வேண்டியவைகளையும் தெரிந்து கொண்டு நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும். முக்கியமாக ராமேஸ்வரம், காசி, கயா மற்றும் புனித தலங்களுக்கு சென்று மறைந்த முன்னோர்களுக்காக சில சடங்குகள் செய்ய வேண்டும். அவற்றை செய்ய எல்லோருக்கும் வசதி இருக்காது. செங்கல்பட்டு அருகில் #நென்மேலி என்ற திருத்தலம்
உள்ளது. இது எளியவர்களின் #கயா என்று கூறப்படுகிறது. இங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் சன்னதி நெடுங்காலமாக பெரியோர்களால் வணங்கப்படுகிறது. இந்த சன்னதியில் உள்ள உற்சவ மூர்த்தி #ஸ்ராத்த_ஸம்ரக்ஷண_நாராயணர் என்னும் திருநாமமும் இந்த கிராமத்திற்கு புண்டரீக நல்லூர்,
பிண்டம் வைத்த நல்லூர் என்றும் இந்த சன்னதியின் திருக்குளம் அர்கிய புஷ்கரணி, ஜீயர் குளம் என்றும் காசிக்கு நிகரான க்ஷேத்ரம் என்றும் சௌலப்ய கயா என்றும் வழங்கப்படுகிறது. இந்த சன்னதியில் ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணி புரிந்தஸ்ரீ யாக்ஞவல்கியரைக் குருவாகக் கொண்ட சுக்ல யஜுர்
வேதத்தை சேர்ந்த யக்ஞ நாராயண ஷர்மா சரஸ வாணி தம்பதிகள் இந்தப் பெருமானின் மீது ஆறாத பக்தி கொண்டிருந்தனர். மேலும் இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தையும் தெய்வ காரியங்களுக்கு செலவு செய்து விட்டதால், அரச தண்டனையை ஏற்க விரும்பாமல் திருவிடந்தை என்னும் திவ்ய தேசத்து
திருக்குளத்தில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். அவர்களுக்கு தங்கள் ஈமக் கடன்களை செய்ய வாரிசு இல்லையே என மனம் வருத்தத்துடன் மரணமடைந்தார்கள். அவர்களுடைய எண்ணத்தை எம்பெருமானே செய்ததாக பெருமாள் சாட்சியம் சொன்னார். அந்த திவானின் வேண்டுகோளுக்கு இணங்க சந்ததிகள் இல்லாருக்கும் ஸ்ராத்தம்
செய்ய இயலாதவர்களுக்கும் தானே முன்னின்று ஸ்ராத்தம் செய்து வைப்பதாக எத்தனித்து குதப காலம் என்னும் பித்ரு வேளையில் (12 மணி முதல் 1 மணி வரை) ஒரு காலம் மட்டும் ஆராதனம் ஏற்று விரதமிருக்கிறார்.
எனவே இங்கு ஸ்ராத்தம் செய்ய விரும்புபவர்கள் பித்ரு வேளையில் நடக்கும் பூஜையில் மஞ்சள், எள்,
தர்ப்பைப்புல், விரலில் அணிய பவித்ரம், வெற்றிலை பாக்கு, பழம் ஆகியவற்றை பெருமாளிடம் சமர்ப்பித்து, தங்களுடைய பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். பிறகு கோவிலின் பின் பக்கத்திலுள்ள விஷ்ணு பாதம் எனும் பெருமாளின் திருவடிக்கு அருகில் சாஸ்திரிகள் வழிகாட்ட திதி கொடுப்பவர் தன்
முன்னோருக்கு மறுபடியும் ஒரு சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு சமர்ப்பிப்பதே சிரார்த்த சம்ரட்சணமாகும். மீண்டும் அவர்கள் பெருமாள் சந்நிதிக்கு வந்து பெருமாளுக்கு மகா சங்கல்பமும் சகல உபசாரங்களுடன் பூஜையும் நடத்த வேண்டும். இறுதியில் நம் வீட்டில் செய்யும்
சம்பிரதாய திவசச்சமையல் போல வெண்பொங்கல், தயிர் சாதம், பிரண்டையுடன் கலந்து எள் துவையல் எல்லாம் செய்யப்பட்டு நைவேத்தியம் செய்யப்படுகின்றன. இதை ஏற்று, நம் முன்னோர்களின் ஆத்மாக்களைப் பெருமாள் திருப்திப்படுத்துவதாக ஐதீகம். கயா காசி ராமேஸ்வரம் ஆகிய தலங்களில் இல்லாத சிறப்பு இத்தலத்தில்
உண்டு. இந்த பூஜையில் அவரவர் பித்ருக்கள் திதியிலோ, அமாவாசை, ஏகாதசி போன்ற திதிகளிலோ அல்லது என்று முடியுமோ அன்று கலந்து கொள்வது கயை ஸ்ராத்தம் செய்த பலனைக் கொடுக்கும். பெற்றோருக்கு திதி கொடுக்காதவர்கள், திதி கொடுப்பதே என்ன என்று தெரியாமல் இருப்பவர்கள், வாரிசு இல்லாதவர்கள், விபத்து,
தற்கொலை, அகால மரணம் அடைந்தவர்கள், இவர்களின் ஆத்மாக்களுக்கு சாந்தி ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் தோஷம் ஏற்படும். இவை காலம் காலமாக தொடர்வதால் பித்ரு தோஷம் ஏற்பட்டு கால சர்ப தோஷமாக மாறும். இது வம்சாவளியாக தொடர்வதால் வீட்டில் கஷ்டம், திருமணத்தடை, விபத்து, செய் தொழிலில் நஷ்டம்,
நிம்மதியின்மை என அடிக்கடி நிகழும். இதற்கு ஒரே வழி அதற்கான தோஷ நிவர்த்தி செய்வது தான் பித்ரு தோஷ நிவர்த்திக்கு காசி, ராமேஸ்வரம் தான் செல்ல வேண்டும் என்பதில்லை.
அர்ச்சகரின் முகவரி;
ஸ்ரீ சம்பத் பட்டாச்சாரியார் ,
பிராமணர் வீதி,
நென்மேலி போஸ்ட், நத்தம் வழி ,
செங்கல்பட்டு - 603002
காஞ்சிபுரம் மாவட்டம்.
போன்: 044 - 27420053.
இந்த தலம் செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் செங்கல்பட்டிலிருந்து ஐந்தாவது கிலோ மீட்டரில் உள்ளது.
பித்ரு பூஜை பகல் 12 மணிக்கு மேல் மட்டுமே நடை பெறும், இதில் கலந்து கொள்பவர்கள் 10 மணிக்கு சன்னதியில் இருக்க
வேண்டும். அர்ச்சகரிடம் முன்னதாக பதிவு செய்து கொள்ள வேண்டும். நம் இல்லங்களில் முன்னோர்களுக்காக ஸ்ராத்தம் செய்தாலும் அந்த திதியில் இந்த சன்னதியில் பணம் அனுப்பி பூஜை செய்ய வேண்டிக் கொள்ளலாம். குறைந்த கட்டணம் தான், எனவே எல்லோரும் பயன் பெற வேண்டும். அவசியம் தர்பனம் செய்து வைக்கும்
ப்ரோகிதருக்கு மனப்பூர்வமாக நல்லதொரு கானிக்கை கொடுத்து ஆசீர்வாதம் பெற்று கொள்ள, சுபம் உண்டாகும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வடைந்தியர்கள் கொண்டாடும் #ஹோலி பண்டிகை எப்படி வந்தது?
பிரகலாதன் திருமாலின் தீவிர பக்தன்.
ஆனால் அவனது தந்தை இரணியன் தீவிர கடவுள் மறுப்பாளான இருந்தான்.
இவனது தங்கை பெயர் #ஹோலிகா இவளிடம் விசேஷ துப்பட்டா ஒன்று இருந்தது. இதனை அவளைத் தவிர வேறு யாரேனும் போர்த்தினால் அது அவர்களை பொசுக்கி
விடும் தன்மை கொண்டது. தனக்கு பிடிக்காதவர்களை தன் துப்பாட்டாவால் போர்த்தி அவர்களை அழித்து வந்தாள். இதனால் ஹோலிகாவைக் கண்டால் மக்கள் ஓடி ஒளியது துவங்கினர். தன்னை வணங்க மறுத்த தன் மகன் பிரகலாதனை விசேஷ துப்பட்டாவால் கொல்ல முடிவு செய்தான் இரணியன். தன் தங்கையை அந்த விசேஷ துப்பட்டா
அணிந்து வரச் செய்து, அவளின் மடியில் தன் மகன் பிரகலாதனை அமரச் செய்தான். தந்தை சொல் கேட்டு அந்த துப்பட்டா மீது அமர்ந்தான். நெருப்பு பற்றத் துவங்கியது. இந்த சமயத்தில் திருமால் கருணையால் ஒரு பெருங்காற்று அடித்து பிரகலாதனை தீயினிலிருந்து காத்தது. ஆனால் துப்பட்டா அணிந்து இருந்த ஹோலிகா
#இருகூர்_ஒண்டிப்புதூர்_நீலகண்டேஸ்வரர் ஆலயம் கோயம்பத்தூர்
மூலவர்: நீலகண்டேஸ்வரர், சவுந்தர்யேஸ்வரர்
அம்மன்: சுயம்வர பார்வதி தேவி மீனாட்சியம்மன்
இக்கோவில் 3000 வருட பழமையானது. நீலகண்டேஸ்வர லிங்கம் சுயம்புவாக தோன்றியது. உத்தம சோழன் செப்பேடு, மார்க்கண்டேய பண்டிதர் மடம் செப்பேடு,
திருமுருகன் பூண்டி செப்பேடுகளில் இருந்து இருகூரின் பழமையை அறிய முடிகிறது. இத்தலம் சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப் பெற்றது. (சீழர்களால் கட்டப்பட்டது) சங்க காலத்தில் இந்த பகுதி பொன்னூர், மண்ணூர் என இரு பிரிவாக இருந்ததாகவும், அதுவே இருகூர் என்று ஆனதாகவும், இருளர்
தலைவன் இருவன் பெயரில் இருவூர் என இருந்து இருகூர் ஆனதாகவும் பெயர் காரணம் கூறப்படுகிறது.
லிங்கத்தின் மையத்தில் ஒரு சிறு குழியும், வலப்பக்க நெற்றியில் சிறிய தேய்வும், பின்புறம் சிறிய குடுமியும் உள்ளது. சுவாமியின் இடப்பக்கத்தில் சுயம்வர பார்வதி தேவி உள்ளார். வலப்பக்கத்தில்
#அர்ச்சகர்_சம்பள_உயர்வு
பகவத் இராமானுஜரின் ஐந்து ஆச்சார்யர்களில் ஒருவரான #ஸ்ரீபெரியநம்பிகளின் வம்ஸத்தில் வந்தவர் ஸ்ரீநரஸிம்மகோபாலன். தன் தந்தையின் மறைவுக்குப் பின்னர், இவர் தனியொருவராக, #மன்னார்கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீராஜகோபால ஸ்வாமி கோயிலில் அர்ச்சகராகக் கைங்கர்யம் செய்து
வருகிறார். அற்ப மாத சம்பளமான ரூ250ஐப் பெற்றுக் கொண்டு, இவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம். தம்மைப் போல பகவத் கைங்கர்யம் செய்து வருகின்ற அனைவரையும் கருத்தில் கொண்டு, இவர் மதுரை நீதிமன்றத்தில் நியாயம் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். எத்தனையோ வாத ப்ரதிவாதங்களையும், தள்ளி வைப்புகளையும
கொண்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இவருக்கு தற்சமயம் நீதி கிடைத்து இருக்கிறது. குறைந்த பட்ச ஒரு நாளைய சம்பளத்தின் அடிப்படையில், இவருக்கு மாதச் சம்பளமாகச் சுமார் ரூபாய் பதினாறாயிரம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பாகியுள்ளது. அது மட்டுமன்றி 2019ம் வருடத்திலிருந்து இந்த வரையறுக்கப்பட்ட
உன்மையா கதையா என்று தெரியாது. அது பகவான் கிருஷ்ணனுக்கும் இந்த @tskrishnan குமே வெளிச்சம் :) படித்ததை பகிர்கிறேன்!
பாண்டிய மாமன்னன் ராஜெந்திரன் சிவ பெருமான் மீது மிகுந்த மன வருத்தத்துடன் இருந்தான். பட்டத்தரசி சுவர்ண மீனாட்சி எத்தனையோ முறை ஆலய தரிசனத்திற்கு அழைத்துப் பார்த்தாள்.
அவன் பிடிவாதமாக மறுத்து விட்டான். “தேவி, நீ சென்று சொக்கநாதனை வணங்கி வா நான் தடுக்கவில்லை. ஆலயத்திற்கு அளிக்க வேண்டிய எந்த உதவிகளையும் நான் நிறுத்தவில்லை. ஆனால், சொக்கேசனை வணங்கும்படி மட்டும் என்னை வற்புறுத்தாதே” என்று உறுதிபடக் கூறிவிட்டான்.
“அப்படி என்னதான் சிவன் மீது கோபம்?”
என்று வினவினாள் பாண்டிமாதேவி.
ராஜேந்திர பாண்டியனின் தந்தை குலபூஷண பாண்டியன் காலத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சோழர்கள் அப்போது காஞ்சியிலிருந்து ஆண்டு கொண்டிருந்தனர். சோழன் சிவநேசனுக்கு மதுரை சென்று ஆலவாய் அண்ணலைத் தரிசிக்க வேண்டுமென்று ஆவல். ஆனால் பாண்டியனோடு பகை. எப்படி அங்கு
பெரியவாள், தன் பரிவாரத்துடன் சென்று கொண்டிருந்தார். வழியிலே திருக்களம்பூரில் குடிசையில் வாழும் பரம ஏழைகள் குடியிருப்பு வந்தது. அக்காலங்களில் அவர்களுக்கே இருந்த, அதிவினய பயபக்தியுடன் கைகூப்பி நின்றார்கள். காணிக்கையும் கூட சமர்ப்பித்தார்கள். தீனதயாளனின் இயற்கைக் கருணை மேலும் பெருக,
அவர்களது நலன்களை, நலனின்மையையும் கேட்டுக் கொண்டார். ஓடாமல், பறக்காமல், நின்று நிதானமாக! இல்லாத நலன்களை இருக்குமாறு நிறைவேற்றித் தர, மடத்தால் என்ன ஆகுமோ, மடம் பரிந்துரைத்தால் பிரமுகர்களாலும் துரைத்தனத்தாராலும் என்ன ஆகுமோ, எல்லாவற்றையும் மானேஜரிடம் விவாதித்து முடிவு செய்தார்.
#சூட்சுமபுரீஸ்வரர்_கோவில் திருச்சிறுகுடி செவ்வாய் தோஷ பரிகாரத் தலம். நவகிரகத் தலங்களில் செவ்வாய்க்குரிய தலங்களில் பாடல் பெற்ற தலம் இது ஒன்றுதான். இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.
இறைவன் பெயர்: சூட்சுமபுரீஸ்வரர், மங்களநாதர்
இறைவி பெயர்: மங்களநாயகி
ஒரு முறை,
கயிலாயத்தில் பரமசிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினார்கள். அதில பார்வதி வெற்றிபெற்றாள். அதனால் வெட்கம் அடைந்த சிவபெருமான் எங்கோ மறைந்து விட்டார். கலக்கமடைந்த பார்வதி, சிறுகுடி தலத்துக்கு வந்து மங்கள தீர்த்தத்தை உண்டாக்கி, தன் கையால் பிடி மணலை எடுத்து அதை சிவலிங்கமாகப் பிடித்து
வைத்து வழிபட்டாள். அம்பாளுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்து அவளை மீண்டும் ஏற்றுக் கொண்டதாக தலபுராணம் கூறுகிறது. சிறுபிடி என்பது மருவி சிறுகுடி என்றாயிற்று. திருக்கயிலையில் இருக்கும் இறைவன் சூட்சுமமாக மறைந்து இங்கு மீண்டும் தோன்றியதால் இத் தலத்துக்கு சூட்சுமபுரி என்றும், இறைவனுக்கு