காலை அலுவலகத்திற்கு வந்துகொண்டு இருந்தேன். சிப்காட்டுக்குள் போய்க்கொண்டு இருக்கும் போது ரோடு வெறிசோடி கிடந்தது. தூரத்தில் போகும் போதே அந்த காட்சி என் கண்ணில் பட்டது.
ஒரு டிவிஎஸ் வண்டி ரோட்டோரமாக நின்றுகொண்டு இருந்தது. ரோட்டில் ஒரு முதியவர் நின்று கொண்டு தார்ரோட்டில் கொட்டிக்கிடக்கும் சாதத்தை பார்த்துக்கொண்டே நிற்கிறார். அவர் கையில் வெறும் டிப்பன் பாக்ஸ் ஒன்று ஒரு சின்ன பாக்ஸ் ஒன்று இருக்கிறது.
அவர் கீழே கிடந்த உணவை வெறித்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
அவரைப்பற்றி சொல்லனும்னா படிச்சவர் மாதிரி இருந்தார். கண்ணாடி அணிந்து இருந்தார், வயது அறுபது நெருங்கும் தோற்றம். வெள்ளை சட்டை, பிரவுன் கலர் பேண்ட்.
அவர் பக்கத்தில் நெருங்குவதற்கு முன்பே என்ன நடந்தது என்று யூகித்துவிட்டேன். கொண்டு போன லன்ச் பேக் அருந்து , கீழே விழுந்து, கொண்டு போன உணவு எல்லாம் கொட்டிவிட்டது.
சிலகாட்சிகளை பார்த்துவிட்டு அந்த இடத்தை நம்மால் கடக்க முடியாது. ஒரு இரண்டு வார்த்தை உச்சு கொட்டிவிட்டாவது சென்றால்தான் திருப்தியாக இருக்கும்.
நானும் அதே நோக்கத்தோடு வேகத்தை குறைத்து நின்று… “ஐயோ கீழே கொட்டிருச்சா”. அவர் தலையை மட்டும் அசைத்தார். அப்போதுதான் முகத்தை பார்த்தேன் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது. உடைந்து போய் நின்றார்.
அய்யா… இதுக்குபோய் ஏன் கலங்குறீங்க? தப்பா நினைக்க வேண்டாம். லன்ச்க்கு பணம்வேணா தரேன். விடுங்க அய்யா கொட்டியதை அள்ளவா முடியும்.. உங்க முகத்தை பார்க்க கஷ்டமா இருக்கு..” என்று முட்டாள்தனமாக பேசிட்டேன்.
என்னை ஒரு பார்வை பார்த்துட்டு அவர் பர்ஸ் எடுத்து காட்டினார்.
நிறைஞ்சு இருந்தது. “என் ஒய்ப் ஆசை ஆசையா காலையில் ஐந்து மணிக்கு எழுந்து எனக்கு பிடிச்சதை சமைச்சு கொடுப்பா சார்.
அதற்க்கு மேலே என்னாலும் பேச முடியவில்லை. அவருக்கும் வார்த்தை வரல. ஒரு சில வார்த்தைகள் தான் ஆனால் ஓராயிரம் அர்த்தம் சொல்லியது.
கீழே கிடந்த உணவை அவர் வாஞ்சையா அள்ளி ஒரு கேரிபேக்கில் போட ஆரம்பித்தார். “ரோட்டில் கிடந்தா வேஸ்ட் ஆகிரும். ஏதாவது நாய்க்கு வச்சா சாப்பிடும்…” தனக்குத்தானே பேசிக்கொண்டார்.
எனக்கு அவர் சொன்ன வார்த்தையும், அதன் வலியும் அப்படியே இருக்கு இன்னும்.
சோறு என்பது ஒரு பொருள் அல்ல. அதை சமைப்பவர்களின் அன்பு.
எத்தனை முறை உதாசீனம் செய்திருக்கிறேன்.
“மதியம் பாக்ஸ் ரெடியா இருக்கு. இன்னிக்கி அவியல் செஞ்சேன்.”
“வேண்டாம்… ஆபீசில் சாப்பிட்டுகிறேன்.”
நைட் ….”வாங்க புதினா சட்னி இருக்கு .சாப்பிடலாம்.”
“வெளில சாப்பிட்டுட்டேன்”.
“ஒண்ணே ஒன்னு டேஸ்ட் பாக்கலாமே”.
“வயிறு ஃபுல்லா இருக்கு. வேண்டாம்.”
எத்தனை முறை நோகடிச்சு இருக்கிறோம். மிக பெரிய உதாசீனம் அது. சுருக்கென்று இருக்கிறது.
சாப்பாடுதானே வயிறு நிறைஞ்சா போதாதா? அப்டி இல்லை. நாம சாப்பிடுற சாப்பாட்டில் உப்பு இருக்கோ, காரம் இருக்கோ, புளிப்பு இருக்கோ…. தெரியாது ஆனால் சமைப்பவர்களின் அன்பு இருக்கு.
சாப்பிட்டா நிறைவது நம்ம வயிறு மட்டும் இல்லை. அவர்களின் மனசும் சேர்ந்தே நிறைகிறது.
கொஞ்சம் பாராட்டலாம். அட பாராட்ட கூட வேண்டாம்.
ஒரு “தேங்க்ஸ்” சொல்லி பழகலாம். “நல்லா இருக்கு, தேங்க்ஸ்பா” என்று சொல்லலாமே.
இரண்டு மணி நேர அடுப்படி போராட்டம் உங்களின் ஒரே ஒரு வார்த்தையில் மகிழ்ச்சியாக மாற்றுமே..!!!!!
*அற்புத ரகசியங்கள் நிறைந்த அருள்மிகு பார்த்தசாரதி கோயில், திருவல்லிக்கேணி*
தருமத்தை நிலைநாட்ட வேண்டி நிகழ்ந்த மகாபாரதப்போரில் பீஷ்மர் எய்த அம்புகளை பார்த்தனுக்குத் தேரோட்டியாக நின்று தாமே தாங்கியதால் ஏற்பட்ட வடுக்களை உற்சவர் திருமுகத்தில் இன்றும் தரிசிக்கலாம்.
1
இந்த ஐதீகத்தின் அடிப்படையில் பெருமாள் ஸ்ரீ பார்த்தசாரதி என்றழைக்கப்படுகிறார்.
ஆலயமும் அப்பெயரில் அழைக்கப்படுகிறது. காயங்களுடன் இருப்பதால் இவருக்கான நைவேத்யத்தில், நெய் அதிகம் சேர்க்கப்படுகிறது. மிளகாய் போன்ற காரமான பொருட்கள் சேர்ப்பதில்லை.
2
அழகாக பிறக்கவில்லையே என வருந்துபவர்கள், திருமாலின் இந்த கோலத்தை தரிசித்தால் அழகு அழியும் தன்மையுடையது என்ற தத்துவத்தை உணர்வர்.
அதில் ஏழை ,பணக்காரன்,
ஆத்திகன் , நாத்திகன் ,
இறையடியார்கள் ,,,
ஏன் இறைவனே பிறப்பெடுத்து வந்தாலும் நிச்சயம் அவனுக்கும் பல சோதனைகள் உண்டு
ராம-ராஜ்ஜியம் மக்கள் எல்லோரும் ராமன் பொற்கால ஆட்சியில் பேரானந்தமாக வாழ்ந்தனர்
அந்த நேரம் பார்த்து சோதனையாக துர்வாச-மாமுனிவர் தன் சீடர்களுடன் ராமனை காண அயோத்தி வந்தார் .
இதையறிந்த அயோத்தி மக்கள் மற்றும் அரசவையில் உள்ளோர் யாவரும் கொஞ்சம் பயத்தோடு அவருக்கு வணக்கம் கூறி வரவேற்றனர்
காரணம் துர்வாசர் கோபப்பட்டு சபிப்பதில் வல்லவர் மற்ற முனிவர்கள் எல்லாம் கோபப்பட்டு சபித்தால் தங்கள் தவ சக்தியில் ஒரு பகுதியை இழந்துவிடுவர் பின் மீண்டும் அந்த இழந்த சக்தியை பெற பலவருடங்கள் தவம் மேற்கொள்ளவேண்டும்
மாதுர்காரனாகிய சந்திரனும் பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை எனப்படும்.
சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய்வழி உறவினர்கள் சூரியன் என்றால் தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள்
இவர்கள் இருவரும் இணையும் அமாவாசை தினத்தில் மறைந்த நமது முன்னோர்கள் அவர்களது சந்ததியினர் வாழ்வில் முன்னேற தடைகள் அகல,
பலவித தோஷசங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு அவர்கள்அந்த தினத்தில் எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள் என்பது ஐதீகம்.
பொதுவாக மூலவராக இருக்கும் ஈசனின் கருவறைக்கு வெளியே தான் நந்தி வீற்றிருந்து அருள்பாலிப்பார்.
ஆனால் பெங்களூருவில் உள்ள பசவன்குடி என்ற இடத்தில் நந்தியே மூலவராக இருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
1
இந்த நந்தி கோவில் பசவன்குடியில் ஒரு குன்றின் மீது அமைந்திருக்கிறது. இந்தக் குன்றுக்கு ஊதுகுழல் குன்று என்ற பெயர் வழங்கப்படுகிறது.
2
இங்கு பித்தளையால் செய்யப்பட்ட எக்காளம் போன்ற ஊது குழல் இருக்கிறது. படைப்பிரிவின் அடையாள ஒலியாக அது ஒலிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அதனால்தான் அந்த குன்றுக்கு இப்பெயர் வந்தது என்றும் சிலர் கூறுகிறார்கள்.
எதிர்காலத்தை முன்னமே எழுதி வைத்த வீர பிரம்மேந்திரர் சுவாமிகள்.
நாஸ்ட்ரடாமஸ் என்ற பெயர் ஆரூட உலகில் புகழ்பெற்ற ஒன்று. தான் வாழ்ந்த காலத்திலேயே, எதிர் காலத்தில் உலகில் என்னென்ன சம்பவங்கள் எந்தெந்த ஆண்டுகளில் நடக்குமென்று ஆரூடம் கணித்து எழுதி வைத்துவிட்டுப் போனார் அவர்.
அவர் எழுதி வைத்த சம்பவங்கள் பலவும், அப்படியே அவர் சொன்ன விதமே நடப்பதைப் பார்த்து இன்று உலகம் திகைக்கிறது. அவரது புத்தகங்களில் அடுத்தடுத்து என்னென்ன எழுதப்பட்டுள்ளன என்பதை அறிய ஒரு தனி ஆராய்ச்சியே நடக்கிறது.
உலகம் போற்றும் பாரத
சித்தர் உலகிலும் ஒரு நாஸ்ட்ரடாமஸ் உண்டு.
ஆந்திரத்தை சேர்ந்த வீர பிரம்மேந்திரர் என்ற சித்த புருஷர் கி.பி. 1604-ல் பிறந்தவர்.