அன்பெழில் Profile picture
Apr 18 16 tweets 4 min read Twitter logo Read on Twitter
#சூட்சுமபுரீஸ்வரர்_கோவில் திருச்சிறுகுடி செவ்வாய் தோஷ பரிகாரத் தலம். நவகிரகத் தலங்களில் செவ்வாய்க்குரிய தலங்களில் பாடல் பெற்ற தலம் இது ஒன்றுதான். இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.
இறைவன் பெயர்: சூட்சுமபுரீஸ்வரர், மங்களநாதர்
இறைவி பெயர்: மங்களநாயகி
ஒரு முறை, Image
கயிலாயத்தில் பரமசிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினார்கள். அதில பார்வதி வெற்றிபெற்றாள். அதனால் வெட்கம் அடைந்த சிவபெருமான் எங்கோ மறைந்து விட்டார். கலக்கமடைந்த பார்வதி, சிறுகுடி தலத்துக்கு வந்து மங்கள தீர்த்தத்தை உண்டாக்கி, தன் கையால் பிடி மணலை எடுத்து அதை சிவலிங்கமாகப் பிடித்து Image
வைத்து வழிபட்டாள். அம்பாளுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்து அவளை மீண்டும் ஏற்றுக் கொண்டதாக தலபுராணம் கூறுகிறது. சிறுபிடி என்பது மருவி சிறுகுடி என்றாயிற்று. திருக்கயிலையில் இருக்கும் இறைவன் சூட்சுமமாக மறைந்து இங்கு மீண்டும் தோன்றியதால் இத் தலத்துக்கு சூட்சுமபுரி என்றும், இறைவனுக்கு Image
சூட்சுமபுரீஸ்வரர் என்றும் பெயர்கள் உண்டாயின. இறைவன் சிறுகுடியீசர், மங்களநாதர் என்ற மற்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். இங்குள்ள நவகிரக மண்டபத்தில் ஞானசம்பந்தர் குழந்தை உருவில் கையில் பால் கிண்ணத்துடன், இடுப்பில் அரைஞாண் கயிறு, கழுத்து மாலையுடன் அழகாகக் காட்சியளிக்கிறார். Image
முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் மங்களநாயகி சந்நிதி உள்ளது. அபய வரதத்துடன் நின்ற திருக்கோலத்தில் அம்பாள் காட்சி அளிக்கிறாள். இத்தலத்தில் அம்பாளுக்குத் தான் அபிஷேகம் நடைபெறுகிறது. முன் மண்டபம் வழியே உள்ளே சென்றால் நேரே மூலவர் சூட்சுமபுரீஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. மூலவர் Image
திருமேனி சிறியது. அம்பிகை கைப்பிடியளவு மணலால் பிடித்துவைத்து மங்கள தீர்த்தம் உண்டாக்கி வழிபட்ட தலம். சிறுகுடியீசர் என்ற பெயருக்கேற்றவாறு மிகச் சிறிய லிங்கம். ஒருபிடி அளவே உள்ள மண் லிங்கம் ஆதலால் இதற்கு அபிஷேகம் கிடையாது. சிவலிங்கத்தின் நெற்றியில் பள்ளமும் இருபுறமும் கைபிடித்த
அடையாளமும் உள்ளது. இறைவனை அம்பிகை ஆலிங்கனம் செய்து கொண்டதால் இத்தழும்புகள் உண்டானது என்பர். லிங்கத் திருமேனி எப்போதும் கவசம் சாத்தியே வைக்கப்பட்டுள்ளது. இத்திருத்தலத்தில் செவ்வாய் பகவான் இறைவனை வழிபட்டுள்ளார். அதனால் தான் இறைவனுக்கு இன்னொரு பெயர் ஸ்ரீ மங்களநாதர். அங்காரகனுக்கு தன
ி சந்நிதி உள்ளது. செவ்வாய்தோஷம் உடையவர்கள்திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால், அங்காரக தோஷம் நிவர்த்தியாகிறது என்பது இங்கு பிரசித்தம். செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்வது விசேஷமானது. ஆலயத்துக்கு வெளியே, நேர் எதிரே உள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடி கோயிலுக்குச் சென்று அங்காரகனை
வழிபட்டு வந்தால், செவ்வாய் தோஷங்கள் நீங்கிநலம் பெறலாம். வேற்று மதத்தினர்கள்கூட இங்கு வந்து செவ்வாய் தோஷம் நீங்க வழிபடுவதைப் பார்க்கலாம். திருஞானசம்பந்தர் தமது 12-வது வயதில் பல்லக்கில் வந்து, இங்குள்ள சுவாமியை தரிசனம்செய்திருக்கிறார். அவர் வருகையை அறிந்த திருநாவுக்கரசர், ‘வயதில்
சிறியவராக இருந்தாலும் அவருக்கு இறைவன் அருள் புரிந்திருக்கிறான். அவரை நாமும் தரிசிக்கவேண்டும்’ என்று நினைத்தவர், திருஞானசம்பந்தரை தரிசித்ததுடன், அவருடைய பல்லக்கையும் சுமந்து வந்தார். அதை அறியாத திருஞானசம்பந்தர், ‘சிவனடியார் திருநாவுக்கரசரை சந்திக்க திருவிழிமழலைக்குச் செல்லுங்கள்’
என்று கட்டளையிடுகிறார். ‘அடியேன் இங்குதான் இருக்கிறேன்’ என்று நாவுக்கரசர் சொல்ல, அதிர்ந்து போன ஞானசம்பந்தர், கீழே இறங்கி ‘என்னை நீங்கள் சுமப்பதா?’ என்று கூறி காலில் விழுந்து வணங்கி இருக்கிறார்.  இந்த அரிய நிகழ்வு நடந்த தலம் இது. சோழர்கள் கட்டிய கோயில் இது. சங்க இலக்கியங்களில்
புறநானூற்று நூலில்  புகழ்ந்து கூறப்படும் ‘பண்ணன்’ என்னும் கொடைவள்ளல் பிறந்த தலமும் ஆகும். திருஞான சம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம், 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. முதல் பாடலில் சிறுகுடி இறைவனை வழிபடுவர்கள் இவ்வுலகுக்கு அப்பால் உள்ள சிவலோகத்தை அடைவார்கள்
என்று குறிப்பிடுகிறார். தனது பதிகத்தின் 11-வது பாடலில், தேன் வண்டுகள் விரும்பும் பொழில் சூழ்ந்த சிறுகுடி என்று பாடியுள்ளார். அந்தக் கூற்றை மெய்ப்பிப்பது போன்று இன்றும் இவ்வாலயத்தின் இறைவனுக்கு முன் உள்ள மண்டபத்தில் ஒரு தேன்கூடு இருப்பதைப் பார்க்கலாம். சாளரம் அமைத்து அதன் வழியே
வெளியிலிருந்து தேனீக்கள் வந்துபோகுமாறு செய்துள்ளனர், மண்டபத்தின் உட்புறத்தில் இரும்பு வலை போட்டுப் பாதுகாக்கப்பட்டு உள்ளது. கும்பகோணம் - நாச்சியார்கோவில் - கூந்தலூர் - பூந்தோட்டம் சாலையில், கூந்தலூர் கடந்து கடகம்பாடியை அடைந்து, அங்கிருந்து வடக்கே அரசலாற்றுப் பாலம் தாண்டி, 3 கி.மீ
தொலைவில் சிறுகுடி தலம் இருக்கிறது. திருபாம்புரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற தலத்திலிருந்து மேற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரளத்தில் இருந்தும் திருபாம்புரம் வழியாக இத்தலத்துக்கு வர சாலை வசதி உள்ளது. காலை 6 .00 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, மாலை 5 முதல் மாலை 7 .00 மணி வரை நடை Image
திறந்திருக்கும்.
Contact Number: விஸ்வநாத குருக்கள் – 04366 -291646
ஓம் நமசிவாய

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Apr 19
#பிண்டம்_வைத்த_பெருமாள் #ஸ்ராத்த_ஸம்ரட்சண_பெருமாள்
#ஶ்ரீலட்சுமிநாராயணர்
எல்லோரும் பெற்றோர்கள் இருக்கும் வரை அவர்களை சரியான முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று மட்டும் நினைக்கிறார்கள். இருக்கும் வரை எவ்வாறு சரியாக கவனித்துக் கொண்டோமோ, அவர்களின் காலம் கடந்த பின் செய்ய Image
வேண்டியவைகளையும் தெரிந்து கொண்டு நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும். முக்கியமாக ராமேஸ்வரம், காசி, கயா மற்றும் புனித தலங்களுக்கு சென்று மறைந்த முன்னோர்களுக்காக சில சடங்குகள் செய்ய வேண்டும். அவற்றை செய்ய எல்லோருக்கும் வசதி இருக்காது. செங்கல்பட்டு அருகில் #நென்மேலி என்ற திருத்தலம் Image
உள்ளது. இது எளியவர்களின் #கயா என்று கூறப்படுகிறது. இங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் சன்னதி நெடுங்காலமாக பெரியோர்களால் வணங்கப்படுகிறது. இந்த சன்னதியில் உள்ள உற்சவ மூர்த்தி #ஸ்ராத்த_ஸம்ரக்ஷண_நாராயணர் என்னும் திருநாமமும் இந்த கிராமத்திற்கு புண்டரீக நல்லூர்,
Read 16 tweets
Apr 19
வடைந்தியர்கள் கொண்டாடும் #ஹோலி பண்டிகை எப்படி வந்தது?
பிரகலாதன் திருமாலின் தீவிர பக்தன்.
ஆனால் அவனது தந்தை இரணியன் தீவிர கடவுள் மறுப்பாளான இருந்தான்.
இவனது தங்கை பெயர் #ஹோலிகா இவளிடம் விசேஷ துப்பட்டா ஒன்று இருந்தது. இதனை அவளைத் தவிர வேறு யாரேனும் போர்த்தினால் அது அவர்களை பொசுக்கி Image
விடும் தன்மை கொண்டது. தனக்கு பிடிக்காதவர்களை தன் துப்பாட்டாவால் போர்த்தி அவர்களை அழித்து வந்தாள். இதனால் ஹோலிகாவைக் கண்டால் மக்கள் ஓடி ஒளியது துவங்கினர். தன்னை வணங்க மறுத்த தன் மகன் பிரகலாதனை விசேஷ துப்பட்டாவால் கொல்ல முடிவு செய்தான் இரணியன். தன் தங்கையை அந்த விசேஷ துப்பட்டா
அணிந்து வரச் செய்து, அவளின் மடியில் தன் மகன் பிரகலாதனை அமரச் செய்தான். தந்தை சொல் கேட்டு அந்த துப்பட்டா மீது அமர்ந்தான். நெருப்பு பற்றத் துவங்கியது. இந்த சமயத்தில் திருமால் கருணையால் ஒரு பெருங்காற்று அடித்து பிரகலாதனை தீயினிலிருந்து காத்தது. ஆனால் துப்பட்டா அணிந்து இருந்த ஹோலிகா Image
Read 5 tweets
Apr 18
#இருகூர்_ஒண்டிப்புதூர்_நீலகண்டேஸ்வரர் ஆலயம் கோயம்பத்தூர்
மூலவர்: நீலகண்டேஸ்வரர், சவுந்தர்யேஸ்வரர்
அம்மன்: சுயம்வர பார்வதி தேவி மீனாட்சியம்மன்
இக்கோவில் 3000 வருட பழமையானது. நீலகண்டேஸ்வர லிங்கம் சுயம்புவாக தோன்றியது. உத்தம சோழன் செப்பேடு, மார்க்கண்டேய பண்டிதர் மடம் செப்பேடு, ImageImage
திருமுருகன் பூண்டி செப்பேடுகளில் இருந்து இருகூரின் பழமையை அறிய முடிகிறது. இத்தலம் சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப் பெற்றது. (சீழர்களால் கட்டப்பட்டது) சங்க காலத்தில் இந்த பகுதி பொன்னூர், மண்ணூர் என இரு பிரிவாக இருந்ததாகவும், அதுவே இருகூர் என்று ஆனதாகவும், இருளர்
தலைவன் இருவன் பெயரில் இருவூர் என இருந்து இருகூர் ஆனதாகவும் பெயர் காரணம் கூறப்படுகிறது.
லிங்கத்தின் மையத்தில் ஒரு சிறு குழியும், வலப்பக்க நெற்றியில் சிறிய தேய்வும், பின்புறம் சிறிய குடுமியும் உள்ளது. சுவாமியின் இடப்பக்கத்தில் சுயம்வர பார்வதி தேவி உள்ளார். வலப்பக்கத்தில்
Read 10 tweets
Apr 18
#அர்ச்சகர்_சம்பள_உயர்வு
பகவத் இராமானுஜரின் ஐந்து ஆச்சார்யர்களில் ஒருவரான #ஸ்ரீபெரியநம்பிகளின் வம்ஸத்தில் வந்தவர் ஸ்ரீநரஸிம்மகோபாலன். தன் தந்தையின் மறைவுக்குப் பின்னர், இவர் தனியொருவராக, #மன்னார்கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீராஜகோபால ஸ்வாமி கோயிலில் அர்ச்சகராகக் கைங்கர்யம் செய்து Image
வருகிறார். அற்ப மாத சம்பளமான ரூ250ஐப் பெற்றுக் கொண்டு, இவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம். தம்மைப் போல பகவத் கைங்கர்யம் செய்து வருகின்ற அனைவரையும் கருத்தில் கொண்டு, இவர் மதுரை நீதிமன்றத்தில் நியாயம் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். எத்தனையோ வாத ப்ரதிவாதங்களையும், தள்ளி வைப்புகளையும
கொண்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இவருக்கு தற்சமயம் நீதி கிடைத்து இருக்கிறது. குறைந்த பட்ச ஒரு நாளைய சம்பளத்தின் அடிப்படையில், இவருக்கு மாதச் சம்பளமாகச் சுமார் ரூபாய் பதினாறாயிரம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பாகியுள்ளது. அது மட்டுமன்றி 2019ம் வருடத்திலிருந்து இந்த வரையறுக்கப்பட்ட
Read 6 tweets
Apr 18
உன்மையா கதையா என்று தெரியாது. அது பகவான் கிருஷ்ணனுக்கும் இந்த @tskrishnan குமே வெளிச்சம் :) படித்ததை பகிர்கிறேன்!
பாண்டிய மாமன்னன் ராஜெந்திரன் சிவ பெருமான் மீது மிகுந்த மன வருத்தத்துடன் இருந்தான். பட்டத்தரசி சுவர்ண மீனாட்சி எத்தனையோ முறை ஆலய தரிசனத்திற்கு அழைத்துப் பார்த்தாள். Image
அவன் பிடிவாதமாக மறுத்து விட்டான். “தேவி, நீ சென்று சொக்கநாதனை வணங்கி வா நான் தடுக்கவில்லை. ஆலயத்திற்கு அளிக்க வேண்டிய எந்த உதவிகளையும் நான் நிறுத்தவில்லை. ஆனால், சொக்கேசனை வணங்கும்படி மட்டும் என்னை வற்புறுத்தாதே” என்று உறுதிபடக் கூறிவிட்டான்.
“அப்படி என்னதான் சிவன் மீது கோபம்?”
என்று வினவினாள் பாண்டிமாதேவி.
ராஜேந்திர பாண்டியனின் தந்தை குலபூஷண பாண்டியன் காலத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சோழர்கள் அப்போது காஞ்சியிலிருந்து ஆண்டு கொண்டிருந்தனர். சோழன் சிவநேசனுக்கு மதுரை சென்று ஆலவாய் அண்ணலைத் தரிசிக்க வேண்டுமென்று ஆவல். ஆனால் பாண்டியனோடு பகை. எப்படி அங்கு
Read 35 tweets
Apr 18
#மகாபெரியவா கட்டுரையாளர்-ரா.கணபதி.
புத்தகம்-மஹா பெரியவாள் விருந்து.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

குடவாசல் கொறடாச்சேரி மார்க்கத்தில் Image
பெரியவாள், தன் பரிவாரத்துடன் சென்று கொண்டிருந்தார். வழியிலே திருக்களம்பூரில் குடிசையில் வாழும் பரம ஏழைகள் குடியிருப்பு வந்தது. அக்காலங்களில் அவர்களுக்கே இருந்த, அதிவினய பயபக்தியுடன் கைகூப்பி நின்றார்கள். காணிக்கையும் கூட சமர்ப்பித்தார்கள். தீனதயாளனின் இயற்கைக் கருணை மேலும் பெருக,
அவர்களது நலன்களை, நலனின்மையையும் கேட்டுக் கொண்டார். ஓடாமல், பறக்காமல், நின்று நிதானமாக! இல்லாத நலன்களை இருக்குமாறு நிறைவேற்றித் தர, மடத்தால் என்ன ஆகுமோ, மடம் பரிந்துரைத்தால் பிரமுகர்களாலும் துரைத்தனத்தாராலும் என்ன ஆகுமோ, எல்லாவற்றையும் மானேஜரிடம் விவாதித்து முடிவு செய்தார்.
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(