ரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும். அன்று தொடங்கப்படும் செயல்கள் சிறப்பானதாக அமையும். இறைவனை முழு மனதோடு வழிபட ஏராளமான நன்மை நமக்கு ஏற்படும்.
அட்சய திருதியையின் முக்கியத்துவத்தை, பெருமைகளை #பவிஷ்யோத்தர_புராணம்
விரிவாக சொல்கிறது.
அட்சய திருதியை அன்று தான் கிருதயுகம் பிறந்தது.
கங்கை, பூமியை முதல் முதல் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.
வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை அன்று தான்.
இந்நன்நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.
மகாலட்சுமி
அவதரித்த நன்னாளும் இத்தினத்தில் தான்.
இத்தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை பெற்றார்.
சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றதும் இத்தினத்தில் தான்.
பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளை, மூலிகைச் செடிகளைஉருவாக்கியவர் என்று புராணம்
சொல்கிறது. அட்சய திருதியை அன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.
மகா விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமர் அவதரித்ததும் இத்தினத்தில் தான்.
அட்சய திருதியை நாளில் தான் விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார்.
வடமாநிலங்களில் அட்சய திருதியை அன்று திருமணம் நடத்துவதை
புனிதமாக கருதுகிறார்கள்.
அரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட் இனற்றவர் இத்தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வார்கள்.
வடஇந்தியர்கள் நீண்டதூர புனித பயணங்களை அட்சய திருதியை நாளில் தான் தொடங்குவார்கள்.
ஒரிஸாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாள்!
பீகார், உத்தரபிரதேசத்தில் நெல் விதைப்பை அட்சய திருதியை அன்று தொடங்குவார்கள்.
தேவி அன்னபூரணி அவதரித்ததும் இத்திருநாளில் தான்.
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால் கூட போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும்.
இத்தினத்தன்று தான் பிரம்மா, உலகை
படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
அட்சய திருதியை நாளில் தான் மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரர் மணந்தார்.
அமாவாசைக்கு 3-வது நாள் அட்சய திருதியை 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு #பொன்னன் என்ற பெயரும் உண்டு. இதனால் தான்
அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.
ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை அன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார்.
அரிதான வேலையை சந்திப்பதை `அலப்ய
யோகம்‘ என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும், ஆகவே அரிதான அட்சய திருதியை தவற விட்டால் பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.
அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு `அட்சதை’ என்று பெயர். சதம் என்றால் அடிப்பட்டு ஊனமாகாதது என்றும் அர்த்தம் உண்டு. அட்சதையால்
அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்கு `அட்சய திருதியை’ எனும் பெயர் அமைந்ததாகவும் சொல்கிறது புராணம்.
அட்சயதிருதியை தினத்தை சமணர்கள் #அட்சய_தீஜ் என்று அழைக்கிறார்கள்.
ரிஷபதேவர் எனும் தீர்த்தங்கரரின் நினைவு நாளாக அட்சய திருதியையை சமணர்கள் அனுசரிக்கிறார்கள்.
அட்சய திருதியை
விரதத்தை முதன் முதலில் கடைபிடித்தவர் மகாதயன் என்ற வியாபாரி ஆவார்.
மகாலட்சுமியின் பரிபூரண அருளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியையின் முக்கிய நோக்கமாகும்.
அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்.
குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப் பியாசம் செய்யும் சடங்கு `அட்சய திருதியை’ நாளில் செய்யப்படுகிறது
கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைநர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில்
இத்தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
இத்தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். 3000 மடங்கு உயர்வு. எனவே
அட்சய திருயை தினத்தன்று செய்யப் படும் பித்ருகடன் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
வாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் இந்நாளில் கூடுதல் பலன்களை தரும்.
மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை அன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது
கணக்கு தொடங்குகிறார்கள்.
ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை அன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை அன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம்
தரும்.
அட்சய திருதியை அன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது.
அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கிப் போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், #கனகதாரை நிச்சயம்.
மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில்
வைத்தால் கண் திருஷ்டி கழியும்.
அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும்.
இத்தினம் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும்.
அட்சய திருதியை அன்று சிவனே, அன்னபூரணியிடம் உணவு பெற்றதால் நமசிவாய மந்திரம் அன்று முதல் சொல்லத் தொடங்கலாம். பிறகு தினமும் 108 தடவை ஓம் நமச்சிவாய சொல்லி வந்தால் பார்வதி பரமேஸ்வரரின் அருள் கிடைக்கும்.
இத்தினத்தில் பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல்
புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.
கர்நாடகத்தில் அட்சய திருதியை அன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கௌரியை எழுந்தருளச் செய்து சொர்ணகௌரி விரதம் கடை பிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக ஐதீகம்
அட்சய திருதியை அன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் கருடவாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம்
ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
அட்சய திருதியை அன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும்
பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத் தருவது சிறப்பு.
அட்சய திருதியை நாளில் `வசந்தமாதவாய நம’ என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபட நன்மை பெருகும். முக்கியமான ஒன்று, தானம் செய்ய உகந்த நாளில் தங்கம், வெள்ளி வாங்கி சேமிப்பில்
#அர்ச்சகர்_சம்பள_உயர்வு
பகவத் இராமானுஜரின் ஐந்து ஆச்சார்யர்களில் ஒருவரான #ஸ்ரீபெரியநம்பிகளின் வம்ஸத்தில் வந்தவர் ஸ்ரீநரஸிம்மகோபாலன். தன் தந்தையின் மறைவுக்குப் பின்னர், இவர் தனியொருவராக, #மன்னார்கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீராஜகோபால ஸ்வாமி கோயிலில் அர்ச்சகராகக் கைங்கர்யம் செய்து
வருகிறார். அற்ப மாத சம்பளமான ரூ250ஐப் பெற்றுக் கொண்டு, இவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம். தம்மைப் போல பகவத் கைங்கர்யம் செய்து வருகின்ற அனைவரையும் கருத்தில் கொண்டு, இவர் மதுரை நீதிமன்றத்தில் நியாயம் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். எத்தனையோ வாத ப்ரதிவாதங்களையும், தள்ளி வைப்புகளையும
கொண்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இவருக்கு தற்சமயம் நீதி கிடைத்து இருக்கிறது. குறைந்த பட்ச ஒரு நாளைய சம்பளத்தின் அடிப்படையில், இவருக்கு மாதச் சம்பளமாகச் சுமார் ரூபாய் பதினாறாயிரம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பாகியுள்ளது. அது மட்டுமன்றி 2019ம் வருடத்திலிருந்து இந்த வரையறுக்கப்பட்ட
உன்மையா கதையா என்று தெரியாது. அது பகவான் கிருஷ்ணனுக்கும் இந்த @tskrishnan குமே வெளிச்சம் :) படித்ததை பகிர்கிறேன்!
பாண்டிய மாமன்னன் ராஜெந்திரன் சிவ பெருமான் மீது மிகுந்த மன வருத்தத்துடன் இருந்தான். பட்டத்தரசி சுவர்ண மீனாட்சி எத்தனையோ முறை ஆலய தரிசனத்திற்கு அழைத்துப் பார்த்தாள்.
அவன் பிடிவாதமாக மறுத்து விட்டான். “தேவி, நீ சென்று சொக்கநாதனை வணங்கி வா நான் தடுக்கவில்லை. ஆலயத்திற்கு அளிக்க வேண்டிய எந்த உதவிகளையும் நான் நிறுத்தவில்லை. ஆனால், சொக்கேசனை வணங்கும்படி மட்டும் என்னை வற்புறுத்தாதே” என்று உறுதிபடக் கூறிவிட்டான்.
“அப்படி என்னதான் சிவன் மீது கோபம்?”
என்று வினவினாள் பாண்டிமாதேவி.
ராஜேந்திர பாண்டியனின் தந்தை குலபூஷண பாண்டியன் காலத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சோழர்கள் அப்போது காஞ்சியிலிருந்து ஆண்டு கொண்டிருந்தனர். சோழன் சிவநேசனுக்கு மதுரை சென்று ஆலவாய் அண்ணலைத் தரிசிக்க வேண்டுமென்று ஆவல். ஆனால் பாண்டியனோடு பகை. எப்படி அங்கு
பெரியவாள், தன் பரிவாரத்துடன் சென்று கொண்டிருந்தார். வழியிலே திருக்களம்பூரில் குடிசையில் வாழும் பரம ஏழைகள் குடியிருப்பு வந்தது. அக்காலங்களில் அவர்களுக்கே இருந்த, அதிவினய பயபக்தியுடன் கைகூப்பி நின்றார்கள். காணிக்கையும் கூட சமர்ப்பித்தார்கள். தீனதயாளனின் இயற்கைக் கருணை மேலும் பெருக,
அவர்களது நலன்களை, நலனின்மையையும் கேட்டுக் கொண்டார். ஓடாமல், பறக்காமல், நின்று நிதானமாக! இல்லாத நலன்களை இருக்குமாறு நிறைவேற்றித் தர, மடத்தால் என்ன ஆகுமோ, மடம் பரிந்துரைத்தால் பிரமுகர்களாலும் துரைத்தனத்தாராலும் என்ன ஆகுமோ, எல்லாவற்றையும் மானேஜரிடம் விவாதித்து முடிவு செய்தார்.
#சூட்சுமபுரீஸ்வரர்_கோவில் திருச்சிறுகுடி செவ்வாய் தோஷ பரிகாரத் தலம். நவகிரகத் தலங்களில் செவ்வாய்க்குரிய தலங்களில் பாடல் பெற்ற தலம் இது ஒன்றுதான். இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.
இறைவன் பெயர்: சூட்சுமபுரீஸ்வரர், மங்களநாதர்
இறைவி பெயர்: மங்களநாயகி
ஒரு முறை,
கயிலாயத்தில் பரமசிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினார்கள். அதில பார்வதி வெற்றிபெற்றாள். அதனால் வெட்கம் அடைந்த சிவபெருமான் எங்கோ மறைந்து விட்டார். கலக்கமடைந்த பார்வதி, சிறுகுடி தலத்துக்கு வந்து மங்கள தீர்த்தத்தை உண்டாக்கி, தன் கையால் பிடி மணலை எடுத்து அதை சிவலிங்கமாகப் பிடித்து
வைத்து வழிபட்டாள். அம்பாளுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்து அவளை மீண்டும் ஏற்றுக் கொண்டதாக தலபுராணம் கூறுகிறது. சிறுபிடி என்பது மருவி சிறுகுடி என்றாயிற்று. திருக்கயிலையில் இருக்கும் இறைவன் சூட்சுமமாக மறைந்து இங்கு மீண்டும் தோன்றியதால் இத் தலத்துக்கு சூட்சுமபுரி என்றும், இறைவனுக்கு
#Food_For_Thought
One person wrote to the editor of a daily thus: "I have gone to temples for 30 years now, and in that time I have heard something like 3,000 Satsangs, but for the life of me, I can't remember a single one of them. So, I think I'm wasting my time. The elders and
priests are wasting their time by preaching to us about the presence of God."
This started a real controversy in the "Letters to the Editor" column. Much to the delight of the editor, it went on for weeks until someone wrote this clincher:
"I have been married for 30 years now.
In that time my wife has cooked some 32,000 meals. But, for the life of me, I cannot recall the entire menu for a single one of those meals. But I do know this. They all nourished me and gave me the strength I needed to do my work. If my wife had not given me these meals, I
இறைவனுக்கு நம் நன்றியை அர்ப்பணிக்கவே கோயில்களை அமைக்கிறோம். ஆனால், பொதுவாக நம் குறைகளை நிவர்த்தி செய்து தரும்படியே பகவானிடம் வேண்டிக் கொள்கிறோம். சில சமயங்களில் நிவர்த்தி உண்டாகிறது. சில சமயங்களில் நம் விண்ணப்பம் நிறைவேறுவதில்லை.
நாம் பிரார்த்தனை செய்தும்
பலனில்லை என்றால் கடவுளுக்கு கருணை இல்லையா என்று தோன்றும். நம் பூர்வ ஜென்மவினைப் பயனால் தான் துன்பம் ஏற் படுகிறது. பகவான் நாம் விரும்பும் பிரார்த்தனைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டு இருந்தால், மேலும் மேலும் அது வேண்டும் இது வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டே இருப்போம்.
விருப்பங்கள் நிறைவேற நிறைவேற, ஆசைகள் பெருகிக்கொண்டே இருக்கும். அதே நேரம், தம்மிடம் நம்பிக்கை இருக்கும்படியாக செய்வதற்காக, இறைவன் அவ்வப்போது, நம் விருப்பங்களை நிறைவேற்றியும் தருவார்.
பகவானிடம் நம் விருப்பங்களை வேண்டி நிற்பதில் மேலான ஒரு நன்மை இருக்கிறது. ஆரம்பத்தில் நம் மனக்