மங்கலம் அருளும் 'சோப கிருது' வருடம்- முத்திரை பதிக்க வரும் சித்திரை!*
"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி"யான நம் மக்களின் மொழி, தமிழ் மொழி! அப்படிப்பட்ட நம் பாரம்பரியமிக்க தமிழ் புத்தாண்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது!
எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் நம்முடைய பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கக்கூடியது தமிழ் புத்தாண்டுதான்.
கால நிலை, பருவ நிலை அடிப்படையில் நாம் தமிழ் புத்தாண்டை கொண்டாடுகிறோம்.
இந்த தமிழ் புத்தாண்டு பலநூறு வருடங்கள் சீரோடும், சிறப்போடும் கொண்டாடப்படுகிறது.
ஜோதிடத்தில் பன்னிரெண்டு ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில் சூரியன் புகும் நாளே தமிழ் புத்தாண்டாகும்.
தமிழ் நாள்காட்டி என்பது ராசி கட்டத்தை காலக்கணிப்பில் பயன்படுத்தும் சூரிய நாள்காட்டி என்பதால் தான் மேஷத்தில் சூரியன் நுழையும் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.
புத்தாண்டின் தொடக்கமாக சித்திரையில் தான் வேங்கை மரம் பூக்கும். தமிழ் புத்தாண்டின் சிறப்பை பற்றி சங்க இலக்கிய நூலான நெடுநெல்வாடையில் கூட மிகச்சிறப்பாக கூறப்பட்டுள்ளது.
சித்திரை நமக்கு மட்டுமல்ல இலங்கை, மியான்மர், கம்போடியோ உள்ளிட்ட நாடுகளுக்கும் சித்திரை ஒன்றுதான் புத்தாண்டு!
தமிழ் வேந்தர் ராஜராஜ சோழன் எந்தந்த நாடுகளை ஆண்டாரோ அங்கெல்லாம் சித்திரை ஒன்றுதான் புது வருடப்பிறப்பு.
இப்படி அற்புதமான சிறப்புகள் வாய்ந்த தமிழ் புத்தாண்டு இந்த வருடம் எப்படி இருக்கும் என பார்ப்போம்.
வரப்போகிற தமிழ் புத்தாண்டான சோபகிருது வருடம் அனைவருக்கும் ஒரு அற்புதமான வருடமாக இருக்கப்போகிறது.
இந்த சோப கிருது வருடம் அறுபது ஆண்டு கணக்கு சுழற்சியில் வரும் 37வது ஆண்டு ஆகும்.
சோபகிருது வருடத்தில் புதன் ராஜவாகவும் ராஜாபதியாகவும் வருவதால் நாட்டில் கல்வி, கலைகள்,தொழில்கள் செழிக்கும்.
இந்த வருடம் திரைத்துறையினருக்கு ஒரு அற்புதமான வருடமாக அமையும். குறிப்பாக நகைச்சுவை நடிகர்களுக்கு நல்ல ஆண்டாக அமையும்.
அனைத்து வகை பயிர்களும் செழிப்பாக வளர்ந்து நல் விளைச்சலை கொடுக்கும்.
அருமையாக மழை பொழிந்து நாடு செழிக்கும். அனைத்து துறையினரும் மேன்மை அடைவார்கள்.
ஆன்மிகமும், ஜோதிடமும் செழிக்கும். தொழில்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் மேன்மை பெறும்.
இந்த ஆண்டு 5 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு உண்டு.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலான மழை உண்டு குறிப்பாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் நல்ல மழையை பெறும். தானிய உற்பத்தி, உப்பு உற்பத்தி அதிகரிக்கும்.
மருத்துவ துறையில் புது கண்டுபிடிப்புகள் உண்டாகும். சில நேரங்களில் மருந்து பற்றாக்குறை ஏற்படும்.
மந்திரியாகவும் அர்க்காதிபதியாகவும் சுக்கிரன் வருவதனால் நீர்வளம் பெருகும். ஏரி, குளங்கள், நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் உயரும். பணப்பயிர்களும், நவதானியங்களும் நல்ல விளைச்சல் உண்டாகும்.
விவசாயம் செழிக்கும். நாட்டு மக்கள் சுகத்துடனும், மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.
பட்டுசேலை, நகை, ஆடை ஆபரண தொழில் செய்பவர்கள் வளர்ச்சியடைவார்கள்.
சேனாதிபதியாகவும் மேகாதிபதியாகவும் குரு வருவதனால் அனைத்து நாடுகளிலும் சண்டை சச்சரவுகள் இல்லாமல் சமாதானம் உருவாகும்.
எல்லை பிரச்சினைகள் தீரும். உலகில் சண்டை சச்சரவுகள் நீங்கி சமாதானமும், அமைதியும் உண்டாகும்.
தானியாதிபதியாக சனி வருவதனால் எள், உளுந்து போன்ற கருப்பு வகை தானியங்கள் நன்றாக விளையும்.
பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகள் நல்ல விளைச்சலை தரும். அதேபோல் பருத்தியும் அமோக விளைச்சலை கொடுக்கும்.
இந்த சோபகிருது வருடத்தில் மொத்தம் 4 கிரகணங்கள் நடக்க உள்ளது.
அதில் 3 சூரிய கிரகணம், ஒரு சந்திர கிரகணம் வர உள்ளது.
இந்த மூன்று சூரிய கிரகணமும் இந்தியாவில் தெரிய வாய்ப்பில்லை.
சந்திர கிரகணம் மட்டும் இந்தியாவில் தெரியும்.
இந்த தமிழ் புத்தாண்டில் புதிதாக தொழில் தொடங்க சிறந்த நாளாகும். இன்றைய நாளில் தொழில் தொடங்கினால் அபார வளர்ச்சி கிடைக்கும்.
அதே போல் தொழில் துறையினர், கல்வி கற்றபவர்கள், விவசாயிகள் இன்றைய தினம் புதிய முயற்சியை தொடங்கினால் வெற்றி கிடைக்கும்.
பண்டிகைகள் என்பது நம்முடைய பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கக்கூடியது! பண்டிகைகள் கொண்டாடுவதின் நோக்கமே பழைய துன்பங்களை மறந்து புதிதாக வாழ்வை தொடங்க வேண்டும் என்பதற்காகதான்.
நாம் அனைவரும் வரும் தமிழ் புத்தாண்டில் பழைய கசப்பான விசயங்களை மறந்து, துன்பங்களை மறந்து நல்ல தூய மனதோடு இந்த புத்தாண்டை கொண்டாடுவோம்.
கண்டிப்பாக இந்த வருடம் அனைவருக்கும் சிறப்பான வருடமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை! 🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
*ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு #மத்திய_அரசின்#ஆயுஷ்மான் பவா பதக்கம் இப்போது ABHA ஹெல்த் கார்டாக மாற்றப்பட்டுள்ளது*
*இணையதளம் திறக்கப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்*
*5 லட்சம் சுகாதார காப்பீடு ரூ. கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண்ணை டைப் செய்தவுடன், ஆதார் கார்டு இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு OTP வரும், OTP-யை மீண்டும் தட்டச்சு செய்த பிறகு, உங்கள் தொலைபேசி எண்ணை தட்டச்சு செய்யுமாறு கேட்கப்படும்.
மேலும் பதிவுசெய்யப்பட்ட AYUSHMAN HEALTH புகைப்படத்துடன் கூடிய அட்டையை நீங்கள் உடனடியாக பதிவிறக்கம் செய்யலாம்.*
"அரசமரத்தை கைவிட்டு கால ஓட்டத்தில் பிள்ளையாரை மட்டும் பிடித்துக்கொண்டோம் காரணம்போய் காரியம்மட்டும் மிஞ்சிநிற்கிறது இப்போது...."
"ஒரு ஊரில் ஏழு அரசமரங்கள் இருந்தால் அங்கே மழைபெய்தேதீரும்" எனப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்....
நமது மண்ணின் மரங்களைப்பற்றி வரிசையாக எழுதினால் முதலில் அரசமரத்திலிருந்தே துவங்கவேண்டும் அதுதான் நல்ல ஆரம்பமாக இருக்கும் எனவே அரசமரத்திலிருந்தே துவங்குவோம்...
மரங்களுக்கெல்லாம் அரசன் அரசமரம். நன்கு வளர்ந்த அரசமரம், அதிகபட்சமாக சுமார் நூறு அடி உயரமும் பத்தடி குறுக்களவும் கொண்டவையாக வளரும் பெரியமரம் இது.
தீப ஸ்தம்பம் மற்றும் வேல் கொடியுடன் ராஜ கோபுரம் தொழுது,தல விநாயகரின் முன் தோப்புக்கரணமிட்டு விட்டுச் செல்ல வேண்டும்.
2
மலைக் கோவில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.ராஜ கோபுரமும்,இரு புறமும் நாயக்கர் மண்டபங்களும்,42 கல் தூண்கள் கொண்ட பாரவேல் மண்டபமும் உள்ளன.கருவறை மீது தங்க விமானம் காட்சியளிக்கிறது.
நாளைய தினம் அதாவது 14/4/2023 வெள்ளிக்கிழமை நவமி திதியில் திருவோண நட்சத்திரத்தில் மதியம் 1.58 நிமிடத்தில் சுக்ரஹோரையில் அமிர்தமான வேளையில் சோபக்ருது வருடம் பிறக்கிறது
சோபக்ருது வருஷம் உண்மையில் மிக சிறந்த வருஷம்
இந்த வருஷத்திற்கு ராஜா புதன் ( கல்வி) மந்திரி சுக்கிரன் ( நல்லதை செய்பவன்)
இந்த வருஷத்துக்கான பாடல்
ஸஹோஜஸம் சோபக்ருதம் ந்ருணாமிஷ்டதமாஸ்ரயே
ஷிபிகா வாஹனாரூடம் சாமரத்வய பாணிகம்
அதாவது சோபக்ருது வருஷ அபிமானி ஸஹௌஜன் என்னும் தேவதையைப் போற்றும் விதமாக இப் பாடல் உள்ளது
கன்னட தெலுங்கு வருட பிறப்பான யுகாதிக்கும் தமிழ் வருடப் பிறப்புக்கும் என்ன வித்தியாசம் என்றால்
சென்னையில் சிறந்துவிளங்கும் சிவத்தலங்களில் முக்கியமானவை, வடக்கில் திருவொற்றியூர், மத்தியில் திருமயிலை, தெற்கில் திருவான்மியூர் ஆகும் . இதில் திருமயிலையிலும், திருவான்மியூரிலும் மூலவர் மேற்கு நோக்கி உள்ளனர்.
2
“அப்பைய” தீட்சிதர் என்ற பக்தர் ஒருவருக்கு காட்சி தருவதற்காக திருவான்மியூரில் மூலவர் திரும்பியதால், இந்த ஆலய சிவபெருமான் மேற்கு திசையை பார்த்தவாறு இருக்கிறார் என கூறப்படுகிறது..