1960 ல் உலகத் தலைவர்கள் மாநாடு ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்றது. உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாட்டுத் தலைவர்கள் சபை இருக்கும்
அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு வந்து குவிந்தனர். தலைவர்கள் தங்குவதற்கு நட்சத்திர ஹோட்டல்களை ஐ.நா ஏற்பாடு செய்திருந்தது. அப்போது க்யூப அதிபரான 34 வயது ஃபிடல் காஸ்ட்ரோ ஐ.நா நிகழ்வுக்காக நியூயார்க் வருகிறார். அமெரிக்க அதிபர் #DwightEisenhower க்கு பயந்து கொண்டு காஸ்ட்ரோவுக்கு
நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கு இடம் அளிக்க முடியாது என்று ஹோட்டல் நிர்வாகங்கள் கூட்டு முடிவு எடுத்திருந்தன. ஐ.நா. மூத்த நிர்வாகிகளைச் சந்தித்த காஸ்ட்ரோ எனக்குத் தங்க இடம் அளிக்க மறுக்கிறார்கள், எனவே நான் ஐ.நா. வளாகத்திற்குள் ஒரு டெண்ட் அடித்துத் தங்கப் போகிறேன் என்று
அதிரடியாகச் சொல்கிறார். நிர்வாகிகள் பதற்றம் அடைந்தனர், என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. காஸ்ட்ரோவுக்கு ஆதரவு தெரிவித்தால் அமெரிக்க அதிபரின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடுமே என்று தயங்குகின்றனர். அப்போது தெரேசா ஹோட்டல் என்ற சாதாரண ஹோட்டல் உரிமையாளர் காஸ்ட்ரோவுக்கு இடம்
அளிக்க முன் வருகிறார். அவரின் அன்புக்காக அங்கே தங்க சம்மதிக்கிறார் காஸ்ட்ரோ...
நியூயார்க் நகரம் முழுவதும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு நடந்து கொண்டிருந்தது. காஸ்ட்ரோ தங்கியிருந்த ஹோட்டல் மட்டும் வெறிச்சோடி இருந்தது. காஸ்ட்ரோவை சந்தித்தால் அமெரிக்காவின் மோசமான
நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என்று பயந்து கொண்டு மற்ற நாட்டுத் தலைவர்கள் காஸ்ட்ரோவை புறக்கணித்தனர். அப்போது, "காஸ்ட்ரோவை சந்திப்பதால் என்ன நடந்துவிடும், நான் அமெரிக்காவைச் சார்ந்திருக்க மாட்டேன், ரஷ்யாவையும் சாரமாட்டேன்.... எனக்கென்ன பயம்' என்று சொல்லி அந்த இளம் தலைவனைச்
சந்திக்கக் கிளம்பினார் இந்தியப் பிரதமர் நேரு. காஸ்ட்ரோவின் அறைக்குள் நேரு நுழைந்தவுடன் பதற்றமாகிறார் இளம் தலைவர் காஸ்ட்ரோ. தவைவர்கள் சந்திப்பின்போது கடைப்பிடிக்கப்படும் சர்வதேச சம்பிரதாயங்கள் என்னவென்றே அப்போது அந்த இளம் தலைவனுக்குத் தெரியாது....
அந்தச் சந்திப்பைப் பற்றி
இதோ காஸ்ட்ரோ சொல்கிறார்.....
"அப்போது எனக்கு வயது வெறும் 34 மட்டுமே, என்னைப் பற்றி என் நாட்டு மக்களுக்குத்தான் தெரியுமே தவிர பிற நாட்டினருக்கு அவ்வளவு அறிமுகம் இல்லாத சமயம். அமெரிக்காவின் எதிர்ப்பு வேறு.... அப்படி இருக்கும்போது என்னை யாரும் சந்திக்க முன் வராத சூழ்நிலையில்
நேரு போன்ற ஒரு மாபெரும் தலைவர் என்னை வந்து சந்தித்தது எனக்குள் ஒரு விதப் பதற்றத்தை ஏற்படுத்தியது. அதனை உணர்ந்து கொண்ட அவர் என்னைப் பற்றி, நான் அடைந்த இலக்கைப் பற்றி உயர்வாகச் சொல்லி என்னை உற்சாகமூட்டி, பெருமிதத்தில் ஆழ்த்தினார். அதன் பிறகே என் பதற்றம் தணிந்து, அவருடன் இயல்பாக
உரையாடத் தொடங்கினேன். சர்வதேச அளவில் என்னை கௌரவப்படுத்திய தலைவர் நேரு....
அதற்குப் பிறகு காஸ்ட்ரோவை பல்வேறு நாட்டுத் தலைவர்களும் வந்து சந்தித்தனர்.
தலைமைப் பண்பு என்பது அதிகாரத்திற்கு அடி பணியாதது. எப்போதும் பாதிக்கப் பட்டவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதே....
நாமாக முன் வந்து உதவி செய்வது வேறு, மிரட்டலுக்கு அடிபணிவது என்பது வேறு...
போராடி, தியாகம் செய்து, மதச் சார்பில்லாமல் வாழ்ந்த நேருவால்தான் அடக்குமுறைக்கு அடி பணியாமல் இருக்க முடிந்தது.
மன்னிப்புக் கேட்டே பழகி, மதவாதத்தால் பிழைப்பு நடத்தியவர்கள் வழியில் வந்த மோடியால் அப்படி எல்லாம் பயப்படாமல் இருக்க முடியாது...
காஸ்ட்ரோவுக்கு தங்க இடம் கொடுத்த தெரேசா ஹோட்டல் உரிமையாளருக்கு இருந்த துணிவும் மனோதிடமும் ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு எப்போதும் இருக்காது...
தோழர் BALA
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்தியர்கள் ஏன் இவ்வளவு ஊழல் செய்கிறார்கள்? அவர்களின் அணுகுமுறையில் என்ன தவறு?....
நியூசிலாந்து பத்திரிகைஒரு ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட விஷயங்களாவன.
ஊழல் குறித்து இந்தியர்கள் குறிப்பாக மோசமாக எதுவும் நினைக்கவில்லை. ஏனெனில் ஊழல் இயற்கையாகவே நிலவுகிறது.
ஊழலை சரிசெய்வதை விட இந்தியர்கள் சகித்துக்கொள்கிறார்கள்.
இந்தியர்கள் ஏன் ஊழல்வாதிகள் என்பதை அறிய, அவர்களின் வழிகள் மற்றும் செயல்களைப் பாருங்கள்.
முதலில் மதம் என்பது இந்தியாவில் ஒரு வணிகமாகும். ஒரு பரிவர்த்தனை, அதில் கடவுளுக்குப் பணம் செலுத்தி, அதற்குப் பதிலாக ஒரு வெகுமதியை எதிர்பார்க்கும் ஒரு முறை. தகுதி இல்லாதவர்கள் கூட கடவுளிடம் பணம் கொடுத்து வெகுமதியை கேட்கிறார்கள்.
*கடவுள் நம்பிக்கை கொண்ட ராஜாஜியும், கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரும் 94 வயது வரை வாழ்ந்தார்கள்.*
*இருவருமே சமகாலத்தில் வாழ்ந்தவர்கள்.*
*பெரியார் மறைந்து 48 ஆண்டுகள் ஆன பிறகும் இன்றும் கொண்டாடப்படுகிறார்.*
*ஆனால் ராஜாஜியின் ஆதரவாளர்கள் ஏன் அவரை கொண்டாட மறந்து போனார்கள்..?*
*காரணம் ராஜாஜியின் செயல்பாடுகள் என்பது அவரது சமுதாயத்தினருக்கு உகந்ததாக மட்டுமே இருந்தது.*
*ஆனால் பெரியாரின் சிந்தனை, பேச்சு, செயல் என அனைத்தும் ஒட்டுமொத்த சமுதாயத்தினருக்கும், அவர்களின் சந்ததிகளுக்கான முன்னேற்றத்திற்காகவும் மட்டுமே இருந்தது.*
*ராஜாஜி அரசியல்வாதி. தனக்கும் தனது சமுதாயத்திற்கும் எது பலன் தரும் என்று மட்டுமே சிந்தித்தார்.*
*ஆனால் பெரியார் சமூக சீர்திருத்தவாதி. ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் எது பலன் தரும் என்று சிந்தித்து அதன்படி செயல்பட்டார்.*
*ராஜாஜி தன் சமகாலத்தினராலேயே மறக்கப்பட்டப்தற்கும்,
வரலாற்றில் ஒரு பேரரசு எப்படி எழுந்தது, வளர்ந்தது, பரந்தது என்று படிக்கும் அதேவேளையில் அதெப்படி வீழ்ந்தது என்பதும் முக்கியமான பகுதி.
சோழப்பேரரசு, பாண்டியப் பேரரசு, முகலாயப் பேரரசு வீழ்ச்சியைப் பற்றி வாசித்தவேளையில், வீழ்ச்சிக்கான பொதுவான ஒரு காரணம் தெரியுமா ?
ஆள்பவர்களின் மெத்தனம்.
இராஜராஜ சோழனுக்குப் பின்னும், இராஜேந்திர சோழன் ஆட்சியில், சோழப் பேரரசு வலுவாகவே இருந்தது. எப்படி ?
இராஜராஜனைக் காட்டிலும் அதிகளவு போர்களில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தவன் இராஜேந்திர சோழன். இராஜேந்திர சோழனை ஒரு போர்க்கள அடிக்ட் என்றே சொல்ல முடியும்.
அதேபோல, முகலாய அரசர்களில் பாபர், அக்பர், ஷாஜகானும் ஓயாமல் போர் புரிந்துக் கொண்டே இருந்தனர்.
பாபர், அக்பர், ஷாஜகானை விடவும் அதிக நாட்கள் வாழ்ந்தவர் அவுரங்கசீப். போக, தன்னுடைய 90 + வயதிலும், போர்க்களத்திற்கு யானை மீது வந்தார் என வரலாற்றிஞர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்.
தலைவர் கலைஞர் முதலமைச்சராய் இருந்த போது 1971ல் அவரைப் பற்றி மோசமான அவதூறை ஒரு வார இதழ்
கட்டுரையாய் வெளியிட்டது. அதை எழுதியவர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாயிருந்து காரோட்டி வேலைத் தவிர அனைத்துப் பதவிகளையும் அனுபவித்த ராஜாஜி என்றழைக்கப்பட்ட ராஜகோபாலச்சாரி என்ற மூன்றாம் தர வக்கீல்!
முதல்வர் கலைஞரைப் பற்றிய இந்தக் கடுமையான அவதூறுக்காக் மான நட்ட வழக்குத் தொடுத்திருக்கலாம். கலைஞர் செய்யவில்லை.
ஆனால் கடற்கரையில் தந்தைபெரியார் கூட்டம் போட்டு ராஜாஜியை மிகக்கடுமையாக கண்டித்தார். ராஜாஜி சொத்து குறித்தெல்லாம் விவராமாய்க் கேள்விகள் கேட்டார் பேச்சின்
உச்ச கட்டத்தில்
இந்தக் கேள்வியைக் கேட்கிற நான் யாரோ எவரோ அல்ல; தெரு பொறுக்கி அல்ல;
பச்சி காணா அல்ல; இந்த ராஜாஜிக்கு மாதம் ரூபாய் 250/- காங்கிரஸ் கமிட்டியிலிருந்து சம்பளம் கொடுத்து வவுச்சரில் கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்த பழைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவன் ராமசாமி நான் கேட்கிறேன்.