Theni Siraj Profile picture
Apr 13 9 tweets 8 min read Twitter logo Read on Twitter
முத்தமிழறிஞர் கலைஞரின் சுயசரிதை நூலான #நெஞ்சுக்கு_நீதி புத்தகத்தினை கடந்த 47 நாட்களாக கொள்கை வேட்கை கொண்ட உடன்பிறப்பாக வீரியத்துடன் நடாத்தி 50 வது நாள் கொண்டாட்டத்தை @suryaxavier1 எழுத்தாளர் சூர்யா சேவியர் அவர்கள் சிறப்புரை நிகழ்ச்சியாக அமைந்ததில் பெருமகிழ்ச்சி..
இந்த
1/n Image
நிகழ்ச்சியில் பங்கேற்க கலைஞர் உடன்பிறப்புகளுக்கு என் சார்பாக வாருங்கள் என்று வரவேற்கிறேன்..
#நெஞ்சுக்கு_நீதி பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்...
தொடக்கம்..
எழுதுவதற்கு முடிகிறதா? நேரங்கூட கிடைக்கிறதா?'
என்று என் அலுவல்களை உணர்ந்தோர் அடிக்கடி கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்.
2/n
ஐம்பதுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறேன்.
முப்பதுக்கு மேற்பட்ட திரைப்படங்களுக்கான கதையும் உரையாடலும் ஏன் பாடல்களுங்கூடத் தீட்டியிருக்கிறேன்.பத்து நாட்களாவது எழுதியிருப்பேன்.வாரந்தோறும் முரசொலி இதழில் தொடர்கதையென்ன,அரசியல் கட்டுரைகள் என்ன,முப்பதாண்டு காலமாக இடைவிடாது
3/n
எழுத்து பணியைத் தொடர்ந்து செய்திருக்கின்றேன்.
" எல்லாம் சரி;1966 வரையில் தானே? அப்போது உனக்கு நிறைய ஓய்விருந்தது.ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் காங்கிரசு அரசினர் சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்து ஓய்வு அளித்தனர்.அதனால் எழுத முடிந்தது.
இந்த ஏழு ஆண்டு காலத்தில் கழகம் ஆளும் பொறுப்பை
4/n
ஏற்றுக்கொண்டு நீயும் அமைச்சரான பிறகு ஏதப்பா எழுதுவதற்கு நேரம்?"
என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.
அமைச்சர் பொறுப்பை ஏற்ற பிறகு எனக்கேற்படுகிற மன உளைச்சல்களை,அயர்வை,
சோர்வை அனைத்தையும் போக்குகின்ற அருமருந்தாக அமைந்திருப்பதே எழுத்துப் பணி தான்.
அதுவும் முதல்வர் எனும்
5/n
சுமை என் தோளில் ஏற்றப்பட்ட பிறகு இந்த நான்கு ,ஐந்து ஆண்டுகளில் ஓட்டப்பந்தயத்தில் ஓடவிட்டு வந்தவன் எலுமிச்சம் பழத் தண்ணீரை விரும்புவது போல்,நானும் காப்பாற்றி கொள்ளக் கவிதை,கட்டுரை,கதை ஏதாவது ஒன்றை எழுதுவதை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறேன்.
பல்வேறு தலைப்புகளில் முப்பதுக்கு
6/n
மேற்பட்ட கவியரங்குகளில் நான் தலைமை ஏற்று கவிதை பாடியிருப்பது இந்த நான்கு,ஐந்து ஆண்டுகளில் தான்!
அந்த கவிதைகளை எழுதுவதற்கு எனக்கு கிடைக்கிற இடம்? பெரும்பாலும் புகைவண்டி தான்.
இரவு நேரத்தில் பத்து மணிக்கு புகைவண்டியின் பெட்டிகளின் கதவுகளை மூடிவிட்டு தூங்குவது போல ஒரு நடிப்பு!
7/n
இப்படி தொடங்கி தனது உள்ள ஓட்டத்தை ஒவ்வொரு கழகத்தின் உடன்பிறப்புகளின் மனதில் பசுமரத்தாணியாக பதிந்திட்ட கலைஞர் எண்ண ஓட்டங்களை அனைவரும் அறிய செய்யும் இந்த சிறு முயற்சியை நாமும் கடத்தி மகிழ்வோம் உடன்பிறப்புகளே...
@TRBRajaa @hihareesh @isai_ @Hereprak @kmpeye @aliyarbilal @Chella_97

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Theni Siraj

Theni Siraj Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @thenisiraj

Apr 14
அமெரிக்கா வாஷிங்டன் நகரில் உலக வங்கி நிதி குழு மற்றும் சர்வதேச நாணய நிதியம் கூட்டத்தில் நிதி மந்திரி கலந்து கொண்டார்.

வாஷிங்டனில் பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் பார் இன்டர்நேஷனல் எகனாமிக்சில் நடந்த நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பங்கேற்று முதலீட்டாளர்கள் மத்தியில் பேசினார்.
1/n Image
அங்கே "இந்தியாவில் மத தீவிரவாதம் அதிகமாக இருப்பதால் தொழில் வளர்ச்சி எவ்வாறு சாத்தியமாகும்" என்று கேள்வி எழுப்பினார்கள்...
கருவாட்டை பறி கொடுத்த பாப்பாத்தி மாதிரி கடுகடுப்புடன் இந்தியாவில் என்ன நடக்கிறது என்று பார்க்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார்.
மேலும் பொய் வதந்திகளை
2/n
பரப்பும் களத்தில் கால் கூட வைக்காதவர்கள் பரப்புவதை நம்ப வேண்டாம் என்றார்.
பாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்களை விட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் சிறப்பாக, பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றும் பொய்களை நம்ப வைத்திருக்கிறார்.
ஆனால் அங்கே வந்தவர்கள் தெளிவாக எவ்வித முதலீடும் செய்ய
3/n
Read 5 tweets
Apr 14
திருடனுக்கு தேள் கொட்டினால் வலி என்று கத்த முடியாத நிலை போல பாஜகவிடம் @RahulGandhi வைக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல திராணி இல்லாமல் கூட்டு களவாணி தனத்தை வாய் திறக்க முடியாமல் வாரிசு அரசியல் என்ற மொன்னை கத்தியை நீட்டுகிறது...

பாசிச மோடியே கொலைகார அமித்ஷாவே இவர்கள் யார்? Image
பியூஸ் கோயல்
தர்மேந்திரா பிரதான்
ஜோதிராதியத்ய சிந்தியா
பசவராஜ் பொம்மை
அனுராக் தாக்கூர்
ஆகாஷ் விஜய் வர்க்கியா
ஓம் பிரகாஷ் சக்லேச்சா
துஷ்யந்த் சிங்
பிஒய். ராகவேந்திரா
வரூண் காந்தி
அதிகாரி
பூனம் மகாஜன்
விவேக் தாகூர்
இவர்களெல்லாம் யார் யார் வாரிசுகள் என்று தேர்வுக்குழுவில்
2/n
இருக்கும் அமித்ஷா அறிய மாட்டார். மேலும் தனது மகன் ஜெய் ஷா கிரிக்கெட் விளையாட்டில் நீண்ட அனுபவத்தால் தான் கிரிக்கெட் போர்டு தலைவராக்கினாரா?
இது பாஜகவின் அயோக்கிய தனம்.
ஊழல் செய்கிறார்கள் என்று கத்தியவரகள் இன்று ஏறக்குறைய 5000 கோடி நிதியை கட்சிக்கு சேர்த்து கொண்டார்கள்.
3/n
Read 5 tweets
Apr 3
கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்பி ராகுல் காந்தி மீது 2 ஆண்டுகள் தண்டனை விதித்த வழக்கு பற்றி ஒரு பார்வை...

2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார கூட்டம் கர்நாடக மாநிலத்தில் கோலாரில் பேசும் போது " எல்லா திருடர்ளின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்?" என்று விமர்சனம் செய்தார்.
1/n
குஜராத் மாநில சூரத் தொகுதி எம்எல்ஏ பூர்னேஷ் மோடி இந்த விமர்சனம் மோடி என்னும் சாதியை இழிவு படுத்துவதாக உள்ளது என்று அவதூறு வழக்கு கிரிமினல் வழக்காக தொடுக்கப்பட்டது. பொதுவாக அவதூறு வழக்கு சிவில் வழக்காகவே தொடுக்கப்படும் இது ஒரு திட்டமிட்ட வழக்கு.

வழக்கு விசாரணைகள் முடிந்து
2/n
மார்ச் 23 ஆம் தேதி சூரத் கீழமை நீதிமன்றம் 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.
2 ஆண்டுகள் அதற்கு மேற்பட்ட தண்டனை பெற்றால் நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்க முடியாது என்ற சட்டத்தின் அடிப்படையில் ராகுல் காந்தி அவர்களை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டது.
3/n
Read 15 tweets
Mar 14
இராணுவ வீரர்களுக்கு அல்வா கொடுக்கும் பாசிச மோடி சர்க்கார்..
ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு, 'ஒரு பதவி - ஒரே ஓய்வூதியம்' திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தில் இது வரை யாருக்கும் நிலுவை தொகை வழங்க படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதில் மார்ச் 15 ஆம்
1/n
தேதிக்குள் வழங்குமாறு ஜனவரியில் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இராணுவ அமைச்சகம் இதனை 4 தவணையில் வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்து உள்ளது. மேலும் இந்த அறிவிப்பை திரும்ப பெற உத்தரவிட்டுள்ளது.
வழக்கு காலத்தில் 4 லட்சம் வீரர்கள்
2/n
பலன்களை பெறாமல் இறந்து விட்டனர். இதையும் வன்மையாக கண்டித்துள்ளது.
⁉️ 8000 கோடிக்கு தனி மனிதனுக்கு விமானங்கள் வாங்க நிதி இருக்கிறது!.
நாட்டிற்காக உழைத்த இராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நிதி இல்லையா?

⁉️ 3000 கோடியில் பட்டேல் சிலை வைக்க நிதி இருக்கிறது!.
நாட்டிற்காக
3/n
Read 6 tweets
Feb 15
பழ.நெடுமாறன் குறித்து..
கலைஞரின் கவிதை.

விடுதலைப் போர் நாயகராம்
விருதுநகர் மாவீரர் காமராஜரின்
விசுவாசமிக்க சீடர் என்று
விரிவுரைகள் பல நிகழ்த்தி, பின்னர் வேறு கொடி பிடிப்பேன் என்று அவர்
விலாவில் குத்திய விபீஷ்ண ஆழ்வார்!

அண்ணாவின் அணிவகுப்பில் நானும் ஒருவன் என நவின்று
கண்ணான
1/n
அண்ணாவின் கழுத்தறுக்க முனைந்திட்ட
சுக்ரீவன்!

மூப்பனாரின் காலடியே மோட்சமென்றும் சொர்க்கமென்றும்
முகஸ்துதி பல செய்து மோசடியால் புதுக்கொடி ஏற்றி விட்ட எட்டப்பன்!

குன்றணைய குமரி அனந்தரின் புகழ் மறைக்க
குறுக்குச் சுவர் கட்டி, தடை மீறிய தமிழ் ஈழப் பயணமென
தவிக்க விட்டு கடல் நடுவே
2/n
அவரை தான் மட்டுமே தப்பி வந்த ஆஞ்சநேயன்!

வலியின்றி புலிக் கூட்ட முதுகினிலே
குத்திக் கொண்டே பணம் பறிக்கும் இனத் துரோகி!

தரணிதனில் பல புராணங்கள் இருக்க
தசரதன் புராணத்தில் இவர் இறங்கி அவன் காதோரம் நரைத்த மயிரின் கதையை தன் கட்டுரைக்கு
விதையாக்கி விஷத்தைக் கக்கியிருப்பததுதான்
3/n
Read 4 tweets
Jan 5
திராவிட இயக்க வரலாற்றைப் பெரியாருக்கு முன், பெரியாருக்குப் பின் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
பெரியாருக்கு முந்தைய காலகட்டத்தில் முக்கியமானவர்களில் ஐந்து முன்னோடிகள்.
அவர்களில் ஒவ்வொருவராக பார்க்கலாம்.
Dr.C. NATESANAR THE DOYEN OF DRAVIDIAN MOVEMENT.
நேற்றைய பதிவின்
1/n
நீதிக் கட்சி உருவாவதற்குக் காரணமான முதல் மூவருள் முதல்வர் சி.நடேசனார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பிறகு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து அக்காலத்தில், எம்பிசிஎம் என்பதே மருத்துவப் பட்டத்தில் முதல்தரப் பட்டம். இப்பட்டம் பெற நடேசனார் பல முறை முயன்றும் முடியவில்லை.
2/n
எல்எம்எஸ் என்ற மருத்துவப் பட்டத்தைப் பெற்றே அவரால் மருத்துவராக முடிந்தது என்றாலும் வைத்திய நிபுணர் என்றும், கைராசிக்காரர் என்றும் மக்களிடம் அவர் நன்மதிப்பைப் பெற்றார்.
சென்னை ராஜதானியின் அப்போதைய அரசியல் நிலைகளால் உயர் சாதியினரால் அரசுப் பணிகளிலுள்ள இதர வகுப்பார்
3/n
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(