"அரசமரத்தை கைவிட்டு கால ஓட்டத்தில் பிள்ளையாரை மட்டும் பிடித்துக்கொண்டோம் காரணம்போய் காரியம்மட்டும் மிஞ்சிநிற்கிறது இப்போது...."

"ஒரு ஊரில் ஏழு அரசமரங்கள் இருந்தால் அங்கே மழைபெய்தேதீரும்" எனப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்....
நமது மண்ணின் மரங்களைப்பற்றி வரிசையாக எழுதினால் முதலில் அரசமரத்திலிருந்தே துவங்கவேண்டும் அதுதான் நல்ல ஆரம்பமாக இருக்கும் எனவே அரசமரத்திலிருந்தே துவங்குவோம்...
மரங்களுக்கெல்லாம் அரசன் அரசமரம். நன்கு வளர்ந்த அரசமரம், அதிகபட்சமாக சுமார் நூறு அடி உயரமும் பத்தடி குறுக்களவும் கொண்டவையாக வளரும் பெரியமரம் இது.
இவற்றின் பலனும் மிகப்பெரியது. அதனால்தான் நமது முன்னோர்கள் அவர்களின் வாழ்க்கையில்  இம்மரத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்துவந்துள்ளனர்...
எந்தச் சூழ்நிலையிலும் யாரும் இதை வெட்டிவிடவேகூடாது என்பதற்காகவே இதை வணக்கத்திற்குரிய கடவுள் நிலையில் வைத்திருந்தது தமிழ்ச்சமூகம்.
வேறு எந்தக்காரணத்தைச் சொன்னாலும் வெட்டிவிடுவார்களோ என்கிற அக்கறைகூட அதன்கீழே சாமிசிலைகளை நட வைத்திருக்கலாம். அவ்வளவு முக்கியத்துவமும் சிறப்பும் பெற்றதே இந்த அரசமரம்...
புத்தரிற்கு போதிமரத்தின் கீழ் ஞானம் கிடைத்ததாக சொல்லப்படுகிறது அந்த போதிமரம் வேறெதுவுமில்லை அரசமரம்தான்.ஆக்ஸிஜன் என்கிற பிராணவாயுதான் மூளைக்காண உணவு. வளர்சிதை மாற்றத்தில் சிதைகிற உடலை சரிகட்டுவதில்  பிராணவாயுவின் பங்கே மிகமிக அதிகம்.
பிராணன் என்கிற உயிர்வளியை நன்குவளர்ந்த ஒருமரம் நாளொன்றிற்கு சுமார் இரண்டாயிரத்து நானூறு கிலோவரை வெளியிடுகிறதாம்.ஒரு மனிதனுக்கு தேவையான உயிர்வளியின் அளவு நாளொன்றிற்கு எண்ணூறு கிராம். அப்படியானால் ஒரு மரம் எத்தனைபேருக்கு உதவுகிறது என கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இதை அரசமரம் என்பதில் தவறே இல்லை. மற்றொரு சிறப்பாக அரசமரமானது இரவுநேரத்திலும் பிராணவாயுவை வெளியிடுவதாக சொல்கிறார்கள்.

இவ்வளவு பெரியளவு உள்ள, உயிராற்றலின் கீழ் யார் தொடர்ந்து அமர்ந்திருந்தாலும் ஆரோக்கியமும், சிந்தனைத்தெளிவும்(ஞானம்)பெற்று புத்தனாகலாம் என்பதில் சந்தேகமில்லை !!!...
சும்மா மரத்தினடியில் இரு உடலின் ஆரோக்கிய குறைபாடு நீங்கும் எனச் சொன்னால் யாரும்பின்பற்ற மாட்டார்கள் என்பதாலோ என்னவோ அதை கடவுளாக்கி அதன்வேரினடியில் நீரைஊற்றி சுற்றிவா... என அதன்கீழே ஒரு சிலையையும் வைத்திருக்கின்றனர்.
நாமோ இன்று காரணத்தை மறந்து காரியத்தைமட்டும் செய்து கொண்டிருக்கும் போலி நாகரீகச்சமூகத்தில் இருக்கிறோம். மரத்தின் வேரைச்சுற்றிலும் கான்கிரீட் தளத்தைப்போட்டு அதன் குரல்வளையை நசுக்கிக் கொண்டிருக்கிறோம். அந்த இடத்தில் கொண்டாடப்படவேண்டிய பொருள் காணாமல் போய்விட்டது.
அரசமரத்தை கைவிட்டு கால ஓட்டத்தில் பிள்ளையாரைமட்டும் பிடித்துக்கொண்டோம் காரணம்போய் காரியம்மட்டும் மிஞ்சிநிற்கிறது இப்போது....

இந்த கோடையின் துவக்கத்திலேயே மிகுவெப்பத்தால் படுகிற வேதனையை அனுபவித்துக்
கொண்டிருக்கிறோம்.
அருகில் ஏதாவது அரசமரம் இருந்தால் அதனடியில் சிறிதுநேரம் அமர்ந்துபாருங்கள்.... அந்த சுகத்தை அனுபவிக்காதவர்கள் அனுபவித்துவிட்டு செல்லுங்கள். இயற்கையும் கோடைக்குத்தகுந்தபடி புதிய தளிர் இலைகளுடன் தயார்படுத்தியிருக்கும் அழகையும் கவனியுங்கள்....
அஸ்வத்தம்,

அச்சுவத்தம்,

திருமரம்,

போதி,

கவலை,

பேதி,

கணவம்,

சராசனம்,

மிப்பலம்...

இதுவெல்லாம் அரச மரத்தின் பெயர்கள்....
எல்லாப் பறவைகளும் இரவு அடைவதற்கு எல்லாமரங்களையும் தேர்ந்தெடுக்காது, ஆனால் பெரும்பாலான பல பறவைகள் இரவு இருப்பிடமாக பெரும்பாலும் அரசமரத்தை விரும்புகின்றன.
பல்லுயிர்ச்சூழல் பெருக்கத்தில் உதவுவதில் பெரும்பங்கைக் கொடுப்பது, அரச மரங்களே.இதன் பழங்களை பறவைகள் விரும்பி உண்ணும் என்பது இன்னும் சிறப்பு....
இனியாவது இதன் மகத்துவத்தை உணர்ந்து வேறு அன்னிய மரங்களைத் தவிர்த்து, வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் நமது மண்ணின் மரமான அரசமரத்தினை நட்டு இந்த பூமியை குளிர்வித்து, மழையை ஈர்த்து சுகமாக நல்ல காற்றினை வரும் தலைமுறையை சுவாசிக்கச் செய்வோம்.
நீரைப்போல் காற்றையாவது காசுகொடுத்து வாங்காமல் இருப்போம்... 🙏

#அரசமரம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Apr 14
*ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு #மத்திய_அரசின் #ஆயுஷ்மான் பவா பதக்கம் இப்போது ABHA ஹெல்த் கார்டாக மாற்றப்பட்டுள்ளது*

*இணையதளம் திறக்கப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்*
*5 லட்சம் சுகாதார காப்பீடு ரூ. கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண்ணை டைப் செய்தவுடன், ஆதார் கார்டு இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு OTP வரும், OTP-யை மீண்டும் தட்டச்சு செய்த பிறகு, உங்கள் தொலைபேசி எண்ணை தட்டச்சு செய்யுமாறு கேட்கப்படும்.
மேலும் பதிவுசெய்யப்பட்ட AYUSHMAN HEALTH புகைப்படத்துடன் கூடிய அட்டையை நீங்கள் உடனடியாக பதிவிறக்கம் செய்யலாம்.*
Read 8 tweets
Apr 14
#சோப_கிருது வருடத்தின் சில துளிகள்...

மங்கலம் அருளும் 'சோப கிருது' வருடம்- முத்திரை பதிக்க வரும் சித்திரை!*

"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி"யான நம் மக்களின் மொழி, தமிழ் மொழி! அப்படிப்பட்ட நம் பாரம்பரியமிக்க தமிழ் புத்தாண்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது!
எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் நம்முடைய பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கக்கூடியது தமிழ் புத்தாண்டுதான்.

கால நிலை, பருவ நிலை அடிப்படையில் நாம் தமிழ் புத்தாண்டை கொண்டாடுகிறோம்.

இந்த தமிழ் புத்தாண்டு பலநூறு வருடங்கள் சீரோடும், சிறப்போடும் கொண்டாடப்படுகிறது.
ஜோதிடத்தில் பன்னிரெண்டு ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில் சூரியன் புகும் நாளே தமிழ் புத்தாண்டாகும்.

தமிழ் நாள்காட்டி என்பது ராசி கட்டத்தை காலக்கணிப்பில் பயன்படுத்தும் சூரிய நாள்காட்டி என்பதால் தான் மேஷத்தில் சூரியன் நுழையும் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.
Read 25 tweets
Apr 14
*60 தமிழ் வருடங்கள்* 

01. பிரபவ - *நற்றோன்றல்*

Prabhava1987-1988

02. விபவ - *உயர்தோன்றல்*

Vibhava 1988–1989

03. சுக்ல - *வெள்ளொளி*

Sukla 1989–1990

04. பிரமோதூத - *பேருவகை*

Pramodoota 1990–1991 Image
05. பிரசோற்பத்தி - *மக்கட்செல்வம்*

Prachorpaththi 1991–1992

06. ஆங்கீரச - *அயல்முனி*

Aangirasa 1992–1993

07. ஸ்ரீமுக - *திருமுகம்*

Srimukha 1993–1994

08. பவ - *தோற்றம்*

Bhava 1994–1995

09. யுவ - *இளமை*

Yuva 1995–1996

10. தாது - *மாழை*

Dhaatu 1996–1997
11. ஈஸ்வர - *ஈச்சுரம்*

Eesvara 1997–1998

12. வெகுதானிய - *கூலவளம்*

Bahudhanya 1998–1999

13. பிரமாதி - *முன்மை*

Pramathi 1999–2000

14. விக்கிரம - *நேர்நிரல்*

Vikrama 2000–2001

Photo

15. விஷு - *விளைபயன்*

Vishu 2001–2002
Read 14 tweets
Apr 14
நவ பாஷாண திருமேனி;இரவில் பூசப்படும் சந்தனம்...

பழநி மலைக் கோவிலுக்குச் செல்வோர்,மயில் மண்டபத்தில் கூத்தாடும் பிள்ளையாரை வணங்கி,தொட்டியில் சிதறு தேங்காய் அடிக்கலாம்.

1 Image
தீப ஸ்தம்பம் மற்றும் வேல் கொடியுடன் ராஜ கோபுரம் தொழுது,தல விநாயகரின் முன் தோப்புக்கரணமிட்டு விட்டுச் செல்ல வேண்டும்.

2
மலைக் கோவில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.ராஜ கோபுரமும்,இரு புறமும் நாயக்கர் மண்டபங்களும்,42 கல் தூண்கள் கொண்ட பாரவேல் மண்டபமும் உள்ளன.கருவறை மீது தங்க விமானம் காட்சியளிக்கிறது.

3
Read 21 tweets
Apr 13
நாளைய தினம் அதாவது 14/4/2023 வெள்ளிக்கிழமை நவமி திதியில் திருவோண நட்சத்திரத்தில் மதியம் 1.58 நிமிடத்தில் சுக்ரஹோரையில் அமிர்தமான வேளையில் சோபக்ருது வருடம் பிறக்கிறது
சோபக்ருது வருஷம் உண்மையில் மிக சிறந்த வருஷம்

இந்த வருஷத்திற்கு ராஜா புதன் ( கல்வி) மந்திரி சுக்கிரன் ( நல்லதை செய்பவன்)

இந்த வருஷத்துக்கான பாடல்

ஸஹோஜஸம் சோபக்ருதம் ந்ருணாமிஷ்டதமாஸ்ரயே

ஷிபிகா வாஹனாரூடம் சாமரத்வய பாணிகம்
அதாவது சோபக்ருது வருஷ அபிமானி ஸஹௌஜன் என்னும் தேவதையைப் போற்றும் விதமாக இப் பாடல் உள்ளது

கன்னட தெலுங்கு வருட பிறப்பான யுகாதிக்கும்  தமிழ் வருடப் பிறப்புக்கும் என்ன வித்தியாசம் என்றால்
Read 13 tweets
Apr 13
அருள்மிகு மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் , சென்னை 

உள்கலந்து  ஏத்தவல்லார்க்கு  அலால்
     கள்ளம்   உள்ளவழிக் கசிவானவன்
     வெள்ளமும்  அரவும்  விரவும்  சடை
     வள்ளலாகிய   வான்மியூர்  ஈசனே  - திருநாவுக்கரசர்
             
1 Image
சென்னையில் சிறந்துவிளங்கும் சிவத்தலங்களில் முக்கியமானவை, வடக்கில் திருவொற்றியூர், மத்தியில் திருமயிலை, தெற்கில் திருவான்மியூர் ஆகும் . இதில்    திருமயிலையிலும்,  திருவான்மியூரிலும்  மூலவர்   மேற்கு  நோக்கி  உள்ளனர்.    

2
“அப்பைய” தீட்சிதர் என்ற பக்தர் ஒருவருக்கு காட்சி தருவதற்காக  திருவான்மியூரில்   மூலவர்    திரும்பியதால், இந்த ஆலய சிவபெருமான் மேற்கு திசையை பார்த்தவாறு இருக்கிறார்  என  கூறப்படுகிறது..
              
3
Read 40 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(