எதிர்காலத்தை முன்னமே எழுதி வைத்த வீர பிரம்மேந்திரர் சுவாமிகள்.
நாஸ்ட்ரடாமஸ் என்ற பெயர் ஆரூட உலகில் புகழ்பெற்ற ஒன்று. தான் வாழ்ந்த காலத்திலேயே, எதிர் காலத்தில் உலகில் என்னென்ன சம்பவங்கள் எந்தெந்த ஆண்டுகளில் நடக்குமென்று ஆரூடம் கணித்து எழுதி வைத்துவிட்டுப் போனார் அவர்.
அவர் எழுதி வைத்த சம்பவங்கள் பலவும், அப்படியே அவர் சொன்ன விதமே நடப்பதைப் பார்த்து இன்று உலகம் திகைக்கிறது. அவரது புத்தகங்களில் அடுத்தடுத்து என்னென்ன எழுதப்பட்டுள்ளன என்பதை அறிய ஒரு தனி ஆராய்ச்சியே நடக்கிறது.
உலகம் போற்றும் பாரத
சித்தர் உலகிலும் ஒரு நாஸ்ட்ரடாமஸ் உண்டு.
ஆந்திரத்தை சேர்ந்த வீர பிரம்மேந்திரர் என்ற சித்த புருஷர் கி.பி. 1604-ல் பிறந்தவர்.
மண வாழ்வு மேற்கொண்டு மனைவியுடனும் குழந்தைகளுடனும் வாழ்ந்தவர். “காலக் ஞானம்’ என்ற அரிய நூலை எழுதியவர். அந்த நூலிலில் எதிர்காலத்தில் உலகில் என்னென்னவெல்லாம் நடக்குமென்று தெளிவாக எழுதப் பட்டுள்ளது தான் ஆச்சரியம்.
விஸ்வகர்மா பொற்கொல்லர் மரபில் வந்த பரிபூரண ஆசாரி, பிரகதாம்பாள் என்ற தம்பதிகளுக்கு மகனாய்ப் பிறந்தார் வீர பிரம்மேந்திரர். அவர் பிறந்த அன்றே அவர் தந்தை இறந்து விட்டார். அதனால் மிகுந்த கலக்கமெய்தினாள் பிரகதாம்பாள்.
ஒரு முனிவரிடம் குழந்தையை ஒப்படைத்த அவள், தான் வாழ விரும்பாமல் தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.
முனிவர் அந்த அழகிய குழந்தையைக் கனிவோடு பார்த்தார். எவ்விதம் அந்த தெய்வீகக் குழந்தையை வளர்ப்பது என சிந்தனையில் ஆழ்ந்தார்.
இறைவன் கட்டளையே போல, அவரைத் தேடி வந்தார்கள் இருவர். வீர போஜர், வீர பாப்பம்மா என்ற அவ்விருவரும் அந்தக் குழந்தையைத் தாங்கள் வளர்ப்பதாக உறுதி கூறி வாங்கிச் சென்றார்கள்.
வீரபிரம்மத்தைப் பதினான்கு வருடம் மிகப் பாசத்துடன் வளர்த்தார்கள் அவர்கள். அப்போது தான் அந்த சங்கடமான சம்பவம் நிகழ்ந்தது. வீரபிரம்மத்தின் வளர்ப்புத் தந்தை காலமாகி விட்டார்.
பிறந்த போதே தந்தையையும் பின் தாயையும் இழந்தது, இப்போது வளர்ப்புத் தந்தையையும் இழந்தது வீரபிரம்மேந்திரரை சிந்தனையில் ஆழ்த்தின.
தத்துவ ஞானத்தில் தோய்ந்தது அவர் மனம். தம் வளர்ப்புத் தாயிடம், தமக்கு வற்றாத ஆன்மிகத் தேடல் இருப்பதால் அந்த வழியில் வாழ்க்கை நடத்தப் போவதாகக் கூறி, பிரியாவிடை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.
கால்போன போக்கில் நடந்தார். எங்கெல்லாம் கோவில்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் அமைதியாக நெடுநேரம் தியானம் செய்தார். இந்த வாழ்வின் பொருள் என்ன என்றறியும் தீராத ஆவல் அவருக்கிருந்தது. அவர் போகாத கோவில் இல்லை.
ஒரு நாள் இரவு… நடந்து நடந்து கால்கள் வலிலித்தன. வீரபிரம்மேந்திரர் பனகானபள்ளி என்ற அழகிய சிறு கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கே அச்சம்மா என்பவளின் வீட்டுத் திண்ணை காலியாக இருந்தது. அதில் படுத்து ஆனந்தமாக உறங்கினார்.
காலை கதவைத் திறந்து வெளியே வந்து திண்ணையைப் பார்த்தாள் அச்சம்மா. யாரோ ஒரு பையன் உறங்குகிறானே? உறங்கும் போதும் அவன் முகத்தில் தென்பட்ட ஒளி அச்சம்மாவை வசீகரித்தது. அந்தப் பையன் மேல் அவளுக்குத் தாயன்பு பெருகியது.
அவன் எழுந்ததும் “யாரப்பா நீ’ என்று விசாரித்தாள் அவள். அவன் தான் ஓர் அநாதை என்றும், ஊர் ஊராகச் சுற்றி வருவதாகவும் தெரிவித்தான்.
“எனக்கு நான் வளர்க்கும் மாடுகளை மேய்க்க ஒருவன் தேவை. கண்ட இடங்களில் சுற்றுவானேன்?
இனி இங்கேயே இரு!’ என்று கண்டிப்பு கலந்த பிரியத்தோடு சொல்லி அவனுக்கு உணவளித்தாள் அச்சம்மா. இப்படியாக வீரபிரம்மேந்திரர் அச்சம்மாவின் மாடுகளை மேய்க்கும் தொழிலிலில் ஈடுபடுத்தப்பட்டார்.
வீரபிரம்மேந்திரர் மாடுகளைச் சுற்றி ஒரு மிகப்பெரிய வட்டக் கோடு வரைந்து விடுவார். மாடுகள் அந்தக் கோட்டுக்குள்ளிருந்து புல் மேய்ந்து கொண்டிருக்கும். அதைக் கடந்து செல்லாது. மாடுகள் அவரைப் பெரிதும் நேசித்தன.
மாடுகள் புல்மேயும் தருணத்தில் வீரபிரம்மேந்திரர் காலக் ஞானம் என்ற எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லும் நூலை எழுதலானார். பனையோலையில் முட்களால் எழுதப்பட்டதே அந்த நூல். ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக அந்த நூலை எழுதி வந்தார் அவர்.
இப்படியாகக் காலம் போய்க்கொண்டிருந்தபோது, ஒருநாள் மாடுகளை அடித்துச் சாப்பிடும் எண்ணத்தில் காட்டிலிலிருந்து ஒரு புலி அங்கு வந்தது. ஆனால் வீரபிரம்மம் கிழித்த கோட்டினுள்ளே செல்ல இயலாமல் புலி தத்தளித்துத் திரும்பிச் சென்றது.
இதைப் பார்த்தார்கள் சில இடையர்கள். அவர்கள் அச்சம்மாவிடம் சென்று இந்தத் தகவலைச் சொன்னார்கள். அச்சம்மா வியப்படைந்தாள். ஏற்கெனவே வீரபிரம்மேந்திரரின் முகத்தில் தென்பட்ட தெய்வீக ஒளி அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தது. தவிர அவர் ஏதோ தொடர்ந்து எழுதி வருவதையும் அவள் அறிவாள்.
அன்று வீரபிரம்மேந்திரர் வீடு திரும்பியதும், அச்சம்மா அவரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள். அவர் பெரிய மகான் என்பதைத் தாம் இப்போதுதான் அறிந்ததாகவும், அவரை மாடு மேய்க்கும் தொழிலிலில் ஈடுபடுத்தியது பெரும் தவறு என்றும் அவள் உகுத்தாள்.
“ஏதோ ஒரு தொழில் செய்து எல்லாரும் வாழவேண்டியதுதான். கண்ணனே மாடு மேய்த்தவன் தான். அது ஒன்றும் இழிவான தொழில் அல்ல!’ என்று கூறி அவளை சமாதானப் படுத்தினார் வீரபிரம்மேந்திரர்.
அச்சம்மா அவர் எழுதி வரும் நூல் என்னவென்று விசாரித்தாள். எதிர்காலத்தில் நடக்கப்போவதைத் தான் கணித்து எழுதி வருவதாக அவர் தெரிவித்தார். “எதிர்காலத்தில் என்னென்ன நடக்குமென்று எனக்கு ஓரளவாவது சொல்ல இயலுமா’ என்று அச்சம்மா கேட்டாள். வீரபிரம்மம் நகைத்துக்கொண்டே சில விஷயங்களைச் சொன்னார்.
அவற்றில் சில:
“புண்ணிய நதிகள் வற்றிவிடும். கடல் பொங்கி நகருக்குள் நுழையும். அதனால் அதிகம் பேர் உயிரிழப்பார்கள். கணவனை மட்டுமே மணந்து வாழும் பத்தினிப் பெண்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கும். ஆண்கள்- பெண்கள் இரு தரப்பாரிடமும் ஒழுக்கம் கெடும்.
பாரதம் இரண்டாகவும் பின்னர் மூன்றாகவும் பிரியும். இந்தியாவில் ஜனத்தொகைப் பெருக்கம் அதிகமாவதால் குழந்தை பிறப்பதை செயற்கை முறையில் தடுக்கப் பார்ப்பார்கள். பெரியோருக்கு அடங்கி சிறியோர் நடந்ததுபோக, சிறியோருக்கு அடங்கி பெரியோர் நடக்க நேரிடும்.
புண்ணியத் தலங்களில் வாழ்பவர்கள் ஆண்டவனுக்கு அஞ்சி வாழாமல், ஆண்டவன் பெயரால் மோசடி செய்து வஞ்சித்து வாழ்வார்கள்.’
இதையெல்லாம் கேட்ட அச்சம்மா மிகுந்த வியப்படைந்தாள். அவரையே தன் குருவாக ஏற்றாள் அச்சம்மா. தனக்கு உபதேசம் வழங்குமாறு வேண்டினாள்.
வீரபிரம்மேந்திரர் அவளுக்குச் சிவ மந்திரத்தை உபதேசித்து, அதை ஓயாமல் ஜெபித்து வருமாறு பணித்தார். பொருள் மேல் உள்ள ஆசையை விட்டு விட்டு ஆன்மிகப் பணிகளில் நாட்டம் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
அச்சம்மாவின் மனம் வீரபிரம்மேந்திரரின் உபதேசங்களால் ஞானம் அடைந்தது. மெல்ல மெல்லப் பற்றுகள் அவளை விட்டு விலகத் தொடங்கின. இல்லறத்தைத் துறந்து துறவியானாள் அவள். தன் சொத்தையெல்லாம் செலவிட்டு ஏகாந்த மடம் என்றொரு மடம் நிறுவினாள்.
அதில் வாழ்ந்தபடி வீரபிரம்மேந்திரரின் கொள்கைகளை மக்களிடையே பரப்பிவரலானாள்.
அச்சம்மாவின் வாழ்க்கை இனி அவ்விதமே தொடரும் என அறிவித்த வீரபிரம்மேந்திரர், அவளிடம் விடை பெற்று மீண்டும் பல்வேறு தலங்களுக்கு யாத்திரை செல்லலானார்.
ஆந்திராவில் கடப்பை ரயில் நிலையத்திலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில், கந்தி மல்லையபள்ளி என்ற இடத்தில் இருக்கிறது சித்த புருஷரான வீரபிரம்மேந்திரரின் ஜீவசமாதி.
இன்றும் தன்னை நாடி வரும் அடியவர்களுக்கு அவர் சூட்சும உருவில் அருள் புரிந்து வருகிறார். நாள்தோறும் அந்த இடத்திற்குச் செல்வோர் எண்ணிக்கை பெருகி வருகிறது.🙏
காலை அலுவலகத்திற்கு வந்துகொண்டு இருந்தேன். சிப்காட்டுக்குள் போய்க்கொண்டு இருக்கும் போது ரோடு வெறிசோடி கிடந்தது. தூரத்தில் போகும் போதே அந்த காட்சி என் கண்ணில் பட்டது.
ஒரு டிவிஎஸ் வண்டி ரோட்டோரமாக நின்றுகொண்டு இருந்தது. ரோட்டில் ஒரு முதியவர் நின்று கொண்டு தார்ரோட்டில் கொட்டிக்கிடக்கும் சாதத்தை பார்த்துக்கொண்டே நிற்கிறார். அவர் கையில் வெறும் டிப்பன் பாக்ஸ் ஒன்று ஒரு சின்ன பாக்ஸ் ஒன்று இருக்கிறது.
அவர் கீழே கிடந்த உணவை வெறித்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
அவரைப்பற்றி சொல்லனும்னா படிச்சவர் மாதிரி இருந்தார். கண்ணாடி அணிந்து இருந்தார், வயது அறுபது நெருங்கும் தோற்றம். வெள்ளை சட்டை, பிரவுன் கலர் பேண்ட்.
*அற்புத ரகசியங்கள் நிறைந்த அருள்மிகு பார்த்தசாரதி கோயில், திருவல்லிக்கேணி*
தருமத்தை நிலைநாட்ட வேண்டி நிகழ்ந்த மகாபாரதப்போரில் பீஷ்மர் எய்த அம்புகளை பார்த்தனுக்குத் தேரோட்டியாக நின்று தாமே தாங்கியதால் ஏற்பட்ட வடுக்களை உற்சவர் திருமுகத்தில் இன்றும் தரிசிக்கலாம்.
1
இந்த ஐதீகத்தின் அடிப்படையில் பெருமாள் ஸ்ரீ பார்த்தசாரதி என்றழைக்கப்படுகிறார்.
ஆலயமும் அப்பெயரில் அழைக்கப்படுகிறது. காயங்களுடன் இருப்பதால் இவருக்கான நைவேத்யத்தில், நெய் அதிகம் சேர்க்கப்படுகிறது. மிளகாய் போன்ற காரமான பொருட்கள் சேர்ப்பதில்லை.
2
அழகாக பிறக்கவில்லையே என வருந்துபவர்கள், திருமாலின் இந்த கோலத்தை தரிசித்தால் அழகு அழியும் தன்மையுடையது என்ற தத்துவத்தை உணர்வர்.
அதில் ஏழை ,பணக்காரன்,
ஆத்திகன் , நாத்திகன் ,
இறையடியார்கள் ,,,
ஏன் இறைவனே பிறப்பெடுத்து வந்தாலும் நிச்சயம் அவனுக்கும் பல சோதனைகள் உண்டு
ராம-ராஜ்ஜியம் மக்கள் எல்லோரும் ராமன் பொற்கால ஆட்சியில் பேரானந்தமாக வாழ்ந்தனர்
அந்த நேரம் பார்த்து சோதனையாக துர்வாச-மாமுனிவர் தன் சீடர்களுடன் ராமனை காண அயோத்தி வந்தார் .
இதையறிந்த அயோத்தி மக்கள் மற்றும் அரசவையில் உள்ளோர் யாவரும் கொஞ்சம் பயத்தோடு அவருக்கு வணக்கம் கூறி வரவேற்றனர்
காரணம் துர்வாசர் கோபப்பட்டு சபிப்பதில் வல்லவர் மற்ற முனிவர்கள் எல்லாம் கோபப்பட்டு சபித்தால் தங்கள் தவ சக்தியில் ஒரு பகுதியை இழந்துவிடுவர் பின் மீண்டும் அந்த இழந்த சக்தியை பெற பலவருடங்கள் தவம் மேற்கொள்ளவேண்டும்
மாதுர்காரனாகிய சந்திரனும் பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை எனப்படும்.
சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய்வழி உறவினர்கள் சூரியன் என்றால் தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள்
இவர்கள் இருவரும் இணையும் அமாவாசை தினத்தில் மறைந்த நமது முன்னோர்கள் அவர்களது சந்ததியினர் வாழ்வில் முன்னேற தடைகள் அகல,
பலவித தோஷசங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு அவர்கள்அந்த தினத்தில் எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள் என்பது ஐதீகம்.
பொதுவாக மூலவராக இருக்கும் ஈசனின் கருவறைக்கு வெளியே தான் நந்தி வீற்றிருந்து அருள்பாலிப்பார்.
ஆனால் பெங்களூருவில் உள்ள பசவன்குடி என்ற இடத்தில் நந்தியே மூலவராக இருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
1
இந்த நந்தி கோவில் பசவன்குடியில் ஒரு குன்றின் மீது அமைந்திருக்கிறது. இந்தக் குன்றுக்கு ஊதுகுழல் குன்று என்ற பெயர் வழங்கப்படுகிறது.
2
இங்கு பித்தளையால் செய்யப்பட்ட எக்காளம் போன்ற ஊது குழல் இருக்கிறது. படைப்பிரிவின் அடையாள ஒலியாக அது ஒலிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அதனால்தான் அந்த குன்றுக்கு இப்பெயர் வந்தது என்றும் சிலர் கூறுகிறார்கள்.