பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு முடிந்த மகிழ்ச்சியை கொண்டாடும் முன்,
அவர்களை மட்டுமல்ல பெற்றோர்களையும் யோசனையில் ஆழ்த்துவது உயர்கல்வி குறித்த பல்வேறு சந்தேகங்கள்தான்
மருத்துவம்,பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை மட்டும் உயர்வாக நினைத்த
நிலைமாறி..
(1)
நாம் ஆச்சரியப்படும் வகையில் இன்று பல்வேறு புதிய படிப்புகள் மாணவர்களின் கனவாக மாறி வருகின்றது..
குறிப்பாக..
அனிமேஷன்,
ரொபோடிக் சயின்ஸ், பெர்ஃப்யூஷன் டெக்னாலஜி என அடுக்கிக்கொண்டே போகலாம்..
புதுமையை விரும்பும் மாணவர்களுக்கென பல்வேறு சவாலான படிப்புகளும் காத்திருக்கின்றன..
(2)
வேலைவாய்ப்பே பிரதான இலக்கு என்பதால் எதிர்காலத்தை தீர்மானிக்கும் படிப்பை சரியாக தேர்வு செய்வதென்பது சவாலாகவே பார்க்கப்படுகின்றது..
மனிதவளம் தேவைக்கு மிகுதியா உள்ள துறைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மனிதவளத்தின் தேவையை அதிக அளவில் எதிர்நோக்கி..
(3)
காத்திருக்கும் துறைகள் பலரின் கண்களுக்கு புலப்படுவதில்லை..
மதிப்பெண் அதிகம் எடுத்தவர்களுக்கு மட்டுமே உயர்கல்வி, அவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு என்ற காலம் மலையேறிவிட்டது..
அனைத்து பிரிவு மாணவர்களும் தங்களுக்கு உரிய உயர்கல்வியை தேர்வு செய்யவும், அத்துறையிலையே சாதிக்கும்..
(4)
வாய்ப்பு பரந்து கிடக்கிறது..
மதிப்பெண் குறைந்தால் என்ன செய்வது,
சிறந்த கல்லூரியை எப்படி தேர்வு செய்வது, கல்விக்கடனை பெருவதில் உள்ள சிக்கல்கள்,
படிக்கும் போதே வேலைவாய்ப்புக்கான திறன்களை எப்படி வளர்த்துக்கொள்வது என மாணவர்களை சுற்றியுள்ள தொடர் கேள்விகள் ஒருபுறம்..
(5)
படிக்கும் படிப்பிற்கு வேலை கிடைக்குமா,
தலைசிறந்த கல்லூரிகளில் இடம் கிடைக்குமா என சிக்கலான கட்டத்தில் இருக்கும் மாணவர்களின் பொற்றோர்கள்
பதட்டப்படாமல் ஆற அமர யோசித்து சிறந்த கல்வி நிலையங்கள்,
வேலை வாய்ப்பு நிச்சயம் எதில் என்று தேடுவதற்கு பலர் ஆலோசனை வழங்குவார்கள்..
(6)..
வேலைவாய்ப்பு என்பதையும் தாண்டி தங்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் சாமர்த்தியம் மாணவர்களுக்கு உண்டு..
அவர்கள் விரும்பும் துறையை சிறந்த கல்லூரியில் படிக்கவைக்கும் பொற்றோர்கள் துணை நிற்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் அறிவுறுத்தலாக உள்ளது..
(7)..
சுமார் 20 வருடங்களுக்கு முன்பு பொறியியல் படிப்பு என்பது அடைய முடியாத பெருங்கனவு..
இன்றையநிலை எல்லோருக்கும் தெரியும் நகரம் மற்றும் கிராமங்களின் வீதிகள் தோறும் பொறியாளர்கள் நிறைந்திருக்கின்றனர்..
அமெரிக்கா,சீனாவை விட அதிக எண்ணிக்கையில் இந்தியாவில் பொறியாளர்கள் உருவாகின்றனர்
(8)
சரி இனி முக்கியத்துவம் வாய்ந்த படிப்புகள்,
அது சார்ந்த வேலைவாய்ப்புகளை பார்ப்போம்..
கணினியின் செயல்முறையிலிருந்து
புரோகிராமிங் லாங்குவேஜ், கணினி பயன்படும் துறைகள்,
தகவல் தொழில்நுட்பத்தில் கணினியின் பங்கு என கணினி உலகின் செயல்பாடுகளுக்கான பரந்த வேலை வாய்ப்புகள் பார்க்கலாம்..
(9)
பொறியியல் துறையில் உள்ள சில படிப்புகள் பார்ப்போம்..
பொறியியல் படிப்புகள் என்றாலே மெக்கானிகல் , எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ்& கம்யூனிகேசன்
என பல படிப்புகள் இருந்தாலும் இதில் தேவைக்கு அதிகமாக மாணவர்கள் படிப்பதால், வேலைவாய்ப்புகள் குறித்து மனதில் ஏற்படலாம் ஆயினும்..
(10)..
இன்றைய தேவைக்கேற்ப, தொழில்நுட்ப வளர்ச்சிக்க்கேற்ப புதுமையான பல பொறியியல் படிப்புகள் பல உள்ளது.
நேவல் ஆர்க்கிடெக்ட்சர் மற்றும் ஓசியன் என்ஜினியரிங் (Naval Architecture and Ocean Engineering)
உலக பொருளாதாரத்தில் கடல் சார்ந்த போக்குவரத்து முக்கியத்துவம் வகிக்கின்றது...
(11)..
திறமையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை கையாள்வது பற்றிய இந்த படிப்பை படிப்பதன் மூலம் நிச்சயம் எதிர்காலத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்..
அதுபோல்
விண்வெளி தொழில்நுட்பம்
பற்றி படிக்க மாணவர்களுக்கு அசாத்திய திறமையும்,ஆர்வமும் இருந்தால் படிக்கலாம்
(12)
அதேபோல் நானோ டெக்னாலஜி படிப்பும் அப்படித்தான்
சத்தமில்லாமல் வளர்ந்து வரும் இந்த நானோ டெக்னாலஜி தற்போது பல்வேறு துறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது..
அதேபோல அணுப்பொறியியல் படிப்பில் சிலருக்கு ஆர்வம் இருக்கலாம் நாட்டின் ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறையில் பணிபுரியும்..
(13)
வாய்ப்பு கிடைக்கலாம்.
போக்குவரத்து தொழில்நுட்பம்,
உற்பத்திப்பொறியியல், நெசவுத்தொழில்நுட்பம்,
ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்பம், இண்டஸ்டிரியல் பயோ டெக்னாலஜி,
உணவுத் தொழில்நுட்பம் போன்ற புதுமையான பல தொழில்நுட்ப படிப்புகளும் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது..
(14)...
பொறியியல் படிப்புகளில் நம் அன்றாட வாழ்விற்கு பயன்படும் பல விஷ்யங்கள் இருக்கின்றன.. மாணவர்கள் தங்களின் ஆர்வம் எதில் உள்ளது என்பதை நன்கு ஆராய்ந்து, அதற்கு ஏற்றது போல துறையை தேர்வு செய்து படிக்க வேண்டும் என்பதே வல்லுநர்களின் அறிவுரையாக உள்ளது..
(16)
மீண்டும் தொடரும்..🙏👍
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கடந்த 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட அட்சயப்பாத்திரம் உணவுத்திட்டம் தமிழக அரசின் திட்டமா?
ஆளுநரின் சொந்த முடிவின் அடிப்படையிலான திட்டமா?
என்ற கேள்வியை எழுப்பி தொடங்கியிருக்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் #டம்மி_ரவி (1)
அட்சய பாத்திர திட்டத்திற்காக கட்டிடத்தை கட்டி ஒரு நாள் கூட உணவு தயாரிக்கவில்லை என்பதையும்,
ஒருவேளை சோறு கூட போடாமல் 4 கோடியே 50 லட்சம் ரூபாயை ஏப்பமிட்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதி அமைச்சரின் குற்றச்சாட்டு..
அதேசமயம்,வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு..
உணவு என்பது பெரும் வணிகம் ஆகிவிட்டது எல்லோரும் எதையாவது தின்று கொண்டே இருக்கவேண்டும் என கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது..
ரொட்டி வகைகளும்,அசைவ வகைகளும் மட்டுமே இரவு உணவில் பெரிதும் பரிமாறப்படுகிறது
மதிய உணவுகளில் கூட சோறை விட பிரியாணி வகைகள்,பரோட்டா வகைகள் அதிகம் காணப்படுகிறது..
(1)
ஒரு கடையில் 100வகை பரோட்டாக்கள் கிடைக்குமென்ற விளம்பரம் பார்த்தவுடன் மலைப்பு வருகிறது..
ஐஸ்கிரீமை கூட பொரித்து சாப்பிடுகிறார்கள்
சிஸ்லர் எனும் நெருப்பு கல்லில் ஐஸ்கிரீம் பரிமாறப்படுகிறது..
பல இடங்களிலும் பீசா, சவர்மா போன்ற கடைகள் பல ஊரிகளிலும் இப்போது
வந்திருக்கிறது..
(2)..
தெரு எங்கிலும் பேக்கரிகள், அதிலும் விற்கப்படும் பொருட்கள் அங்கு செய்வதில்லை,
யாரோ ஒருவர் செய்து அனைத்திற்கும் வழங்குகிறார்
சுவை என்பது கூடப் பழைய சுவை இல்லை, அதிகப்படியாக டால்டா கலப்பு போன்றவை மட்டுமே இருக்கிறது,நாக்கில் வைத்தவுடன் கரைய வேண்டும்..
எடப்பாடி பழனி 4 வருடங்கள் முதலமைச்சராக இருந்தபோது அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டியதில் முறைகேடு நடந்து அதனால் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றது தெரியவந்துள்ளது,
அதாவது கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், விருதுநகர்..
(1)
திண்டுக்கல், நாகப்பட்டினம், திருப்பூர், நீலகிரி ஆகிய 11 இடங்களில் மருத்துவ கல்லூரிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை சார்பில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன,
ஆனால் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனியிடமே பொதுப்பணித்துறையும் இருந்தது..
(2)
அவரது ஒப்புதலின் பேரில் நடைபெற்ற கட்டிட பணிகளில்தான் முறைகேடு நடந்திருப்பதாக தற்போது மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது..
தேசிய மருத்துவ ஆணையம் நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளை கட்டுவதற்கு சில விதிமுறைகளை வகுத்துள்ளது..
சென்னை அமஞ்சிகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த #ஆருத்ரா_கோல்டு நிறுவனம்,
இந்நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 - 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக சொன்னதை நம்பி, லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர் ஆனால், முதலீட்டாளர்களுக்கு பணத்தை இந்த நிறுவனம்.. #அரூத்ரா_ஆடு
(1)..
திரும்ப கொடுக்காததை அடுத்து,பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகார்மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்,இந்த வழக்கை கூடுதல் டிஜிபி அபின் தினேஷ்மோடக்,ஐஜி ஆசியம்மாள்,எஸ்பி மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட..
(2)..
தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்,இந்த வழக்கின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், மேலாண் இயக்குனர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பியோடினர்,இந்நிறுவனத்தின் இயக்குனரும்,பிஜேபி நிர்வாகியுமான ஹரீஷ்..
ஏப்ரல் 1 முதல் மீண்டும் உயர்கிறது டோல்கேட் கட்டணம்
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் நாடுமுழுதும் 566 சுங்கசாவடிகள் உள்ளன தமிழ்நாட்டில் மட்டும் உள்ள சுங்கசாவடிகள் சுமார் 50..
1/n..
ஆண்டுக்கொரு முறை சுங்க கட்டணம் 5 சதவீதத்தில் இருந்து 10% வரை உயர்த்தப்படுகிறது, இந்த சுங்கசாவடிகளுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும் 2008ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் உயர்த்தப்படுகிறது...
2/n...
இந்தியாவில் கடந்த 2022ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் ரூ.33,881 கோடி சுங்கச்சாவடி கட்டணமாக வசூலாகியுள்ளது
இது கடந்த 2021ம் ஆண்டு வசூலோடு ஒப்பிடும் போது 21 சதவீதம் அதிகமாகும் கடந்த 2018-19 நிதியாண்டை ஒப்பிடும் போது சுமார் 32 சதவீதம் வசூல் அதிகமாகியுள்ளது...