சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது.
சோம வார பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகி வாழ்வில் இன்பம் பெறலாம்.
சந்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சோமவார பிரதோஷ நாளில் ( இன்று ) சிவ தரிசனம் செய்யலாம்.
சோம வார பிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப் பலனைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை.
நாள் முழுக்க நீர் ஆகாரத்தை தவிர வேறு எதையும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும்.
நெற்றியில் திருநீறு அணிந்து சிவன் நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும்.
மாலை சிவன் கோவிலிற்கு சென்று ஒரு கைப்பிடி காப்பரிசி ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்திக்கு அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால் சகல துன்பங்களும் விலகி போகும்.
நமது மூதாதையருக்கு தலைமுறை தாண்டி திதி கொடுக்காமல் இருந்திருந்தால் வாழ்வில் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாமையான ஒரு சூழல் அதாவது காரணமின்றி தொடர் நஷ்டங்களும், கஷ்டங்களும் வந்து அதனை சரி செய்ய முடியாத நிலையும் ஏற்படும்.
இதனை பித்ரு தோஷம் என்று சொல்வார்கள்.
இதற்கு பித்ரு சாந்தி செய்ய வேண்டும்.
திதி என்பது மூதாதையரின் ஆன்மா சாந்தி அடைய மூதாதையரின் (இறந்த பின் எரித்த) சாம்பலை வைத்து கொடுக்கபடுவது.
ஆண்டுகள் கழிந்த பின் இப்போது கொடுக்க நினைத்தால் அவரது மூதாதையரின் சாம்பல் எங்கிருந்து கிடைக்கும்.
இறந்து பல வருடங்கள் கழிந்த பின் எங்கே போவது சாம்பலுக்கு ?
அதனால் அவர் காசி யாத்திரை புறப்படும் நாளுக்கு பத்து நாட்கள் முன்னதாக இராமேஸ்வரம் செல்ல வேண்டும்.
அம்மனின் சக்தி பீட வரிசையில் நேபாள நாட்டில் முஸ்தாங் மாவட்டத்தில் இமயமலை,
முக்திநாத் பள்ளத்தாக்கில் உள்ள ஸ்ரீ தேவி நாச்சியார் சமேத முக்திநாதர் கோவில்,
பிரதான கோவிலாகப் போற்றப்படுகிறது.
3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த இந்து, பௌத்தர்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் இத்தலம்,