"கொரோனா" பேரழிவு காலம் தொடங்கி இன்று வரை, வட இந்தியாவையும் தமிழ்நாட்டையும் ஒப்பிட்டு, "தமிழ்நாடு" எல்லா வகையிலும் முன்னேற்றம் கண்டுள்ளதற்கு "கலைஞர்"தான் முக்கிய காரணம் என கட்சி சார்பற்று பலரும் பதிவிட்டனர்.
இது ஒரு வகையில் மகிழ்ச்சியே, ஆயினும் அவர் உயிருடன் இருந்த காலத்தில்
செய்யாத தவறுக்கும் பல சில்லறைகள் அவர் மீது வன்மத்துடன் கல்லெறிந்தன, இப்போதும் எறிகின்றன. அதேப் போல அவர் செய்த எந்த ஒரு நற்செயலுக்கும் அதற்குரிய அங்கிகாரம் பெற்றவர் இல்லை. இப்படிபட்ட வன்மத்திற்கு பின்னுள்ள உளவியல் மிக எளிமையானது. எல்லோருக்கும் அது தெரிந்ததுதான். எனவே அதை கடந்து
செல்லலாம். ஆனால், இயற்கை பாரபட்சமற்றது. அவ்வியற்கைதான் இன்று #கலைஞர் என்ற மாமனிதனின் தொலைநோக்கு பார்வையை வெளிச்சமிட்டு காட்டுகிறது. பல்லாயிரம் குரல்களால் விளக்க முடியாததை சிறு சிறு செயல்களால் விளக்கி செல்கிறது.
"கியூபா"வின் விடிவெள்ளி "பிடல் காஸ்ட்ரோ" சொன்னது தான் நினைவுக்கு
வருகிறது.
"நீங்கள் என்னை தண்டிக்கலாம், அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. ஏனெனில் வரலாறு எனக்குரிய நீதியை வழங்கும்"
அண்ணாவுடன் 27 ஆண்டுகள் பழகும் வாய்ப்புப் பெற்றவர் "கவிஞர் கருணானந்தம்". பெரியாரின் முழு முதல் வாழ்க்கை வரலாற்றை எழுதிய அவர், "அண்ணா சில நினைவலைகள்" என்ற நூலையும் எழுதியிருக்கிறார். அந்த நூலில் உள்ள முக்கியமான சம்பவம் இங்கே:
அண்ணா முதல்
அமைச்சராகி சில நாட்களுக்குப் பின் ஒருநாள் இரவு 9 மணியிருக்கும். அண்ணா வீட்டு மாடியில் நானும் இருக்கிறேன். தொலைபேசி அழைப்பு. நேர்முக உதவியாளர் நண்பர் கஜேந்திரன், “அண்ணா, ஆதித்தனார் கேட்கிறார், நீங்கள் அவர் வீட்டுக்குச் சாப்பாட்டுக்குப் புறப்பட்டுவிட்டீர்களா என்று. கருணாநிதியும் வர
வேண்டுமாம். நேரமாகிவிட்டது என்று நினைவுபடுத்துகிறார்” என்றார்.
“சரி வாங்க, இப்போது புறப்படாவிட்டால் அவரே நேரில் வந்துவிடுவார். நீயும் வாய்யா” என்றார் என்னைப் பார்த்து. நான் வரலைண்ணா அவர் எனக்கு அறிமுகமே கிடையாது என்றேன்.
“பரவாயில்லை. என்னோடு வா நிச்சயம் பிரியாணியாவது இருக்கும்”
#காந்தியார் படுகொலையும் பார்ப்பனர்களுக்கு எதிரான மக்கள் கோபமும்..!
காந்தியார் படுகொலையை தொடர்ந்து மக்களின் கோபம் இந்துத்துவ அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபை இயக்கங்களின் மீது திரும்பியது. அதிலும் மகாராஷ்டிராவில் இருந்த "பார்ப்பனர்கள்" மீது மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.
காந்தியை கொன்றது சித்பவன் பார்ப்பனரான "கோட்சே" என்பதால் மகாராஷ்டிராவில் பார்ப்பனர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. பூனா, சத்தாரா, சாங்கிலி போன்ற பகுதிகளில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர் அவர்களில் சிலரது சொத்துக்கள் அழிக்கப்பட்டன. காந்தியை கோட்சே கொலை செய்து விட்டான் என்கிற செய்தி
மின்னல் வேகத்தில் நகரம் எங்கும் பரவியது. கொலைகாரனின் பெயர் பூனாவில் பரவத் துவங்கியதும் மக்கள் கொதிப்படைந்த நிலையில் இருந்தனர் கோட்சேவின் வீட்டையும் பத்திரிகை அலுவலகத்தை சுற்றி ஜனவரி 31ஆம் தேதி மக்கள் கூடினார். வீடு பத்திரிகை அலுவலகம் மீது கற்கள் வீசப்பட்டன காவல்துறையால் இரண்டும்
'வைக்கம் போராட்டம்' என்பது ஆலய நுழைவுப் போராட்டமல்ல. மாறாக கோயிலைச் சுற்றியிருக்கிற தெருக்களிலேயே தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள், புலையர்கள் நடக்கக்கூடாது என்று இருந்த கொடுமையை எதிர்த்து நடைபெற்ற போராட்டமேயாகும். கேரள மாநிலம் வைக்கத்தில் அரசனின் அரண்மனை
உள்ளது. அரண்மனை வளாகத்திற்குள் ஒரு நீதிமன்றம் அமைந்திருக்கிறது. அன்று அரசனின் பிறந்தநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மக்கள் நெரிசல் மிகுந்திருந்த காரணத்தால் நீதிமன்றத்திற்குச் செல்லும் வழக்கமான பாதை அன்று அடைக்கப்பட்டிருந்தது.
மாதவன் என்ற வழக்கறிஞர் அவசரமாக நீதிமன்றத்திற்குச்
சென்றவர், நீதிமன்றத்திற்கான பாதை அடைக்கப்பட்டிருப்பதை அறிகிறார். வழக்கின் முக்கியத்துவமும், அவசரமும் கருதி அரசனின் பிறந்தநாள் வழிபாடு அவ்விடத்தில் தொடங்கிவிட்ட நிலையிலும் அவ்வழியாக நீதிமன்றத்திற்குச் செல்கிறார். வழக்கறிஞர் மாதவன் ஈழவ சமுதாயத்தைச் சார்ந்தவர். ஈழவர்கள் அவ்வழியாக
ரங்கராஜன் நரசிம்மன் @OurTemples என்ற இந்த நபர் இட ஒதுக்கீடு பெருவது பிச்சை என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இட ஒதுக்கீடு உரிமையை பெரும், இந்த மண்ணில் வாழும் ஒட்டுமொத்த பார்ப்பனரல்லாத மக்களையும் இழிவுபடுத்தும் வகையிலேயே இந்த நபரின் பதிவு உள்ளது.
இந்தியாவிலேயே
சமூகநீதிப் பார்வையோடு இட ஒதுக்கீடானது கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலான கடுமையான போராட்டங்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக தந்தை பெரியாரின்
இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம், அனைத்து துறைகளிலும் வளர்ந்து, இன்று இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
வரலாறு இப்படி
இருக்க, 'சாதிய ஒழிச்சு கட்டிய டிராவிட மாடலைத்தான் பார்க்கிறோமே! இட ஒதுக்கீடு எதன் அடிப்படையில் இருக்கிறது! கேவலமான பிச்சை எடுக்கும் பிழைப்புதான் இட ஒதுக்கீடு. திறமை இல்லைன்னா ஒதுக்கீடு கேட்டு வாழ வேண்டியதுதான் என டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரங்கராஜன் நரசிம்மன்,
#இந்து_ராஷ்டிரம் அமைப்பதற்கான முதல் படியாக, அதற்கான அரசியலமைப்பைத் தயாரிக்கும் திட்டத்தைக் கடந்த பிப்ரவரி 2022, பிரயாக்ராஜில் நடைபெற்ற தர்ம சம்சாதில் (தர்ம சபை) ஆர்.எஸ்.எஸ் அறிவித்திருந்தது. அதன்படி 30 ஆர்.எஸ். எஸ் வெறியர்கள் (அறிவுஜீவிகள்) அந்த அரசியலமைப்பைத் தயாரித்து
முடித்துள்ளனர். அகண்ட பாரதம் என்னும் பெயரில் இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கான கொள்கை விளக்கங்களாக, 750 பக்கங்களில் இதைத் தயாரித்திருப்பவர்கள் எல்லாம் சாம்பவி மடம், இந்து ராஷ்டிரிய நிர்மான் சமிதி போன்ற முக்கிய அமைப்புகளின் நிர்வாகிகள். இதில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களும், பாதுகாப்புத்
துறை நிபுணர்களும் அடக்கம். இந்த வரைவு அரசியலமைப்பு, 2023 ஆம் ஆண்டு, அலகாபாத்தில் நடைபெற உள்ள அடுத்த மகாமேளா தர்ம சம்சாதில் முன்வைக்கப்பட்டு இறுதி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன்படி 'வாரணாசி' இந்தியாவின் தலைநகரம் ஆக்கப்படும். புதிய பாராளுமன்றம் ஒன்று காசி
உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்ற "நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன்" அவர்கள் (பெரியாரின் பரிந்துரையால் - கலைஞர் அவர்களால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்) சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் சாமானிய மக்களிடம் எப்படி கரிசனையுடன்
நடந்து கொண்டார் என்பது குறித்த மூத்த வழக்கறிஞர் அருள்மொழி அவர்களின் பதிவு...
கிரிமினல் வழக்குகளில் ஆட்கொணர்வு (Habeus Corpus ) மனுக்களை விசாரணை செய்யும் பொறுப்பில் நீதியரசர் ரத்தின வேல் பாண்டியன் அவர்கள் இருந்த பொழுது நடந்த ஒரு வழக்கு பற்றி மூத்த வழக்கறிஞர் ஒருவர் சொன்ன நேரடி
அனுபவச் செய்தி இது.
ஒரு பெண் கணவனை விட்டுப் பிரிந்து குழந்தைகளுடன் திருநெல்வேலியில் வாழ்ந்து கொண்டு இருந்தார். தன் மனைவி குழந்தைகளை கடத்திச் சென்று விட்டார் என்று கூறி ஆட்கொணர்வு வழக்கு தாக்கல் செய்தார் கணவர்.
குழந்தைகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வர அப்பெண்ணுக்கு நீதிமன்றம்