிரதேஷ் இந்தூரில்
மருத்துவ நுழைவுத் தேர்வு எழுத வந்த போது 2009ல் கைது செய்யப்பட்டனர்
2013ல் தான் இந்த ஊழலின் பிரம்மாண்டம் உலகிற்கு தெரிந்தது.
1995 முதல் நடந்த முறைகேடுகள் முதலில் சத்ராபூர் மாவட்டத்தில் 2000 ல் கண்டுபிடிக்கப்பட்டது
2004 இல் கந்துவா மாவட்டத்தில் ஏழு வழக்குகள் பதியப்பட்டது
2009ல் இந்தூரை சேர்ந்த ஆனந்தராய் பொதுநல வழக்கு
தாக்கல் செய்தார். 20011 ல் சிவராஜ் சவுகான் அமைத்த குழு விசாரணை முடித்தது
பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள் செய்த ஆள் மாறாட்ட மோசடி காரணமாக 114 போலி டாக்டர்கள் உருவானது கண்டுபிடிக்கப்பட்டது அமைச்சர்கள் உடந்தையால்
குற்றவாளிகள் தப்ப
2013இல் மிகப்பெரிய அளவில் இந்தூரில் மோசடி நடந்தது
அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஜெகதீஷ் சாகர் மும்பையில் கைது செய்யப்பட்டான்
317 மோசடி மாணவர்களின் பட்டியலையும் சிபிஐ போலீஸ் கைப்பற்றியது. உயர் நீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு பிறகு பிஜேபி தலைவரும் தொழில்நுட்ப
கல்வி அமைச்சருமான லட்சுமிகாந்த் கைது செய்யப்பட்டார்
நுழைவுத் தேர்வு, மத்திய பிரதேச ஆள்சேர்ப்பு தேர்வு தவிர
SBI தேர்வுகளிலும் ஜெகதீஷ் சாகர் மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டது. பிஜேபி தலைவர்கள், அமைச்சர்கள், உதவியாளர்கள் தொழிலதிபர்கள் மருத்துவர்கள், வியாப அதிகாரிகள் என பலரையும்
கைது செய்தது எஸ்டிஎப்
ஆனால் அதில் தொடர்புடைய ஆளுநரை அரசியல் சட்ட அமைப்பை காட்டி கைது செய்ய
நீதிமன்றம் அனுமதிக்கவில்லை.
அம்பலமானது! ஆர்.என். ரவியின் ஆர்.எஸ்.எஸ் பின்புலம்!
ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்த பின்புலத்தில் இருந்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் உருவாக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாகவே ஆளுநர் ஆர்.என்.ரவி இயங்கி வருகிறார் என்பதை ஆங்கில இதழ்
அம்பலப்படுத்தி உள்ளது. அந்த வகையில் சனாதன சித்தாந்தத்தை செயல்படுத்தி வரும் ரவிக்கு சட்டமன்றம் இன்று ‘செக்’ வைத்துள்ளது.
சனாதனக் கருத்துக்களை பரப்புதல், சாதாரண பொது ஜனங்களுக்கு எதிராக பேசுதல், செயல்படுதல்..ஆகியவற்றை செய்து சர்வ சதா காலமும் தமிழகத்தை பதட்டத்தில் வைத்துள்ளார்
ஆளுனர் ஆர்.என்.ரவி! ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நீதியரசர் சந்துரு போன்ற சட்ட வல்லமை மிக்கவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தயாரித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தைக் கூட திருப்பி அனுப்புகிறார். எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன. ஆர்ப்பாட்டம் நடத்திய வண்ணம் உள்ளன!
*ரூபாய் நோட்டுகளில் காந்திக்கு பதிலாக சாவர்க்கர் உருவத்தை பொறிக்க வேண்டும் – ஒன்றிய அரசுக்கு இந்து மகாசபா கோரிக்கை*
ரூபாய் நோட்டுகளில் காந்திக்கு பதிலாக சாவர்க்கர் உருவத்தை பொறிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு இந்து மகாசபா கோரிக்கை விடுத்துள்ளது.
இந்து மகாசபா முன்னாள்
தலைவருமான சாவர்க்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள இந்து மகாசபா அலுவலகத்தில் நினைவுநாள் நிகழ்ச்சி நடந்தது. நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர்.
அதைத்தொடர்ந்து, ஒன்றிய அரசுக்கு இந்து மகாசபா சார்பில் ஒரு கடிதம் எழுதப்பட்டது.
அதில், ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்திக்கு பதிலாக சாவர்க்கர் மற்றும் இதர சுதந்திர போராட்ட வீரர்களின் உருவங்களை பொறிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நாடாளுமன்ற கட்டிடத்துக்கு செல்லும் சாலைக்கு சாவர்க்கர் பெயரை சூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
ஏப்ரல் 12 - இன்று சர்வ தேச தெருக் குழந்தைகள் நாள். தெருக் குழந்தைகள் என்பது பாதுகாப்பு, கவனிப்பு மற்றும் வழிகாட்டலுக்குப் பொறுப்பான பெரியோர்கள்] யாருமில்லாமல், தெருவோரங்களை வாழும் இடமாகவும், வாழ்வாதாரமாகவும் கொண்டுள்ள குழந்தைகளைக் குறிக்கிறது.
தெருக் குழந்தைகள் பள்ளிக்கூடம்
செல்வதில்லை. அதற்குப் பதிலாக, தெருக்களில் பொருட்களை விற்பனை செய்வது அல்லது வேறு சிறுசிறு வேலைகள் செய்து பொருள் ஈட்டுகின்றனர். தமது தேவைகளை தாமே நிறைவேற்றிக் கொள்கின்றனர். பெற்றோர்களுக்கு கிடைக்கும் குறைவான வருமானமும், வேலையே கிடைக்காமல் அல்லது வேலைக்கே போகாமல் வாழ்கின்ற குடும்பச்
சூழலும் இத்தகைய தெருவோரக் குழந்தைகளை உருவாக்குகின்றன. இந்தியாவில் மட்டும் 8,00,000 குழந்தைகளுக்கு மேல் தெருவோரக் குழந்தைகளாக வாழ்கின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.. மக்கள்தொகை பெருகி வருவது போலவே தெருவோரக் குழந்தைகளின் தொகையும் நாளுக்குநாள் பெருகி வருகிறது
தெருக்குழந்தைகளில்
"அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறான கருத்துக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டதாக
பாஜக மாநில தொழிற்பிரிவு துணை தலைவர் செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை காளப்பட்டி பகுதியில் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் பாரதிய
ஜனதா கட்சியின் மாநில தொழிற் பிரிவு துணைத் தலைவராக உள்ளார். இவர் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சமீப காலமாக சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துக்களை பதிவிட்டு வந்திருந்தார். மேலும் தமிழக அமைச்சரும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி குறித்த அவதூறான
வகையில் கருத்துக்களையும் அவர் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவை கணபதிபுதூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சிறுநீர் என்பது விலங்குகள் மற்றும் மனிதர்கள் உடலில் உள்ள சிறுநீரகங்களில் உருவாக்கப்படும் திரவ வடிவிலான ஒரு கழிவுப்பொருள் அல்லது பக்கவிளைவுப் பொருளாகும்.
இது சிறுநீரகத்தில் உருவாகி, சிறுநீர்க்குழாய் மூலம் சிறுநீர்ப்பைக்கு எடுத்துச் செல்லப்பட்டு,
தற்காலிகமாக அங்கே சேகரிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து சிறுநீர்வழி மூலம் உடலில் இருந்து வெளியேறுகின்றது.
உடலின் உயிரணுக்களில் நிகழும் வளர்சிதைமாற்றங்களின்போது கழிவாக உருவாகும் பல பக்கவிளைவுப் பொருட்களும் குருதிச் சுற்றோட்டத்தொகுதியிலிருந்து அகற்றப்படல் அவசியமாகும்.
உடலுக்குத் தேவையற்ற நச்சுப்பொருட்கள், மேலதிக சில கரையங்கள், மேலதிகமாக உடலிலுள்ள நீர் போன்றன சிறுநீர் மூலம் உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றது.
உடலில் நிகழும் சில மாற்றங்களையும், பல நோய் நிலைகளையும் கண்டறிய சிறுநீர் மாதிரி பயன்படுத்தப்படுகின்றது.